ஐன்ஸ்டீனும் எடிங்டனும்

முழுத் திரைப்படத்தையும் விஞ்ஞானத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டும். ஃபேஸ்புக்கில் லைக் போட்டு, டிவிட்டரில் குறுஞ்செய்தி அனுப்பும் இன்றைய இளைஞர்கள், இந்தத் திரைப்படத்தின் 56;54 முதல் 58;11 வரையாவது அவசியம் பார்க்க வேண்டும். என் பார்வையில் நூறு பெளதிக வகுப்புகளுக்கு சமம். இந்த 77 நொடிகள்! ஐன்ஸ்டீனைப் பற்றி ஆறு சுயசரிதப் புத்தகங்கள் படித்த என்போன்றவர்களை உட்கார்ந்து இப்படிக் கட்டுரை எழுத வைத்தக் காட்சி அது. இக்காட்சியைப் பிறகு அலசுவோம்.

அன்னை தெரசா

துன்பப்படுபவர்களின் துயரம் நீக்குவதற்கான வழியை காண்பிப்பதை விட்டுவிட்டு, அவர்களின் சோகத்தை ‘அன்னை தெரஸா’ கொண்டாடிக் கொண்டிருந்ததாக நியூ இண்டெர்னேஷனலிஸ்ட் சஞ்சிகையில் வெளியான கட்டுரை எழுதியிருக்கிறது. மிகச் சிறப்பான மதபோதகராக செயல்பட்ட அன்னை தெரசா, சிகிச்சை “அன்னை தெரசா”

கண்களும் கவி பாடுதே

நியு யார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சிறப்புப் படைப்பாக கலைஞர்களையும் வித்தியாசமானக் காட்சியாக்கங்களையும் திரையிடுகிறார்கள். கீழே பல்வேறு கலாச்சாரங்களில் இருந்தும் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் கண் சிமிட்டுகிறது. நீங்கள், அவர்களைப் “கண்களும் கவி பாடுதே”

ஆறு நொடி ஆட்டங்கள்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்க்கும்போது சில தருணங்கள் எப்போதும் மனதில் நிற்கும். பாகிஸ்தானின் மிகச் சிறந்த மட்டை வீரர்களில் ஒருவர் என்று கருதப்படும் ஜாவேத் மியன்தாத், மரபை மீறிய நடவடிக்கைகள் கொண்டவராகத் தெரிய “ஆறு நொடி ஆட்டங்கள்”

மேற்கில் சின்னத்திரை

முதலில் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், தலைமைப் படைப்பாளியின் கண்காணிப்பில் மூன்று மாத காலம் தினமும் பத்து மணி நேரம் அவர்கள் வைத்திருக்கும் கதையை விவாதம் செய்வார்கள். முதலில் அந்த தொடருக்கான தொடக்கம் (ஓபனிங்) (இது தொடர் முழுக்க வரும்). பிறகு சென்ற வாரம் என்ன நடந்தது என்பதற்கான டீசர் (இது இரண்டாவது பகுதியில் இருந்து வரும்). பிறகு ஒரு மணி நேரம் ஒரு எபிசொட் என்றால், நான்கு விளம்பர இடை வேளைகள், ஆக நான்கு பாகமாக சீன்கள் பிரிக்கப்படும். ஏனென்றால், விளம்பரம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் மீண்டும் பார்ப்பதற்காக முடிச்சு இந்த நான்கு பாகங்களின் முடிவில் இருக்க வேண்டும்.

