இந்திய ஞானம் தர்க்கத்தைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து உலகிற்குக் கொடையாக அளித்திருக்கிறது. பொது யுகத்திற்கு முன்பான 5-ஆம் நூற்றாண்டில் பாணினி அளித்த சமஸ்ருத இலக்கணம் தர்க்கமாகவும், தர்க்க விதிகளுக்குட்பட்டும் அமைந்துள்ளது. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கேசாவின் ‘நவ்ய ந்யாயா, ப்ரத்யக்ஷம், அனுமானம், உபமானம், சப்தம் என்று தர்க்கத்தின் கூறுகளைச் சொல்கிறது.
Category: மேலைத் தத்துவம்
தத்துவப் பூனை
மூட நம்பிக்கையைச் சாடி தன் ‘கீதப் பூங்கொத்து’ பாடல் நூலில் பிரும்ம ராயர் இப்படிச் சொல்கிறார்:
‘போகும் வழியிலோர் பூனைதான்
எந்தப் புறம் சென்றால் உனக்கென்ன?
அந்தந்த ஜீவன் இயற்கையாம்-இதில்
அச்சங் கொண்டேகுதல் ஏனடா?’
காண்பவை எல்லாம் கருத்துகளே – 2
நம் சிந்தனைகள் எல்லாவற்றுக்கும் பின் ஒரு சுயம் இருக்கிறது. நம் எண்ணங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றினைக் குறித்து நிகழ்கின்றன. ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்து நம் மனது எண்ணுகிறது. நாம் எந்த விஷயத்தைப் பற்றி எண்ணுகிறோமோ அது நம் அகத்தில் ஒரு அறிபடுபொருளாக(Object) ஆக்கப்படுகிறது. நமது சுயத்தைப் பற்றி சிந்தித்தாலும் சுயம் ஒரு அறிபடுபொருளாக ஆக்கப்பட்ட பின்னரே சிந்திக்கப்படுகிறது. இருப்பினும் சுயம் முழுமையாக அறிபடுபொருளாக ஆக்கப்படுவதில்லை. சுயத்தை எவ்வளவு தான் நாம் அறிபடுபொருளாக ஆக்க முயற்சித்தாலும் அந்த மாற்றத்தை அடையாத சுயம் எஞ்சி நிற்கிறது. இதை மீறுநிலை சுயம் (transcendental ego) என்கிறார் ஃபிஷ்ட.
வரலாறு குறித்து ஹேகல்
ஹேகல் இவ்வளர்ச்சியை மேலும் பல விவரங்களுடன் நான்கு வகையாக வகுத்துக்காட்டுகிறார். கிழக்கத்திய உலகில் அரசனே விடுதலையுடையவன் என்று அறிந்திருந்தனர். விடுதலையின் ஆன்மா ஒரே ஒரு மனிதனில் தோற்றம் பெற்றிருப்பதால், அம்மனிதனின் விடுதலையானது பிறப்பெனும் ஒர் எதர்ச்சை நிகழ்வால் நிர்ணயிக்கபட்டதால், அவ்வகை விடுதலையானது முற்றிலும் தற்செயலானது. மேலும், மக்கள் தங்களுக்குள் இருக்கும் அகவய விடுதலையை அறியாதிருந்தனர். அதனால் ஹேகல் இதை ஆன்மாவின் வளர்ச்சியின் பிள்ளைபருவம் எனக் கருதினார்.
ஸ்பினோஸா ஏன் இன்றும் பொருட்படுத்தக் கூடியவராக இருக்கிறார்?
அப்ரஹாமிய மதங்களுக்குப் பொதுவாக உள்ள தேவபிதாவை மறுப்பதைத் தன் அடித்தளமாகக் கொண்டது ஸ்பினோஸாவின் தத்துவம். ஸ்பினோஸாவின் கடவுள், மனித அனுபவ உணர்தல்கள் அனைத்தையும் கடந்த, எல்லாப் பாதுகாப்பையும் கொடுக்கும் தேவதையின் உளநிலை, ஒழுக்க குணங்கள் எதுவும் இல்லாத ஒரு கருத்துரு. ஸ்பினோஸாவின் ‘அறம்’ (1677ஆம் வருடத்தியது) என்னும் தத்துவச் சாதனையான புத்தகத்தில் உள்ள ‘தேவன்’ அன்பு செலுத்தும் ஒரு நபர் அல்ல. அதற்கு நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் அல்லது உணர்ச்சிகள் எவையும் கிடையாது.