பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்

பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்து வருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக்கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறைபாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்து வருவதுதான். இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக் கூடாத அதீத காம இச்சைகள் இவைகள்தான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவி வருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை.

மூடாத எல்லைகள் – இல்லாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 3)

அண்மையில் தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் உரையாற்ற பெர்லின் சென்றிருந்தேன். சமயம் கிடைத்தபொழுது கொஞ்சம் ஊர் சுற்றினேன். ஊரைச் சுற்றி வரும்போது, பெர்லின் சுவற்றையும் செக்பாயிண்ட் சார்லியையும் பார்த்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் பல பத்தாண்டுகள் பிரிந்திருந்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிழக்கிலிருந்து மேற்கில் குடியேற  முயற்சித்து சுவரேறிய மக்களைச் சுடும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் இருந்த சுவற்றை (Berlin Wall) இன்னும் மறவாதிருந்த பெர்லின் குடிமக்கள் பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகளை இணைக்க வழி வகுக்கும் வகையில் பெர்லின் சுவர் இடித்து தள்ளப்பட்ட நாள் இன்னும் எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது நான் லூயிசியானாவில் உள்ள பேட்டன் ரூஜில்…

ஏதிலி வாழ்வது எப்படி?

இப்படிதான் வளர்கிறது வாழ்க்கை. குடும்பங்கள் விரிகின்றன, பிறரது ஆசிகளும் பொறுப்புகளும் நம்மை நாடி வருகின்றன. நமக்கு வசதியான பிரதேசத்தை விட்டு வெளியேறும்போது, நாம் வளர்ந்த காலத்தில் உண்ட ரொட்டிக்கு மாறாய் வேறொன்றை உண்ணும்போது, பகுத்துணரும் மனப்பான்மை வளர்கிறது. சல்லா, சப்பாத்தி, வெந்நீர் கார்ன்பிரெட், பிடா, இன்ஜெரா, பாகெட்- வேறொரு ரொட்டியை, வேறு வகையில் காரம் சேர்ந்த உணவை உண்பது என்பது எவ்வளவு அற்புதமானது. உன் மொழிக்கு மாறாய் வேறொரு மொழியில் கனவு கண்டு கொண்டிருப்பவன் அருகில் உறங்குவது என்பது எவ்வளவு அற்புதமானது. இந்த திருமண நாள் புகைப்படத்தை நினைத்துப் பாருங்கள்

தொழில்நுட்ப மயக்கங்களும் நவீனத்துவத்தின் முடிவும் – மைக்கேல் சகசாஸ்

சார்லஸ் டைலர் கனடாவைச் சேர்ந்த தத்துவவியலாளர். இவரது ‘எ செக்யூலர் ஏஜ்’ என்ற புத்தகம், சமயம் மற்றும் சமயசார்பின்மை பற்றி பேசுகிறது. சமய நம்பிக்கை வலுவிழப்பதால் சமயசார்பின்மை வளர்வதில்லை, மாறாய் தன்னைத் தவிர பிறிதொன்றுக்கு இடமளிக்காத மானுட நேயமே அதன் வளர்ச்சியின் அடிப்படையாய் இருக்கிறது, என்றார் அவர். இக்கருத்து, கட்டுரையில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது…..பல பரிமாணங்களும் நுட்பங்களும் கொண்ட அவரது வாதத்தின் ஒரு சிறு பகுதியை இங்கு பயன்படுத்திக் கொள்ளவே அவர் எழுதிய ‘எ செக்யூலர் ஏஜ்’ நூலைச் சுட்டுகிறேன். வசீகரமிழத்தல் (disenchantment) குறித்த அவரது புரிதல் முக்கியமானது.

நவீனத்துக்கு முற்பட்ட சமூக இயல்புகளில் மாயங்கள் நிறைந்த உலகம் (enchanted world) என்ற பார்வையும் ஒன்று. அதைக் கடந்த பின்னரே, டைலரின் பொருளில் சமயச்சார்பற்ற உலகம் ஒன்று தோன்ற முடியும்.

உலக வரலாறு, ஆறு கோப்பைகள் வழியாக..

