மே 1974இல் தலைஞாயிறு இலக்கிய அமைப்பு பதிப்பித்த, 32 கவிஞர்களின் 42 கவிதைகளை உள்ளடக்கிய ‘நாற்றங்கால்’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த வண்ணதாசனின் (கல்யாண்ஜி) இரண்டு கவிதைகளில், ‘குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக‘ என்கிற தலைப்பில் வெளியான கவிதை இது. பயத்துடன் விடியும் காலைகுரங்குகள் வருமோ என்றுமதில் சுவர் ஓரம் “வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்”
Category: ரசனை
எலிசபெத் பிஷப்: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்
நண்பர் “காத்திருப்பு அறையில்” கவிதை தனக்குப் புரியவில்லை என்று பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டிருந்ததை. அதன்பின் சிறிது நேரத்திற்கு அக்கவிதையைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். உள்ளே / வெளியே குறித்து, சுயத்தை முதன்முதலில் அடையாளம் கண்டு கொள்ளும் தருணம், கவிதையின் தரவு முரண்பாடுகள், முதல் வாசிப்பைக் காட்டிலும் அதை சுவாரசியமாக்கிய பிஷப்பின் சில சரிதைத் தகவல்கள் என்றெல்லாம் பேசிவிட்டு
அந்நியனின் அடிச்சுவட்டில்
என் இலக்கிய அறிமுகம் ஆல்பெர் கம்யு (Albert Camus) மூலமாகவே நடந்தது என்பதின் சாத்தியக் குறைவை (அபத்தத்தை?) நினைத்துக்கொள்கையில் எப்போதுமே சிரித்துக்கொள்கிறேன். சிக்கலில்லாத பதின் பருவத்தை கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், தமிழ் வாரப் பத்திரிகைகளின் விரசமான பகுதிகளைப் படித்துக்கொண்டும் கழித்திருக்கையில் அப்பாவின் உறவினர் ஒருவர் எங்கள் இல்லத்திற்கு வார இறுதிகளில் “அந்நியனின் அடிச்சுவட்டில்”
இது வேற லெவல்…!
சமீபகாலங்களில் எனக்கொரு சந்தேகம். உங்களுக்கும் இருக்கலாம். தமிழில் வார்த்தைகளுக்கு அத்தனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா என்பதே அது. சந்தேகம் சும்மா வரவில்லை. பல நாட்களாக, பல பேரிடம் பேசும் பொழுது சட்சட்டென்று இந்த எண்ணம் வந்து போகும். எதனால் என்று கேளுங்கள்… ஒரு நண்பரிடம் அவர் சென்று வந்த பயணம் “இது வேற லெவல்…!”
காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்
சோமுவின் முதல் அகாடமி கச்சேரியைப் பற்றிய குறிப்பு, ”ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது”, என்கிறது. 1960-களிலும் 1970-களிலும் சோமு பாடியுள்ள பல பதிவுகள் இன்றும் கேட்கக் கிடைக்கின்றன. அவற்றைக் கேட்கும் போது சோமுவுக்கு இயற்கையில் சாரீரம் கனமாகவும் அதே சமயம் எளிதில் வளையும் (pliant) தன்மை கொண்டதாகவும், அதி துரித சஞ்சாரங்களை அநாசாயமாக வெளிப்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருந்தது. பொதுவாக கேட்கக் கூடிய குரல்களில் மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து …
புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’, தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான். அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து, கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.
கி ரா : நினைவுகள்
இளங்கலையில் முதல் இடம் பிடித்ததற்காக அந்த ஆண்டு கல்லூரி விழாவில் பரிசு கொடுப்பார்கள். மீனாட்சி புத்தக நிலையம் சென்று 30 ரூபாய்க்குள் நூல்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போனார் பேரா.கி.இளங்கோ. அதற்கான ஒரு சீட்டும் கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டுபோய் கிராவின் கிடை, பூமணியின் ரீதி, ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் வாங்கிக் கொண்டுவந்தேன். எனக்கேயான புத்தகங்கள் என்று வாங்கிய முதல் மூன்று புத்தகங்கள் அவை
பழைய கள்ளு, புது கலக்கல்
VO என்கிற ‘வாய்ஸ் ஓவ’ரிலேயே கதையின் போக்கைச்சொல்லி விடுகின்ற உத்தி இந்தப் படத்தால் தான் பிரபலம் ஆயிற்று என்றே சொல்லலாம். சமூகக் கதைகளுக்கு அது ஓகே, ஆனால் ஒரு த்ரில்லர் படத்துக்கு வாய்ஸ் ஓவரை வைத்தே பெரும்பாலான கதை சொல்வது ஒரு புது யுக்தி என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்
காபியைப் பற்றிய சுவைபொங்கும் கட்டுரைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் நான் காஃபிப்பிரியை அல்ல! தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், குடும்பமே காஃபிப் பிரியர்களானாலும் எங்கள் பெற்றோர் என்னவோ குழந்தைகளை அவர்களுக்குப் பதினைந்து வயதுவரை போர்ன்விட்டா அல்லது ஓவல்டின் கொடுத்துத்தான் சமர்த்தாக வளர்த்தார்கள். பின் கல்லூரிக்கும் ஹாஸ்டல் எனப்படும் விடுதிகளிலும் தங்கிப்படித்தபோதும்கூட ஏனோ காஃபிமீது “ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்”
ரசிக’மணி’கள்
கான கலாதரர் மதுரை மணி ஐயர். கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்குக் கூட இந்தப் பெயர் தெரிந்திருக்கும். கர்நாடக சங்கீதத் துறையில் பல விசேஷமான பட்டங்களுண்டு. அந்தப் பட்டங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேலான கலைஞர்களை கௌரவிக்கப் பயன்பட்டிருக்கும். ஆனால் ‘கான கலாதரர்’ என்கிற பட்டம் மணி ஐயருக்கு மட்டுமே “ரசிக’மணி’கள்”
பாலுவை அரசியலில் சேர்த்தவர் எங்கப்பா!
