ஸ்ரீலங்கா திரும்பிப்போவதைத் தவிர்க்கும் சோதனையில் பகீரதனுக்குக் கடைசிக்கட்டம். குடியேற்ற அதிகாரியுடன் நேர்காணல். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே அரசாங்கக் கட்டடத்தில் காத்திருந்தார்கள். தனித்துத் தெரியாத சம்பிரதாய ஆடைகள். அவன் நீலநிற கோட் ட்டை பான்ட்ஸில். அவள் முழங்காலுக்கும் தாழ்ந்த கறுப்புப் பாவாடை, வெள்ளை சட்டை, கழுத்தைச்சுற்றி சாம்பல்நிறத் துண்டு. கணவன் மனைவி இருவரும் அவரைத் தனித்தனியே சந்திக்க வேண்டும். அலுவலக அறையில் இருந்து ஒரு பழுப்பு ஆணும் அதிகாரியும் வெளியே வந்தார்கள். அவனை எதிர்கொண்ட பெண்ணும் அவனும் ஏமாற்ற மௌனத்துடன் வெளிவாசல் நோக்கி நடக்க…
Series: உபநதிகள்
உபநதிகள்-2
பதின்பருவத்தின் பின்பாதியில் இருந்த அவர்களுக்கு நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இருந்து சால்ட்லேக் சிடிக்குத் தனியாகப்பயணம், பலருக்கு முதன்முறையாக. மதியத்திற்குமுன் விமான நிலையத்தில் ஐந்தாறு பேர்களாகச் சேர்ந்து வளாகத்தின் மாணவர் விடுதிக்கு வந்தார்கள். சிறுவயதில் இருந்தே தனி அறையின் சுதந்திரத்திற்குப் பழக்கப்பட்ட மானஸா இன்னொருத்தியுடன் ஒரு அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கைக்கு ஒத்திகை. மானஸா தன் பெட்டியைத் திறந்து சாமான்களை அவற்றுக்கான இடங்களில் வைத்தபிறகு அவள் அறைத்தோழி நிதானமாக வந்தாள், சிறிய தோள்-பையுடன்.
உபநதிகள் – மூன்று
என் தங்கை என்னைவிட இரண்டரை வயது சிறியவள். மற்றவர்கள் தாத்தாவின் கவனத்தைப் பிடித்துவைத்ததைப் பார்த்து, தன் பங்குக்கு அவரிடம் என்ன காட்டலாம் என்று யோசித்தாள். மாடியில் தன்னறைக்குப் போய் அவளுடைய கைப்பையை எடுத்துவந்தாள். அதில் ஒரு சிறிய பர்ஸ். அதைத்திறந்து அவள் சேர்த்துவைத்திருந்த டாலர் நோட்டுகளைப் பெருமையுடன் காண்பித்தாள்.
உபநதிகள் – 4
ந்தக் குறிப்பிட்ட அதிருஷ்டசாலிகளில் மானஸாவும் ஒருத்தி. அத்தினத்தில் வழக்கத்துக்கு முன்பே எழுந்து தூக்கம் வராமல் தவிக்கவில்லை. கோவிலுக்கோ யோகா பயிற்சிக்கோ போகவில்லை. படிப்பின் தீவிரம் குறைந்து பள்ளிக்கூட பருவம் முடிவுக்கு வரப்போகும் காலம் என்பதால் மூளையை வருத்தாத பள்ளிக்கூட நாள். அது முடிந்ததும் நிதானமாகக் காரில் அலெக்கை அழைத்துவந்தாள். ஃப்ளாரிடா சென்றிருந்த அண்டை வீட்டினரின் நாய் அவர்கள் வீட்டில். அதனுடன் சில நிமிடக் கொஞ்சல். உயர்மட்டக் கல்லூரியில் நுழையாவிட்டால் வாழ்க்கை என்னாகுமோ என்ற தவிப்பில் நிறையத் தின்று வயிற்றைக் கெடுத்துக்கொள்ளவில்லை. ஒரேயொரு குக்கி, அரை கோப்பை கொழுப்பு குறைத்த பால்.
உபநதிகள் – 5
நீங்க சொல்ற முதல் கட்சியில நான். என் தம்பி இரண்டாவதுல. எதிர்ல அப்பா அம்மா இருக்காங்களே அந்த வீட்டிலதான் நாங்க வளர்ந்தோம். எங்கேயாவது போகணும்னு அப்பா சொன்னா அவன் டக்னு கிளம்பிடுவான். நான் தாத்தா பாட்டிக்குத் துணையா இருக்கேன்னு வீட்டிலயே தங்கிடுவேன். எனக்கு எல்லா வேளையும் வீட்டு சாப்பாடு போதும், அதே அவனுக்கு வாரம் ரெண்டு தடவை ஓட்டல்ல விதவிதமா சாப்பிட்டாகணும். ஆதவி என்னை மாதிரி இருக்கா…” என்று சொல்லும்போதே காரின் ஆட்டத்தில் வினதாவின் கண்கள் மூடிக்கொண்டன.