உலகின் முழு வரலாற்றை ஒரு ஆறு கோப்பைகள் வழியாக சொல்லிவிட முடியாதுதான். அதுவும், இந்த நூல் முக்கியமாக மத்திய கிழக்கிலிருந்து மேற்காய் இருக்கும் உலகின் வரலாற்றையே அதிகமும் விவரிக்கிறது. முழுமையான வரலாறு என்று இதை ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை மிக சுவாரசியமாய் விவரிக்கிறது. மேலே சொன்ன கார்ல் பாப்பரின் கூற்றைப்போல எல்லா வரலாறும் பெரும் வரலாற்றின் ஒரு அம்சத்தைப் பற்றியதுதானே?

அழிக்க வந்த போலி காருண்யம்

தென் இந்தியா முழுக்கசுற்றி வந்திருக்கிறேன். இந்திய மாட்டினத்திலேயே கர்நாடக ஹள்ளி கலைகள் போல அழகும் கம்பீரமும், ராஜாம்சமும் பொருந்திய காளைகளை நான் பார்த்ததில்லை. காங்குராஜ், கென்வாரி, சாகிவால், ஒங்கோல், நகோரி போன்ற இந்திய மண்ணுக்கே உரிய காளைகளோடு ஒப்பிட்டே இதை முன் வைக்கிறேன். புலிக்கு ஆனைமலையிலும் சத்தியமங்கலத்திலும் சரணாலயம் ஏற்படுத்தி விட்டாரகள். அழிந்து வரும் இந்த அபூர்வ காளை இனங்களுக்கு விளங்கு நேய ஆர்வலர்கள் மாற்று ஏற்பாடேனும் செய்து வைத்திருக்கிறார்களா? சாத்தியம்தானா? புலி, சிறுத்தை, செந்நாய்களுடன் இந்த பசுவினம் வாழ்ந்து விடுமா? காட்டை விட்டுப் பிரிந்து 3000 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை நம்பி மேய்ச்சல் செய்கின்ற இனமாக சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆகி விட்டது. கர்நாடகத் துளு மக்களின் பாரம்பரிய சேற்று காளை விரட்டான ‘கம்பளா’ என்ற எருமை விளையாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கிறது நீதிமன்றம். விவசாய தமிழ் மனங்களின் தொப்புள்கொடி உறவிலிருந்து பிரிக்கிற சட்டம் வருமானால் வீட்டு விலங்கான இந்த இனங்கள் அழிவது உறுதி. மாடுகள் துள்ளிக் குதித்து ஓடவில்லை என்றால் மூக்கடைப்பு வந்து அவதிப்படும்.
பிரசித்தி பெற்ற ஸ்பெயின் காளை சண்டையல்ல, கணத்தில் குத்தி வீழ்த்துவதற்கு. தோற்றாலும் வென்றாலும் மாடுகள் வீட்டிற்கு வந்ததும் குளிக்க வைத்து தாடையை அணைத்துக் கொஞ்சுவர். அலுப்பு அகல ஒற்றைச் சாக்கை மடித்துப் போட்டு முதுகு தேய்த்து விடுவர். அவர்களுக்கு மாடு ஒரு பிள்ளை. நீங்கள் கி.ரா.வின் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ கதையை …

நட்சத்திரங்கள்

கடைசியாகக் கண் குளிர நட்சத்திரங்களை நான் பார்த்தது, சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால். தொழில் நிமித்தமாகச் சவுதி அரேபியா கடற்பரப்பில், வேலை தளத்திலிருந்து கரையை நோக்கி இரவு தொடங்கும் நேரத்தில் கிளம்பி, ‘போட்’-ல் வந்த 3 மணி நேர பிரயாணத்தில்தான். சற்று குளிர் அதிகமான இரவு. எனவே என்னுடன் பிரயாணித்த அனைவரும் போட் கேபினுக்குள் ஏதோ சினிமாபார்த்துக்கொண்டிருக்க அடுத்தவர்களைப் பற்றிய அக்கப்போர் பேசிக்கொண்டிருக்க, நான் மட்டும் எப்போதும் போலத் தனியனாகப் போட் டெக்-ல் அமர்ந்து இருட்டை வெறித்துக்கொண்டிருந்தேன். பயணம் தொடங்கியதிலிருந்து, சுமார் ஒருமணிநேரம் வரையும் காணும் திசையெல்லாம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவுக்காக, பூமியை டிரில்லிங் இயந்திரங்களைக் கொண்டு வன்புணர்வின்மூலம் உருவாக்கிய துளைகள் புடைப்புகளாக எழுந்து நின்றிருந்தன. சுகப்பிரசவமாகவும் (Natural Flow) சிசேரியனாகவும் (Forced Flow – Gas Injection/Water Injection) …

