வண்ணமும் எண்ணமும் ஆயிரம் – பகுதி 1

புகைப்படக் கலை மிகவும் விலையுயர்ந்தது என்ற எண்ணம் எல்லோரிடமும் 1970 -லிருந்து 1990 -கள் வரை இருந்தது. கையில் அதிக சாசில்லாத, ஆனால், தொழில்நுட்ப ஆர்வலர்களான பரம், நான் மற்றும் சில நண்பர்கள் இணைந்து, ஃபிலிம் சுருளை கழுவும் வேலை மற்றும் படங்களை அச்சிடுவது என்று ஸ்டூடியோ வேலைகளிலும் இறங்கினோம். இப்படித் தொடங்கியப் பயணம், மெதுவாக ஒரு கலைப் பாதை நோக்கி நகரத் தொடங்கியது உண்மை.

கையில் கேமிரா இருந்தால் வங்கியில் கோடிகள்! எப்படி?

நானும் அப்படித்தான் 2018 -ல், நினைத்தேன். இன்னும் சில ஆண்டுகளில், நம்முடைய வண்ணப்படங்களை உலகெங்கும் தரவிறக்கம் செய்து, இந்தத் தொழிலில் நாம் பெரிதாக கவனம் செலுத்தலாமே! குறைந்தபட்சம், விலையுயர்ந்த லென்சுகள் மற்றும் காமிரா உபகரணங்களை வாங்கலாமே! இப்படி கனவுகளோடு ஆரம்பித்ததுதான் என் வண்ணப்பட வியாபாரப் பயணம். நடுவில் தெரியாமல் இருந்த பல விஷயங்கள் பற்றியதே இக்கட்டுரைத் தொடர்.

“இதை எவன் வாங்குவான்?”

ரவி நடராஜன், விஞ்ஞான உலகிலிருந்து, வெறுத்துப் போய், தமிழ் சீரியல் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டார் என்ற வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்! இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது தமிழ் சீரியல்கள் நினைவிற்கு வந்தால், அது மிகவும் இயற்கையான விஷயம். ஏஜன்சிக்கும், வண்ணப்படக் கலைஞருக்கும் இருக்கும் தொடர்பு, தமிழ் சீரியல்களில் ““இதை எவன் வாங்குவான்?””

சந்தாதாரரின் ஒரு முறை பயன்பாடு

இசை நிகழ்ச்சிக்குச் செல்லும் தனி ஒளிப்படக் கலைஞர் -அவருக்கும் செய்தித்தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை- அழகாகப் பல வண்ணப்படங்களை உருவாக்கி, ஏஜன்சிக்கு மேலேற்றுகிறார்என்று வைத்துக் கொள்வோம். அந்த ஏஜன்சியில் இசைத் தளத்திற்கும் கணக்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். செய்திக் கட்டுரையுடன் சுடச்சுட வண்ணப்படத்தைத் தேடி, ஏஜன்சியிடம் போனால், தனி ஒளிப்படக் கலைஞரின் படம் பிடித்துப் போக, ஏஜன்சிக்கு காசு கொடுத்து வாங்கி, தன்னுடைய செய்திக் கட்டுரையில் இசைத் தளம் வெளியிட்டால், தனி ஒளிப்படக் கலைஞருக்கு ஒரு சிறு அளவு வருமானம் கிடைக்கும்! இசைத்தளத்திற்கு, முழு நேர ஒளிப்படக் கலைஞரை அமர்த்துவதை விட, இந்த ஏற்பாடு, விலை குறைவானது.

எத்தகையப் படங்களுக்கு வரவேற்பு அதிகம் ?

கலைஞர் தன்னுடைய வண்ணப்படத்தை ஏஜன்சிக்கு விற்று விட்டாலும், அதன் முழு உரிமையாளரும் அவரே. அது ஏஜன்சிக்குச் சொந்தமாகாது. இது ஒரு விற்பனை அமைப்பு – அவ்வளவுதான். பங்களிப்பாளர் (இந்தத் தொழிலில் கலைஞர்கள் contributors அல்லது content contributors என்று அழைகப்படுகின்றனர்), எப்பொழுது வேண்டுமானாலும், தன்னுடைய படைப்பை ஏஜன்சியின் இணையதளத்திலிருந்து நீக்கி விடலாம்

வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெற முடியாது

எந்த வண்ணப்படம் விற்கும் என்பதை சரியாக யாராலும் சொல்ல முடியாது. பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து அருமையாக படம் பிடித்து மேலேற்றினால், அந்தப் படத்தை யாரும் பொருட்படுத்தவே மாட்டார்கள். முதலில் விற்ற என்னுடைய படங்கள் எனக்கு எதையும் கற்பிக்கவில்லை. மாறாக, என்னைத் தவறாக சந்தையை கணிக்கத் தூண்டியது. என் தன்நம்பிக்கையை குலைக்கவும் செய்தது. ஏன், அசட்டுத்தனமாக இந்தத் தொழிலில் வெற்றி பெறலாம் என்று தப்புக் கணக்குப் போடேன் என்று பல தருணங்களில் நினைக்க வைத்தது. நான் எந்தப் படங்கள் சிறந்தவை என்று எண்ணியிருந்தேனோ, அவை அதிகம் விற்றதே இல்லை!

என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும்

சில பங்களிப்பாளர்களின் வெற்றியைப் பார்த்து, நான் உருவாக்கிய வண்ணப்படங்களின் தோல்வி ராஜா இந்த வகை. வீட்டில் இருக்கும் பெரிய ப்ளாஸ்டிக் ப்ரஷ்கள், சிறிய டார்ச் விளக்குகளின் அழகிய ப்ளாஸ்டிக் டிசைன்கள், ஏன் சில பெயிண்ட் அடிக்கும் ப்ரஷ்களின் நுனிகள் என்று இவ்வகை பொருட்களை மிக அருகாமையில் படம் (macro photography) பிடித்தேன். இவற்றுக்கு கணினி மூலம், பல வண்ணங்களை உருவாக்கி, ஒரு அழகிய இணையதள பினணியாகப் பயன்படுத்தலாம் என்பது என் கணிப்பு. கணிப்புடன் நின்ற ஒரு பெரும் தோல்வி இது!

ஆயிரம் அடி விழுந்தும் ஏன் தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும்?

இந்தத் துறையில் தோல்விகள், என்னை வெவ்வேறு புதிய முறைகளை கறகத் தூண்டுகிறது. உதாரணத்திற்கும் vector images என்ற கணினி மூலம் (படம் முழுவதும் கோண கணக்குதான்) முற்றிலும் உருவாக்கும் புதிய கலையை நான் 2020 முதல் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். முன்னம் சொன்னது போல, அதில் பெரும் வெற்றி இன்னும் எனக்குக் கிட்டவில்லை. ஆனாலும், குளிர்காலத்தில் அதிகம் வெளியே சென்று படம் பிடிக்க முடியாத நிலையில், கணினி மூலம் உருவாக்கப்படும் வண்ணப்படங்கள் என்றோ விற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அத்துடன், இந்தக் கலையில் இன்னும் கற்றுக் கொள்ளவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.