மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது 

போன மாதம் பிரார்த்தனை மண்டபத்தை பெரும்பான்மை வைதீக மதத்தினர் அடித்து நொறுக்கி தீர்த்தங்கரரின் நாசியை உடைத்தார்கள். நாம் மௌனமாக இருந்தோம். போன வாரம் புதியதாகக் கட்டப்படும் வசதி முழுக்கக் கட்டாமலிருக்கும்போதே மாமிசத் தாக்குதலை எதிர்கொண்டது. நான்கு தீர்த்தங்கர் சிலாரூபங்கள் மேலும் பசுமாமிசம் விழுந்து தரையில் படிந்து துர்நாற்றத்தைக் கிளப்பி உள்ளே வந்தவர்களை விரட்டுகிறது. அரண்மனைக்கு மிளகு விற்பது தான் குறிக்கோள். போர்த்துகல்லுக்கு எவ்வளவு மிளகு விற்பனையாகுமோ அவ்வளவுக்கு அரசாங்கமும் செழிக்கும்.

 மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு

பெத்ரோ அவர்களே, உத்தரவு எல்லாம் யாரும் யாருக்கும் தரவோ பெறவோ வேண்டியதில்லை. எங்கள் அரசியல் அமைப்பில் பாதுகாப்புப் பணியை அதற்கான கட்டணம் பெற்றுக்கொண்டு விஜயநகரம் செய்து வருகிறது. நாடுகளின் தொகுப்பு அவர்களால் நிர்வகிக்கப்பட்டு பரஸ்பர ’விற்பனை – வாங்குதல்’ சார்ந்த பணம் ’கொடுத்தல் – வாங்குதல்’ அவர்களால் சீராகத் தீர்வு செய்யப்படுகிறது. பார்த்திருப்பீர்களே, இங்கே உத்தர கன்னடத்திலும், அடுத்த பிரதேசங்களில் அத்தனை நாடுகளிலும் விஜயநகர் காசு பணம் தான் புழங்குகிறது. வராகன், பணம், காசு, விசா. அவற்றின் மதிப்பு எல்லா இடங்களிலும் ஒன்றுதான். அந்த நிதி மதிப்பு நிர்வாகம் விஜயநகரம் செய்வது”

இந்தியத் தொன்மத்தின் மனவெளியில்

This entry is part 2 of 3 in the series ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ

அனைத்திற்கும் முன்னே வருவது “மனஸ்”. அதற்கோ தான் இருக்கிறோமா இல்லையா என்பதுகூட தெரியாது. ஆதித்தருணத்தின் கடவுள், அதற்கு முதலில் பெயர் கூட கிடையாது, வெறும் “பிரஜைகளுக்கெல்லாம் அதிபதி” என்ற பட்டம் மட்டுமே. ஆனால் இதைக்கூட இந்திரன் பிற்காலத்தில் அதனிடம் “உங்களைப் போல் நான் ஆவதெப்படி” என்று கேட்கையில்தான் அது உணர்ந்து கொள்கிறது.
“ஆனால் நான் யார் (க)” என்ற கேள்வியுடன் பிரஜாபதி பதிலளிகிறார்.
“அதேதான், தாங்கள் தங்களை எவ்வாறு அழைத்துக் கொள்கிறீர்களோ அதுதான் நீங்கள், நீங்கள்தான் யார் (க) ” இந்திரன் பதிலளிக்கிறான். ஆக, பிரஜாபதி “க” வாகிறார்.

