கரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்

படத்தின் நாயகன் “கே” ஒரு நகலர் பொம்மையை தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்த பொம்மையின் பெயர் “மகிழ்ச்சி” (Joi). அது “கே” என்ன விரும்புகிறானோ அந்த ஆடையை அணிகிறது. “கே” செத்தால் தானும் உடனே மரிக்க நினைக்கிறது. “கே” என்னும் நகலனை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறது. “கே” என்ன நினைக்கிறானோ, அதை அப்படியே கிளிப்பிள்ளை போல் திரும்பி உறுதி செய்து அவன் முன்மொழிந்த எண்ணங்களை மறுமொழிகிறது. இது அத்தனையையும் சொந்தமாக சிந்தித்து நிதானமாக யோசித்து தன்னுள்ளே விவாதித்த பின் தீர்மானித்தது போல் நம்பகமாக “கே”யின் முடிவுகளை ஆதரித்து அவனை குஷியாக்குகிறது. கடையில் இந்த “மகிழ்ச்சி”யை “காதல்” கொன்றுவிடுகிறது.

உலகெலாம்…

நோலனின் ‘இண்டர்ஸ்டெல்லார்’ படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரு வகையில் கார்ல்சகனின் காண்டாக்ட் கதையின் தொடர்ச்சி எனலாம். இதற்கு முன்பே ஹாலிவுட்டிலிருந்து வெளிவந்த பிரபஞ்சத் தேடல் படங்களில் காணும் சில பொது அம்சங்களான பன்னுலகக் கோட்பாடு, விண்ணுயிர் தேடல், புழுத்துளையூடே அண்டப்பயணம் என்று இதிலும் அமைத்திருந்தாலும்…

ரெட் படப்பெட்டி – எண்ணியல் படக்கருவி

சாதாரணமாகப் படக்கருவிகளைக் கையாள ரத கஜ துராதிபதிகள் தேவை. ஒளிப்பதிவு இயக்குநர் கோணங்களை கவனிப்பார். அவருக்கு உதவியாக கேமிராவை இயக்க இருவர் இருப்பார்கள். கூடவே டிராலி தள்ள நாலைந்து பேர் வேண்டும். இவ்வளவு பெரிய படை எல்லாம் ரெட் கருவிக்கு தேவையில்லை. ஒருவர் போதுமானது. அஷ்டே!

ஹாலிவுட் உருவாக்கிய மனநோய்

MPD என்பது உண்மையாலுமே ஒரு மனநிலை பிறழ்ச்சி நோய்தானா அல்லது வெறும் ஹாலிவுட் ‘பில்டப்’தானா? அல்லது அதைவிட மோசமாக தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் மனசிகிச்சையாளர்களே இந்த நினைவுகளை உள்செலுத்துகிறார்களா? அன்னியன் திரைப்படத்தில் வருவதுபோன்ற மனப்பிறழ்ச்சிக்கு சாத்தியக்கூறுகள் உண்டா?

பனிப்போரின் இரகசிய பரிசோதனைகள்

ஆனால் பனிப்போர் யுகத்திலோ அதி-உளவியல் மற்றும் ஆழ-உளவியல் பரிசோதனைகள் என்கிற பெயரில் பல மூர்க்கத்தனமான மற்றும் முட்டாள்தனமான பரிசோதனைகளில் வல்லரசுகள் பணத்தை செலவிட்டன. சில நேரங்களில் எதிரியை இப்படி வீணாக செலவழிக்க வைக்க தம் பக்கத்து முட்டாள்தனங்களுக்கு உண்மை முலாம் பூசி பெரிதுபடுத்தி மறு முகாம்களில் பரவ்விடவும் இரு வல்லரசுகளும் தயங்கவில்லை.

