தெய்வநல்லூர் கதைகள் – 2

This entry is part 2 of 3 in the series தெய்வநல்லூர் கதைகள்

பஜாரில் உள்ள பெட்டிக்கடைகளில் இருந்து விற்பனையாகாத அழுகும் நிலைக்கு முந்தைய நிலையை எய்திய பழங்களைச் சேகரித்தல், கிராமத்தின் வீதிமுனைகளில் வீசப்பட்டு சுற்றுப்புறச் சூழலை சீர்கெடுக்கும் பாட்டரி கட்டைகளை மாற்றுப் பயனீட்டும் பொருட்டு சேகரித்தல், உள்ளூர் உணவுப் பொருள் கிடங்கில் தேவைக்கும் அதிகமாக கொக்கி போடப்பட்டு தரையில் கொட்டி “கையாளுதலில் சேதாரம்” என்ற கணக்கில் காட்டப்பட்டு பெருக்கி அள்ளி மலிவு விலையில் அளிக்கப்படும் சீனியைச் சேகரித்தல், உள்ளூர் வெல்லம் காய்ச்சும் பணிமனையில் வெல்ல வட்டைக்குள் இறங்கி வட்டையைச் சுரண்டி  தூள் வெல்லத்தை சேகரித்தல் , மிக முக்கியமாக இம்மூலப்பொருட்களை ஊருக்கு வெளியே மறைவாக இயங்கும் தொழிற்சாலைக்கு கொண்டுவந்து சேர்த்தல் ஆகியவற்றில் சுனா கானா சிறப்பாகப் பணிபுரிந்தார்.