தந்திரக் கை – 1

This entry is part 1 of 3 in the series தந்திரக் கை

சவ அடக்க நிகழ்ச்சி இருந்தது- அவள் இருந்தாள், ஆனால் அங்கே இல்லை- மேலும் பொலீஸ்காரர்கள், பிறகு ஒரு வழக்கறிஞர்; ஆலனின் சகோதரி எல்லாவற்றையும் நிர்வகித்திருந்தாள், எப்போதும் போல, தலையிடுவதே வழக்கமாகக் கொண்டிருந்த அந்தக் கடங்காரிக்கு இந்த ஒரு முறை அவள் உண்மையில் நன்றியுணர்வு கொண்டாள். அதெல்லாம் இப்போது மிகத் தொலைவாகி இருந்தன, நன்றியுணர்வும், பழைய வெறுப்புணர்வும் எல்லாம், ஒரு கணம் கட்டுப்பாடு இழந்து மூடிக் கொண்ட, அந்தப் பையனின் கண்ணிமைகளால் ஒன்றுமில்லாதவையாக ஆகிப் போயின.

எரியும் காடுகள்-3

This entry is part 3 of 4 in the series எரியும் காடுகள்

என் துப்பாக்கி ரவைகளை நான் திரும்ப அடைந்து விட்டேன். என்ன பெரிய சாதனை இது? என்னிடம் துப்பாக்கி கூட இல்லை.
கதவருகே நான் போக சில எட்டுகள் இருந்தன, அப்போது ஏதோ ஒன்று என் கண்களில் தென்பட்டது. அது கணப்பிடத்தின் மேலே இருந்த மேல் மூடியின் மீதிருந்தது. அந்த கணப்படுப்பிலிருந்து நேற்றைய சாம்பல்கள் சுத்தமாக அகற்றப்பட்டிருந்தன.
நான் அதை உற்றுப் பார்த்தேன், அப்படியானால், ரால்ஃபின் நடத்தை நேற்று திடீரென்று மாறியதற்கும், அந்தத் துப்பாக்கி ரவைகளிருந்த பைக்கும் ஒரு தொடர்பும் இருக்கவில்லை.

எரியும் காடுகள் – 2

This entry is part 2 of 4 in the series எரியும் காடுகள்

துடுப்பு என் மடியில் பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்டேன், மிச்சமிருந்த சாண்ட்விச்சை வெளியே எடுத்தேன். ஒரு துண்டு விடாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டேன், பின்னர் அதைச் சுற்றி வந்த மேல் காகிதத்தைப் பயன்படுத்தி, பனித் துகளைச் சேகரித்து அதை வாய்க்குள் திணித்துக் கொண்டு சாப்பிட்டேன். நான் ஏற்கனவே நிறைய வியர்த்திருந்தேன், பசியை விட உடலில் நீரிழப்பு என்பது மோசமாகப் பாதிக்கும், நான் இருக்கும் இடத்தை உத்தேசித்தால் அப்படி நடப்பது அங்கதச் சுவை கொண்டதாகத்தான் இருக்கும். ஏரித்தண்ணீர் குடிக்கக் கூடியதாக இருந்திருக்கும், ஆனால் நான் ஏற்கனவே வேண்டுகிற அளவு ஆபத்தை மேற்கொண்டிருந்தேன்.

தீரா விஷம்

இருபது பிடிகளின் கூட்டத்தில் கடைசியாக கூட்டத்திலிருந்து தனித்துவிடப்பட்டு வந்தது ஓர் போதகம். அதன் அன்னை தன்னை நோக்கி முட்டி முட்டி வந்த போதகத்தை துதிக்கையால் தூக்கி மறுபக்கமாக எறிந்தது. இளம் மூங்கில் குருத்தின் துதிக்கை நெளித்து முன்னால் செல்லும் அன்னையை , கூட்டத்தினை அழைத்தபடி புழுதியால் கண்திறக்க முடியாமல் பாதங்களை தேய்த்து தேய்த்து அது நடந்தது. ஒரு நொடி நின்று வானைப்பார்த்தது “ஏன்” என்றது. மேகங்களற்ற வானம் கையறுநிலையில் எதிர் நோக்க, காலம் சீக்கிரம் நகராதா என்ற ஏக்கத்தில் அதன் இதயம் படபடத்தது.

