உருதுக் கவிதைகளை வாசிக்கையில் அங்கங்கே தென்படும் மதநல்லிணக்க வரிகளை எளிமையாகக் கடக்க இயலவில்லை. இன்னொரு மதத்தைப் பின்பற்றினாலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் மோஹானி, மகாகவி இக்பால், ஹாஃபீஸ் ஜலந்த்ரி, ஃபிராக் கரக்பூரி எனப் பல கவிஞர்கள் தங்களுடைய கவிதை வரிகளில் இராமனையும், கிருஷ்ணனையும் வடித்துள்ளனர்.
Series: கவிதை காண்பது
உருதுப் பாடல்களும் இந்திய இலக்கியமும் – அபுல் கலாம் ஆசாத்
அல்லாமா இக்பால்
இக்பாலின் ‘இறைவனுக்கு ஒரு கேள்வி’ (ஷிக்வா, புகார்) கவிதை வெளியானபோது அதில் நாத்திகம் ஒலித்தததைக் கண்டு மார்க்க அறிஞர்கள் குழம்பினர். இக்பாலுக்கு இறைவனை நோக்கிக் கேள்வியெழுப்பும் தைரியத்தைக் கொடுத்து எது? எதனால் இக்பால் இப்படி எழுதினார்? என ஐயத்துடன் ‘ஷிக்வா’வை அணுகினர். இக்பாலை இறை எதிர்ப்பாளராகவும் பேசத் தயங்கவில்லை. அதன் பின்னர் ‘கேள்விக்கு பதில்’ (ஜவாப்-ஏ-ஷிக்வா, புகாருக்கு விளக்கம்) கவிதையில் முன்னம் தான் இறைவனை நோக்கிக் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் பதில் அளிக்கும் வகையில் எழுதினார். அந்தக் கவிதைக்குப் பிறகு, இக்பாலின் ஷிக்வா, ஜவாப்-ஏ-ஷிக்வா இரண்டும் இஸ்லாமிய இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்பட்டது
மௌலானா ஸஃபர் அலி கான்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், பிறகு முஸ்லிம் லீக் ஆதரவாளராகவும் இருந்தவர் மௌலானா ஸஃபர் அலி கான். தன்னுடைய பத்திரிகை ஜமீன்தாரில் விடுதலை வேட்கைக் கருத்துகளை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுதியதால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர். இஸ்லாமிய அடையாளங்களுடன், கொள்கைகளுடன் வாழ்ந்த ஸஃபர் அலி கான் இராமனின் புகழ் பாடும் கவிதைகளை எழுதியுள்ளார். அக்கவிதைகள் இஸ்லாத்துக்கு முரண்பட்டவை அல்ல என்னும் கருத்து கொண்டவர்.
சீமாப் அக்பராபாதி
புத்தரைக் குறிப்பிடும்போது ‘இந்தியத் திருநாட்டின் முதல் ஒளி’ (சர்-ஜமீன்-ஏ-ஹிந்த் கா இர்ஃபானி-ஏ-அவ்வல் ஹை து) என்கிறார். இந்தியாவில் உன் ‘நினைவுகள் இன்னும் புதிதாக உள்ளன / சீனம் ஜப்பான் திபெத் வரை உன் குரல் எட்டியுள்ளது’ என்பது அந்தக் கவிதையில் இருக்கும் இன்னொரு அடி. தன்னுடைய ஹோலி கவிதையில் சீமாப் விடுதலை வேட்கையையும் இணைத்து எழுதியுள்ளார். ‘என் மடியில் முன்னேற்றம் தன் வண்ணங்களை நிறைக்கட்டும் / என்னுடைய ஹோலியின் வருகையைப் போல் விடுதலையும் வரட்டும்’ (இர்த்திகா கே ரங்க் சே லப்ரீஸ் ஜோலி ஹோ மேரி / இங்குலாப் ஐசா கோயி ஆயே தோ ஹோலி ஹோ மேரி).
ஹஃபீஸ் ஜலந்தரி
மௌலானா நவாபுத்தீன் ராம்தாஸி என்னும் அறிஞரை ஹஃபீஸ் ஜலந்தரி சந்திக்கும்போது நபிகள் நாயகத்தின் புகழைப் பாடுகிறார். மௌலானா ஹஃபீஸின் படிப்பு குறித்துக் கேட்கையில், ஹஃபீஸ் பள்ளிப்படிப்பையும் முடிக்காதவர் என்று தெரியவருகிறது. பக்திப் பாடல்களின் மீது ஹஃபீஸ் ஜலந்தரிக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்த மௌலானா, அவரைத் தன் சீடனாக ஏற்றுக்கொள்கிறார்.
