நீலி

வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் தாத்தா வீட்டில் இருக்கையில், அதாவது சுமார் 40 வருடங்களுக்கு முன்னர்,  ஒவ்வொரு வாரமும் வீட்டின் மண் தரையை பாட்டி  பசுஞ்சாணமிட்டு மெழுகுவார். முந்தின நாளே பறித்து வந்து, நீரில் ஊறிக் கொண்டிருக்கும்  நீலி அல்லது அவுரி எனப்படும் சிறுசெடியை அம்மியில் மைபோல அரைத்து, மெல்லிய “நீலி”

சீமைக்கருவேலம் – நன்றும் தீதும்

ரோமானிய தொன்மத்தில்  வளமை மற்றும் விடுதலையின் கடவுளான சனியின் (Saturn) மனைவி ஓபிஸ் (Opis)  நிலம்,மிகுதியான வளம் மற்றும் அறுவடையின் கடவுளாக கருதப்படுகிறார். ஓபிஸின் கைகளில் செங்கோலும், சோளக்கதிர்களும், தானியங்கள் நிரம்பி வழியும் கொம்புக்கொள்கலனும் இருக்கும். 1877ல் ஜமைக்கா’விலிருந்து இந்தியாவுக்கு தருவிக்கப்பட்டதால் ’’சீமைக்கருவேலம்’’  (foreign acacia) என்றழைக்கப்படும், தென் “சீமைக்கருவேலம் – நன்றும் தீதும்”

நீர் மேலாண்மையில் நாம் விழிப்புணர்வுடன் இருக்கிறோமா?

ஒரு லிட்டர் நீரில் செய்ய வேண்டிய வேலையை மூன்று லிட்டர் நீரை வாஷ்பேசின் குழாய் மூலம் செலவழிக்கிறோம். உதாரணமாகப் பல் துலக்கி வாய் கொப்பளிப்பது. இந்தச் செயலுக்கு இவ்வளவு நீரைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. முதலில் பெற்றோர்களிடம் அந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பெறுவதற்கு எவ்வளவு மின்சாரம் செலவானாலும், மின் கட்டணம் செலுத்துவதற்குத் தயாராகவே இருக்கிறார்கள். தொலை தூரங்களிலிருந்து ஐநூறு லிட்டர், ஆயிரம் லிட்டர் கேன்களில் கொண்டு வரப்படும் நீருக்குப் பணம் செலவழிக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.

உழுதுண்டு வாழ்வோம்! – பகுதி 2

இன்றைய உலகமயமாக்கல் சூழலில், இந்தியா தனது நலன்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? மிகத் துரதிருஷ்டவசமாக, இந்திய மனநிலையில், அரசு நிறுவனக் கொள்கைகளில், strategic Doctrine என்பது இல்லவே இல்லை. பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளின் சிறந்த நிபுணர்களான சுப்ரமணியம் போன்றோர் இதை வலியுறுத்திப் பேசி வந்திருக்கிறார்கள்.

உழுதுண்டு வாழ்வோம்!

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப் பட்ட கடந்த 24 வருடங்களில், இந்தியாவின் பொருளாதார நிலை, பெருமளவு மாறியுள்ளது. வறுமை குறைந்து, கல்வியறிவு பெருகி, சமூக வளர்ச்சியின் பெரும்பாலான குறியீடுகள் முன்னேற்றப் பாதையில் செல்கின்றன. ஆனால், இந்தக் கால் நூற்றாண்டில் மாறாத ஒரே விஷயம், வேளாண்மைத் தொழிலின் லாப நிலை. பணப்பயிர்களை உழவிட்டு, கடன் பட்டு, கடன் கழுத்தை நெருக்க, சுருக்குக் கயிற்றை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறையாததே! இதே காலகட்டத்தில், ஒரு முக்கிய வேளாண் பொருளான பாலின் உற்பத்தி 55 மில்லியன் டன்னிலிருந்து, 140 மில்லியன் டன்னை எட்டியுள்ளது (கிட்டத்தட்ட 300%). இதற்கீடான ஒரு உணவு உற்பத்திச் சாதனை உலகில் அதிகம் இல்லை. பால் உற்பத்தியில் நஷ்டமேற்பட்டு, ஒரு உழவர் கூட தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தியில்லை. பால் உற்பத்தி செய்யும் உழவர்களில் பெரும்பாலோனோர் 2-3 மாடு / எருமைகள் வைத்து பால் உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள்தாம்.
இந்த முரண்பாடு எப்படி நிகழ்ந்தது?
இந்தியாவின் மிகப் பெரும் பால்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான அமுல், இந்த ஆண்டு 20,000 கோடி வியாபாரத்தை எட்டியுள்ளது.