இரண்டாம் ஆதாம் – லின்னேயஸ்

தாவரங்களின் இருபெயரீட்டு  விதிகள், விமர்சனங்கள் மற்றும் புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பல தாவரங்களின் பட்டியலுடன் லின்னேயஸின்[i] ””கிரிடிகா பொடானிகா”(Critica Botanica)  நூல் ஜூலை 1737 ல் வெளியான போது, லின்னேயஸின் ஆய்வுகளை, கடுமையாக,  வெளிப்படையாக விமர்சிப்பவரான  யோஹான் சீகஸ்பெக் (johann siegesbeck)    மனமகிழ்ந்து போனார். சிலமாதங்களுக்கு “இரண்டாம் ஆதாம் – லின்னேயஸ்”

ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்

காபியைப் பற்றிய சுவைபொங்கும் கட்டுரைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் நான் காஃபிப்பிரியை அல்ல! தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், குடும்பமே காஃபிப் பிரியர்களானாலும் எங்கள் பெற்றோர் என்னவோ குழந்தைகளை அவர்களுக்குப் பதினைந்து வயதுவரை போர்ன்விட்டா அல்லது ஓவல்டின் கொடுத்துத்தான் சமர்த்தாக வளர்த்தார்கள். பின் கல்லூரிக்கும் ஹாஸ்டல் எனப்படும் விடுதிகளிலும் தங்கிப்படித்தபோதும்கூட ஏனோ காஃபிமீது “ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்”

மான மாத்ரு மேயே மாயே

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீக்ஷிதர் பல அபூர்வ இராகங்களைக் கையாண்டு முத்தான கீர்த்தனைகள் படைத்தவர். மும்மூர்த்திகளில் பாரதத்தில் பெரும்பாலான இடங்களுக்குப் பயணித்தவரும் அவர்தான். அந்தந்தப் பிரதேசத்தின் சிறப்பு இராகங்களைக் கையாண்டு கர்னாடக இசைக்கு ஏற்றவாறு கீர்த்தனைகளை இயற்றினார். அவரது பாடல்களில் ‘குருகுஹ’ என்ற முத்திரையும், பாடப்படும் தெய்வத்தின் மூர்த்தியும், கீர்த்தியும், அந்தத் தலத்தின் வரலாறும், அதன் பூகோள அமைப்பும், அதன் முக்கிய பீஜாக்ஷரமந்திரமும் இடம் பெறும். மேலும், அந்தக் கீர்த்தனை எந்த இராகத்தில் பாடப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக வந்துவிடும். 

நஞ்சை வாயிலே கொணர்ந்து!

அந்த சிறையறையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் மெளனமாகவும் துக்கத்தை கட்டுப்படுத்தியபடியும் இருந்தனர். அப்போதுதான் குளித்து விட்டு புத்துணர்வுடன் வந்த, இன்னும் சற்று நேரத்தில் விஷமருந்தி இறக்கப்போகும் அந்த மரணதண்டனைக் கைதி மட்டும் முகமலர்ச்சியுடன்  இருந்தார். சிறைக்காவலரின் ஆணை கிடைத்ததும். அன்றைய கொலைத்தண்டனையின் உதவியாளனாக இருந்த அடிமை சிறுவன் உள்ளே சென்று  “நஞ்சை வாயிலே கொணர்ந்து!”

நீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை

This entry is part 12 of 13 in the series வங்கம்

மதவெறியாலும் சுயநலத்தாலும் இயக்கப்பட்டு இந்த விரோதம் பகிரங்க யுத்தமாக ஆக நேரமாகவில்லை. ‘முஸ்லீம் குடியானவர்கள் ஆனந்தமயீ கோயிலுக்கடுத்த நிலத்தில் தொழுகை நடத்தப் போகிறார்களாம்.’ அது மசூதியல்ல. அது ஒரு பண்டைய கால இடிந்த கோட்டை – அது ஈசாகானுடையதாக இருக்கலாம் அல்லது சாந்தராயோ கேதார்ராயோ கட்டியதாகவுமிருக்கலாம். அந்த இடததில் தொழுகை நடத்தும்படி முஸ்லீம்கள் தூண்டப் படுகிறார்கள்.
…. நாவல் முன்னேற முன்னேற இன்னும் பல அழகிய காட்சிகள் தம் கண் முன்னே விரிகின்றன. தர்முஜ் வயல், பாக்குப்பழம், சீதலக்ஷா நதியின் நீர், அந்த நீருடன் உவமிக்கத் தக்க வானத்தின் பிரவாகம், பறவைகளின் கூட்டிசை, மிருகங்கள்… அது ஒரு தனி உலகம்.