குவாண்டம் கணி

தற்போதைய கணினிகளில் எல்லாம் இருமையான நிலைகளைக் கொண்டவை – உண்டு (1) அல்லது இல்லை (0) என்னும் நிலையில் இருப்பவை. இப்பொழுது துளித்துளியாக, தொடர்ச்சியான மாற்றநிலைகளை அடிப்படையாகக் கொண்ட துளிமம் (க்வாண்டம்) கணினிகள் ஸ்திரமான, “குவாண்டம் கணி”

சரடு விடுவது

கையில் ஒரு சுத்தியலும் சில ஆணிகளும் இருந்தாலும் என்ன செய்வீர்கள்? Zenyk Palagniuk இதை படைத்திருக்கிறார். இருநூறு மணி நேரம் உழைத்து இதை உருவாக்குவதற்கு 24 கி.மீ. நீளத்திற்கான இழைநூல்களும், பதின்மூன்றாயிரம் ஆணிகளும் தேவைப்பட்டிருக்கிறது.

அப்துல் கலாம் – சிக்கல்களை சமாளிப்பது

“ஒரு உத்தமமான இந்தியராய் வாழ்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மறைவில் அனைவரோடும் சொல்வனம் துக்கத்தையும், அவர் பால் மரியாதையையும்,   மனமார்ந்த அஞ்சலியையும் பகிர்ந்து கொள்கிறது.”

அடிமை வர்த்தகம்

அடிமை வர்த்தகத்தின் வளர்ச்சியைப் படம்பிடித்திருக்கும் காணொளி. குறிப்பாக, ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க கண்டத்துக்கு வளர்ந்த இந்த தொழிலைப் பற்றி இரண்டு நிமிடக்காணொளியை இங்கே பார்க்கலாம்

மோப்ப எலி

ஆப்பிரிக்காவில் இருக்கும் நிலக்கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க எலிகளைப் பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை தன்னுடைய மோப்ப சக்தியினால் எலிகள் கண்டுபிடித்து, அவர்களை குணப்படுத்த உதவின. இப்போது, அடுத்த கட்டமாக, கண்ணிவெடிகளை அடையாளம் காட்ட “மோப்ப எலி”

தற்கொலை செய்து கொள்வதா? வேண்டாமா?

தத்துவம் விடை கொடுக்கும் பல கேள்விகளில், தலையாயது என்னவென்றால், ‘நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா… இல்லையா?’ என்பதுதான் என்றார் ஆல்பர்ட் காம்யூ. அவரைப் பற்றிய குறும்படம்:

சித்திரக் கலைஞர் கோபுலு

விகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர், அமுதசுரபி எனத் தமிழின் முன்னணி வார இதழ்கள் அனைத்திலும் கோபுலு வரைந்தார். ஜெகசிற்பியனின் ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், தேவனின் துப்பறியும் சாம்பு, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், “சித்திரக் கலைஞர் கோபுலு”

அப்பாக்களும் பிள்ளைகளும்

தன்னுடைய பன்னிரெண்டாம் வயதில் துவங்கி, அகவை 28 ஆகும் வரை, பதினாறு ஆண்டுகளாக, தன்னுடையப் பெற்றோருடன் உரையாடியதை, அவர்கள் அறியாமல், ரகசியமாக பதிவு செய்கிறார் மைக் கோஹன் (Mike Cohen) என்பவர். அந்த ஒலித்துண்டுகளில் “அப்பாக்களும் பிள்ளைகளும்”

மார்க்சிய அடிப்படை: சொல்வது ஒன்று செய்வது ஒன்று

ஒரு பத்தி இந்தக் கட்டுரை இறுதியில் இப்படி முடிகிறது. இதில் வரும் மார்க்ஸ் என்ற பெயர் தவறான திக்கில் நம்மைச் செலுத்தக் கூடும். மேற்கில் எழுத்தாளர்கள் சில சமயம் ஒரு மனிதரின் ‘கடைசிப் பெயர்’ “மார்க்சிய அடிப்படை: சொல்வது ஒன்று செய்வது ஒன்று”

2014 ஆஸ்கார் – சிறந்த குறும்-அசைபடம்

இந்த வருடத்திற்கான சிறந்த குறும்-அசைப்படம் (ஆறு நிமிட அனிமேஷன்) ஆக ஆஸ்கார் விருதை இந்தப் படம் தட்டிச் சென்று இருக்கிறது. பாஸ்டன் டெர்ரியர் நாய்க்குட்டியின் கதையைக் இங்கே பார்க்கலாம்.

