காவியக் கவிஞர் – 2

தகுதி வாய்ந்தவன் என்ற காரணத்தினால் அரசர் என்னை உன் தோழனாக நியமித்தார்; அவர் என்னிடம் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக உன்னிடம் பேச விழைகிறேன். நட்பின் பண்பு மூவகைப்பட்டது. நண்பனை இலாபமற்ற செயல்களில் ஈடுபடவிடாமல் தடுப்பது, இலாபம் தரும் செயல்களில் அவன் ஈடுபட தூண்டுகோலாக இருப்பது மற்றும் கஷ்டங்களின் போது கூடவே இருப்பது. நண்பனாக ஏற்றுக் கொண்ட பிறகு, என் கடமைகளில் இருந்து விலகி, உன் நலன்களைப் பேணாதவனாக இருப்பேனாயின், நட்பு விதிகளை வழுவினவனாக ஆவேன். உன் நண்பனாக இருக்கும் காரணத்தால் நான் இதை சொல்வது அவசியமாகிறது; இப்பெண்களுக்கு உரிய கவனத்தை நீ தராமல் இருப்பது, இளைஞனாகவும் சுந்தரனாகவும் இருக்கும் உனக்கு பெருமை தரக் கூடியது அல்ல.

காவியக் கவிஞர்

அசுவகோசரின் மேதைமை பல துறைகளில் ஒளிர்ந்திருக்கிறது. பௌத்தக் கருத்துகளில் அடிப்படையில் அவர் பல நாடகங்களை புனைந்திருக்கிறார். ஷாரிபுத்ர ப்ரகரணம் என்கிற ஒரு நாடகத்தை தவிர வேறு எந்த நாடகமும் நமக்கு கிடைக்கவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய மகாகவி காளிதாசரின் காலம் வரை சமஸ்கிருத நாடக இலக்கியத்தின் தந்தையாக அசுவகோசர் போற்றப்பட்டார்.

முடிவிலாச் சுழல்

“பிரதீத்ய சமுத்பாதம்” பௌத்தத்தின் முக்கியமான பிரத்யேகமான தத்துவம். பாலி நெறிமுறையின் எண்ணற்ற பத்திகளில் புத்தர் இத்தத்துவத்தை இயற்கையின் நியதி என்றும் அடிப்படை உண்மை என்றும் விவரித்திருக்கிறார். ஞானமடைந்த மனிதர்களின் பிறப்பைச் சாராத உண்மையிதுவென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

மிலிந்தனின் கேள்விகள் – 2

“ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வைக்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா?”

மிலிந்தனின் கேள்விகள்

பாலி மொழியில் புதைந்திருந்த பல பொக்கிஷங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நவீன உலகிற்கு ஈந்த டி.ரீஸ் டேவிட்ஸ் “மிலிந்த பன்ஹா” பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் : “இந்திய உரைநடையின் தலைசிறந்த படைப்பு “மிலிந்த பன்ஹா” என்று நான் நினைக்கிறேன். இலக்கிய கண்ணோட்டத்தில், உலகின் எந்த நாட்டிலும் படைக்கப்பட்ட இவ்வகைக்கான புத்தகங்களில் ஆகச்சிறந்த புத்தகம் இது”