ஈராக் விவசாயம் – போருக்குப் பின்

உலகிற்கே நாகரிகத்தையும், விவசாயத்தையும் கற்றுக்கொடுத்த மெசபடோமியா நாகரிகம் இன்றைக்கு உணவுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமாய் இறக்குமதி செய்கிறது. இன்று ஈராக்கின் விவசாய நிலங்களாக இருப்பவை சுமேரியர்கள் உருவாக்கியது. ஒருகாலத்தில் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அறுபது சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தனர். இன்றைக்கு நிச்சயம் ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாய் இருக்கும் என்றே நினைக்கிறேன். சரியான கணக்கு ஏதும் அரசால் எடுக்கப்படவில்லை.

உங்கள் கேள்விக்கு என்ன பதில்? – 6

இயற்கையில் நெல் விதைக்கும்போது பச்சை கட்டிப் பயிர் எழும்பத்தாமதமாகலாம். இதைத் தசிர்க்க தொழு உழவு செய்யும்போதே பலவகையான மரத்தழைகளை வெட்டிப் போட்டு குலை மிதித்து 2 நாட்கள் அழுகியபின் பரம்பு ஒட்டி விதைக்க வேண்டும்.

பசுக்காவலரின் காணி நிலத் திட்டம்

முதியோர்களுக்கு இல்லம் உள்ளதுபோல் இந்த வாயில்லா ஜீவன்களுக்கும் ஆங்காங்கே கோசாலைகள் நிர்மாணிக்கும் யோசனையுடன் சுய ஓய்வுத் திட்ட அடிப்படையில் ரிசர்வு வங்கி வேலையை உதறித்தள்ளிவிட்டு தான் மொத்தமாகப் பெற்ற தொகையைக் கொண்டு கோவர்த்தன் அறக்கட்டளை நிறுவி, கால்நடை நலவாழ்வு குழுமத்தின் அங்கீகாரம் பெற்று கோவில்களில் ஏலம் விடப்பட்ட மாடுகளையும் காவலர்களால் மீட்கப்பட்ட மாடுகளையும் பராமரிக்கத் தொடங்கினார் நடேசன்.

வாழ்வியல் ரகசியங்கள்

“நாம் வாழும் இந்த உலகத்தில் நல்ல கருத்துகளைக் கூறும் தலைவர்களுக்கும் அணிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஒப்பற்ற ஒரே லட்சியத்தை நோக்கி, இணையாத இரு கோடுகளாக இயக்கங்கள் செல்வதைக் கவனிக்க முடிகிறது. ஒன்றாக இயங்கத் தயக்கம் காட்டுவதும் புரிகிறது. ஒருங்கிணைந்து செயலாற்றி ஒரு வலைப்பின்னலை உருவாக்கி சாதனை செய்வது அவசியம். இயற்கை விவசாயத்தில் மாறுபட்ட சிந்தனையுள்ளவர்களை ஒருங்கிணைத்துச் செல்ல இந்த நூல் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நூல் காலத்தால் அழியாத ஒரு கருத்துப் பெட்டகமாகவும் விளங்குகிறது. இயற்கை விவசாயத்திற்குப் பாடுபட்டு வரும் முன்னோடிகளுக்கும் ஒப்புதலை இந்த நூல் வழங்குவதும் ஒரு சிறப்பு. “