இறுதிச்சுற்று சிந்தனைச்சோதனைகள்

பூமி ஒரு உருண்டையான கோளாக இல்லாமல் ஒரு கன வடிவத்தில் (Cube Shaped) இருந்தால் எப்படி இருக்கும் என்று பலர் கேட்டிருக்கிறார்கள், யோசித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பூமியின் மேல் நடக்கும்போது நாம் தட்டையான ஒரு தளத்தின் இறுதிவரை நடந்து சென்றபின் 90 டிகிரி கோணத்தில் உள்ள அடுத்த பக்கத்திற்கு தாவ முடியுமோ?

புரிதல் பற்றிய சிந்தனைச்சோதனைகள்

ஒரு இருட்டு குகை. அதனுள் ஒரு வெற்று சுவற்றை பார்த்துக்கொண்டு நிற்கும்படி விலங்கிடப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல கைதிகள். பிறந்ததில் இருந்து அங்கேயே அடைந்து கிடக்கும் அவர்கள் வெளி உலகையே அறியாதவர்கள். இந்தக்கைதிகள் இருக்கும் இடத்திற்குப்பின்னால் எரிந்துகொண்டு இருக்கிறது ஒரு தீப்பந்தம். அந்த தீப்பந்தத்துக்கும் கைதிகளுக்கும் இடையே ஒரு குட்டிச்சுவர். அதன்பின் பொம்மலாட்டக்காரர்கள் போல் பலர் அட்டையால் செய்யப்பட்ட மனித, விலங்கு உருவங்களை குச்சிகளில் ஒட்டி தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு தலைக்குமேல் உயர்த்தியவாறு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.

சிந்தனைச்சோதனைகள்

வெகு காலத்துக்கு முன்பே கேள்விகள் வழியே பிரச்சினைகளை அலசும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் பழசும் புதுசுமாய் இவற்றில் பல வகைகள் உண்டு. அறிவியல், உளவியல், பொருளாதாரம், அரசியல், மதங்கள், நீதி, தர்மம், நெறிமுறை (Ethics), தத்துவம் என்று பல துறைகளையும், மனித சமூகத்தின் வாழ்முறையின் பல பக்கங்களையும் தொடும் சிந்தனைச்சோதனைகளை இந்த தொடரில் கொஞ்சம் அலசுவோம். நீங்கள் நிச்சயம் சில சோதனைகளைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தொடப்போகும் அத்தனை சோதனைகளையும் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்காதவரை, சில நாட்களாவது உங்கள் தூக்கத்தை கெடுத்த புண்ணியத்தை நான் தேடிக்கொள்வேன்.

அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை – 2

ரம்ஸ்ப்ரிங்க (Rumspringa) என்பது ஒரு ஜெர்மன் சொல். அதை தோராயமாக ஊர்சுற்றல் என்று மொழிபெயர்க்கலாம். ஒரு பதினைந்து, பதினாறு வயதை எட்டிப்பிடித்த ஆமிஷ் இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த பருவத்தை அடைகிறார்கள். அடுத்த 2,3 வருடங்களில் அவர்கள் எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை ஆமிஷ் சமூகம் கண்டுகொள்ளுவதில்லை. எனவே இந்த கால கட்டத்தில் விதம் விதமான சிகை அலங்காரமோ, வகை வகையான துணிகள் அணிவதோ , சினிமா பார்ப்பதோ , தினசரி /வாராந்திர குடும்ப பிரார்த்தனைகளில் பங்குகொள்ளாமல் ஊர் சுற்றுவதோ, பயணம் செய்வதோ ஆமிஷ் அல்லாத (English) நண்பர்களுடன் நாட்கணக்கில் சுற்றுவதோ, இங்கிலீஷ் ஆண்/பெண்ணை டேட் செய்வதோ எல்லாம் அனுமதிக்கப்படுகிறது.

அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை

அமெரிக்கா என்றால் பொதுவாக எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நியூயார்க்கும் லாஸ் ஏஞ்செலேசும்தான். அது போன்ற நகரங்களில் இருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களும், மிகவும் விலை உயர்ந்த கார்களும், மால்களும் விமானங்களும் உலக பிரசித்தமானவை. அந்த இரு கரைகளுக்கு நடுவே பிரசித்தமில்லாத ஆனால் ஸ்வாரஸ்யமான பல விஷயங்கள் அமெரிக்காவில் உண்டு. அவற்றில் ஒன்று இந்தகட்டுரையில் நாம் சந்திக்கும் ஆமிஷ் குடியிருப்புகளும் அதில் வாழும் மக்களும்…

வாழ்வியல் ரகசியங்கள்

“நாம் வாழும் இந்த உலகத்தில் நல்ல கருத்துகளைக் கூறும் தலைவர்களுக்கும் அணிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஒப்பற்ற ஒரே லட்சியத்தை நோக்கி, இணையாத இரு கோடுகளாக இயக்கங்கள் செல்வதைக் கவனிக்க முடிகிறது. ஒன்றாக இயங்கத் தயக்கம் காட்டுவதும் புரிகிறது. ஒருங்கிணைந்து செயலாற்றி ஒரு வலைப்பின்னலை உருவாக்கி சாதனை செய்வது அவசியம். இயற்கை விவசாயத்தில் மாறுபட்ட சிந்தனையுள்ளவர்களை ஒருங்கிணைத்துச் செல்ல இந்த நூல் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நூல் காலத்தால் அழியாத ஒரு கருத்துப் பெட்டகமாகவும் விளங்குகிறது. இயற்கை விவசாயத்திற்குப் பாடுபட்டு வரும் முன்னோடிகளுக்கும் ஒப்புதலை இந்த நூல் வழங்குவதும் ஒரு சிறப்பு. “

குறுகத் தரி

இன்று பல நானோ பொருட்கள் ஆய்வுப் பட்டறையிலிருந்து தெருவுக்கு வந்துவிட்டன. வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏ ஸி போன்ற நுகர்வு பொருட்களில் நானோ சில்வர் தொழில்நுட்பம் பயன்படுகிறது. கொலுசு வடிவில் வெள்ளி பெண்களின் பிரியமான தோழன். நானோ வடிவில் நல்ல கிருமி நாசினி. வாஷிங் மெஷினில் உள்ள சில்வர் அயனிகள் அழுக்குத் துணிகளில் உள்ள பாக்டீரியாவை கொல்கின்றன. இந்த அயனிகள் துணிகளின் மீது ஒரு மெல்லிய படலமாகப் படிந்து ஒரு மாத காலம் வரை பாக்டீரியாவுடன் தொடர்ந்து போராடி ஒரு பாதுகாப்பு வளையத்தை அளிக்கின்றன. .ஃபிரிட்ஜ் மற்றும் ஏ ஸி யில் உள்ள சில்வர் நானோ கோட்டிங் பாக்டீரியாவைக் கட்டுபடுத்துகின்றன. அழகுசாதனப் பொருட்களில் உள்ள நானோதுகள்கள் ரசாயனங்களை பொதி போல சுமந்து சென்று சருமத்தின் அடியில் உள்ள செல்களுக்கு போஷாக்கை அளிக்கின்றன…

ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை

கடைசியாக நீங்கள் வானில் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் உள்ளவரா? என்றாவது ராத்திரி மேலே பார்க்கும் போது அதிசயமாக ஏதாவது பார்த்தால் கடவுள் வருகிறார் என்று நினைக்க வேண்டாம். அது கழிவாக கூட இருக்கலாம். 2009-ல் வானில் ஒளித்தோற்ற அதிசயம் ஒன்றைப் பார்த்தார்கள். பார்த்தவர்களுக்குத் தெரியாது அது மேலே சென்ற விஞ்ஞானிகளின் சிறு(நீர்த்)துளிகள் என்று!