உயிர் பெற்றெழும் மறைந்த மொழிகள்

இந்தக் குழுவின் இறுதி இலக்கு என்பது, பல்லாண்டுகளாக மொழியியலாளர்களுக்கு வசப்படாத தொலைந்த மொழிகளைச் சில ஆயிரம் சொற்களைக்கொண்டு கட்டமைக்க முயல்வதுதான்.

பாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல்

திருவல்லிக்கேணியில் மதம் பிடித்த யானை இவரைக் கீழே தள்ளியதால் இறந்துபோனார் என்றுதான் ஜனரஞ்சகமாக நம்பப்படுகிறது. யானை கீழே தள்ளிய ஓரிரு நாள்களில், தனது வேலைகளைப் பழையபடி பாரதியார் செய்ய ஆரம்பித்துவிட்டார். சில ஊர்களில் பிரசங்கமும் செய்திருக்கிறார். இது நடந்து சில மாதங்கள் கழித்துத்தான், அதாவது செப்டம்பர் மாதம் 12 ஆம் நாள்தான் (11 ஆம் நாள் அன்று, 12 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு) வயிற்றுக் கடுப்பின் காரணமாக இறந்திருக்கிறார்.

மகரந்தம்

எறும்பு, கரையான், தேனீ போன்ற பூச்சியின சமூகங்கள் வெளிப்படுத்தும் அறிவார்ந்த பண்புகள் தேன்கூடு/ திரள் நுண்ணறிவு ( hive intelligence/swarm intelligence ) எனப்படுகிறது. கணிப்பிய நுண்ணறிவு (computational intelligence) என்னும் கணினித் துறையின் உட்புலமாக விளங்கும் திரள் நுண்ணறிவுத் துறையில், உயிரிய அமைப்புகளின் கணித மாடல்களைப் பரிசோதிக்க ரோபோட் திரள்களைப்(swarm of robots ) பயன் படுத்திப் பல நுண்ணறிவு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

நச்சுடை நாகங்கள் இடையே ஒரு நங்கை

ஜுனைதா பேகத்தின் குடும்பத்தில் அவருக்கு முன்பும் பின்பும் பல அறிஞர்களும், தமிழ் மொழி வித்தகர்களும் இருந்திருக்கின்றனர். இருக்கிறார்கள். ”என் இளம் வயதிலிருந்தே சாதிசமய வேறுபாடுகள் என் உள்ளத்தில் இடம் பெற்றதில்லை. எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற மனப்பான்மையே என் உள்ளத்தின் ஆணிவேர்” என்று ஒரு முகவுரையில் உறுதியாகக் கூறும் ஜுனைதா பேகத்தின் கட்டுரைகளில் அவர் இஸ்லாமும் பெண்களும் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறார். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சொத்துரிமை, விவாக ரத்து உரிமைகளைப் பற்றிக் கூறுகிறார். பெண்கள் சினிமா பார்க்கலாமா என்ற கேள்வி எழும்போது, அராபிய மன்னர் இப்னுசௌத் கூறியதை அவர் எடுத்துக்காட்டுகிறார். ”குர் ஆனும் ஹதீதுகளும் …

இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும்

இனம் மதம் என்ற நிலையிலிருந்தும் உயர்ந்து எழும்பிய லால் தேத் போன்ற ஞானிகள் வாழ்ந்த நிலம் காஷ்மீரம். அக்கமகாதேவியைப்போல் உடைகளைக் களைந்து ஞானப் பாடல்களை இசைத்த சிவ பக்தை லால் தேத். பல வகைகளில் இன்றும் அவர் வாழ்க்கையும் பாடல்களும் நமக்குத் தேவையான ஒன்றாகவே இருக்கின்றன. எல்லோருமே லால் தேதை தங்களுடையவர் என்று உரிமை கொண்டாடுகின்றனர். லால் தேதை மதமாற்றம் செய்து அவர் ஸூஃபி கருத்துக்களால் கவரப்பட்டார் என்றெல்லாம் கூறப்படுவதன் காரணம் எழுநூறு அண்டுகளுக்குப் பின் இன்றும் நம் வாழ்க்கையில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும்…

