நிலவியல் பதிவுகளின்படி, புவிக்கோளின் நெடு வரலாற்றில் இதுவரை 183 முறை புவியின் காந்தப்புலம் தலைகீழாக மாறியிருக்கிறது; வெகு அண்மைய மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டது. சூரியனின் காந்தப் புலத்திலும் இதைப்போன்ற தலைகீழ் மாற்றங்கள் நேர்வதுண்டு.
Series: பூமிக்கோள்
புவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும்
மேரிலண்ட் பல்கலையின் நில அதிர்வு ஆய்வாளரான வேத்ரன் லேகிச் (Vedran Lekic) கூறுவது: “நாம் கோள்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் பூமிக்குள் சென்று தொழில் நுட்ப ரீதியாக அதன் உள்ளமைப்பை புரிந்து கொள்வது, விண்வெளிக்கு செல்வதை விட, உண்மையில் பன்மடங்கு கடினமானது.”
புவி எனும் நம் கோளின் தனிச் சிறப்புகள்
கோள்களின் பிறப்பிடம், இளம் விண்மீன்களைச் சூழ்ந்திருக்கும் வாயு மற்றும் தூசு நிறைந்த அடர் வட்டு (disk) என்று விண்வெளி ஆய்வாளர்கள் அறிந்துள்ளார்கள்.
அணுக்கரு இணைவு – கதிரவனைப் படியெடுத்தல்
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சோலார் நெபுலா எனப்படும் வாயு மற்றும் துகள்கள் நிறைந்த சுழலும் பெரு மேகம், வரம்பு மீறிய ஈர்ப்பு விசையால் தகர்ந்து, பின் தற்சுழற்சியால் தட்டையான வட்டத் தட்டாகிப் பெரும்பாலான (99.8%) உட்பொருட்கள் தட்டின் மையத்துக்கு ஈர்க்கப்பட்டுப்பின் அந்த மையமே சூரியனாகியது.
இரண்டாவது சூரியன்
சூரியனின் தோற்றத்தைப் பற்றிய இன்றைய “ஒற்றைச் சூரியன்” கருத்துக்கு அடிப்படை மாற்றம் கோரும் கருதுகோளை முன்வைத்துள்ளது. ஆதியில் சூரிய அமைப்பு இரு விண்மீன்கள் விண்வெளியில் ஒன்றை மற்றது வலம்வரும் இருமை விண்மீன் அமைப்பாகத்தான் உருவானது என்பது இவர்களின் கருதுகோள்.
சிறுகோள் வடிவங்கள்
பெரிய வான்கோள்கள் ஏன் கோள வடிவத்தில் இருக்கின்றன என்பதற்கான எளிய விடை ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் அவை இருப்பதால் தான் என்பதே. ஒரு பொருளின் ஈர்ப்பு இழுவிசை எப்போதும் அதன் பொருள் திணிவின் மையத்தை நோக்கியே இருக்கும். பெருத்து இருக்கும் பொருட்கள் பேரளவு பொருள் திணிவைக் கொண்டிருக்கும்; அதேபோல் அதன் ஈர்ப்பு விசையும் மாபெரும் அளவினதாகவே இருக்கும்.
புவிக்கோளின் கனிமவளம்
இந்த மூன்றாவது கோளில் (புவி ) என்ன அதிசயம்? அதன் உடன் பிறப்புகளின் வளர்ச்சிப் பாதையை விட்டு விலகி வியத்தகு முறையில் பிரிந்து செல்வது ஏன் ? தண்ணீர் தான் காரணம் என்பது உங்கள் இனிய அழகிய அனுமானம்.
நீரில்லாத கோள்களில் உருவாக முடியாத பல்வேறு புதிய கனிமங்கள் இக்கோளில் உருவாக முடிகிறது. …இங்குள்ள அபரிமிதமான கால்சியம் கார்போனேட் (கால்சைட் என்னும் கனிமம் ) பெரும்பாலும் கோளில் வாழ்ந்த உயிரினங்கள் உருவாக்கியது எனத் தோன்றுகிறது. நீங்கள் எப்போதாகிலும் உயிரினப் பயன்பாடு இல்லாத கால்சைட் உருவாதலைக் கண்டிருக்கலாம். …இவ்வளவு கால்சைட் பாறைகள் உருவாகத் தேவையான உயிரினங்களை சாத்தியமாக்கியது இங்குள்ள பெருங்கடல்களே என்று நீங்கள் அனுமானிக்கிறீர்கள்.