அன்புள்ள வாசகர்களுக்கு… சிறப்பிதழ் அறிவிப்பு

உங்கள் வாசிப்பில், கவனிப்பில், சிந்தனையில் எந்த எழுத்தாளர்களை நீங்கள் பாராட்டிப் படிக்கிறீர்கள், அவர்களால் உங்களுக்குக் கிட்டிய மேன்மைகள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று யோசித்து, ஒரு சுருக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்.

இந்தச் சிறப்பிதழ் புதுப் புனலாக வந்த எழுத்தாளர்கள் பற்றியது என்பதால் சமீபத்தில் எழுத வந்துள்ளவர்களைப் பற்றி இந்த யோசனைகள் இருக்க வேண்டும்.

2000த்துக்கு அப்புறம் எழுத வந்தவர்களைப் பற்றி இருக்கட்டும் என்று தற்காலிகமாக முடிவு செய்திருக்கிறோம்.

அஞ்சலி: ஆனியெஸ் வர்தா

நேற்று என் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவு என்னைத் துயரிலாழ்த்தியது. ஃபிரெஞ்சு சினிமாவின் முதுபெரும் மேதை ஆனியெஸ் வர்தா மறைந்த செய்தி குறித்த தன் வருத்தத்தை அவர் எழுதியிருந்தார். இந்த மேதையின் திரைப்படங்களில் எனக்குப் பிடித்த படங்கள் குறித்த நினைவுகள் கிளர்ந்தெழுந்தன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் “அஞ்சலி: ஆனியெஸ் வர்தா”