வி. எஸ். நைபால் என்ற மனிதரும் அவர் எழுத்தும்

நோபல் பரிசுச் செய்தி குறித்து அறிய வந்தபோது இங்கிலாந்தின் கிராமப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நைபால் பெருந்தன்மையான பதில் அளித்தார். இங்கிலாந்து (அவரது “தாயகம்”), இந்தியா (அவரது “மூதாதைகளின்” தேசம்), அவரது இலக்கிய ஏஜண்ட் என்று நன்றி கூறினார். அவர் தன்னை “தேர்வுக்குப் பொருத்தமான நபராக” கருதவில்லை என்று விளக்கினார் (1972ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அவர் நோபல் பரிசுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்), தன் பிறப்பிடத்தைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். ட்ரினிடாட்டில், புதிய தேசிய நூலகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. நைபால் தன் பதின்ம பருவத்தின் சில ஆண்டுகளைக் கழித்த செயிண்ட் ஜேம்ஸ்ஸில் உள்ள இல்லம், “திரு பிஸ்வாஸின் நண்பர்கள்” என்ற அமைப்புக்கு அளிக்கப்பட்டது. அது நைபால்கள் மற்றும் பிற மேற்கிந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த ஆய்வு மையமாக …

தெலுங்குச் சோழர்கள்

தென்னிந்திய வரலாற்றைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களாகத் தெலுங்குச் சோழர்களைச் சொல்லலாம். இருப்பினும் , அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. பெரும் பேரரசுகளின் வரலாறுகள் குறிப்பிடப்படும் போது போகிற போக்கில் தெலுங்குச் சோழர்களும் இடம்பெறுவதே வழக்கம். இவர்கள் சோழர்களின் வம்சாவளியினர் என்பது தெரிந்த செய்தியாக இருந்தாலும், இவர்களுடைய ஆட்சி எந்தக் காலத்தில் ஆந்திராவில் உருவானது? சோழர்களுக்கும் இவர்களுக்குமான உறவுமுறை எத்தகையது என்பது பற்றியெல்லாம் அதிகம் ஆராயப்படவில்லை.

தெலுங்குச் சோழர்களின் தோற்றத்தைப் பற்றியே பல விதமான கருத்துகள் உள்ளன. சோழர்கள் என்று இவர்கள் தங்களைக் கூறிக்கொள்வதினால் தமிழகச் சோழர்களின் வம்சாவளி என்று பெரும்பாலானோர் கருதினாலும், சிலர் இவர்களை ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்த பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்றும், சிலர் சாளுக்கியர்கள் வழிவந்தவர்கள் என்றும் கூறுவது உண்டு. ஆனால், இவர்கள் சோழர்கள் வம்சாவளியினர்தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் கல்வெட்டு ஆதாரங்களும் இலக்கிய ஆதாரங்களும் அடங்கும். சோழன் என்பதின் தெலுங்கு வடிவம்தான் சோடன் என்பது.

பல பிரிவுகளாக ஆந்திராவின் தென்பகுதியை ஆண்ட தெலுங்குச் சோழர்களின் கல்வெட்டுகள் பெரும்பாலும் இந்த வரிகளோடுதான் துவங்குகின்றன:

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்லும் சமூக வரலாறு

தமிழக வரலாற்றை ஓரளவுக்குத் தொகுத்த எழுத உதவும் சான்றுகளாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும்தான்… பிற்காலச் சோழ வரலாற்றில் ஒரு மைல்கல் என்று இதைச் சொல்லலாம். லெய்டன் செப்பேடுகளோடு சேர்ந்து பிற்காலச் சோழர் வரலாற்றை முழுமையாக்கியதன் பெரும்பங்கு இச்செப்பேடுகளுக்கு உண்டு. வரலாற்றுச் செய்திகளைத் தவிர அக்காலச் சமூகம், அதிகாரவர்க்கம் ஆகியவற்றைப் பற்றியும் இது போன்ற செப்பேடுகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.

முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட இந்தச் செப்பேட்டில் 31 ஏடுகள் உள்ளன. அதில் முதல் 10 ஏடுகள் சமஸ்கிருதத்திலும் அடுத்த 21 ஏடுகள் தமிழிலும் உள்ளன. இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், அக்காலச் செப்பேடுகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டவை என்பது. சமஸ்கிருதப் பகுதியில் பெரும்பாலும் அரசர்களின் வம்சத்தைப் பற்றியும் அவரது பெருமைகளைப் பற்றியும் கண்டிருக்கும். தமிழ்ப்பகுதி தானமாக வழங்கிய பகுதிகளையும் அதனை நிர்வகிக்கும் வழிமுறைகளைப் பற்றியும் விரிவாகக் குறித்திருக்கும்.

பெண்ணுரிமை பேசிய முன்னோடி வ.உ.சி

வ.உ.சி. க்கு 1895-ல் முதல் திருமணம் நடந்தது. வ.உ.சி. ராமையா தேசிகர் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை வீட்டில் வைத்துப் பராமரிக்கிறார். வ.உ.சி. யின் மனைவியும் தேசிகரை அன்புடன் பராமா¢க்கிறார். அடுத்து, ஊரில் உள்ளவர்கள் ராமையா தேசிகர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சொல்கிறார்கள். வ.உ.சி. க்கு அவரை வீட்டைவிட்டு அனுப்ப மனமில்லை. மனைவியிடம் ஆலோசனை கேட்க செல்கிறார். வ.உ.சி. பிரச்சினை என்னவென்று கூறுவதற்கு முன்பே அவரது மனைவி வ.உ.சி. முன்பு கூறியதையே பதிலாகக் கூறுகிறார்…

உலக வரலாறு, ஆறு கோப்பைகள் வழியாக..

உலகின் முழு வரலாற்றை ஒரு ஆறு கோப்பைகள் வழியாக சொல்லிவிட முடியாதுதான். அதுவும், இந்த நூல் முக்கியமாக மத்திய கிழக்கிலிருந்து மேற்காய் இருக்கும் உலகின் வரலாற்றையே அதிகமும் விவரிக்கிறது. முழுமையான வரலாறு என்று இதை ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை மிக சுவாரசியமாய் விவரிக்கிறது. மேலே சொன்ன கார்ல் பாப்பரின் கூற்றைப்போல எல்லா வரலாறும் பெரும் வரலாற்றின் ஒரு அம்சத்தைப் பற்றியதுதானே?

மருது பாண்டியரின் கனவு

இந்திய விடுதலைப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாற்றைப் பொருத்தவரை, முதல் சுதந்தரப் போர் என்று நம்மாலும் சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷாராலும் அழைக்கப்படும் 1857ம் ஆண்டுக் கிளர்ச்சியே விடுதலைக்காக நடந்த முதல் ஒருங்கிணைந்த முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னால், விடுதலைக்காக இப்படி ஒரு கூட்டு முயற்சியை தென்னகத்தில் மேற்கொண்டவர், மருது பாண்டியர்களில் இளையவரான சின்ன மருது. போரின் ஒரு கட்டத்தில் இதற்கான பிரகடனத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். விடுதலைப் போரின் பல கட்டங்களில் நாம் பார்க்கும் துரோகமும், சதிச்செயல்களும் இந்த ஒரு முயற்சியையும் முறியடித்துவிட்டன என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி
‘மூத்தது மோழை இளையது காளை’ என்ற பிரபலமான தமிழ்ப் பழமொழி, மருது சகோதரர்களில் பெரிய மருதுவிற்குப் பொருந்தி வராவிட்டாலும், இளையவரான சின்ன மருதுவிற்கு பொருந்துகிறது என்பது பல வரலாற்று ஆவணங்களாலும் தெளிவாக விளங்குகிறது. அவர் வீரத்திலும், தீரத்திலும், விவேகத்திலும் …

