சந்தேகமின்றி அவர்கள் இங்கிலிஷில் பேசுவார்கள். இங்கிலிஷை நன்கு தெரிந்து கொண்டிராமல் கா-மனிதராக ஒருவர் ஆக முடியாது என்பது நன்கு தெரிந்த விஷயம். ஆ பூனால் இங்கிலிஷை நன்றாகப் பேச முடியாது. அவன் சீனப் பள்ளியில் படித்தான், கா மனிதர்களுக்கு எதிர்ப்புப் போராட்டம் நடத்திய பள்ளிகளில் அது ஒன்று, அப்படி வந்த அவர்கள் தங்கத்தான் போகிறார்கள் என்பது அப்போது தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. இடை நிலைப் பள்ளியில் படிக்கையில் ஆ பூனும் சக மாணவர்களுடன் கரம் கோர்த்துக் கொண்டு பஸ் நிலையங்களின் முன்னால், அரசுக் கட்டடங்களின் முன்னே நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். கா மனிதர்கள் அந்த ரகளையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கப் பயன்படுத்திய சக்தி மிக்க தண்ணீர் பீரங்கிகளால் அடித்துக் கீழே தள்ளப்பட்டிருக்கிறான்.
Series: கா மென்
கா-மென் – ரேச்செல் ஹெங்
“கா மனிதர்கள் கடற்கரையோரம் நிலத்தை மீட்டுப் பயன்பாட்டுக்குக் கொணர புதிய, ஊக்கம் நிறைந்ததோர் திட்டத்தை முன்வைத்திருக்கிறார்கள். அது வடக்குக் கடற்கரையில் அறுபது சதவீதத்தைக் கையிலெடுக்கும். அதை முடிக்கப் பத்து வருடங்கள் போலாகும். இந்தப் புதுத் திட்டம் மக்களவையில் வரும் வாரம் வாக்களிப்புக்கு வரும்,” திரையில் இருந்த செய்தியாளர் சொல்கிறார்.