கிஞ்சுகம்

வசிஷ்டர் … .. நிதானமானகுரலில் பேசத்தொடங்கி இறுதியாக, “தசரதன் தன் வேள்வியால் தன்னை எரித்து உண்டாக்கிய பெருந்தீ ராமன். இன்று இளையராணி தொடங்கியிருக்கும் நீண்ட பெருமழையால் அந்த பெரும்வேள்வித்தீ அணையாதிருக்க சீதை உடனிருக்க வேண்டும். சூரியனை அடிவயிற்றில் காக்கும் புவியளித்த வெம்மை சமித்து சீதை. காக்க வேண்டியது அரசகடமை இளவரசே,” என்கிறார்.

இரு புறமும் சுழலும் கடிகாரங்கள்

“புரியறதும்மா! வாழ்க்கையில எந்த முடிவையுமே நான் சரியா எடுத்ததில்லை! ஐ வாஸ் அ டோடல் ஃபைலியர்!”
…அவளுக்கு மனசுக்கு கஷ்டமாக இருந்த்து.
“சாரிப்பா! ரொம்ப சாரிப்பா! நான் அந்த அர்த்தத்துல சொல்லலப்பா!”

கதவுகளின் ரகசியக் கதைகள்

அவர் தன் தினசரி வழக்கத்தை மாற்றக் கூடாது. அந்த முடிவெடுத்த பின்னர், அவர் கொஞ்சம் நிம்மதியானார். தான் உருவாக்கி, ஸ்கான் செய்து முடித்த போலி ஆவணங்களை அழிப்பது பற்றி அவர் மிகவும் எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். போலிச் செய்திகளை உருவாக்கிப் பொய்யைப் பரப்புவதற்கே வாழ்வைச் செலவழிக்கும் அவர் தன் மனதுக்குள் திரும்பத் திரும்ப ஒரு இசைத் தொனி போலச் சொல்லிக் கொள்வது இதுதான், ஏதோ ஒன்று நடந்ததென்று செய்தியாக ஒரு முறை அறிவித்து விட்டால், அது நடக்கவில்லை என்று நிரூபிப்பது மிகக் கடினம். குறிப்பாக பெரும்பாலான வரலாற்று ஆவணக் கிடங்குகளும், செய்தித்தாள் நூலகங்களும் நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கையில், சில நேரம் உவெஸ்கா அல்லது காஸ்டெயோன் போன்ற தொலை தூர இடங்களில் வைக்கப்பட்டிருக்கையில், நிரூபணம் தேடுவது கடினம்.

அமிழ்தல்

அக்கா, முன்பு நீ தேடிக்கொண்டிருந்த சுட்டுப் பெயர்; உன் புத்தியிலிருந்து மறைந்துவிட்டதாகத் தோன்றுகின்றவற்றில் அதுவும் ஒன்று. நீ வார்த்தைகளைப் பெறப் போராடுகிறாய்; ஆனால் அந்த அமிழ்த்தி உனக்குக் கொடுப்பவை எல்லாம் நடுவாந்திரமாக, தொடர்பறுந்த வகைச் சுட்டுப் பெயர்களாகவே உள்ளன, அவற்றில் ஒன்று உனக்கு உள்ளுணர்வால் உடனே தெரிகிறது, தவறான சொல் என்று – அதை வெளிதேசத்தவரும், அன்னியரும்தான் இந்த மாதிரிச் சூழல்களில் பயன்படுத்துவார்கள். “அக்கா,” நீ அந்தச் சுட்டுப்பெயரை, இறுதியில், திரும்பச் சொல்கிறாய், ஏனெனில் உனக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

அனாதை

”…சூரியனைச் சுற்றிய ஒன்பது கிரகங்களின் விசைகள் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு, சமன்படும் இடங்களில்தான் ஒவ்வொரு கிரகத்தின் இருப்பும் சாத்தியமாகிறதா? சமன்படுதலும், சமரசமும்தான் குடும்பமென்கிற ஒருங்கிணைப்பின் மையமா?” சிந்தனையில் ஆழ்ந்திருந்த ப்ரீத்தியின் முகம் சட்டென ஒளிர்ந்தது.