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் – ஆர். எஸ். நாராயணன்

நம்மாழ்வாரை நான் சந்தித்தபோது எனக்கு தாடி இல்லை. நான் வேட்டியும் அணிவது இல்லை. அரசு அலுவலர் பாணியில் பேண்ட், ஷர்ட், கிராப்புத் தலை வைத்திருந்த என்னோடு நம்மாழ்வார் நட்பு பாராட்டினார். அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் நடத்தும் மாநாடுகளிலும் என்னை முதல் பேச்சாளராகப் பேச அனுமதித்தார். அவர் ஏன் சிகை வளர்க்கிறார், தாடி வைத்துள்ளார் என்று எனக்குத் தெரியாது.

மாடியில் ஒரு உணவுத் தோட்டம்

அடுத்த கட்டமாக பூந்தொட்டிகளுடன் சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிர் எழுப்பும் யோசனை வந்தது. சிமெண்டு சாக்கு உயரத்தைக் குறைத்து – அதாவது, உட்புறமாக மடித்து பாதி சாக்காக மாற்றி, உள்ளே நிறைய காய்ந்த சருகுகளை அடைத்துவிட்டு அடிப்பாகத்தைச் சற்று கிழித்துவிட்டு போதிய மண் நிரப்பி இரண்டு செங்கல் வைத்து அதன்மீது வைத்தேன். நீர் வடியும். தளத்திற்கும் பாதிப்பு வராது. அவ்வாறு சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிரிடும்போது மரப்பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்

காலங்காலமாக வேளாண் உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக விளங்குபவை தீங்குயிரிகளே. இவற்றை அழிப்பதற்கெனப் பூச்சி கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை சம்பந்தப்பட்ட தீங்குயிரிகளை அழிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தி விடுகின்றன. மேலும், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள், அண்மையில் வாழும் ஏனைய உயிரினங்கள் முதலியனனவற்றுக்கும் இவை தீமை விளைவிக்கின்றன.

மண்ணை வளர்த்த மாமனிதர்கள்

மண்ணை வளப்படுத்துவதுதான் நலவாழ்வு விவசாயம். ரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவது நோய் விவசாயம். மண் என்பது வெறும் ரசாயனங்கள் மட்டும் நிரம்பிய பொருள் அல்ல. அது உயிருள்ள, மேலும் உயிரினங்கள் நிரம்பிய ஒரு பொருள். அதை வெறும் ரசாயனச் சத்துகளால் நலமாக வைத்திருக்க முடியாது. அதில் வாழும் உயிரினங்கள் நலமாக இருந்தாலே மண் ஆரோக்கியமாக இருக்கும்.

டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்

ரசாயன உரமிட்டதால் இவரது பயிர்கள் நல்ல கரும்பச்சை தட்டியது. அவ்வளவுதான். பூச்சித்தாக்குதல் தொடங்கின. பயிர்களுக்கு ஏராளமான நோய்கள் வந்தன. மளமளவென்று மேலே ஏறி விண்ணைத் தொட எண்ணியவர் நிற்கமுடியாமல் நிலை குலைந்து மண்ணில் சாய்ந்தார். அந்த அளவுக்கு நஷ்டம். நாலாவது நிக்கோலசின் புதல்வர்தான் நமது கதாநாயகர். அவர்தான் டாக்டர் ஜோ.நிக்கோல்ஸ்.