வ.உ.சி.யின் திருக்குறள் பற்று

“சில தினங்களுக்கு முன்பு கோயம்பத்தூர் சென்ட்ரல் ஜெயிலில் இருக்கும் ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையை அவருடைய மனைவி, மக்களும் அவரது ஆப்தராகிய ஸ்ரீ வள்ளி நாயக சாமியாரும் வேறொரு நண்பரும் பார்வையிடச் சென்றார்கள். அந்த சந்திப்பில் நடந்த சம்பாஷணையினிடையே ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையவர்களின் வாக்கிலிருந்துதித்த சில வசனங்கள்…….தமிழர்களெல்லாம் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை” .. .. .. 1910-ஆம் ஆண்டு கோவைச் சிறையில் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் வ.உ.சி. கூறிய இக்கூற்று வ.உ.சி. திருக்குறள் மீது கொண்டிருந்த மதிப்பை உணர்த்துகிறது.

மகரந்தம்: கோஹினூர் வைரம்; சீனப் பொருளாதாரம்

வழக்கின் நோக்கம், இங்கிலாந்தின் அரசை கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானுக்குத் திருப்பிக் கொடுக்கச் செய்வதுதான். கோஹினூர் வைரத்துக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அந்த வாதங்கள் பொருட்படுத்தத் தக்கனவாக இராது- நம் பார்வையில். ஏனெனில், அதை சீக்கிய அரசர் ரஞ்சித் சிங்கிடமிருந்துதான் பிரிட்டிஷார் எடுத்துச் சென்றனர். ஆனால் இதே வைரத்துக்கு ஆஃப்கானிஸ்தானும் உரிமை கொண்டாடுகிறது. அது எப்படிஎன்றால், நாதிர்ஷா என்னும் ஈரானிய ஆக்கிரமிப்பாளன் அதை இந்தியாவிலிருந்து பறித்துச் சென்றான், பிறகு நாதிர் ஷாவின் ஆட்சி வீழ்ந்த பின்னர், ஆஃப்கன் அரசர் ஒருவர் அதை பர்சியர்களிடமிருந்து பறித்தார். அவர் ஆட்சி வீழ்ந்த போது…

குகை ஓவியங்கள் ஜாக்கிரதை

வரலாற்றை முன்முடிவுகளுடன் அணுகும் இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. அது ஆரிய இனக் கோட்பாடாகவோ அல்லது காம்பே வளைகுடாவில் கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் வாழ்விடங்கள் குறித்தோ அல்லது ஹரப்ப நாகரிகத்தின் தன்மை குறித்தோ அல்லது வேதகால சரஸ்வதி நதிக்கும் வறண்டு போன காகர்-ஹாக்ரா நதிக்கும் இடையே உள்ள விளங்கமுடியா புதிர் குறித்தோ, இந்த ஆய்வுகளில் இத்தகைய செயல்பாடுகள் மிக நுட்பமாக நடந்துள்ளன. ஆரம்பகால மனித வாழ்விடங்கள் காம்பே வளைகுடாவின் மோதி தளும்பும் நீர்நிலைகளின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது. வேதகால சரஸ்வதி நதி காகர்-ஹாக்ராவின் தொல் கிளை ஆறாக இருக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது.