மூன்று நாய்கள்

இப்படியாகத்தான் அந்தத் தெருவை நாய்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அவற்றின் ஆளுகைக்கு கீழ் தெருவின் ஒழுங்கு கொண்டுவரப்பட்டது. சீரில்லாமல் இருந்த நிர்வாகத்தைச் சரிசெய்ய முற்பட்டு, பல்வேறு முன்னேற்றச் சரத்துகளைத் தயாரித்து வைத்திருந்ததை இப்பொழுது வசதியாக மறந்தன. நேரக்கட்டுப்பாடு விதித்தன, இரவு நாய்களுக்கும், காலை மனிதனுக்கும் என பிரிக்கப்பட்டது.

கூட்டு அக்கறைகள் கொண்ட பிரதி

கடற்காற்றாலும் கடல் மொழியாலும் (’வாழ்வு என்பதே கதைக்கும் பாடலுக்கும் இடைப்பட்ட ரீங்காரம்’) சூழப்பட்ட அத்தீவினரை காப்பவர் ‘கபாங்’(கடவுள்). கடலையே தெய்வம் என்றும் அங்கு முன்னோர்களின் ஆவிகள் அலைகிறார்கள் என்றும் நம்பும் அக்குடிகளின் சட்டதிட்டங்களை விருப்பங்களை வரையறுப்பவர்களாக நிலமுனியும் கடல்முனியும் இருக்கிறார்கள்.

பேய்

ஹரி தன்னைச்சுற்றிப் படர்ந்து கிடந்த காட்டை பயத்துடன் கூர்ந்து கவனித்தான். பேய் பிசாசுகள் மீது அவனுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. ஆனாலும், அந்தக் கணத்தை, அது தரும் உணர்வை, அவற்றின் கூட்டு பலனாக அவன் மனம் அடையும் மனக்கிலேசத்தை எவ்விதம் பகுப்பது என்று தெரியாமல் தடுமாறினான்.

நோயாளி எண் பூஜ்யம்- 2

This entry is part 2 of 2 in the series நோயாளி எண் பூஜ்யம்

தேசத்தந்தை, உயிரிகள் பாதுகாப்பு அமைச்சகத்தை உருவாக்கிய பிறகு, தேசக் கணக்கெடுப்பில் பதிவு செய்து கொள்ள இதயமின்பதிவுத் தொழில்நுட்பம் தேவை. யாரும் கார்பன் உணர்விகளைத் தம் உடலில் பொதிந்து கொள்ள அச்சப்படவில்லை, அவை இதயத்தின் மின் அதிர்வுகளை வரைபடமாகக் கொடுத்து அவற்றைத் தகவல் மையங்களுக்கும் ஒலிபரப்பின. அவற்றை உடலில் பொருத்துவது சுலபம், ஆனால் மூளைப் புரணிகள் அவற்றை அவ்வளவுத் திறமையாக ஏற்றுக் கொண்டு விடுவதால், அகற்றுவது கடினமாகி விடுகிறது. என்னுடைய அந்த நுண்கருவிகளை அகற்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றியே இருக்காது. ஃபாங்கின் இருப்பிடத்தில் இருந்த ‘ஸ்டோன் ஆஃப் மேட்னெஸ்’ ஓவியம் என் நினைவில் எழும்பியது, அந்த ஓவியம் இப்போது எனக்கு சதி வேலையாகத் தெரிந்தது.

