ஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி?

2004 ஆம் ஆண்டின் ஒரு மதியப்பொழுதில் இருந்து மாலை வரை 6 விதமான மரணங்கள் எனக்கு தொடர்ந்து நிகழ்ந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நிகழ்ந்திருந்தாலும் அனைத்து மரணங்களிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. அது நான் என் குடும்பத்தை ஒவ்வொரு மரணத்திலும் ஆதரவின்றி நிறுத்தியிருந்ததுதான். ஆறு முறை மரணித்த பின் அன்றிரவு உறங்கப் போகையில் என் மரணத்திற்குப் பின் என் மனைவி, குழந்தைகளின் நிலைமையினை எண்ணி இன்னும் திருமணம் ஆகியிராத நான் கண்ணீர் சிந்தும்படி ஆனது.

ஆட்டத்தின் ஐந்து விதிகள் – 2

நேரடியாக பேசுவோம். விற்பனை என்பது அடிப்படையில் ஒரு பரிமாற்றச் செயல்பாடு. விற்பனையாளரும், வாங்குபவரும் இணைந்து அவர்களுக்கிடையே நிகழ்த்தும் பரிமாற்றச் செயல். இதில் வாய்ப்புகள் அதிகம் இருப்பது வாங்குபவரிடமே. ஏனெனில் ஏற்பு, மறுப்பு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முடிவு வாங்குபவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் விற்பனையாளர் என்ன செய்துவிட முடியும்? வாங்குபவரை ஏற்பினை நோக்கி உந்துவதே அடிப்படையில் விற்பனையாளரின் செயல். இந்த உந்துதலைச் செய்வதில்தான் விற்பனையாளருக்கு எண்ணற்ற வழிமுறைகள் போதிக்கப்படுகின்றன.

ஆட்டத்தின் 5 விதிகள் – முதல் விதி

ஆட்டத்தின் முதல் விதியை இன்னும் ஒரு விதமாகப் புரிந்து கொள்வதென்றால் இப்படிச் சொல்லலாம். வாடிக்கையாளரும் நுட்பமும்,புரிதலும், ஆய்தலும் உள்ளவரே

ஆட்டத்தின் 5 விதிகள் – இரண்டாம் விதி

நண்பரின் அப்பாவிடம் நீங்கள் பேச ஆரம்பிக்கிறீர்கள் என்றால் உங்கள் கைப்பேசியில் நேரத்தை நொடிக்கணக்கில் எண்ணத் தொடங்குங்கள். 30 நொடிகளுக்குள் நண்பரின் அப்பா உங்களுக்கான அறிவுரைப் பேச்சிற்குள் நுழைந்து விட்டிருப்பார். சரி, நம் நன்மைக்குத்தானே சொல்கிறார் என்று நினைத்தீர்களானால் பேரன் பேத்திகளை வளர்ப்பது எப்படி எனும் அறிவுரையை பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் ஒன்றரை மணிநேரத்திற்கு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்?

ஆட்டத்தின் ஐந்து விதிகள் – மூன்றாம் விதி

பத்து நிமிடங்களுக்கு நண்பனின் அப்பா பயன்படுத்திய கடுஞ்சொற்கள்தாம் விஷயத்தை விபரீதமாக்கின – “உன் முகத்தில் ஏமாளி என எழுதி ஒட்டியிருக்கிறது , உனக்கு பணத்தின் அருமை தெரியவில்லை, நீ சம்பாதித்திருந்தால் தெரியும் அதன் அருமை, ஒரு சட்டை வாங்கத் துப்பில்லாத நீ எப்படி வேலைக்குப்போய் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறாய்? கல்லூரிக்குப் போகப்போகிறாயா , கூத்தாடப் போகிறாயா ? “ – இன்னும் எழுத முடியாத அளவுக்கு வார்த்தைகள்.

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- நான்காவது விதி

பாராட்டுவோர் அனைவருமே ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்கு மேல் போவதில்லை; பாராட்டுதல்களும் உதிரியான ஒற்றைச் சொற்கள் மட்டுமே. “சூப்பர், அருமை, சிறப்பு, கெத்து கலக்கல், செமை” என்பன போன்ற வார்த்தைகளும், “Great, Superb, fantastic, wow, mind boggling, awesome” என்பன போன்ற வார்த்தைகளும்தான் மீள மீள பயன்படுத்தப்பட்டன…
அதாவது வியப்பொலிச் சொற்களை சொல்வதையே பெரும்பாலும் நாம் பாராட்டாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்…

ஆட்டத்தின் ஐந்து விதிகள் – நான்காம் விதி

உங்களுக்கு இப்போது எப்படி இருக்கும் ?  அன்று முழுவதும் தேநீர் சந்திப்புகளில் அவரைப் பற்றி பொருமித் தள்ளிவிட மாட்டீர்களா ? ஆனால் ஒரு மேலாளர் வேறெப்படி செயல்பட முடியும் என எண்ணுகிறீர்கள் ? வேண்டுமானால் பாராட்டை இன்னும் அழுத்தமாக அனைவருக்கும் நடுவே செய்யலாம். உங்களைக் காட்டி பிறரை மேலும் “ஆட்டத்தின் ஐந்து விதிகள் – நான்காம் விதி”

ஆட்டத்தின் ஐந்தாவது விதி

தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளும் அற்ப மகிழ்வை நொடி நேரம் விற்பனையாளர் காட்டிவிட்டாலும் போதும், அசைக்கப்பட்ட வாடிக்கையாளர் மனம் அதைக் கவனித்து விடும். வாடிக்கையாளர் குறித்த நம் சிந்தனையில் புன்னகை சேர்ந்தால் நம்மால் வாடிக்கையாளரை உணர முடியும்.