காண்பவை எல்லாம் கருத்துகளே

This entry is part 1 of 6 in the series உலக தத்துவம்

பெர்க்லியின் தத்துவமே முதலாவதும் முழுமையானதுமான கருத்து முதல்வாதப் பார்வை கொண்டது என்று கருதப்படுகிறது. இவர் புறத்தில் காண்பது எல்லாமே நம்மில் எழும் கருத்துக்களையே என்கிறார். இப்படிச் சொல்வதினால் ஐயவாதிகளால் நாம் காணும் காட்சியை ஐயத்திற்குள்ளாக்க முடியாது என்கிறார். காணும் காட்சி நம்மைத் தாண்டிய பொருளாக இருக்கும்போதே அதன் மீது ஐயம் எழுப்பமுடியும். காணும் காட்சி நம்முடைய கருத்துக்களாக இருக்கும்பட்சத்தில் அவற்றின் உண்மை நிலையைப் பற்றியும் அவற்றின் இருப்பைப் பற்றியும் ஐயப்படவே முடியாது என்கிறார். இருப்பதால் தான் காண்கிறோம். இருப்பு உடையது காண்பதற்குரியது – Esse est percipi என்பது பெர்க்லியின் பிரபல கூற்று.

காண்பவை எல்லாம் கருத்துகளே – 2

This entry is part 2 of 6 in the series உலக தத்துவம்

நம் சிந்தனைகள் எல்லாவற்றுக்கும் பின் ஒரு சுயம் இருக்கிறது. நம் எண்ணங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றினைக் குறித்து நிகழ்கின்றன. ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்து நம் மனது எண்ணுகிறது. நாம் எந்த விஷயத்தைப் பற்றி எண்ணுகிறோமோ அது நம் அகத்தில் ஒரு அறிபடுபொருளாக(Object) ஆக்கப்படுகிறது. நமது சுயத்தைப் பற்றி சிந்தித்தாலும் சுயம் ஒரு அறிபடுபொருளாக ஆக்கப்பட்ட பின்னரே சிந்திக்கப்படுகிறது. இருப்பினும் சுயம் முழுமையாக அறிபடுபொருளாக ஆக்கப்படுவதில்லை. சுயத்தை எவ்வளவு தான் நாம் அறிபடுபொருளாக ஆக்க முயற்சித்தாலும் அந்த மாற்றத்தை அடையாத சுயம் எஞ்சி நிற்கிறது. இதை மீறுநிலை சுயம் (transcendental ego) என்கிறார் ஃபிஷ்ட.

ஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது?

This entry is part 3 of 6 in the series உலக தத்துவம்

இக்கட்டுரை ‘what makes a philosopher’ என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையில் வரும் சில கருத்துக்களுக்கும், கலைச்சொற்களுக்கும் கூடுதல் வரையறையும் அறிமுகமும் வேண்டுமென்று கருதியதால் அவை கட்டுரைக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தத்துவவாதியாக ஆக்குவது எது? இது மிக அடிப்படையான கேள்வியாக இருப்பினும் இதன் பதில் நாம் நினைப்பதை “ஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது?”

பொய்யுலகை அளிக்கும் தீயசக்தி

This entry is part 4 of 6 in the series உலக தத்துவம்

அறிவின் தேடலில் ஈடுபடுபவர்கள் தங்களின் தேடலில் தெளிவு பெற அவர்கள் ஆராயும் விஷயத்தை ஒரு புனைவு தருணத்திற்குள் வைத்துப்பார்ப்பது வழக்கம். Thought experiment என்ற இந்த முறை நாம் வழக்கமாக அடைந்திருக்கும் பழக்கப்பட்ட பார்வைகளை உதறிவிட்டு புதிய பார்வைகளைப் பெற உதவுகிறது. பல சிந்தனைச் சோதனைகள் அதைப் படைத்தவருக்கு புதுப்பார்வைகளைப் பெற உதவுவதுடன் காலத்திலும் புதிராக நிலைத்துவிடுகின்றன. இவ்வகைச் சிந்தனைச் சோதனைகள் புனைவை படைப்பவர்களுக்குப் புனைவிற்கான விதையாக அமைகின்றன்.

மேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்

This entry is part 5 of 6 in the series உலக தத்துவம்

கடவுள் இருப்புக்கான வெவ்வேறு வகையில் வெளிப்பட்டாலும் அடிப்படையில் இவ்வாதங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. இருப்பியல்வாதம்(ontological argument), பிரபஞ்சவியல்வாதம்(cosmological argument), இலக்கியல்வாதம்(teleological argument. இருப்பியல்வாதம் கடவுளின் வரையறையைக் கொண்டு கடவுள் இருப்புக்கு வாதங்களை முன் வைக்கும் முறை. இரண்டாவது இயற்கையின் பொது அம்சங்களைக் கொண்டு கடவுளை அதன் அவசிய காரணமாக முன் வைக்கும் முறை. இதன் பெயர் பிரபஞ்சவியல்வாதம். மூன்றாவது இயற்கையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைக் கொண்டு கடவுளின் இருப்புக்கான வாதத்தை முன் வைப்பது இலக்கியல்வாதம்.

வரலாறு குறித்து ஹேகல்

This entry is part 6 of 6 in the series உலக தத்துவம்

ஹேகல் இவ்வளர்ச்சியை மேலும் பல விவரங்களுடன் நான்கு வகையாக வகுத்துக்காட்டுகிறார். கிழக்கத்திய உலகில் அரசனே விடுதலையுடையவன் என்று அறிந்திருந்தனர். விடுதலையின் ஆன்மா ஒரே ஒரு மனிதனில் தோற்றம் பெற்றிருப்பதால், அம்மனிதனின் விடுதலையானது பிறப்பெனும் ஒர் எதர்ச்சை நிகழ்வால் நிர்ணயிக்கபட்டதால், அவ்வகை விடுதலையானது முற்றிலும் தற்செயலானது. மேலும், மக்கள் தங்களுக்குள் இருக்கும் அகவய விடுதலையை அறியாதிருந்தனர். அதனால் ஹேகல் இதை ஆன்மாவின் வளர்ச்சியின் பிள்ளைபருவம் எனக் கருதினார்.