போன வாரம் பாடும் நிலா பாலுவின் 75 –வது பிறந்த நாள். இந்தக் கட்டுரையின் காலகட்டம், அவருக்கு இந்தப் பெயர் வருவதற்குப் பல்லாண்டுகள் முன்பானது. அதாவது, அவருடைய ஆரம்ப வருடங்கள் – 1965 முதல் 1975 வரை. எங்கப்பா ஒரு தீவிர எம்.எஸ்.வி, மற்றும் சிவாஜி ரசிகர். அவருக்கு “பாலுவை அரசியலில் சேர்த்தவர் எங்கப்பா!”
கி. ரா. – அஞ்சலி
தமிழ் எழுத்தாளர்களில், நான் முதன் முதல் எனது ஆதர்சமாகக் கருதியது கி.ராஜ நாராயணன் அவர்களைத்தான். ஒரு விவசாயியாக இருந்துகொண்டு தமிழ் எழுத்தில் சாதனையை செய்த அவரையே ஒரு விவசாயி மகனான நான், எனது கதாநாயகனாக அவரை வரித்துக்கொண்டேன். அவர் எழுதிய புனைவுகள் என்று இல்லை, அவர் தொகுத்த நாட்டுப்புறக் கதைகள், நாட்டார் விளையாட்டு, கரிசல் அகராதி என அன்னம் பதிப்பகம் வெளியிடுவதை ஒன்று விடாமல் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் முதுகலை இரண்டாம் வருடத்தில் (1986-1987) இருந்தேன். அவரை புதுவைக் கல்லூரியில் நாட்டாரியல் நடத்தும் பேராசிரியராக பதவி கொடுத்து அமர்த்துவதாக சொன்ன செய்தி, வளரும் வயதில் ஊக்கம் கொடுத்த முக்கியமான விஷயங்களில் ஒன்றாக அமைந்தது.
வாழ்க்கை, காக்கை, ஹிட்ச்காக்
நகுல சகதேவர்களுக்கும், ஆக்டேவியா பட்லருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
இவரும் ஓரளவு நாடுகடத்தப்பட்டு, அகதி போல வாழ்வில் பெரும்பகுதியைக் கழித்த ஆஃப்ரிக்க இனப் பெண்மணி என்பது ஒரு ஒற்றுமைக் குணமாக இருக்குமோ?
ஆனால் தான் பட்ட துன்பங்களின் சாரத்தை யோசிக்கும் ஆக்டேவியா பட்லருக்கு, மனிதரில் ஒரு சாராருக்குப் பிறரின் துன்பத்தைச் சிறிதும் உணர்ந்து பார்க்கும் திறன் இல்லை என்பது நன்கு புரிந்திருக்க வேண்டும். அதற்கு எதிராக சிலருக்கு சுற்றிலும் இருப்பவர்களின் எல்லா மனத் துயரங்களும் (சந்தோஷங்களும்தான்) உடனே புரிவதோடு அவற்றைத் தம்முடைய உணர்வுகளே போலப் புரிந்து கொள்ளும், உணரும் திறன் கிட்டினால் என்ன ஆகும் என்பதுதான் அவர் கற்பனை.
காடு
நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப் படத்திற்காக மூன்று மாதங்களாக இங்கேயே இருக்கிறாராம். வாட்டிய ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டுப் ஃப்ளாஸ்க்கில் கருப்புக் காபியுடன் வந்தால் மாலைதான் அறைக்கு திரும்புவது, சில சமயங்களில் இரவிலும் காத்திருக்கிறாராம். அவரின் இந்த அர்ப்பணிப்பு வியப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் விலங்குகள் குறித்த ஆவணப் படங்களை ஒரு நொடியில் மாற்றி அடுத்த சேனலுக்குத் தாவியிருக்கும் பலநூறு சந்தர்பங்களை எண்ணி வெட்கினேன்.
காடு
பொங்கல் விடுமுறை 5 நாட்கள் என்று அறிவிக்கப்பட்டதும், கர்நாடகாவின் கபினி வனப்பகுதியின் ‘’Ghost’’ என அழைக்கப்படும் கருஞ்சிறுத்தையை காண வேண்டுமென பலநாட்களாக காத்துக்கொண்டிருக்கும் கானுயிர் புகைப்படக்காரனான இளைய மகன் தருணின் பொருட்டும் அங்கிருக்கும் காட்டுமரங்களின் முதலைமரப்பட்டைகளையும் ( Crocodile bark ), அங்கு அதிகமாக வளரும் தந்தப்பாலை செடிகளையும் “காடு”
கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்
இவர் வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டச் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாலும் பின்னர் அதிலிருந்து தன்னை முற்றாக விடுவித்து ஆன்மீகம் மற்றும் மெய்யியல் சார் விடயங்களுக்குள் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியா மற்றும் வங்கம் ஆகிய இரு நாடுகளினதும் தேசிய கீதங்களைப் படைத்தை பெருமையும் இவரையே சாரும்.