யானை யானையாகும் தருணம்

நாங்கள் இப்போது பாதி மனித உடலுடனும், மீதி தாவர உடலுடனும் இருக்கிறோம். இந்த நிலைப்பாட்டில் எங்களுக்கான சாதகங்கள் அதிகம். உடலுக்கு தேவையான சக்தியை உடலில் இரண்டறக் கலந்துள்ள தாவரம் சூரிய சக்தியிலிருந்து பெற்றுவிடும். தாவர உண்ணிகளான மான்கள், ஆடுகள், மாடுகள் போன்ற தாவர உண்ணி விலங்குகள் எந்தத் தாவரங்களை உண்பதில்லையோ அந்தத் தாவரங்களின் விதைகளோடு எங்கள் மரபணுக்களைக் கலந்து பிறழ்வு செய்துகொண்டால் மட்டும் போதும். அந்தத் தாவரங்களாக எங்கள் உடலின் ஒரு பாதி இருப்பின், தாவர உண்ணிகள் எங்களை தவிர்த்துவிடும்.

கண்காட்சி

நான் பிறந்தபோது ஆக்ஸிஜனை சுவாசித்தேன். இப்போதோ நான் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிக்கிறேன். நான் என் எஞ்சிய வாழ்வை வெறும் ஒரு தாவரமாகவே கழிக்கக் கூட நேரலாம். என் வாழ்வின் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் விலங்காக இருந்து நிறைவேற்றினேன்? எத்தனை சதவிகித நோக்கத்தை நான் இனி தாவரமாக இருந்தபடி நிறைவேற்றுவேன்? நான் விலங்கிலிருந்து தாவரமானது இந்த பிரபஞ்சமென்னும் பாரிய ஒழுங்கின் எந்தப் புள்ளியை முழுமையடையச்செய்ய இருக்கிறது?

மரத்தில் மறைந்த மாமத யானை

அல்கசாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசி காப்புரிமைக்கு விண்ணப்பிச்ச வெறும் ரெண்டு மணி நேர இடைவெளில அவருக்கு சம்பந்தமே இல்லாத எலிஷா கிரே அப்படீங்கறவரும் இதே கண்டு பிடிப்புக்காக விண்ணப்பிச்சாரு… இதுல இன்னொன்னு இருக்கு,.. ஒருவர் கண்டு பிடிப்பு குறித்து எந்த தகவலும் இல்லாம இன்னொரு நாட்டுல, அதே ஆராய்ச்சி செஞ்சு அதே கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி தஙகளோட உழைப்பை நேரத்தை வீணடித்தவர்களும் உண்டு… அதே சிந்தனை எப்படி பலருக்கும் தோணுது அப்படீங்கறது ஒரு புதிர்.. மனித வளர்ச்சிக்கு புதிய கண்டுப்பிடிப்புகள் தேவை… அந்த கண்டுபிடிப்புக்கான ஆற்றல் ஜீன் மூலமா மனிதனுக்கு தலைமுறையாக கடத்தப்படுது…

லீலாவதியைத் திருப்பி அனுப்புவது எப்படி?

ப்ரொஃபஸர் “அட அது இல்லப்பா! பாஸ்கராச்சார்யா கேள்விப்பட்டுருக்கயா?”என்றார்….
ப்ரொஃபஸர் ,”இல்லப்பா , கணக்குல பெரிய மேதை, பல புத்தகங்கள் எழுதியிருக்கார். கி.பி 1100கள்ள வாழ்ந்தவர். அல்ஜீப்ரா, தசம கணிதம், கால்குலஸ், ட்ரிக்னொமெட்ரி இதுல எல்லாம் புஸ்தகம் எழுதி இருக்கார்.
அப்புறம் பெல் ஈக்வேஷன்தெரியுமா? X2 =1+PY2. அதை சால்வ் பண்ணியிருக்கார். இருபடி சமன்பாடுன்னு சொல்லப்படற க்வாடராடிக் ஈக்வேஷன்ல எத்தனையோ பண்ணியிருக்கார். π மதிப்பைக் கண்டிபிடிச்சுருக்கார். அவரோட சித்தாந்த சிரோமணிங்கிற மஹாபெரிய புத்தகத்தில நாலு பாகங்களான பீஜ கணிதம், க்ரஹ கணிதம், கோலத்யாயா, லீலாவதி இதெல்லாம் ரொம்ப புகழ் பெற்றவை. பல மொழிகள்ல மொழி பெயர்ந்திருங்காங்க,” கொஞ்சம் மூக்சு விட்டார். தலை கலைந்து, கண்ணாடிக்குப் பின்னால் கண் பெரிதாக இருந்தார்.

