சாதாரண மனித ஆற்றல்களையும், நம் புலன்களுக்குத் தென்படக் கூடிய இயற்கை ஆற்றல்களையும், ஒலி, ஒளி, கதிரியக்கம் போன்ற அறிவியல் ஆற்றல்களையும் மீறிய பல வித ஆற்றல்கள் நிறைந்ததே இப் ப்ரபஞ்சம். இன்னும் சொல்லப் போனால் ப்ரபஞ்சம் முற்றிலுமே இத்தகைய ஆற்றல்கள் நிறைந்ததுதான். ஆற்றல்கள் இன்றி இப் ப்ரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும், உயிரும், துகளும், அணுவும், மன இயக்கங்களும் இல்லை. சாதாரண மனித ஆற்றல்களுக்கும், இயற்கை ஆற்றல்களுக்கும், அறிவியல் ஆற்றல்களுக்கும் அப்பாற்பட்ட அத்தகைய ஆற்றலே அமானுஷ்ய ஆற்றல் (occult power) எனப்படுகிறது.
Series: தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி
இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள்
இந்து மதத்தின் வேதங்கள், உபனிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய பிரதிகள் மும்மைப் பொருள்கோள்கள் (interpretation) கொண்டவையாகும். அவையாவன: 1. நேர்ப் பொருள். இது சாமான்யர்களான பக்தர்களாலும், பாமரர்களாலும் கொள்ளப்படுவது. 2. குறியீட்டுப் பொருள். இது பண்டிதர்களால் கொள்ளப்படுவது. 3. தந்த்ரா பொருள்.
தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – 3
குண்டலினி உருவகத்தின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் நேர்ப்பொருள் மட்டுமே கொள்ளப்பட்டதினாலான இந்து மத ஆன்மீகத் தாழ்ச்சியின் துவக்கம் என இதைக் கூறலாம். ப்ரபஞ்ச சக்தியான குண்டலினி சக்தியைக் கையகப்படுத்தி சாமான்ய மனிதர்களும் மேல் நிலையை அடையும் யோக வாய்ப்பு இவ் வகையிலேயே பல்லாயிரத்தாண்டுகளாக இழக்கப்பட்டு வந்திருக்கிறது.