ஃபார்மால்டஹைடில் குறியீடுகள் – வரலாற்றையும் புனைவையும் கலத்தலின் சாதக பாதகங்கள்

இந்த வட்டத்திலிருந்து வெளியேறும் வழியைத் தேடத் துவங்கினேன்; என் எழுத்து சிறைச்சாலை அமைப்புக்கு நேரடியாக உதவுவதாக இல்லாத ஒரு வழியைக் கண்டடைய வேண்டும் என்று எண்ணினேன். சிறைகளின் நடைமுறைச் செயல்பாடுகளை நிர்வகிக்கும் அறிவுத்துறை மேலும் நுட்பமான ஆயுதங்களைப் பெற என் எழுத்து பயன்படக்கூடாது. இது எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்விக்கு நான் கண்ட விடை பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கக் கூடும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இங்கே ஒரு கிளைக்கதை சொல்ல வேண்டும். நான் ஏன் இப்படி எழுத வேண்டுமென்று தேர்வு செய்தேன் என்பதற்கான உண்மையான காரணத்தைச் சொன்னால் வித்தியாசமாக இருக்கும்.

சர்க்கரை – தித்திப்பும் கசப்பும்

கி.பி. 500-ஆவது ஆண்டுவாக்கில் இந்தியாவில் முதன்முதலாக சர்க்கரை தூள் வடிவத்தில் தயாரிக்கப்பட்டது. சர்க்கரைத் தயாரிப்பு ஒரு தொழில் ரகசியமாகவே பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு – குரு-சிஷ்யப் பரம்பரையில் தொடர்ந்து வந்தது. அந்தத் தொழில் ரகசியம் எப்படியோ கசிந்து அடுத்த 100 ஆண்டுகளில் பாரசீக நாட்டிற்குப் (இன்றைய ஈரான்) பரவிவிட்டது. கி.பி. 600-ஆம் ஆண்டில் அந்நாட்டில் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்பட்ட பலவிதமான இனிப்புப் பண்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. அரேபியப் படைகள் பாரசீக நாட்டைப் போரில் தோற்கடித்துக் கைப்பற்றியபின், சர்க்கரைத் தயாரிப்பு அரபு நாடுகளுக்கும் பரவியது.

'சச் நாமா'

தஹார் ஒருநாள் தனது நாட்டிலிருக்கும் ஒரு அற்புதமான சோதிடரைக் குறித்து கேள்விப்படுகிறான். அவரைக் காண தனது பட்டத்து யானையின் மீதேறிச் செல்கிறான் தஹார். அவரது எதிர்காலத்தைக் கணித்த சோதிடர், தஹாருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கூறுகிறார். அதே சமயம் அவரது சகோதரியால் அவருக்கு உண்டாகக் கூடிய ஆபத்துக்களைக் குறித்தும் தஹாருக்கு விளக்கிச் சொல்கிறார். எதிர்வரும் காலத்தில் யார் தஹாரின் சகோதரியை மணக்கிறார்களோ அவரால் தஹாருக்கு பேராபத்து நிகழவிருப்பதாகவும், அவனே தஹாரைக் கொன்றுவிட்டு இந்த நாட்டை ஆள்வான் என்கிறார் சோதிடர்.

சரித்திரத்தை அழிக்கப்போகும் சாலை

1300 ஆண்டுகள் பழமையான சிவாலயம் ஒன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இடிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு நிற்கிறது. அந்த ஆலயம் ச்மபந்தரால் பாடப்பட்ட ஒன்று. சோழ அரசர்களின் கல்வெட்டுகள் கோவிலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. திருப்பரவூர் பனங்காட்டீஸ்வரர் கோவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனையபுரம் கிராமத்தில் உள்ளது. அதையொட்டி பெண்ணையாறு ஓடுகிறது. பரவைபுரம் என்றும் அந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.

பாலையில் துவங்கிய நெடும் பயணம்

ரஷ்யரைத் தோற்கடித்த பின், ரத்தமில்லாது அந்தப்பகுதி ஆட்சியாளரைக் கொல்லத் தீர்மானித்த மங்கோலியத் தளபதிகள், அவர்களைத் தரையில் படுக்கவைத்து, மேலே ஒரு மரமேடையைப் போட்டு அதன் மீது கூட்டமாக அமர்ந்து உணவு உண்டனராம். மரப்பலகைக்குக் கீழே அந்த அரச குலத்தினர் நசுங்கிச் செத்தனராம். இப்படிப்பட்ட உளவியல் வன்முறையால் மங்கோலியருக்கு என்ன லாபம் என்றால், அந்த பெரும் நிலப்பகுதியே ஒன்றரை நூற்றாண்டுக்கு பெரும் கலவரங்கள் எழுச்சிகள் இன்றி அடங்கி இருந்தது.

காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி

பேரரசர் இராஜராஜ சோழன் தஞ்சையில் தமது பெயரால் ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற சிவன் கோயில் எடுப்பித்து 1,000 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இதனையொட்டித் தமிழக அரசின் முன்முயற்சியால் மிகப்பெரும் கேளிக்கைகள், இராஜராஜனோடு தம்மை ஒப்பிட்டுக்கொள்ளும் ஆட்சியாளர்களின் அகம்பாவத்தைத் திருப்தி செய்யும் கூத்து அரங்கேற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழக வரலாற்றில் இராஜராஜ சோழன் தொடக்கிவைத்த சில போக்குகள், அவை சுட்டிக்காட்டும் நுண்ணரசியல் ஆகியவை பற்றி விவாதிக்கும் ஆய்வே இக்கட்டுரை.

மிருதங்கம் – ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்

இன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தமிழகத்தில் தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன. மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தன.

ஐரோப்பாவிலிருந்து அங்காடித்தெரு வரை – 2

அநீதியும் சுரண்டலும் எக்காலத்திலும் இல்லாத எந்த சமூகமும் உலகில் இல்லை. ஆனால் அவற்றை எதிர்த்து சமூகத்திலும், சட்டரீதியாகவும் குரல் எழுப்ப முடிகின்ற அரசியல் சூழல் அமைந்து விட்டால், அநீதியும் சுரண்டலும் அதிக காலம் ஓரிடத்தில் நீடிக்கவும் முடிவதில்லை. அப்படிப்பட்ட குரல் எழுப்ப இயலுகின்ற சூழல் உருவாக ஜனநாயகமும், சுதந்திர நீதித்துறையும், ஊடகங்களும் அவசியமானவை, இவை எந்த அளவுக்கு சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் இயங்க முடிகிறதோ அந்த அளவுக்கு ஜனநாயகம் வலுப்பெறுகின்றது.

ஐரோப்பாவிலிருந்து அங்காடித்தெரு வரை

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் பல தொழிலாளர் விவரணைகளைப் படிக்கையிலும் இரக்கத்தை விட மேலோங்கி நிற்கும் ஆசிரிய உணர்ச்சியாக இரண்டு விஷயங்களை நம்மால் எளிதாக இனம் காண முடியும்: எரிச்சல் மற்றும் எதிர்பார்ப்பு (”எப்போது புரட்சியாய் வெடிக்கப்போகிறது”) ஆகியவையே அவை. மார்க்ஸும் ஏங்கெல்ஸும் அன்றைய ஐரோப்பிய தொழிலாளர் வாழ்க்கையின் பரிதாபச்சரிவை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கினர் என்பது பலருக்கு வியப்பாக இருக்கலாம்.

தேநீர்

தமிழ் பண்பாட்டின் நாட்டுப்புறக் கலையான ‘கூத்து’க்கு இணையான சீன ‘ஓபெரா’ வகையான நாடகங்கள் சீனத்தின் தேநீரகங்களில் நடக்கும். பேய்ஜிங்கின் தென் பகுதியில் தியன்ச்சியோ என்ற வட்டாரத்தில் இருக்கும் ஒரு கட்டடம் முழுக்க மரத்திலானது. இது 1933ல் கட்டப்பட்டுள்ளது. இன்று இந்தக் கட்டடத்தில் இயங்கும் தேநீரகத்திற்குள்ளிருக்கும் மேடையில் அப்பகுதியில் நிலவிய நாட்டுப்புறக் கலாசாரத்தைக் குறித்து அறிந்திட இங்கு நடக்கும் நாடகங்கள் உதவுகின்றன.