யசோதராவின் புன்னகை
என்னையறியாமலே அனிச்சையாய் எழுந்த என் முகத்தின் கேள்விக்குறியைக் கண்டுகொண்ட அந்த சுட்டிப்பெண் சொன்னாள்: “ஆன்ட்டி! எனக்கு எட்டு வயசாக இருக்கும்போது எங்கப்பா திடீர்னு வீட்டை விட்டுப்போய் சன்யாசம் வாங்கிண்டுட்டார். என் தங்கைக்கு அப்போ ஆறு வயசு. அவர் இப்போ எங்கே என்று யாருக்கும் தெரியாது.”
அந்தக்காலத்து தீபாவளி
Any sufficiently advanced technology is indistinguishable from magic. – Arthur C. Clarke தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் அந்தக்காலத்தில் இந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவோம் என்று விவரித்து ஒரு சிறுகதையோ கட்டுரையோ வந்து சேரும். அந்தக்காலம் என்று கருதப்படுவது ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு “அந்தக்காலத்து தீபாவளி”
ஓசை பெற்று உயர் பாற்கடல்
வயதேற ஏற, தெலுங்குக் கீர்த்தனைகள், சமஸ்கிருத, கன்னட, மலையாள இசைப் பாடல்கள், மராத்தி மொழியின் அபங், வங்காளத்தின் இரவீந்திர சங்கீதம், உருது மொழிக் கவாலி, கஸல் போன்றவற்றைக் கேட்டு இன்புற்றாலும் தமிழ்ப் பாடல்களைக் கேட்க நேர்கையில் மனமும் மெய்யும் பரவசம் கொள்கிறது. பெற்ற அம்மையை அம்மை எனச் சொல்லக் கூசுகிறவர்களின்பால் இரக்கமே ஏற்படுகிறது.
நூல் அறிமுகங்கள்
டேனியல் டென்னெட். மதிக்கக் கூடிய சிந்தனையாளர். அவர் இந்த மதிப்புரையில் கவனமாக கருத்தியல் சிதைப்புகளையும், திரிப்புகளையும் தாண்டி மானுடவியல், வரலாற்றியல், உளவியல், மதவியல், சமூகவியல் போன்றன இயங்கக் கற்க வேண்டும் என்று சுட்டுகிறார். அதற்குப் புள்ளியியல் ஒன்றே வழி என்று நினைப்பதும் மடமை என்றும் சுட்டுகிறார். ஆனால் புள்ளியியலின் உதவி தேவை, அதன் எல்லைகளும், அதன் வழிமுறைகளில் உள்ள புதைகுழிகளையும் பற்றிய தீர்க்கமான கவனம் தேவை என்று சொல்கிறார்.
கூம்பிய கனவுகள்
சொல்வனம் இதழில் பாவண்ணனின் சிறுகதை “கனவு மலர்ந்தது” படித்தேன். வாசித்து முடித்தவுடன் ஒரு சாதாரண சிறுகதையாகத்தான் தெரிகிறது. நாடகம் என்ற கலையின் வீழ்ச்சியைச் சொல்வதாக இருக்கிறது. நாடகம் என்ற வடிவம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது; நகரங்களில் சபாக்களில் இன்னும் கூட நடத்தப்படுகின்றனவே என்று சொல்லலாம். ஆனால்…
வாசகர் மறுவினைகள்
கதையின் முதல் மற்றும் நிறைவு வரிகளை, “சாமியே…ய், சரணம் ஐயப்பா!” என்று அமைத்தது மிகச் சிறப்பு!
இந்த வரிகளுக்கிடையில், எதார்த்தமான நடையில், எவ்வளவு நாசூக்காக வண்டி ஓட்டுநர்களின் சிரமத்தை விவரித்திருக்கிறீர்கள்!
நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் ஊர் மானாமதுரையிலிருந்து குருசாமிகள், மார்கழி மாதத்தில் விரதம் இருந்து மகரதீபம் காண இருமுடி கட்டி் குழுவாகக் கூண்டு உந்துகளில் சபரிமலைக்குக் கிளம்புவார்கள்….
நகரத்தில் இப்போதும் இரவு
பழைய தேவாலயக் கட்டடங்களின் சீரழிவுக்குப் புறாக்களின் கழிவுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்த ஊரில் இருக்கும் பாதிரிமார்கள், விலைமதிப்பில்லாத தேவலாயக் கட்டடங்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் புறாக்களை கூண்டோடு அழிப்பதற்கு ஒரு விசித்திரமான உபாயத்தைக் கைக்கொள்கிறார்கள். பாதிரியார்கள் பருந்துகளை வளர்த்து, அவற்றைப் புறாக்களுக்கு எதிராக ஏவிவிடுகிறார்கள். கொலைத் தொழில் ஒன்றையே குறியாகக் கொண்டு வளர்ந்த பருந்துகள், புறாக்களைக் கொன்றொழிப்பதைப் பொலான்யோ, கதையின் போக்கில் மிக நுணுக்கமான வகையில் விவரிக்கிறார்.
