மகரந்தம்

உலகின் ஜனத்தொகையில் 17% கொண்டுள்ள நம் நாட்டிலுள்ள புதுப்பிக்கக் கூடிய நீர் வளங்கள் உலகில் உள்ளதில் வெறும் 4 விழுக்காடு. இங்கே ஒரு புதிரான முரண்பாட்டையும் சொல்லியாகவேண்டும். உண்மையில் இந்தியா நீர்ப்பிரச்னை இருக்கக் கூடாத நீர்-மிகை நாடு. இங்கே தேவைக்கு மேல் மழை பெய்கிறது. மத்திய நீர் ஆணையத் தகவல்படி, நம் தேவை ஆண்டுக்கு 3000 பில்லியன் கன மீட்டர் மழை ; ஆனால் தேவையை விட 1000 பில்லியன் கன மீட்டர் அதிகமாக (அதாவது ஆண்டுக்கு 4000 பில்லியன் கன மீட்டர் ) மழை பெய்கிறது . ஆனால் இதில் 8% மட்டுமே நேரடி உபயோகத்துக்குக் கிடைக்கிறது. மீதி நிலத்தடிக்கும் கடலுக்கும் ஓடி விடுகிறது.