பெண்ணின் நெருப்பு

கண்ணகி கற்பனையும் வரலாறும் கலந்து ஒரு நீங்காத தொன்ம நினைவாக தமிழ் மனதில் வாழ்கிறாள். சலேம் சூனியக்காரி விசாரணைகளையும், சந்தையையும், அடிப்படைவாத கிறிஸ்தவத்தையும் கொண்ட அமெரிக்கப் பண்பாட்டில் ஒரு கண்ணகி வழிபாட்டை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதன் மலினப்படுத்தும் பண்பாட்டில் அடக்கப்படும் பெண்மையின் மீதான ஆண்-சமுதாயத்தின் அச்சப்பார்வை, கூடிப்போனால் க்கேரி அல்லது ஃபயர்ஸ்டார்ட்டர் போன்ற பயமுறுத்தும் திரைப்படங்களாக மட்டுமே வர முடியும்.

காலப்பயணம் – 2

எலெக்ட்ரான்களும் ஃபோட்டான்களும் காலப்பிரவாகத்தில் செய்யும் திசை மாற்றங்களை உங்கள் எதிர்வீட்டு பெண்ணும் செய்யமுடியுமா? செய்யமுடியும். உண்மையான கேள்வி – அதற்கான நிகழ்தகவு சாத்தியமாகுமா? உங்கள் கோப்பை தேநீர் தானாக சூடாகுமா? உங்கள் துணையின் கோபம் தானாகக் குளிரடையுமா? வெப்ப இயங்கியலின் இரண்டாம் விதியின் புள்ளியியல் ஓட்டைகளுக்குள்ளாக கால இயந்திரத்தில் நாம் பயணிக்கமுடியுமா?

காலப்பயணம் – 1

ஐன்ஸ்டீன் வெற்றிகரமாக நிகழ்த்தியதொரு ஆதார இயற்பியல் கண்டுபிடிப்பை உபயோகித்து, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 1943-இல் ஒரு கப்பலை காண முடியாமல் ஆக்கினார்களாம். இதனால் கப்பல் சிப்பந்திகள் சிலர் காலப்பயணத்துக்கு ஆட்படுத்தப்பட்டார்கள் என்றார்கள் என்றும், இதனை வெளியுலகுக்கு சொன்ன மனிதர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்லப்பட்டது.

மாட்ரிக்ஸ்: இயந்திரம் படைத்த மாயையின் பொன்னுலகு

மாட்ரிக்ஸ் திரையமைப்பில் மற்றொரு பண்பாட்டின் பெண் தெய்வத்தை இயக்குநர் நுட்பமாக உள் நுழைக்கிறார். மேலே சொன்ன ஞானமரபுக் கதையின் வேர்களை நாம் கேனோபநிஷத்தில் காணலாம். அதில் அகந்தை கொள்ளும் தேவர்களுக்கு ஞானம் அளிப்பவள்: உமா. மாட்ரிக்ஸ் கதையில் ஞானம் அளிப்பவளாகச் சித்தரிக்கப்படுபவள் – சதி என்கிற சிறிய இந்தியப் பெண். இந்தியத் தொன்மத்தில் சதியின் மறுபிறவியே ஹிமவானின் சிறிய மகளான உமா.

மனிதனாக விரும்பிய இயந்திரர்கள்

அஸீமோவ்வின் “Robots as pathos” என்பதன் ஒரு உச்சமாகவே இந்த திரைப்படத்தை நாம் கருதலாம். இத்திரைப்படத்தின் ஊடாக ஒரு சிறிய பரிணாம வளர்ச்சியைக் காணலாம். திரைப்படத்தின் தொடக்கத்திலேயேமொரு முக்கிய கேள்வி எழுப்பப்படுகிறது. உணர்ச்சிகளை உள்ளடக்கிய ரோபாட்களை -செயற்கை நுண்ணறிவை – உருவாக்கினால் அத்தகைய உருவாக்க்கங்களுடன் மானுடத்தின் கடப்பாடு என்னவாக இருக்கும்?

