நான் அங்கே இருந்து மூன்று வாரங்கள் ஆனபின்னரே அவர் அந்தத் தீவைப் பற்றிச் சொன்னார், என் கணக்கில் நாங்கள் உரையாடியதில் அது மூன்றாவது அல்லது நான்காவது தடவையாக இருக்கும். முதல் சில நாட்களுக்கு அவர் என்னை அணுகாமல் என் போக்கில் இருக்க விட்டார். அந்த ஓய்வு வாசஸ்தலத்தில் (அப்படி ஒரு வர்ணிப்பு பழைய காலத்து அர்த்தத்தில்தான் அந்த இடத்துக்குப் பொருந்தும். அது எங்கோ மலைகளடர்ந்த, எட்டாக்கையான ஒரு பிரதேசத்தில் இருக்கும், பாசி படர்ந்த, பழைய சிறுகுடில்களின் தொகுப்பாக இருந்தது) நான் சேர்ந்தபோது குளிராக, இருண்ட, மிக நேரமாகி விட்ட பின்மாலைப் பொழுதாக இருந்தது.
Series: எரியும் காடுகள்
எரியும் காடுகள் – 2
துடுப்பு என் மடியில் பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்டேன், மிச்சமிருந்த சாண்ட்விச்சை வெளியே எடுத்தேன். ஒரு துண்டு விடாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டேன், பின்னர் அதைச் சுற்றி வந்த மேல் காகிதத்தைப் பயன்படுத்தி, பனித் துகளைச் சேகரித்து அதை வாய்க்குள் திணித்துக் கொண்டு சாப்பிட்டேன். நான் ஏற்கனவே நிறைய வியர்த்திருந்தேன், பசியை விட உடலில் நீரிழப்பு என்பது மோசமாகப் பாதிக்கும், நான் இருக்கும் இடத்தை உத்தேசித்தால் அப்படி நடப்பது அங்கதச் சுவை கொண்டதாகத்தான் இருக்கும். ஏரித்தண்ணீர் குடிக்கக் கூடியதாக இருந்திருக்கும், ஆனால் நான் ஏற்கனவே வேண்டுகிற அளவு ஆபத்தை மேற்கொண்டிருந்தேன்.