யாருக்கு இந்த துணிச்சல் வரும்?
பதினாறிலிருந்து பத்தொன்பது வயதிற்குள் மெக்ஸிகோ நகரத்தில் திருடியவையும் எனக்கு இருபது வயது இருக்கும்போது ராணுவப் புரட்சி தொடங்கிய முதல் சில மாதங்களில் சீலேவில் வாங்கியவையுமே என் நினைவை நீங்காத புத்தகங்கள்,. மெக்ஸிகோவில் ஒரு அபாரமான புத்தகக்கடை உள்ளது. அதன் பெயர் “கண்ணாடி புத்தகக் கடை”. அது அலமேதாவில் இருந்தது. “யாருக்கு இந்த துணிச்சல் வரும்?”
ரொபெர்த்தோ பொலான்யோ குறு மொழிகள்
ஒவ்வொரு நூறடிக்கும் உலகம் மாறுகிறது. நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என அறியாத போதிலும், எப்படித் தேட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். நிலா செழிப்பாக, இரவுக் காற்று அவ்வளவு தூய்மையாக, உண்டுவிடலாம் போல. கவிதை ஒன்றுதான் மாசுபடாது இருக்கிறது. அது விளையாட்டின் பகுதியன்று. உலகம் உயிர்ப்போடு இருக்கிறது; வாழ்பவைகளுக்குத் “ரொபெர்த்தோ பொலான்யோ குறு மொழிகள்”
பார்செலோனாவில் பொலான்யோ
பார்செலோனாவில் உள்ள நவீன கலாசார அருங்காட்சியகத்தில் (CCCB in Barcelona), ரொபெர்த்தோ பொலான்யோ பயன்படுத்திய பொருட்கள், எழுதிய நோட்டுப் புத்தகங்கள், உபயோகித்த தட்டச்சுக் கருவி என சகல விஷயங்களையும் BOLAÑO ARCHIVE. 1977-2003 என்னும் தலைப்பிட்டுச் சிறப்பு ஆவணக்காட்சி நடத்தியிருக்கிறார்கள். 2013ஆம் ஆண்டின் மார்ச் ஐந்தாம் தேதி முதல் ஜூன் “பார்செலோனாவில் பொலான்யோ”
கைச்சிட்டா – 4
வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் ஜன்னலோர வாசமும் அண்டை அயல் நடப்புகளும் நிறையக் காணக் கிடைக்கின்றன. நான் உட்காரும் இடத்திற்கு வெளியே உள்ள கொல்லைப் புறத்தில் இரண்டு தனித்தனி ஜோடிப் பறவைகள் கூடு வேறு கட்டியிருக்கிறது. ‘கபாலி’ படத்தில் சிறையில் இருந்து வெளியே வரும் ரஜினி கதாபாத்திரம் சொல்வது போல், “அதப் பறக்க விடுங்கடா… அதுதான் அதன் இயல்பு” என மரக்கிளைகளுக்கு நடுவே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும். அந்தக் குருவிகளும் பட்சிகளும் உட்கார்ந்து கூட்டம் கூடி இரையைக் கொத்திக் கொண்டு காணாமல் போவது நாள் முழுக்க கணினி சந்திப்புகளில் அடைபட்டிருக்கும் எனக்கு உவகையைத் தரும். சிறகடிக்கும் ஜீவன்கள் குறித்த நூல்களைத் தேடினேன். சற்றே இன்ப ஆச்சரியம். அமெரிக்காவில் அதிகமாக விற்கும் நூல்..
க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]
சூஸன் சாண்டாக், பதினைந்தாம் நூற்றாண்டில் மேக நோயைக் (ஸிபிலிஸ்) குறிக்கவிருந்த பெயர்களை எல்லாம் பட்டியலிட்டார்- இங்கிலிஷ்காரர்கள் அதை “ஃப்ரெஞ்சு அம்மை,” என்று சொல்கையில், ”பாரி நகரத்தார்களுக்கு (பாரிஸ்) அது “மார்பஸ் ஜெர்மானிகஸ்”, நேபிள்ஸ் நகரத்தில் அது ஃப்லாரெண்டைனியர்களின் நோய், ஜப்பானியர்களுக்கு அது சீன நோய்.” என்று எழுதினார். நாம் எல்லாரும் கொள்ளை நோய்கள் வெகு தொலைவிலிருந்து நமக்கு (அழையா) விருந்தாளியாக வருகின்றன, அவை நம்முடைய வியாதிகள் இல்லை, ஒரு போதும் நம்முடைய பிழையால் வந்தவையும் இல்லை, என்று நினைக்க விரும்புகிறோம்.
கைச்சிட்டா
இந்தப் பகுதியின் குறிக்கோள்கள்:
1. சுருக்கமாகச் சில புத்தகங்களை அறிமுகம் செய்வது; அறிமுகம் செய்த பதிவுகளைப் பகிர்வது.