ரோபோட்கள்: ஞான உச்சமாகவும் விலக்கப்பட்ட கனிகளாகவும்

செயற்கை மனித இயந்திரத்தை உருவாக்குவது மானுட அகங்காரத்தின் வெளிப்பாடாக காணப்பட்டது. …மானுடனை ஆன்மாவுடன் உருவாக்குவதென்பது கடவுளால் மட்டுமே முடிந்த ஒன்று. எனவே மனிதன் உருவாக்கும் செயற்கை மனிதன் ஆத்மா இல்லாத ஒரு வக்கிரமே. எனவே ஒரு செயற்கை மனிதனை உருவாக்குவதே தீமையில் தான் முடியும் ஏனெனில் மனிதன் அறியப்படக்கூடாத இரகசியங்கள் இருக்கின்றன என்பதே மீண்டும் மீண்டும் (புனைவுகள் மூலமாக) உபதேசிக்கப்பட்டன.

ஹாலிவுட் பேயோட்டிகளும், உண்மைக் கதைகளும்

எக்ஸார்ஸிட்டுக்குப் பிறகு பல படங்கள் அதன் தொடர்ச்சி என வந்தாலும், உண்மையான அடுத்தப் பகுதி திரைப்படம் எமிலி ரோஸின் எக்ஸார்ஸிஸம் (பேயோட்டல்) என்கிற பெயரில் 2005-இல் வெளியானதுதான். எக்ஸார்ஸிஸ்ட் படத்தை விட இப்படம் ஒரு விதத்தில் முக்கியமானது. உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டதாக இது கூறப்படுகிறது. இத்தகைய பெரும் வெற்றி பெறும் ஹாலிவுட் திரைப்படங்களும், அதனைத் தொடர்ந்து அவற்றை பிரதியெடுக்கும் இந்திய திரைப்படங்களும் ஏற்படுத்தும் விளைவுகள் படுமோசமாக இருக்கும்.

வெளிப்பாடுகளின் திரைப்படங்கள்: சைத்தானின் அரசியல்

அறிவியல் மற்றும் நவீனத்துவத்துக்கான ஒரு முக்கியமான எதிர்வினையாக புரோட்டஸ்டண்ட் மதமும் அதன் இறையியலும் இருந்தன. அடிப்படைவாதமும் தூய கிறிஸ்தவ வாதமும் அதன் முதுகெலும்பாக அமைந்தன. அமெரிக்க பூர்விகக் குடிகளின் அழிவை “வாக்களிக்கப்பட்ட பூமியாக” அமெரிக்காவையும் காலனிய குடிகளாக பூர்விகர்களையும் சித்தரித்து அவை நியாயப்படுத்தின அம்மட்டில் இம்மதம் அமெரிக்க பண்பாட்டுக்கு உறுதுணையாக அமைந்தது.

2012 – இல்லாத அறிவியலும், இருக்கும் இறையியலும்

இந்த 2012 உலக அழிவு குறித்த வதந்திகள், கதைப்பின்னல்கள் இத்திரைப்படத்தைக் காட்டிலும் பழமையானவை. அவற்றின் சரடுகள் (pun intended) படு-சுவாரசியமானவை. சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துப் பலகைகளிலும் அப்பண்பாட்டின் சித்தரிப்புகளிலும் ஒரு மர்மமான கிரகம் குறித்து சொல்லப்பட்டிருப்பதாகவும் அது 2003 இல் தோன்றி உலகத்தில் பேரழிவை உருவாக்குமெனவும் பரவலாக நம்பப்பட்டது.

சில ஹாலிவுட் திரைப்படங்களின் அறிவியலும், அறிவியல் எதிர்ப்பும்:1

புகழ்பெற்ற ஹாலிவுட் எதிர்கால/அறிவியல் புனைவு திரைப்படங்களின் அறிவியல் எந்த அளவுக்கு சரியானது அல்லது எந்த தத்துவப் பின்னணியில் அறிவியலை அல்லது எதிர்காலத்தை அல்லது இரண்டையுமே அத்திரைப்படங்கள் எதிர்நோக்குகின்றன?