தாவரங்களுடன் பேசிய அற்புத விஞ்ஞானி – கார்வர்

ஒரு தோட்டக்கலை நிபுணராக அமர்ந்து கார்வர் யோசித்தபோது மிகவும் வளம் இழந்த மண்ணுக்கு ஏற்ற பயிர் என்ற வகையில் வேர்க்கடலையே அவர் கண்முன் நின்றது. ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறநாட்டில்?’ என்று எம்.ஜி.ஆர் பாடியது போல் இந்தக் கார்வரும் ‘என்ன வளம் இல்லை இந்த வேர்க்கடலையில், ஏன் செய்ய வேண்டும் பருத்தியை சாகுபடி?’ பாட்டுப்படித்தார். ஷூட்டிங் முடிந்தவுடன் எம்.ஜி.ஆர். தூங்கியிருப்பார். கார்வர் கையில் கடலையை வைத்துக்கொண்டு ஏழு இரவுகள் ஏழு பகல்கள் தூங்காமல் ஆய்வு ஆய்வு ஆய்வு என்று ஆராய்ந்தார்.

மண்விழுதில் நுண்ணுயிரிகள்

ஆனால் ஒரு தாவரத்துடன் எந்த இனவகையிலும் பொருந்தாத ஒரு பூஞ்சையை, ஒரு கிருமியை அதன் பாரம்பர்ய குணக்கூறை மலடாக்கிவிட்டு அதைச் செலுத்துவது மரபியல் ஒழுக்கமா? இப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட விதைதான் மரபணு மாற்ற விதை. தமிழ்நாட்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், மாலிக்யுலர் பயாலஜி கற்றவர் – பிட்டி கத்தரிக்காய் விஷமில்லை என்று கூறியதற்கு சந்திராயன் மயில்சாமி அண்ணாத்துறை ஒத்து ஊதியுள்ளார். மயில் சாமிக்குச் சந்திரனைப் பற்றித் தெரிந்த அளவு, பூமியைப் பற்றி எதுவும் தெரியாது என்று புரிகிறது. பூமியைப் பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? சந்திரனில் தங்க இடம் ஒதுக்கிவிட்டாரோ!

விதைகளின் கதைகள்

இந்தியாவின் பாரம்பர்ய நெல் விதைகளை அந்நிய சக்திகளுக்கு வழங்கியது உண்மையானால் அது போற்றக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை. அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட இந்திய நெல்ரகங்கள் in Situ-வாகக் காப்பாற்றப்பட்டு உலகில் எந்த நாட்டிலாவது சாகுபடி செய்யப்பட்டிருந்தால், அதைப் பாராட்டலாம். யாருக்கும் பயனில்லாமல் அமெரிக்க விதை வங்கிகளில் உகந்த குளிர்சாதன வசதியுடன் நைட்ரஜன் நீர்ம ஆவிக்குள் முடங்கிக் கிடந்தால் யாருக்கு என்ன லாபம்? ஒரு காலனி நாடாக இருந்த இந்தியாவிலிருந்து இந்தியச் செல்வங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்குக் கொள்ளை போனது சரி. 20-ம் நூற்றாண்டில் இந்திய விடுதலைக்குப்பின் நிகழ்ந்த விதைக்கொள்ளைக்கு என்ன சொல்லித்திட்டுவது?

வேளாண்மை உயில்: ருஷியாவில் மண்ணுயிர் ஆய்வு

பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த ஸ்பேரயர் கொண்டு காடுகளில் ‘மருந்து’ அடிப்பதில்லை. காடுகளில் உள்ள விலங்குகளும் தாவரங்களுக்கும் நோய் வருவதுண்டு. ஆனால் மருத்துவ உதவியின்றி அவை குணமாகின்றன. விலங்குகளும் தாவரங்களும் பூச்சி பூசணங்களிலிருந்து தாமாகவே காப்பாற்றிக் கொள்கின்றனவே. எவ்வாறு? இழந்துவரும் மண்வளம் மீட்கப்படவேண்டும். நவீன விவசாயத்தில் மண்வளம் இழப்பது மட்டுமல்ல. மண்ணில் மக்குப் பொருள் இல்லாததால் மண்ணே அரிப்புகளுக்கு பலியாகிப் பாலையாகிவிடுகிறது.