பழகிய மரம்
வீட்டுக்குள் நான், வெளியே
பறவை – இன்றும்
Series: ஹைக்கூ வரிசை
“அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள்
வண்டு மறைக்கும்
சிறுபூக்களின் பின் – உதிர
சிலிர்க்கும் காடு.
“தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள்
அடர்ந்த மழை
ஊடே சிட்டுக் குருவி
மறைந்த மின்னல்.
கடிகாரச் சுவர் – அந்தரத்தில் கணங்கள்
கடிகாரச் சுவர்
படர்ந்த நிழல் முற்றம்
வரும் பறவை.
“முடிவிலா பயணம்” – ஹைக்கூ கவிதைகள்
ஓயாத விழுதலிசை
வேரூறும் பாறை நிசப்தம்
மனமெங்கும் அருவி.