உபநதிகள் – 6
சிறுகதை முதல் வரியிலேயே சூடுபிடிக்கணும், முக்கால்வாசி இருக்கும்போதே முடிஞ்சிடணும். நீ எழுதினது முழுவதையும் சேர்த்து வச்சுக்கோ! எதிர்காலத்தில உதவும். ஆனா, போட்டிக்கு அனுப்பற கதை சனிக்கிழமை காலையில தொடங்கி நோம் சோம்ஸ்க்கியை ஆதவி மட்டம் தட்டறதோட முடிந்துவிடும். அதாவது கதையின் கால நீளம் இருபத்தியாறு மணி
உபநதிகள் – ஏழு
நீ படித்திருப்பாய், என் அப்பாவால் குனிந்து நிமிர்ந்து நீண்டநேரம் நின்று தொழிற்சாலையில் வேலைசெய்ய முடியாது. தினம் எதிரில் தாத்தா வீட்டிற்கு மெதுவாக நடந்து சிரமப்பட்டு மாடிக்கு ஏறுவார். அங்கே கணினியின் முன் அவர் நேரம் போகும். ஆலோசனை என்ற பெயரில் ஓரளவு வருமானம். வெளிவேலை எல்லாவற்றையும் என் அம்மாவே செய்வாள். அதை அடிக்கடி கவனித்த ஒரு ஆள் என் பெற்றோருக்கு இடையில் நெருக்கமான உறவு இல்லை என்று கணக்குப் போட்டுவிட்டான். அவனுடைய பையனுக்கு ட்யுஷன் பற்றிப்பேச என் அம்மாவை ஒரு விடுதிக்கு வரச்சொல்லி அங்கே சந்தித்தான்.”
உபநதிகள் – 8
தற்போதைய சமுதாய அமைப்பின் உருவாக்கலில் அவள் தாய் கங்காவைப்போல கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ஒருசிலர் அளவுக்குமேல் பணம் சேர்க்கிறார்களா? அந்த அளவு என்ன? அதை நிர்ணயிப்பது யார்? இயந்திர சமுதாயத்தினால் தான் எங்கோ உட்கார்ந்து யூ.எஸ்.ஸைக் குறைசொல்லும் அவள் கட்டுரைகள் பலருடைய பார்வைக்கு எட்டுகின்றன. அந்த அமைப்பை ஒரே நாளில் இடித்துவிட முடியுமா? அப்படி நிஜமாகவே நடந்தால் அது தன்னைப் பாதிக்காது என்கிற தைரியத்தில் எழுதியிருக்கிறாள். யூ.எஸ்.ஸில் பொருளாதார வளர்ச்சி வேகம் இழந்தால் அதன் பாதிப்பு இந்தியாவிலும் இருக்கும். பி.பி.ஏ. பட்டம் வாங்கியவளுக்கு இதுகூடவா தெரியவில்லை?
உபநதிகள் – ஒன்பது
அமெரிக்க புறநகர் தனித்துவம் இல்லாத இடம். அதில் வேர் விடாத போராட்டங்கள், கொள்கை இல்லாத மனிதர்கள், ஆழமில்லாத உணர்ச்சிகள். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த நான் அதன் எல்லைகளைத் தாண்டி கற்பனை செய்ய மிகவும் சிரமப்பட்டேன். நீயும் உன் எண்ணங்களின் கட்டை அவிழ்த்து அவற்றை மேலே பறக்கவிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத எத்தனையோ பெண் வயதுக்கு வரும் கதைகளில் இதுவும் ஒன்றாக ஆகிவிடும். கலாவதி வளர்ந்தது நமக்குத் தெரிந்த ப்ரென்ட்வுட் இல்லை. இலங்கைத் தமிழர்கள் ஒருவித பாசப்பிணைப்புடன் அமைத்துக்கொண்ட சமுதாயம். அதை நீ கதையில் கொண்டுவர வேண்டும்.
உபநதிகள் – அத்தியாயம்: பத்து
சற்றுத்தள்ளி கோடிட்ட இடத்தில் கலாவதி காரை நிறுத்துகிறாள். இறங்கி மேற்கு வானத்தின் கருமையைப் பார்த்து அவள் முகத்தில் கவலைக் கோடுகள். மனதைத் தேற்றிக்கொண்டு காரில் இருந்து பைகளை எடுத்து நடக்கிறாள். புல்வெளியில் ஏற்கனவே சில கூடாரங்கள் எழுந்து நிற்கின்றன. இன்னும் சில தரையில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கின்றன. விவசாயிகள் சந்தையில் என்ன வாங்கலாம் என்பதைத் தீர்மானிக்க கலாவதி ஒரு சுற்று நடக்கிறாள்.