2. ஆங்கிலமோ, தமிழோ, மொழியாக்கமோ (அல்லது) கதையோ அபுனைவோ கிளாசிக்கோ – எல்லாவற்றிலும் ஒன்றைப் படித்தீர்களா எனக் கேட்டுப் பதறச் செய்வது.
3. உங்களிடமிருந்து இலவசமாக நூல்களைப் பெறுவது (அல்லது) பழைய விமர்சனங்களைப் புதுப்பிப்பது.
மூதாதையின் கவிதை
நம்மிடையே உள்ள இரண்டாயிரம் வருடங்களின் புகழ் பெற்ற கவிதைகள் இசைவடிவம் அடையாத நிலையில் முதல் முறையாக ஆறு சங்கப்பாடல்கள் இசைவடிவம் பெற்று ’சந்தம்’ (Sandham: Symphony Meets Classical Tamil) என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருப்பது இசையுலகின் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு. இப்பாடலகளுக்கு இசையமைத்தவர் திருவாரூரில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் இசையமைப்பாளர். ராஜன் சோமசுந்தரம். மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரியின் தலைமையில் அமெரிக்காவின் வடக்கு கரொலினா மாகாணத்தில் உள்ள டர்ஹாம் சிம்பொனியின் 68 வாத்திய இசைக் கலைஞர்களின் குழு இத்தொகுப்புக்கு பின்ணனி இசை அளித்துள்ளது.
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
போய்க் கொண்டே இருப்பதற்காகவே எழுதிக்கொண்டு இருக்கிறோம், பித்து பிடித்தலைவதைத் தவிர்ப்பதற்காக. அடுத்த விமர்சனக் கட்டுரையை எழுத முடிவதற்காகவே ஒருவர் அதற்கு முந்தைய கட்டுரையை எழுதி முடிக்கிறார், அல்லது அடுத்த ஒன்றிரண்டு நாட்களை வாழ்ந்து முடிப்பதற்காக. ஒருகால் தீங்கு விலக்கும் செய்கையாகவோ அல்லது மரணத்தை ஒத்திப் போடுவதற்காகவோ கூட இருக்கலாம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இதைத்தான் கவிஞர்கள் செய்கிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மரணங்களை ஒத்திப் போடுவதற்காகவே கவிதை எழுதுகிறார்கள்.
பொன்னின் பெருந்தக்க யாவுள !
பிட்டுக்கு மண் சுமந்த மதுரைச் சொக்கேசன் மீது, அரிமர்த்தன பாண்டியன் வீசிய பொற்பிரம்பும் அறிந்திருக்கலாம். பொற்பிரம்பின் வீச்சையும் வலியையும் அனுபவிக்க எமதாசான் புதுமைப்பித்தனின் ‘ அன்று இரவு’ வாசிக்க வேண்டும். வாசிக்க நேர்ந்தவர் நற்பேற்றாளர். புதுமைப்பித்தனிலும் சாதி தேடிய மார்க்சீய, அம்பேத்காரிய, பெரியாரிய ‘அறிஞர்’ கூட்டம் உண்டு. ‘அரிசிப் புழு தின்னாதவனும் இல்லை, அவுசாரி கையில் உண்ணாதவனும் இல்லை’ என்பது சொல்வடை.
காணாமல் போனவர்கள்
உரல் இடிக்க, முறுக்கு சுத்த, அதிரசம் சுட என்று பண்டிகைகளின் போது அம்மாக்களுக்கு உதவ வரும் பெண்கள் அத்தைகளாகவும், ஆச்சிகளாகவும் மாறி இருக்கின்றனர். எங்கள் வீட்டில் சுத்து வேலை பார்க்கும் அத்தையிடம் வீட்டையே ஒப்படைத்து விட்டு நாங்கள் நாள்கணக்கில் ஊருக்குச் சென்று இருக்கிறோம். அப்போது பெரிய விஷயமாகத் தெரியாதது, இப்போது வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
அம்பை – ஒரு எதிர் அணுக்க மதிப்பீடு
அம்பை எழுத்தாளர் என்பதைத் தாண்டி களத்தில் இயங்கும் ஒரு பெண்ணியலாளர். அவரது ‘ஸ்பாரோ’ அமைப்பு பெண் குரல்களை அனுபவங்களை ஆவணப்படுத்தும் செயலை பல்லாண்டுகளாக செய்து வருகிறது. அதில் அவருக்கு எவ்வித கோட்பாட்டு சார்பும் இல்லை. இதனால் ஸ்பாரோ அமைப்பின் ஆவண சேகரிப்பு இந்திய பெண்களைக் குறித்து அறிந்திட சிறப்பான தரவு பொக்கிஷம். குறிப்பாக அவர்கள் வெளியிட்டுள்ள, அதிகம் வெளியே தெரியாத விடுதலைப் போராட்ட பெண் மாந்தர் (அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக பங்கு பெற்றவர்களாக இருக்கலாம், அல்லது விடுதலை போராட்டத் தியாகிகளின் மனைவியர், சகோதரிகளாக இருக்கலாம்), அறிவியல் துறையில் பெண்கள், இலக்கியத்தில், நிகழ் கலைகளில், கிராம கலைகளில் பெண்கள், குடும்பங்களில் உள்ள பெண்கள் என அனைத்து துறைகளிலும் உள்ள
மனத்துக்கினியவள்
