நீரும் காற்றும் தாராளமாகக் கிடைக்கின்ற வற்றாத வளங்களாக இருப்பதால் அவை பொது நுகர் பொருளாக நீடிக்கின்றன என்று காலங்காலமாக நினைத்திருந்தோம். ஆனால் பிரத்யேகமான கொள்கலனில் இருக்கும்போதுதான் தண்ணீர் தனியார் சொத்தாக முடியும் என்கிறார் ஹியூகோ டே க்ரோட். அதாவது பாட்டிலில் அடைக்கப் பட்ட கனிம நீர் வருகைக்கு நுகர்வோரே காரணம் என்கிறார்.
Series: முதலியத்தை எதிர்க்கும் பொதுமம்
முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் – பகுதி 2
பாட்டாளி வர்க்கம் மையமாக்கலைத் தோற்கடித்து பொதுமங்களை மீட்கும் என்று மார்க்ஸ் நம்புகிறார். இதைத் திட்டவட்டமாக மறுக்கும் நூலாசிரியர்கள், பொதுச்சொத்து நிர்வாகம் சமூகத் தீர்வு காணலுக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்கிறார்கள் ஒவ்வொரு மையப்படுத்தப் பட்ட அரசும், கம்யூனிச அமைப்பும் பொதுமக் கொள்கைக்கு எதிரானது என்பது அவர்கள் கருத்து.
சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு
இனவிருத்திக்களம் பரம்பரைப் பழக்கமாக பொதுமங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அடிப்படையாகவே அது உயிரைப் பேணிப் பாதுகாக்கும் பணி. எனவே சந்ததிகள் உருவாக்க உழைப்பிற்குத் (reproductive labour) தலையாயவர் என்கிற வகையில் பெண்ணுக்கு பொதுமங்களுடன் திடமான இணைப்பு நிலவுகிறது; வரலாற்றில் பெண்கள் பெரும்பாலும் பொதுமங்களின் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். பின்னர் அந்த இணைப்பு பறிபோனதால் மிகுந்த வேதனைக்குள்ளானார்கள்.
பொதுமங்களும் அரசாங்கமும்
சுற்றுச் சூழல் பேரழிவுகளின் காரணமாக சர்வாதிகார அரசுகள் தங்கள் மக்களுக்கு இயற்கை வளங்களின் கடைசி துண்டங்களைப் போராடிப் பெற்றுத் தர வேண்டிய அவசியம் உருவாகி ஒரு வித சூழல் பாசிசத்துக்குக் (ecofacism) கூட வழி நடத்தப்படலாம்; உண்மையில் சமனற்ற கொரோனா தடுப்பூசி விநியோகம் இதை முன் கூட்டியே உலகுக்கு உணர்த்தி விட்டது….எனினும் இதே காரணங்களுக்காகத்தான் அரசியல் மற்றும் கொள்கைகள் சார்ந்த போராட்டம் நிகழ்த்தும் ஒரு முக்கிய செயற்களமாக அரசு நிலைத்திருக்கிறது. எனவே அரசு ஒரு மிகையான அமைப்பு அல்லது இயல்பாகவே அது ஒரு மக்கள் விரோத அமைப்பு என்று காட்டுவது விவேகமற்ற நடத்தை என்று உணர்ந்து பொதும உந்தம் (momentum) செயல்பாட்டாளர்கள் அரசு எதிர்ப்பைக் கைவிட வேண்டும்.