பகிரும் காற்று

அந்தக் காலத்து மனுசங்க ஒருத்தர் மத்தவரின் காற்றையே பகிர்ந்துக்கிட்டாங்க, என்ன மாதிரிக் கொடுமை அது!!  ஒவ்வொருத்தரின் கிருமிங்களையும், எல்லாரோட கழிவுப் பொருட்களையும், தங்கள் முச்சுக்குழாய் அழற்சியிலிருந்து விடுபட்ட சளியையும், பலரின் உடல் கழிவுகள் பலதையும் காத்து மூலமா வாங்கிக்கிட்டு மூச்சில் கலக்க விட்டார்கள். தண்ணீரோ கிருமி அழிப்பு செய்து சுத்தமாகாத குழாய்கள் வழியாப் பல மைல்கள் தாண்டி வந்து எங்கேயிருந்தோ கொண்டு வந்து அவங்களுக்குக் கொடுக்கப்பட்டது.  சில நேரம் மாசுபட்ட பூமியிலிருந்தே கூட நீர் எடுத்துக் கொடுக்கப்பட்டது. சக்தி தேவைப்பட்டதுக்கு, அதை எங்கிருந்தெல்லாம் பெற முடியுமோ அங்கேயிருந்தெல்லாம் அவங்க அதை எடுத்துக்கிட்டாங்க. அவங்களோட கருவிங்க அத்தனை நுட்பமெல்லாம் இல்லாத, மொண்ணையான கருவிங்களா, உயிர்த்துடிப்பே இல்லாம இருந்தது…

தேள்

“உன்னுடைய விஷ ஆராய்ச்சிக்கு நீ இங்குத் தேள்களை வைத்திருக்கிறாய் அல்லவா? எனக்கு ஒரு தேளை தொட்டுப்பார்க்கவேண்டும். அதை என் மீது ஏற விட்டுப்பார்க்க வேண்டும்.”
லூசிஃப் திடுக்கிட்டான். “ஏன்?”
“பயத்தை வெல்ல அதுதான் ஒரே வழி. போர்க்களத்தில் நாங்கள் இதைத்தான் செய்வோம். நிணம், குருதி, சித்ரவதை இதை எந்த ஒரு போர் வீரனும் முதல் நாள் காணும் போது அஞ்சத்தான் செய்வான். அதனால் அவனைப் போருக்கு அனுப்புவதற்கு முன்னாலேயே காயத்துக்கும் வலிக்கும் போரின் நிதர்சனங்களுக்கும் முழுவதுமாகப் பழக்கப்படுத்தி விடுவோம்.”

பதனிடப்படாத தோல்

அது அப்போது அவளிடம் பேசியது, அதன் குரல் தாலாட்டை ஒத்திருக்கும் செல்லோ வாத்தியங்களின் ஆழ்ந்த மரமரப்பான நாதத்தைப் போலக் கேட்டது. அது தன் அடர்ந்த முடியடர்ந்த கையால் சைகை செய்தது. அது ஏதோ உறுதி அளித்தது, கொடுத்தது, பின் கேட்டது; அவள் அப்போது செவி கொடுத்துக் கேட்டாள், புரிந்தவளாகவும், புரியாதவளாகவும் இருந்தபடி.
சொற்கள் மெள்ளமாக வந்தன. இது…. …உலகம்.
இங்கே வானம், பூமி, பனிக்கட்டி. அந்த கனத்த கரங்கள் அசைந்தன. கைவிரல்கள் சுட்டின.
குட்டி அடிமையே, நாங்கள் உன்னைக் கண்காணித்து வந்திருக்கிறோம். சுதந்திரமாக நீ என்ன செய்திருக்கிறாய் இன்று? உரிமை எடுத்துக் கொள். உன்னுடைய காலணி உள்ள நான்கு கால்களுக்கான தரை, நட்சத்திரங்களுள்ள வானம், குடிப்பதற்குப் பனிக்கட்டி. இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய்வாய், செய்வாய்.