நான் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் எம். ஏ. படிக்க வந்தபோது பாலப்ரியா என்ற எழுத்தாளர் மூலம் சூடாமணி எனக்கு அறிமுகமானாள். பத்தொம்பது வயதிலிருந்து அவள் மரணம் நேரும் காலம் வரை என் இலக்கிய முயற்சிகளுக்கும் என் வாழ்க்கையின் பல்வேறு போக்குகளுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் என் உற்ற துணையாய் இருந்தவள் சூடாமணி. நான் எம்.ஏ படிக்க வரும் முன்பே சூடாமணியின் கதைகளைப் படித்திருந்தேன். மனத்துக்கினியவள் நாவல் முதல் பல கதைகளைப் படித்திருந்தேன். சூடாமணியின் இருவர் கண்டனர் ஆனந்தவிகடனில் 1961இல் வெளிவந்துகொண்டிருந்தது…
நீளாவுடன் நீளும் பயணம்
மேக் மல்ஹாரில் அஸ்வினி பீடே பாடும் ஜமக ஜுகி ஆயீ, பதரியா காலீ (ஒளிர்ந்தபடி தாழ்ந்து வந்தன கரிய மேகங்கள்) பாடல் ஞாபகம் வந்தது. முதலில் ஜமக ஜுகி ஆயீ என்று பாடிவிட்டு ஆயீ என்ற சொல்லை விஸ்தரித்துவிட்டு ஹோ என்று அதிசயத்தைச் சொல்வதுபோல் ஓசையை எழுப்புவார். பிறகு பதரியா காலீ என்று மேகங்களை இசையால் வரைந்து கொண்டே போவார். ஒளிரும் கரிய மேகங்களை நாம் உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே ஜூலா (ஊஞ்சல்) என்று இடைவெட்டுவார். ஊஞ்சலா? எங்கிருந்து வந்தது ஊஞ்சல் என்று நினைக்கும்போதே ஜூலா ஜூலே நந்தகிஷோர் என்று கிருஷ்ணன் ஊஞ்சலாடுவதை
ஊர் வேண்டேன்…
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ’எத்தனை கேள்வி எப்படிச் சொல்வேன், பதில் எப்படிச் சொல்வேன்’ என்று ஒரு பாட்டு வரும். பி சுசீலா பாடியது. ’நீ எந்த ஊரு, என்ன பேரு, எந்த தேசம், எங்கிருந்து இங்க வந்தே?’ என்று அதில் ஒரு வரி வரும். அப்போதே நான் நினைப்பேன், இப்படி ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியுமா என்று. பலருக்கு ஓர் ஊர் இருக்கும். அதில் ஓர் ஆறு ஓடும். அந்த ஊர் மண் அவர்களை நெகிழ்த்தும். தொடர்ந்து அவர்களை ஈர்த்துத் தன்னுடன் தக்க வைத்துக்கொள்ள அந்த ஊரில் மனிதர்களும் விஷயங்களும் இருக்கும். ஆனால் என்னைப் போன்ற நாடோடிகளுக்கு ஏது ஊர்?
மண்ணாசை
வளரும் பருவத்தின் பல வருடங்கள் கோயமுத்தூரில் என் அம்மாவழிப் பாட்டி-தாத்தா வீட்டில் கழிந்திருந்தது. அம்மாவின் குழந்தைப் பருவம் கோவில்பட்டியில். அதனால் கோவில்பட்டி அவர் நினைவுகளில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. இந்த இரு மண்ணும் ஏதோ ஒருவகையில் எனக்குரியவை என்றொரு உணர்வுப் பிணைப்பு என்னுள் இருந்தது. இருக்கிறது. அதனால்தான் கொங்கு நாட்டைச் சேர்ந்த மண்ணின் நாயகி நாகம்மாள் என்னைப் பாதிக்கிறாளா என்று யோசித்தேன். ஆழ்ந்து யோசித்தபோது அது மட்டுமல்ல காரணம் ….
அஞ்சலி: ஆனியெஸ் வர்தா
நேற்று என் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவு என்னைத் துயரிலாழ்த்தியது. ஃபிரெஞ்சு சினிமாவின் முதுபெரும் மேதை ஆனியெஸ் வர்தா மறைந்த செய்தி குறித்த தன் வருத்தத்தை அவர் எழுதியிருந்தார். இந்த மேதையின் திரைப்படங்களில் எனக்குப் பிடித்த படங்கள் குறித்த நினைவுகள் கிளர்ந்தெழுந்தன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் “அஞ்சலி: ஆனியெஸ் வர்தா”
ஆனியெஸ் வர்தா
திரைப்படத் துறைக்கு வெளியிலிருந்து வந்து, ஒரு படத்தைக் கூட அதுவரையில் இயக்காமலே, தன் சொந்தப் பணத்தையும், நண்பர்களின் உதவியை மட்டும் மூலாதாரமாகக் கொண்டு, சராசரி பிரெஞ்சுப் படங்களின் பட்ஜெட்டின் பத்தில் ஒரு பங்கில், முக்கியமான ஒரு படத்தை எடுத்தார் என்பதுதான் Bazin போன்ற விமர்சகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது அவரது Cinecriture அழகியல் கோட்பாடுகளுடன், Cine-Tamaris என்ற அவரது தயாரிப்பு நிறுவனமும் புதுஅலைக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது என்பதே வர்தாவின் சாதனை.
