இன்று, பள்ளி செல்லும் மாணவர்கள் கணினியுடன் விளையாடுகிறார்கள். ஆனால், 1980/90 -களில், இதற்கு ஏராளமான கல்வி தேவைப்பட்டதாக எண்ணப்பட்டது. என் பார்வையில், இது ஒரு மிகப் பெரிய அபத்தம். அந்நாளைய கணினி ராஜாவாகிய ஐ.பி.எம். (IBM) இந்த பிம்பத்தை வெற்றிகரமாக அரங்கேற்றி வெற்றி பெற்றது. பெரும்பாலான ஐ.பி.எம். ஆசாமிகள், ஐ.ஐ.டி. -யில் படித்து விட்டு சம்பளப் பட்டுவாடா மற்றும் கணக்குகள் பார்க்கும், உப்பு சப்பில்லாத நிரல்களை எழுதி தேவதூதர்கள் போல உலா வந்தார்கள்.
Series: கணினி நிலாக்காலம்
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 2
இப்படி உள்ளேற்றப்படும் தரவுகள் ஒரு ஃப்ளாப்பி டிஸ்க் -கில் (floppy disk) பதிவு செய்யப்படும். டிஸ்க் என்றவுடன் ஏராளமான தேக்கம் (storage) இருப்பதாக நினக்காதீர்கள். ஒரு ஃப்ளாப்பி டிஸ்கில் 80 -களின் ஆரம்ப கட்டத்தில் வெறும் 256 KB மட்டுமே சாத்தியம். இந்தத் தரவு உள்வாங்கும் எந்திரங்கள், அவை முற்றிலும் நிரம்பிவிடாமல் பார்த்துக் கொண்டு, வித்தியாசமான ஒலிகள் மூலம் இயக்கியிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும்.
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 3
அச்சடிக்கும் எந்திரம், திடீரென்று, பாதியில் நின்றுவிடும். உதாரணத்திற்கு, ஒரு 1,300 பக்கப் பட்டியலில் 780 பக்கம் வரை அச்சடித்து விட்டு நின்று விடும். பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில், இவ்வாறு நிகழ்வது கணினி மையத்திற்கு ஒரு மிகப் பெரிய தர்ம சங்கடம் மற்றும் இழப்பு. அந்த நாட்களில், 781 ஆம் பக்கத்திலிருந்து மீண்டும் அச்சடிக்க வசதி இல்லை. ஆரம்பத்திலிருந்து அச்சடித்தால், முழு 1,300 பக்கங்களும் அச்சடித்தது எந்திரம்! காகித மற்றும் நேர விரயம் என்பது கணினி மையத்திற்கு பிடிக்காத விஷயம்
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 4
நானே பார்க்காத ஒரு கணினியில், இந்த வங்கியின் ஒரு கிளைக்கு வேண்டிய நிரல்களை நான் எழுத வேண்டும். இத்தனைக்கும், அதற்கு முன், அப்படி ஒரு வங்கிக்காக எந்த நிரலையும் நான் எழுதியதில்லை! என் கவனம் எல்லாம், எப்படி இந்த ப்ராஜக்டில் மீண்டு வரப் போகிறோம் என்பது மட்டுமே. ஆனால், மற்றவர்களின் பார்வை வேறு விதமாக இருந்தது.