இந்தப் பகுதியின் குறிக்கோள்கள்:
1. சுருக்கமாகச் சில புத்தகங்களை அறிமுகம் செய்வது; அறிமுகம் செய்த பதிவுகளைப் பகிர்வது.
2. ஆங்கிலமோ, தமிழோ, மொழியாக்கமோ (அல்லது) கதையோ அபுனைவோ கிளாசிக்கோ – எல்லாவற்றிலும் ஒன்றைப் படித்தீர்களா எனக் கேட்டுப் பதறச் செய்வது.
3. உங்களிடமிருந்து இலவசமாக நூல்களைப் பெறுவது (அல்லது) பழைய விமர்சனங்களைப் புதுப்பிப்பது.
Series: கைச்சிட்டா
கைச்சிட்டா – 2
அமெரிக்காவில் பாதகமான விஷயங்களைச் சொல்வதற்கு முன் இரண்டு நல்ல நடவடிக்கைகளைச் சொல்லிவிடுவார்கள்; அதன்பின் மாற்றம் தேவைப்படும் விஷயத்தை நாசூக்காக முன் வைப்பார்கள்; அதன் பின் முத்தாய்ப்பாக “நன்றாக வேலை செய்கிறாய்!” என்னும் சம்பிரதாயச் சொற்றொடரோடு பேச்சை முடிப்பார்கள். இதற்கு பர்கர் அணுகுமுறை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு ரொட்டிக்கு நடுவே கோழிக்கறி அடைபட்டிருப்பது போல் இரண்டு பக்கமும் அசத்தல் குணநலன்களைச் சொல்லி, நடுவில் குற்றங்களைச் சொல்லுதல் மாண்பு. பிரான்ஸில் இப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கோழிக்கறியில் இறங்குகிறார்கள். “இது உன்னிடம் சரியில்ல! இப்படி நடந்தால் வேலை போயிடும்!” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
கைச்சிட்டா – 3
அ) A Case of Exploding Mangoes ராஜ்ஜியங்களின் தலைவர்கள் கொல்லப்படுவது என்பது எண்பதுகளில் சர்வ சாதாரணம். எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதத் 1981இல் தீர்த்துக் கட்டப்பட்டார். அதே ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதி ஜியா உர் ரெஹ்மான் அரசியல் காரணங்களுக்காக ஆட்கொலை செய்யப்பட்டார். 1984ல் இந்திரா “கைச்சிட்டா – 3”
கைச்சிட்டா – 4
வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் ஜன்னலோர வாசமும் அண்டை அயல் நடப்புகளும் நிறையக் காணக் கிடைக்கின்றன. நான் உட்காரும் இடத்திற்கு வெளியே உள்ள கொல்லைப் புறத்தில் இரண்டு தனித்தனி ஜோடிப் பறவைகள் கூடு வேறு கட்டியிருக்கிறது. ‘கபாலி’ படத்தில் சிறையில் இருந்து வெளியே வரும் ரஜினி கதாபாத்திரம் சொல்வது போல், “அதப் பறக்க விடுங்கடா… அதுதான் அதன் இயல்பு” என மரக்கிளைகளுக்கு நடுவே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும். அந்தக் குருவிகளும் பட்சிகளும் உட்கார்ந்து கூட்டம் கூடி இரையைக் கொத்திக் கொண்டு காணாமல் போவது நாள் முழுக்க கணினி சந்திப்புகளில் அடைபட்டிருக்கும் எனக்கு உவகையைத் தரும். சிறகடிக்கும் ஜீவன்கள் குறித்த நூல்களைத் தேடினேன். சற்றே இன்ப ஆச்சரியம். அமெரிக்காவில் அதிகமாக விற்கும் நூல்..
கைச்சிட்டா – 5
“பிரபு காளிதாசின் வாழ்வில் நடந்த வெவ்வேறு சம்பவங்களைத் தொகுத்து இருக்கிறார். இதற்குள் குறைந்தது நூறு கதாபாத்திரங்கள் ஆவது உலாவுகின்றன. அவர்களின் மன வெளிப்பாடுகளும் நூறு தருணங்களும் அதற்கு ஃபேஸ்புக் பதிவரின் எண்ண பதில்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாவலில் வரக்கூடிய சம்பவங்களைப் பார்த்தீர்கள் என்றால், அனைத்துமே முகத்தில் அறைவதுபோல் இருக்கிறது…
நூல் அறிமுகங்கள்
டேனியல் டென்னெட். மதிக்கக் கூடிய சிந்தனையாளர். அவர் இந்த மதிப்புரையில் கவனமாக கருத்தியல் சிதைப்புகளையும், திரிப்புகளையும் தாண்டி மானுடவியல், வரலாற்றியல், உளவியல், மதவியல், சமூகவியல் போன்றன இயங்கக் கற்க வேண்டும் என்று சுட்டுகிறார். அதற்குப் புள்ளியியல் ஒன்றே வழி என்று நினைப்பதும் மடமை என்றும் சுட்டுகிறார். ஆனால் புள்ளியியலின் உதவி தேவை, அதன் எல்லைகளும், அதன் வழிமுறைகளில் உள்ள புதைகுழிகளையும் பற்றிய தீர்க்கமான கவனம் தேவை என்று சொல்கிறார்.
கைச்சிட்டா – 7
கதையில் வரும் அத்தைகளும் மாமாக்களும் அமெரிக்க முதலியத்தில் திளைந்துக் கொழிக்கும் சித்தப்பா / பெரியப்பாகளும் இஸ்லாம் மீண்டும் தலைதூக்கும் என்று தீவிரமாக நம்புகிறார்கள். அக்தரின் பெற்றோர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
கைச்சிட்டா – 8
இசை பாம்பே நகரத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் ஹிந்துஸ்தானி இசை எவ்வாறு உருமாறியது என்பதைத் தேஜஸ்வினி நிரஞ்சனா, “மும்பையில் மியுசிகோஃபிலியா” நூலில் தடம் பின்பற்றிப் பதிந்திருக்கிறார். 1950கள் வரைக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின்கீழ் இருந்தபோதும்; அதன்பின் சுதந்திர, பின்-காலனித்துவ பெருநகரமாக உருமாறியபோதும் – இந்துஸ்தானி இசை குறித்த “கைச்சிட்டா – 8”