தேரோடும் வீதி…
வடம் போக்கித் தெரு…! கெட்டித்து போன கால உருளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு தெரு…தெரு என்றாகி, அதற்கொரு பெயர் சூடி சில நூறாண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் அதன் கீழிருக்கும் மண்? மலையத்துவஜனும் காஞ்சனமாலையும் சுந்தரவல்லியை பெண்ணாய் பெறும் வேள்வியை செய்யக் கடந்து போயிருக்கக் கூடிய தெரு…அச்சுந்தரவல்லி, மும்முலை அரசியாய் கயிலை நோக்கி படைதிரட்டி சென்றிருக்கக் கூடிய தெரு…அங்கு நாயகனை கண்ட நாணத்தில் ஒரு முலை மறைந்து இருமுலை குமரியாய் திரும்பியிருக்கக் கூடிய தெரு…”மனமகிழ் துங்குநர் பாய்புடன் ஆடச் சுனைமலர்த் தாதுதும் வண்டுதல் எய்தா” பரங்குன்றம் நோக்கி பலர் சென்றிருக்கக்கூடிய தெரு…”பொன்தொழில் சிலம்பொன்று ஏந்திய கையள்
ஓ ரசிக சீமானே…
இளவட்டங்கள் துண்டை ஹாண்டில்பாரில் கட்டிக்கிட்டு குளிர எண்ணெய் தேய்ச்சுகிட்டு ஒரே சைக்கிளில் மூன்று பேர் கூட செல்வதுண்டு. படிப்படியாக ஆத்துக்கு செல்வது குறைந்தது. யாராவது இறந்தால் கருப்பந்துறைக்கு(சுடுகாடு) போய் பின் ஆத்தில் குளித்து வருவது என்பதும் போய் இப்ப நேரே வீட்டுக்கு வந்து வெந்நீர் குளியல் (மாப்ள, உடம்புக்கு ஒத்துக்கிடமாட்டேங்குலா) என்றாகி போனது.
லொரான் பினேவின் ‘தி செவன்த் ஃபங்க்சன் ஆஃப் லாங்க்வேஜ்’ அல்லது ஷெர்லாக் ஹோம்ஸ் போல் துப்பறிகிறார் பார்த்.
ருஷ்ய மொழியியலாளர் ரொமன் யேகப்ஸன் ஏற்கனவே விவரித்துள்ள ஆறு செயற்பாடுகள் போக இரகசியமான ஏழாவது மொழிச் ‘செயற்பாடு’ குறித்து அந்த ஆவணம் விவரிப்பதாக நம்பப்படுகிறது. எவரொருவர் அதில் மேதமை பெறுகிறாரோ, அவருக்கு ‘வலியுறுத்தல்’ ஆற்றல்களை அளிக்கவல்ல செயற்பாடு அது என்பதால் பல சிந்தனையாளர்களும் பிரெஞ்சு அரசியல் வட்டத்தின் சக்திவாய்ந்த உறுப்பினர்களும் அதைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக, எண்பதுகளில் நிலவிய பிரெஞ்சு இலக்கியச் சூழலிற்குள் விளையாட்டுத்தனம் கலந்த அரைத் தீவிர பயணம் துவங்குகிறது (பார்த், ஃபூக்கோ, சொலேர்ஸ், ஜூலியா கிரெய்சிஸ்தெவா, தெரீதா, லகான் என்று பிரெஞ்சு விமரிசன மரபின் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த நாவலின் பாத்திரங்களாய் இடம் பெறுகின்றனர்).
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்: ‘பெருங்கடல் வேட்டத்து’
அருள் எழிலன் அவர்களின் ‘பெருங்கடல் வேட்டத்து’ எனும் ஆவணப்படம் சமீபத்தில் பேராசிரியர் வஹீதையா கான்ஸ்டன்டைன் அவர்கள் முன்னிலையில், மாலதி மைத்ரி அவர்கள் முன்னெடுத்த கலந்துரையாடலுக்கான திரையிடலில் காணக் கிடைத்தது. இந்த ஆவணத்தின் தனித்தன்மை என முதன்மையாக ஒன்றை சொல்லவேண்டும் எனில் அது இதிலுள்ள காமம் செப்பாது கண்டது மொழியும் தன்மை. இது மீனவ துயர்களை ஊதிப் பெருக்கியோ, அல்லது பரிதாபத்துக்கு உரியவர்களாக காட்டியோ, அதன் வழியே அன்றைய நாளின் ஆளும் வர்க்கச் செயல்பாட்டின் மெத்தனப் போக்கை, இடர் நீக்கப் பணியின் அலட்சியத்தை, உணர்ச்சிச் சுரண்டலாக …
இடைத்தரகர் குடும்பம்
சின்ன பொம்மைகளை வீட்டில் கொலு வைப்போம். பாரதி கெர் (Bharti Kher) பொது இடத்தில் பதினாறடிக்கு சிலை எழுப்பி கண்காட்சியில் வைத்திருக்கிறார். லண்டனில் உள்ள ரீஜண்ட் பூங்காவில் இந்த வடிவம் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவில் பிறந்து பாதி வாழ்க்கையை கழித்திருந்தாலும் லண்டனில் இப்போதைய பாதி இருப்பதை இது குறிக்கலாம் என்கிறார். “இடைத்தரகர் குடும்பம்”
அதிபுனை ஒளிப்பட போட்டி
அதிபுனை கதைகள் என்றால் கொஞ்சம் அறிவியலும் நிறைய கற்பனையும் வேண்டும். அதிபுனை புகைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும்? கொஞ்சம் கற்பனையும் நிறைய வருங்காலமும் கொண்டிருக்க வேண்டும் எனலாமா? போட்டியில் கலந்துகொண்ட ஒருவரின் படம் இங்கே. மற்ற ஆக்கங்களை இங்கே பார்க்கலாம்.
