எழுதுவதற்குத் தேவை விவரச் சேமிப்பும், அதில் கிட்டும் அறிவும்தான் என்றால் கலைஞர்களின் எல்லாச் சங்கடங்களும் மேன்மேலும் ஆராய்வு செய்தால் தீர்ந்துவிடும்; கற்பனை என்பது கணக்கிலேயே வராது. எழுதுவதற்கு ஒரு எழுத்தாளரை உந்துவது எது என்றால், அது தன் விவர ஞானம் குறித்த அவரது தன்னம்பிக்கை இல்லை. மாறாக, அவர் தனக்கும் பாத்திரங்களாகப் போகிற நபருக்கும் (அல்லது நபர்களுக்கும்) இடையே சக்தி வாய்ந்த ஒரு பிணைப்பை உணர்கிறார், அந்தப் பிணைப்பு இடர்கள் நிறைந்த அந்தப் பயணம் மேற்கொள்வதைப் பயனுள்ளதாக்குகிறது.
Series: மற்றவர்களின் வாழ்வுகள்
மற்றவர்கள் வாழ்வுகள்- 2
ஜான் ஹாவர்ட் க்ரிஃபின் என்பாரைச் சற்று கவனியுங்கள், 1950களில் இவர் தன் தோலைக் கருப்பாக்கிக் கொண்டார், அவருடைய வார்த்தைகளில், “நீக்ரோவாக” தீர்மானித்தாராம். ஜிம் க்ரோ நிலவிய அமெரிக்கத் தென் பகுதிகளில் தான் பயணித்தபோது கிட்டிய அனுபவங்களை அவர் ஒரு புத்தகமாக எழுதினார், “ப்ளாக் லைக் மீ” என்ற அந்த நூல் ஏராளமாக விற்பனை ஆனது. ….
அந்த எழுத்தாளருக்கு, தெற்குப் பகுதிகளில் பயணம் செய்யும் ஒரு கருப்பின ஆணுக்கு எப்படி இருக்கும் என்பதை, தன் அனுபவமாகத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்திருக்கிறது போலத் தெரிகிறது. எவ்வளவு நல்ல எண்ணத்தோடு செய்திருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட அனுபவத்தைப் பற்றி எழுதுவதற்கு அவர் தவறான நபர் என்று வாதிட இடமுண்டு.