வெளி மூச்சு

This entry is part 1 of 2 in the series வெளி மூச்சு

சாவு நேரும் வகையான விபத்துகளில், மண்டை ஓடு உடைந்தால், மூளை தங்கத்தால் ஆன மேகம் போல சீறிப் பாய்கிறது என்பதும், சின்னாபின்னமான சரடுகளையும், தகட்டையும் தவிர பயனுள்ள எதுவும் கிட்டுவதில்லை என்பதும் சராசரி நிகழ்வு. பல பத்தாண்டுகளாக, ஒரு நபரின் அனைத்து அனுபவங்களும் தங்கத் தகடுகளில் பொறிக்கப்படுகின்றன என்ற கருத்துதான் நினைவு சக்தியைப் பற்றிய கோட்பாடாக இருந்தது; விபத்துகளுக்குப் பிறகு காணப்பட்ட துகள்களுக்கு, வெடிப்பால் கிழிக்கப்பட்ட இந்தத் தகடுகளே காரணம். உடற்கூறியலாளர்கள் இந்தத் தங்கத் தகடுகளின் சிறு துகள்களைச் சேகரிப்பார்கள்- அவை அத்தனை மெலிதாக இருப்பதால் ஒளி அவற்றூடே கடந்து போகையில் பச்சையாகத் தெரியும்- பிறகு பல வருடங்கள் செலவழித்து அவற்றைத் திரும்ப இணைக்க முயல்வார்கள்,

வெளி மூச்சு – 2

This entry is part 2 of 2 in the series வெளி மூச்சு

நம் மூளைகளைப் பற்றிய ஒரு ஆய்வு நம் கடந்த காலத்தைப் பற்றிய மர்மங்களை விளக்கவில்லை, மாறாக எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்று விளக்கியதை சிலர் ஓர் அங்கதமாகக் கருதுகிறார்கள். ஆனால் நாம் கடந்த காலத்தைப் பற்றியும் மதிப்பு மிக்கதாகச் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த அண்டம் ஒரு பிரும்மாண்டமான மூச்சுப் பிடிப்பு நிலையில் துவங்கி இருக்கிறது. அது ஏன் என்று யாருக்குத் தெரியும், ஆனால் காரணம் என்னவானாலும், அப்படி நடந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சிதான், ஏனெனில் என் இருப்புக்கு அதுதான் காரணம்.