சாவித்திரியின் சுயராச்சியம்
கு.ப.ரா. எழுதிய ‘சிறிது வெளிச்சம்’ கதை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்று நியாயமாகவே போற்றப்படுகிறது. இந்தக் கதையில் நாம் காணும் மௌன இடைவெளிகள், கச்சிதமான வடிவம், இயல்பான உரையாடல், துவக்கம் முதல் முடிவு வரை உள்ள சுவாரசியம் முதலியவை இன்று எழுதப்படும் எந்த ஒரு நவீன சிறுகதைக்கும் இணையானவை. இன்னும் ஒரு படி மேலே போய், டிசம்பர் 1942ல், ‘கலாமோகினி’ இதழில் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறுகதையின் நாயகி சாவித்திரி வேதனையில் வெளிப்படுத்தும் விடுதலை வேட்கை பெண்ணிய குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இன்றும்கூட மெய்ப்பிக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.
எழுத்தாளனே கதைசொல்லியாய் உள்ள இந்தக் கதையின் துவக்கத்திலேயே ஒரு பெண் இறந்து விட்டாள் என்பதை அறிந்து கொள்கிறோம். அவள் துன்பம் தீர்ந்தது என்ற ஆசுவாசமும், அவளைக் காப்பாற்ற முடியவில்லை என்ற துக்கமும் கதைசொல்லியின் முதல் இரு வாக்கியங்களில் வெளிப்படுகின்றன. தான் காப்பாற்றப்பட வேண்டியதில்லை என்பது அவளே தேர்ந்தெடுத்துக் கொண்ட முடிவு என்பதையும் பல முறை முயற்சி செய்தும் கதைசொல்லியால்
வாணவெடி
Drones எனப்படும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் தூரயியங்கி குறித்த கட்டுரைகளைப் படித்திருப்பீர்கள். விமானியில்லாத விமானத்திற்கு ஆயிரம் பயன்கள் ஏற்கனவே இருக்கின்றன; இப்போது மற்றுமொரு பயனாக, பொழுதுபோக்கு இசைக்கேற்ப நடனம் ஆட வைத்திருக்கின்றனர். லாஸ் வேகாஸ் நகரத்தில் இருக்கும் பெலாஜியோ விடுதியுடன் இணைந்து இண்டெல் நிறுவனம் இதை செயலாக்கி இருக்கிறது. காவேரி “வாணவெடி”
வில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள்
ஒரு புனிதருடன் தனது பெயரை பகிர்ந்து கொண்டிருப்பவர். ரெல்க, வாலெரி, ஃபிளோபெர் ஆகியோருடன் எழுத்துக்கலையின் ஒரு துருவத்தின் உச்சப் பிரதிநிதி இவர். அவருடையது முழுமையான அர்ப்பணிப்பு. அது அவர் இருப்பிற்கு அடிக்கடி பங்கம் விளைவித்தது. அனேகமாக நாமெல்லோருமே சமரசம் செய்து கொள்பவர்கள். அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கும், தொழிலாளர் சச்சரவுகளை தவிர்ப்பதற்கும், மணவாழ்க்கையை தக்கவைத்துக் கொள்வதற்கும், போரில் பங்கெடுக்காமல் தப்பிப்பதற்கும் நமக்கும் இச்சமரசங்கள் தேவைப்படுகின்றன. கொள்கைகளும் கறைபடுகின்றன , துணிகளைப் போல் அவற்றையும் அடிக்கடி நாம் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஷேக்கர்களைப் போல் பல விஷயங்களை கேளிக்கை, பயனற்ற அலங்காரம் அல்லது பகட்டு என்று கருதியதால் அவர், மினிமலிஸ்ட் என்று நாம் அழைக்கும் ஒரு சுருக்கவாதி. மேலும், சந்தேகமில்லாமல் அவர் சொல்வதே சரி.
நான் கடவுளாக இருந்தால்
ஏழாம் வகுப்பு மாணவனுக்கு கடவுள் ஆகும் சக்தி கிடைத்தால் என்ன யோசிப்பான்? வகுப்பில் கடுப்பேற்றுபவர்களை தண்டிப்பானா? உலகத்தைத் தனக்கேற்றவாறு மாற்ற நினைப்பானா? பால்ய கால சினேகிதியை கவர விரும்புவானா? கீழே குறும்படம்: