காவற்பெண்டு பாடிய பாடலில் ‘புலி சேர்ந்து போகிய கல்லளை’ என்ற வரி தேர்வுகளில் கேள்விகளாக கேட்கப்படும். ‘புலி இருந்து சென்ற கல்குகை போன்று, அவன் இருந்த வயிறு இங்கே இருக்கிறது.. அவன் போருக்கு சென்றுள்ளான்’ என்று புறநானூற்று தலைவி சொல்கிறாள். இது போன்று சங்கப்பாடல்கள் இளம்வயதில் அறிமுகமாகியிருந்தாலும்,சிறவயதில் அதை நாம் உள்வாங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. சங்கப்பாடல்களை வாசிக்கும் போது அதில் எதாவது ஒருவரி மனதில் படிந்து தித்திக்கும் அல்லது வெறுமையைப் படரவிடும்.
Series: கவிதாயினி
சங்கப்பெண்கவிகள்
தலைவன் பிரிந்து சென்ற காலத்தில் தலைவி முற்றத்தில் பழுத்திருக்கும் வேம்பை பார்க்கிறாள். அவர் செல்லும் பாலை நிலத்திலும் வேம்பு பழுத்திருக்கும் காலம் இது தானே? என்று தோழியிடம் கேட்கிறாள். கிளி அந்த வேப்பம்பழத்தை கொத்தி தின்பதற்கு வாயில் வைக்கிறது. இந்தக்காட்சி பொன்ஆசாரி தாலிநாணில் பொற்காசைக் கோர்ப்பதை நினைவுபடுத்துகிறது. அவர் சென்ற வழியில் இதே போல கிளிக்கூட்டம் பழுத்த மரங்களில் அமரும்தானே, அதைக் கண்டாவது என் நினைவு வருமா? கேட்கிறாள்