தற்காலத்திற்கும் டிம்பக்டூவிற்கும் இடையே

கர்ட் வானகட் கதைகளை அடிப்படையாகக் கொண்டு Between Time and Timbuktu: A Space Fantasy திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். கவிதை பாடும் விண்வெளி வீரரை வானவெளிக்கு அனுப்புகிறார்கள். அவர் உலகெங்கும் தன்னை பிரதியெடுக்கிறார். படத்தை “தற்காலத்திற்கும் டிம்பக்டூவிற்கும் இடையே”

அமைதிக்கான நோபல் பரிசு

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும் அரச வன்முறைக்கு எதிராக வன்முறையற்ற வகையில் பாடுபட்டதற்காகவும் 1964 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மார்ட்டின் லூதர் கிங்குக்கு வழங்கப்பட்டது. அந்தப் பேச்சு இங்கே: ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களுக்கு அமெரிக்காவில் “அமைதிக்கான நோபல் பரிசு”

பரபரப்பான ஊழியர்: கிவா ரோபோ

அமேசான்.காம்-இல் அதிகம் உழைப்பவர் இவர்தான். இருபத்து நான்கு மணி நேரமும் ஓய்வின்றி சுழல்கிறார். இண்டு இடுக்கெல்லாம் நுழைகிறார். கேட்டதைத் தருகிறார். கீழே போடுவதில்லை. உடம்பு சரியில்லையென்று படுத்துக் கொள்வதில்லை. தொழிற்சங்கம் துவங்கி போராடமாட்டார். ஒரு “பரபரப்பான ஊழியர்: கிவா ரோபோ”

பந்தமின்றி பரம்பரையின்றி பெண் சி.யீ.ஓ.

என்டர்பிரைஸ் கார் நிறுவனம், முழுக்க முழுக்க தனியார் நிறுவனம். இது வரை குடும்பப் பொறுப்பில் மட்டுமே இயங்கிய நிறுவனம். தாத்தா, பையன், பேரன் என தலைமை பீடத்தில் உட்கார்த்தி வைக்கும் நிறுவனம். அந்த மாதிரி அமைப்பில் நிறுவனரின் குடும்பத்திற்கும் தனக்கும் ஸ்னான ப்ராப்தி கூட இல்லாத ஒருவர் எவ்வாறு முதன்மைப் பொறுப்பை அடைய முடிகிறது?

கண்ணாடியின்றி படிக்கும் வழி

கண் பார்வைக்கோளாறை திருத்தக் கண்ணாடி அணிபவர்களுக்கு அசௌகரியம் உண்டு. தலையில் எப்பொழுதும் இடையூறாக இருப்பது ஒரு பக்கம். அதைத் தவிர்க்க கண் வில்லை (கான்டாக்ட் லென்ஸ்) போட்டால், தூங்குவதற்கு முன் கழற்றி வேறு வைக்கும் “கண்ணாடியின்றி படிக்கும் வழி”

எமிலி முல்லர்- ஓர் அற்புதம்

திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வருகிறார் எமிலி முல்லர். அவருக்கு முன் மூன்று பேர் தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். எமிலிக்கு இதுதான் முதல் திறன் தேர்வு. அவருடைய பையிலிருந்து பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து, அவற்றைப் “எமிலி முல்லர்- ஓர் அற்புதம்”

வீடியோ விளையாட்டுகளில் பெண் சித்திரிப்பு

அனிதா சர்க்கீஸியன் (Anita Sarkeesian) இராக்கில் பிறந்தவர். அர்மீனியர். ஐந்து வயதில் வீடியோ விளையாட்டுகளுக்கு அறிமுகமானவர். இன்றளவும் எல்லா விழியப் பந்தயங்களிலும் இறுதி நிலையை அனாயசமாக முடித்துவிடுபவர். இப்படித் தொடர்ச்சியாக பல்வேறு கணினி விளையாட்டுகளை, “வீடியோ விளையாட்டுகளில் பெண் சித்திரிப்பு”

புவி வெப்பமடைய யார் காரணம்?

கரிம உமிழ்வுகளினால் நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகள் பொறுப்பு? தி கார்டியன் கொடுக்கும் வரைபடத்தைக் கொண்டு மாசுபடுத்தும் சர்வதேச சக்திகள் யார் என்று கண்டுபிடிக்கலாம். சீனாவின் பசுமை இல்ல வாயு வெளிப்பாட்டை “புவி வெப்பமடைய யார் காரணம்?”

உயிரூட்டப்பட்ட வாழ்வினங்கள் : கண்களுக்கப்பால் காணுதல்

இந்த அசைவூட்ட ஆவணப்படத்தில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிவியலாளரான ஆன்டனி (Antonie van Leeuwenhoek) கண்டறிந்த நுண்ணுயிரிகள் எவ்வாறு உயிரியல் துறையைப் புரட்டிப் போட்டது எனக் கொண்டாடுகிறார்கள். தயாரிப்பு: ஃப்ளோரா லிச்ட்மான் (Flora Lichtman) “உயிரூட்டப்பட்ட வாழ்வினங்கள் : கண்களுக்கப்பால் காணுதல்”

பி.கே.எஸ். ஐயங்காரின் அதிமானுட யோகா முறைகள்

யோகா பயிற்சிகளை அமெரிக்காவுக்கு ஏற்றவாறு மாற்றினார். “குரு ஒரு மாணாக்கருக்கு பல வருடங்கள் சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாக இருந்ததை ஒரு வகுப்பின் பல மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் சொல்லிக்கொடுக்கும் பயிற்சி மையமாக மாற்றியவர் ஐயங்கார்”, என்றார் ஷுமாக்கர். வளைய சிரமப்பட்ட மாணவர்களுக்கென நவீன முறை பயில் சாதனங்களாக பட்டா, தட்டைகட்டை, கயிறுகள், கற்கள், சின்ன மரத்துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு சுலபமாக்கினார். ஹிப்பிக்கள் நிரம்பிய 1970களில் கூட அவர் பொது ஜனங்களுக்கான பயிற்சிகளை மட்டுமே சொல்லிக்கொடுத்தார்.

கொன் சாதோஷ் – ஜப்பானியச் சித்திரப் பட இயக்குநர்

கொன் சதோஷியின் தேர்வு அனிமேஷன் படங்கள்தாம். முழு நீளப் படங்களில் மற்ற சாதாரணப் படங்கள் போன்றவற்றை ஏன் நீங்கள் தயாரிக்கக் கூடாது, உங்கள் படத் தொகுப்பு முறை அசாதாரண நிபுணத்துவம் கொண்டதாக இருக்கிறதே என்று கேட்கப்பட்ட போது கொன் சொன்னது குறிப்பிடத்தக்கது. அனிமேஷன் படத் தொகுப்பில் தான் மிகச் சிக்கனமாக, ஆனால் வெகு துரிதமாகக் கதை சொல்ல முடிகிறது, இந்தத் துரிதம் உயிருள்ள நடிகர்களை வைத்து எடுக்கும் படங்களில் தனக்குக் கிட்டாது என்றிருக்கிறார்.

ஜோஹ்ரா ஸேகல் – பேட்டி

தனது 102வது வயதில் சமீபத்தில் மறைந்த ஜோரா ஸேகல் இந்திய நாடக/திரைப்பட உலகில் மிகவும் விரும்பப்பட்ட/ரசிக்கப்பட்ட கலைஞர். இவரது கலையுலகப் பயணத்தின் நீளம் ஏறக்குறைய 80 வருடங்கள் உதயசங்கரின் நாட்டியக் குழுவில் தொடங்கி, ப்ருத்விராஜ் “ஜோஹ்ரா ஸேகல் – பேட்டி”

'ஒரு பெண்ணைப் போல்’

‘ஒரு பெண்ணைப் போல்’ நடக்கவேண்டும். ‘ஒரு பொண்ணைப் போல்’ ஓட வேண்டும். ‘ஒரு பெண்ணைப் போல்’ பந்தை வீச வேண்டும் என பதின்ம வயதில் மகளிரின் மனவுறுதியை மட்டுப்படுத்தும் பிரயோகங்கள் குறித்த விழிப்புணர்ச்சி விளம்பரம்:

நாலாயிரம் வருட மொழிபெயர்ப்பு

உலகில் எப்படி எட்டாயிரத்து சொச்சம் மொழிகள் உருவாகின? மொழியியலாளர்கள் எவ்வாறு மொழிக்குடும்பங்களை சேர்க்கிறார்கள் என்பதையும் நாம் பேசும் மொழிகளின் ஆதி இருக்கிறதா என்றும் அலெக்ஸ் ஜெண்ட்லர் இங்கே சொல்லிக் கொடுக்கிறார். நாலாயிரம் வருடம் பழைமையான “நாலாயிரம் வருட மொழிபெயர்ப்பு”

அகதெமி விருது பெற்ற புத்தகப் படம்

இரண்டு இயக்குநர்கள் இணைந்து தயாரித்த உயிரூட்டப்பட்ட சித்திரப் படம் இது. 2011 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற படம். வில்லியம் ஜாய்ஸும், ப்ராண்டன் ஓல்டன்பெர்க்கும் இயக்கிய படத்தில், பலவகை சித்திரப்படப் பாணிகள் பயன்பட்டிருக்கின்றன. “அகதெமி விருது பெற்ற புத்தகப் படம்”

என் தோட்டம் வளர்ந்த பிறகு

கடுமையான வறுமையையும் உலகின் எல்லாவிடங்களில் இருந்தும் பட்டினியை நீக்கவும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் முயல்கிறது. அதற்கான பொதுமக்களின் உரையாடலை பொதுப்பரப்பில் பரவலாக்க சண்டான்ஸ் நிறுவனமும் குறும்படங்களைக் வெளியிடுகிறது.. ஆவணப்படங்களைப் பரவலாகப் பலரிடமும் கொண்டு செல்வதிலும் சண்டான்ஸ் “என் தோட்டம் வளர்ந்த பிறகு”

ஆலன் ரெனே – உலகத்தின் அத்தனை நினைவுகளும்

உலக சினிமாவில் அவ்வப்போது அந்தக் கலையை முன்னெடுத்துச் செல்லும் சில படங்கள் உருவாக்கப்பட்டு வெளியாகும். அவை பெரும் திரளான மக்களின் அபிமானப் படங்களாக இல்லாமல் போகலாம். ஆனால் துறை வல்லுநர்களால் மிகவும் கவனிக்கப்பட்ட படைப்புகளாகவோ, “ஆலன் ரெனே – உலகத்தின் அத்தனை நினைவுகளும்”

2011 சாரல் விருது விழா

விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரியின் தந்தையர் ராபர்ட் – ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் 2011 ஆண்டுக்கான சாரல் விருது அசோகமித்திரன் என்கிற தியாகராஜனுக்கு வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்டது:

இசைக்கு மயங்கும் மசாலா

மிளகும் மஞ்சளும் இஞ்சியும் மல்லியும் சீரகமும் கிலோ கிலோவாக இசைக்கேற்ப துள்ளியெழுகிறது. ஒவ்வொரு மசாலா எழும் போது ஒரேயொரு நாளம் ஒலிக்க, அதன் பிறகு அடுத்த வீணைத் தந்திக்கு ஏற்ப மெல்ல அசைகிறது… விளம்பரத்திற்காக.