அஜீஸ் பானு தாராப் வஃபா
அஜீஸ் பானுவின் முன்னோர்கள் ஸ்ரீநகரிலிருந்து லக்னோவிற்குக் குடிபெயர்ந்தவர்கள். தங்களுடைய குடும்ப வழமைக்கு மாறாக அஜீஸ் பானுவை மேற்படிப்புக்கு அனுப்பினார்கள். 1929இல் அஜீஸ் பானு லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் பெண்கள் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
இன்ஷா அல்லாஹ் கான் இன்ஷா
இன்ஷா அல்லாஹ் கான் (1752 – 1817) வங்காளத்தின் நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் ஆட்சிக்காலத்தில் பிறந்தவர். இரண்டாம் ஷா ஆலம் காலத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவிய காலகட்டத்தில் டில்லிக்கு இன்ஷாவின் குடும்பம் குடிபெயர்ந்த்து.முதலில் ராணுவத்தில் பணிபுரிந்து, பின்னர் தன்னுடைய மொழித் திறனாலும், கவிதை எழுதும் ஆற்றலாலும், யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி நகைச்சுவையாக்க் கவிதையில் சொல்லும் திறனாலும் அரசவையில் இடம் பெற்றார்.
வலி மொஹம்மத் வலி
வலி தக்கனி குறித்து எழுத்தாளர் இரா. முருகன் ‘கஜல்’ புத்தகத்தின் முன்னுரையில், //கஜலில் மகாகவியாக விளங்கிய மீர்ஸா காலிப்கூட்த் தன் முக்கியமான இருபது வருடங்களில் உருதுவில் எழுதுவதைத் தவிர்த்து, பாரசீக மொழியிலேயே படைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றும், வட இந்தியாவில் உருது கஜல் செழிக்க தென்னிந்தியக் கவிஞர் வலி தக்கனியின் முயற்சிகளும் காரணம் என்று அறியும்போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன// எனக் குறிப்பிடுகின்றார்.
ரஹ்பர் ஜவ்ன்பூரி
ரஹ்பர் ஜவ்ன்பூரியின் ‘என் நாடு’ (மேரா வதன்) என்னும் நாட்டுப்பற்றுப் பாடலில் மதநல்லிணக்கம்
முதன்மையாக ஒலிக்கும். ஜான்சி ராணி, ரஸியா சுல்தான், அவாதி, இராஜபுத்திரர், வங்காளம், பனாரஸ்
என இந்தியாவின் பெருமைகளைப் பாடும் பாடலில் மதநல்லிணக்கத்தை முன்னிறுத்திப் பாடியது சிறப்பு.
ஷேக் மின்ஹாஜ் அன்சாரி (எ) ரஹ்பர் ஜவ்ன்பூரி உத்தரப்பிரதேசத்திலுள்ள ஜவ்னபூரில் பிறந்தவர். ஆரம்பக்
கல்வியையும் பயிற்சியையும் அங்கு பெற்றார். புகழ்பெற்ற உருது ஆசிரியர் ஷஃபா குவாலியரின்
மாணவர்களுள் முக்கியமானவராக அவர் அறியப்பட்டார்.
சாஹிர் லூதியான்வி
திரைப்பாடல்களில் இசைக்கு வரிகளா வரிகளுக்கு இசையா என்னும் பட்டிமன்றம் காலங்காலமாக நிகழ்கிறது. சாஹிர் தனது வரிகளுக்கு இசை அமைக்கப்படுவதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் எஸ்.டி. பர்மனுக்குக்கும் அவருடன் மனக்கசப்பு உண்டானது. ஒரு காலகட்டத்தில் தனது பாடலைப் பாடும் லதா மங்கேஷ்கருக்குத் தரப்படும் தொகையைவிட தனக்கு ஒரு ரூபாய் அதிகமாகத் தரவேண்டும் எனப் பிடிவாதமாகச் சொல்லியுள்ளார்.
ஷகீல் பதாயுனி
இஸ்லாமியர் ஒருவர் திரைப்படத்தில் இந்து சமய பக்திப் பாடல்களை எழுதியது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ‘திருவிளையாடல்’ திரைப்படக் காலத்தில் தமிழ்த் திரையில் இருந்ததைப் போல, வடக்கிலும் பைஜு பாவ்ரா (1952) திரைப்படக் காலத்தில் இருந்துள்ளது.பைஜு பாவ்ராவில் பக்திப் பாடல்கள் நிறைய எழுதப்படவேண்டியதால் இயக்குநர் விஜய் பட் கவிஞர் கவி ப்ரதீப்பைப் பரிந்துரைத்துள்ளார். ஒருமுறை ஷகீலின் பாடல்களைப் பார்த்துவிடும்படி இசையமைப்பாளர் நௌஷாத் விஜய் பட்டிடம் விண்ணப்பம் வைக்க, ஷகீலின் பாடலைப் பார்த்த விஜய் அவருக்கு பைஜு பாவ்ராவில் பக்திப்பாடல்களை எழுத வாய்ப்பு அளிக்கிறார்.
ஜாவீத் அக்தர்
‘யுகாந்தர்’, மிதுன் சக்ரபோர்த்தி – சங்கீதா பிஜ்லானி நடித்து, என். சந்த்ரா எழுதி இயக்கிய திரைப்படத்துக்குப் பாடல் எழுத ஜாவீத் அக்தர் அழைக்கப்படுகிறார். இசையமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் தயக்கத்துடன் ஒரு பாடலில் கண்ணபிரானின் ‘ஆரத்தி’ படமாக்கப்படும், பாடல் வரிகளும் அதற்கு ஏற்றாற்போல் அமையவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். இதை ஏன் தயங்கித் தயங்கிச் சொல்கிறீர்கள் எனக் கேட்டுப் பாடலின் மெட்டை வாசிக்கச் சொல்லியிருக்கிறார்.