அன்புள்ள வாசகர்களுக்கு… சிறப்பிதழ் அறிவிப்பு

உங்கள் வாசிப்பில், கவனிப்பில், சிந்தனையில் எந்த எழுத்தாளர்களை நீங்கள் பாராட்டிப் படிக்கிறீர்கள், அவர்களால் உங்களுக்குக் கிட்டிய மேன்மைகள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று யோசித்து, ஒரு சுருக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்.

இந்தச் சிறப்பிதழ் புதுப் புனலாக வந்த எழுத்தாளர்கள் பற்றியது என்பதால் சமீபத்தில் எழுத வந்துள்ளவர்களைப் பற்றி இந்த யோசனைகள் இருக்க வேண்டும்.

2000த்துக்கு அப்புறம் எழுத வந்தவர்களைப் பற்றி இருக்கட்டும் என்று தற்காலிகமாக முடிவு செய்திருக்கிறோம்.

பையப் பையப் பயின்ற நடை

சொல்வனம் பத்திரிகையின் 250 ஆம் இதழைப் பற்றிச் சில எண்ணங்கள்.   சில பத்திரிகைகள்- மேலும் இதர பண்பாட்டு வெளிப்பாடுகள்- எடுத்த எடுப்பிலேயே உசைன் போல்ட் தடகளத்தைக் காற்று வேகத்தில் கடப்பது போல, அசாதாரண லாகவத்துடன், துரிதத்துடன் செயல்படத் துவங்கி விடுகின்றன.  சொல்வனம் துவக்கத்திலிருந்து மதலை போல நடை பழகத் “பையப் பையப் பயின்ற நடை”

ரொன்றன்ரோப் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை

ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்மொழி ஆய்வுக்கு இடமளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று மில்லியன் டொலர் பணத்தை சேகரித்து பல்கலைக்கழகத்துக்கு கொடுக்க வேண்டும். இதுவரை தமிழர்களால் $700,000 நிதி சேர்க்கப்பட்டுவிட்டது. இப்பொழுது $2.3 மில்லியன் பணத் தொகையை இரண்டே ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு – முன்பதிவுத் திட்டம்

அவர்கள் அனைவரும், (கோக்கப்பட்ட) நூல் அறுந்த ரத்னங்கள் போலவும் சிறகுகள் வெட்டப்பட்ட பக்ஷிகள் போலவும் மகிழ்ச்சியற்ற மனமுள்ளவரானார்கள். புகழத்தக்க செய்கைகளை உடைய அந்த அர்ஜுனனால் விடுபட்ட அந்த வனமானது, குபேரனால் விடுபட்ட சைத்ரரதமென்னும் உத்யான வனம் போலாயிற்று. ஜனமேஜயரே! ஆண்மையிற் சிறந்தவர்களான அந்தப் பாண்டவர்கள் அந்த அர்ஜுனனை விட்டுப் பிரிந்ததனால் ஸந்தோஷத்தை அடையாதவர்களாவே காம்யக வனத்தில் அப்பொழுது வஸித்து வந்தனர். பரதர்களுள் சிறந்தவரே! பிராம்மணர்களுக்காகப் பராக்கிரமம் செலுத்துபவர்களும் மஹாரதர்களும் புருஷ ஸ்ரேஷ்டர்களும் பகைவரை அடக்குகிறவர்களுமான (பாண்டவர்கள் கானகத்தில்) மிக அலைந்து சுத்தமான பாணங்களால் யாகத்துக்குத் தக்கவையான பலவித மிருகங்களைக் கொன்று வனத்தில் கிடைப்பதான (அந்த) ஆகாரத்தைக் கொண்டுவந்து நாள்தோறும் பிராம்மணர்களுக்குக் கொடுத்தார்கள்.

ஒரு வேண்டுகோள்

எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர். தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர். எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர்.