தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்

இரண்டு ஈஸோப்ட்ரான்கள் சந்திக்கும்போது, அவர்கள் ஒன்றாக இணையலாம், அவர்களின் ஜவ்வுகளிடையே ஒரு சுரங்கப் பாதை போல உருவாகும். இந்த முத்தமிடும் இணைப்பு மணிக்கணக்காகவோ, பல நாட்களாகவோ, வருடங்களாகவோ நீடிக்கக் கூடும்.

தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்

அண்டவெளியின் பெரும்பரப்பில் ரேடியோ அலைகள் வெகு வேகமாக க்ஷீணிக்கின்றன, அவள் விளக்கினாள். தொலைதூர நட்சத்திரங்களின் சுற்றுப் பகுதியில் உள்ள கோள்களிலிருந்து அண்டவெளியின் பாழில் யாராவது தொடர்புக்கான செய்திகளை விநியோகித்துக் கொண்டிருந்தால், அவர்களுடைய அண்மையில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.