உபநதிகள் – 11
“ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படித்து ரசித்திருக்கிறேன். அவருடைய ஒப்பற்ற கதாபாத்திரங்களுக்கு அக்காலத்து மேடை நடிகர்கள் எப்படி உயிர்கொடுத்தார்கள் என்று நமக்குத் தெரியாது. ஒளிப்பதிவு வரும்வரை அந்தக் கலைஞர்களின் சாதனைகள் நீரில் வரைந்த கோலங்கள். நான் எழுதிய வார்த்தைகளும் விவரித்த காட்சிகளும் வெறும் எலும்புக்கூடு. அவற்றை உயிருடன் பார்க்கும்போது நடிப்பு என்பது எப்படிப்பட்ட அருமையான கலை என்பதை உணர்கிறேன். நான் மந்தாகினியை சில மாதங்களுக்கு முன் சந்தித்து சிறிது நேரமே அவளுடன் பழகினாலும் அவள் என் தங்கை.
உபநதிகள் – பன்னிரெண்டு
“நம் குடியிருப்பையே எடுத்துக்கொள்வோம். குப்பைகளை வாரி தெருவை சுத்தம் செய்ய ஒரு ‘மாம்-அன்(ட்)-பாப்’ குழுவே போதும், பெரிய கார்பொரேஷன் அவசியம் இல்லை. கலாவதிக்காக நீ கற்பனை செய்த மென்டல்சன் ஃபார்ம்ஸ் போல பத்து ஏக்கர் சிறு பண்ணைகள் பலரகப் பயிர்களைப் பயிரிட்டு பெரிய தொழிற்சாலை பண்ணைகளைவிட அதிகம் விளைவிக்க முடியும். நோய் தடுப்பு, வெட்டுக்காயங்களுக்குக் கட்டுகள் போன்ற, பல அவசியமான சேவைகளைச் சிறிய அளவில் செய்தால் மருத்துவ செலவைக் குறைக்கலாம்.”
உபநதிகள் – பதின்மூன்று
என் எலைஸா பாட்டி ஆதிகால வரலாற்றில் கரைகண்டவள். டைபர் நதியில் மிதந்து வந்த இரண்டு அபலைக் குழந்தைகளை ஒரு பெண் ஓநாய் காப்பாற்றி வளர்த்த கதையையும், அதைத் தொடர்ந்த சம்பிரதாய வழக்கங்களையும் அவள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்தேன். நிஜத்திலும் ஓநாய்கள் ஒன்றுக்கொன்று உதவிசெய்து குட்டிகளுக்கும் முதிர்ந்த பிராணிகளுக்கும் ஆதரவு தருவதையும், ஆணும் பெண்ணும் வாழ்நாள் முழுக்கத் துணையாக இருப்பதையும் அவள் விவரித்து இருக்கிறாள். ஓநாய்களை நம் காதல் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக ஏற்க வேண்டும் என்ற அவள் அறிவுரையைப் பின்பற்றப் போகிறேன்
உபநதிகள் – 14
சில நாட்களாக அடுத்த வீட்டுக்குக் குழந்தைகள் நடந்தோ ஊர்தியிலோ வரவில்லை. சிறுபொழுதுக்குப் பிறகு அவர்களை அழைத்துப்போகவும் இல்லை. அந்த வீட்டில் நடமாட்டமும் இல்லை. அதன் பாதிப்பு அவனுடைய மாற்றத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரே நிசப்தம்! அவன் கூச்சலைக் கேட்பதற்கு யாரும் இல்லையே என்பதால் அதைச் செய்யப் பிடிக்கவில்லையா? அவனுக்குக் கத்த வேண்டும் என்கிற ஆசையே போய்விட்டதா? சேச்சே அப்படி இருக்காது.
உபநதிகள் – 15
பெர்னியின் திருமண விருப்பத்தை குடும்பத்தில் மற்றவர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதது மானஸாவுக்கு ஆச்சரியமாக இல்லை. அவள் அப்பாவும் அம்மாவும் மறுத்து எதுவும் சொல்லாவிட்டாலும் அவர்கள் வார்த்தைகளின் தொனியில், ‘இது ஒரு தாற்காலிகக் கவர்ச்சி, ஆறு மாதம் நீடித்தால் பார்த்துக்கொள்ளலாம்.’ அவர்களின் சந்தேகம் எதிர்பார்க்கக் கூடியது தான். பதின் பருவத்திலேயே இன்னும் ஒரு ஆண்டு இருக்கும்போது மானஸாவும் பெர்னியும் கல்யாணத்துக்குப் பதில் தொழில் பாதையை யோசிக்க வேண்டும்.