கலா ஷஹானியைப் போன்று மானிட மதிப்பீடுகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டோருக்கு நாட்டிற்காக, அதன் விடுதலைக்காகப் போராடியதும் தான் வரித்துக் கொண் ட மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதும் அரசியல் செயல்பாடல்ல; மாறாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து அவர்களின் ஆளுமையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிய ஓர் ஆன்மீகத் தேடல். அவர்கள் சுய லாபத்தையோ அங்கீகாரத்தையோ கருதாமல் தேசத்திற்குத் தொண்டாற்றுவதையு ம் சில மதிப்பீடுகளுக்காக வாழ்வதையுமே இலட்சியமாகக் கொண்டவர்கள்.
Category: புத்தக முன்னுரை
அனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை
நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தார் இந்திய வாசகர்களுக்காக, இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடவும் மற்ற இந்திய மொழிகளில் அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்கவும் “ஆதான்-பிரதான்” என்ற பெயரில் ஒரு திட்டம் வகுத்தனர். அந்தத் திட்டத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்டது இந்தச் சிறுகதைத் தொகுப்பு. “அனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை”
நீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை
மதவெறியாலும் சுயநலத்தாலும் இயக்கப்பட்டு இந்த விரோதம் பகிரங்க யுத்தமாக ஆக நேரமாகவில்லை. ‘முஸ்லீம் குடியானவர்கள் ஆனந்தமயீ கோயிலுக்கடுத்த நிலத்தில் தொழுகை நடத்தப் போகிறார்களாம்.’ அது மசூதியல்ல. அது ஒரு பண்டைய கால இடிந்த கோட்டை – அது ஈசாகானுடையதாக இருக்கலாம் அல்லது சாந்தராயோ கேதார்ராயோ கட்டியதாகவுமிருக்கலாம். அந்த இடததில் தொழுகை நடத்தும்படி முஸ்லீம்கள் தூண்டப் படுகிறார்கள்.
…. நாவல் முன்னேற முன்னேற இன்னும் பல அழகிய காட்சிகள் தம் கண் முன்னே விரிகின்றன. தர்முஜ் வயல், பாக்குப்பழம், சீதலக்ஷா நதியின் நீர், அந்த நீருடன் உவமிக்கத் தக்க வானத்தின் பிரவாகம், பறவைகளின் கூட்டிசை, மிருகங்கள்… அது ஒரு தனி உலகம்.
தன் வெளிப்பாடு – முன்னுரை
நாவலின் கருப்பொருள் நமக்கு நாலா பக்கத்திலும் இருக்கிறது என்பதை முதன் முதலில் உணர்த்தியது. … அவருடைய உறுதியற்ற, தயக்கம் நிறைந்த கண்ணியமான ஆண்பாத்திரங்களுக்கு மாறாக அவர் படைத்த, உயிர்த் துடிப்பு மிக்க பெண்பாத்திரங்கள் விதிக்கு சவால் விடுபவர்களாக இருக்கிறார்கள் … இந்தியத் தன்மை என்பது இந்துத் தன்மை அல்லது பிராமணியம் அல்ல; அது மனிதத்துவத்தின் சுயநிறைவு பெற்ற இந்தியப் பகுதி.
நூல் அறிமுகங்கள்
டேனியல் டென்னெட். மதிக்கக் கூடிய சிந்தனையாளர். அவர் இந்த மதிப்புரையில் கவனமாக கருத்தியல் சிதைப்புகளையும், திரிப்புகளையும் தாண்டி மானுடவியல், வரலாற்றியல், உளவியல், மதவியல், சமூகவியல் போன்றன இயங்கக் கற்க வேண்டும் என்று சுட்டுகிறார். அதற்குப் புள்ளியியல் ஒன்றே வழி என்று நினைப்பதும் மடமை என்றும் சுட்டுகிறார். ஆனால் புள்ளியியலின் உதவி தேவை, அதன் எல்லைகளும், அதன் வழிமுறைகளில் உள்ள புதைகுழிகளையும் பற்றிய தீர்க்கமான கவனம் தேவை என்று சொல்கிறார்.
20xx- கதைகள்: முன்னுரை
நிலக்கரி சக்தியில் ஐரோப்பியர்கள் வராது இருந்தால், நிலையான கிராம வாழ்க்கையும் அரசாட்சிகளின் ஏற்ற இறக்கங்களும் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்திருக்கும். இது ஒரு ஆதரிச சமுதாயமா? இல்லை. இரண்டாயிரம் காலரி உணவு எல்லாருக்கும் நிச்சயம் இல்லை. அவ்வப்போது ‘ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார்தட்டிய பஞ்சகால’ங்கள். பயிர்விளைவிப்பதின் பெரும்பளுவைப் பள்ளர்கள் சுமந்தார்கள். எழுத்தறிவு மக்களில் ஐந்துசதம் பேருக்கு இருந்தால் அதிகம். அவர்களில் உயர்குடியைச்சேர்ந்த ஒருசில பெண்கள். விதிக்கப்பட்ட வாழ்க்கைப்பாதையில் இருந்து விடுபடுதல் அரிதான செயல். ஆனால், இன்றைய மத்தியக்கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பகுதியின் பல நாடுகளில் மக்கள் படும் அவதியுடன் ஒப்பிட்டால் அந்தத்தமிழகம் ஒரு சொர்க்கம். முக்கிய காரணம், வறுமையிலும் மனிதாபிமானம் அழிந்துவிடாமல் பாதுகாத்த கொள்கைவீரர்கள்.
பாமாவின் கருக்கு
பனங்கருக்கால் அறுபடுவது போல் வாழ்க்கை அமைந்துவிடும்போது அது வாழ்க்கையின் குறியீடாகிவிடுவது இயல்புதான். ‘கருக்கு’ புத்தகத்தைப் படிப்பதற்கு முன் கருக்கு என்ற சொல் புதுக் கருக்கு என்று நாம் கூறும் பொலிவைக் குறிக்கிறது அல்லது விடிவதற்கு முன் உள்ள கருக்கலைக் குறிக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன். பனங்கருக்கைத் தொட்டிருந்தால் தானே அது இரு பக்கமும் ரம்பம் போல் அறுக்கும் கத்தி போன்றது என்று தெரியும்? பிறகு ஒரு முறை கிராமம் ஒன்றிற்குப் போனபோது பனங்கருக்கைத் தொட்டுப் பார்த்தேன். சட்டென்று விரலைக் கீறி விட்டது
சந்தையில் புத்தகங்கள்
புத்தகங்கள் நிறைந்திருக்கும் கடைகளூடே நடப்பது மனத்துக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. பல புத்தகங்களை வாங்கவும் முடிந்தது. அதைப் படிக்கும் உற்சாகமும் இன்னும் இருக்கிறது. செவிக்குணவாக ”என் தமிழ்த் தாயே” என்ற கூச்சலும் விடாமல் கேட்டது வெளி அரங்கிலிருந்து….“எங்க வீட்டுல எங்க பாட்டியும் அம்மாவும் உங்களை விரும்பிப் படிப்பாங்க. நீங்க ஆப்ரிக்காவிலிருந்து எழுதின கதைகள் பிரமாதம்னு சொன்னாங்க” என்று கனிவுடனும் “உங்க ’சமையலறை மூலையில்’ கதை அற்புதம். நிறைய எழுதுங்க. இப்போ எழுதறீங்கதானே?” என்று அக்கறையுடனும் “உங்க ‘கொலை செய்துவிட்டாள் அம்மா’ என்னை ரொம்ப பாதிச்சுதுங்க” என்று நெகிழ்ச்சியுடனும் சொல்லும் பல வாசகர்களை ஒருசேரப் புத்தகச் சந்தைகளில்தான் ஒவ்வோர் ஆண்டும் பார்க்க முடிகிறது.
கனவுகளும் பழங்கதைகளும் மெல்ல மறையும் காலம்
ஐயங்களும் சோர்வுகளும் இல்லாமல் இல்லை பொதுவுடமைக் கட்சியின் வேலையில். அவளுக்கிருக்கும் பயங்களையும் பாரபட்சங்களையும் மீறி வரவேண்டியிருக்கிறது. சிறு வயதில் சிங்கப்பூரில் குண்டு விழுந்தபோது தன்னைச் சிங்கப்பூரில் இருந்த வீராங்கனையாக, எல்லோருக்கும் உதவுபவளாக, தன் தலையில் குண்டு விழுவது குறித்து அஞ்சாத ஒருத்தியாக தன்னைப் பாவித்துக்கொண்டவள் அவள். “அச்சமில்லை, யச்சமில்லை அச்சமென்ப தில்லையே; உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று பரதியார் பாடலைப் பாடியவாறு வீர சாகசம் புரிவதாகக் கற்பனை செய்தவள். ஆனால் ஓர் இளம் வயதுப்பெண்ணாக இருக்கும்போது பலமுறை அவளுக்கு அச்சம் வருகிறது
வெங்கட் சாமிநாதனின் கருத்துலகம்
இக்காலங்களில் இவர் நம் வாழ்வின் அநேக முகங்களை – இலக்கியம், மரபு, புலமை, சிந்தனை, தத்துவம், சிற்பம், சங்கீதம், ஓவியம் ஆகிய அனைத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மேம்போக்கான மாறுதல்களுக்கு முன் வைத்த எளிய திருத்தல் யோசனைகள் அல்ல இவை. நம் வாழ்வின் அடித்தளம் பற்றிய நம் எண்ணங்கள் இவரால் புரட்டித் தள்ளப்பட்டிருக்கின்றன. எவற்றைச் செல்வங்கள் என மதித்து, உலகில் எங்கும் காணக்கிடைக்காத ஒரு கலாச்சார வாழ்வின் அவகாசிகள் நாம் என புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருந்தோமோ அவற்றைப் போலிக் கனவென, வாதங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்து தாட்சண்யமின்றித் தாக்கியவர் இவர். சரி, இக்கருத்துகளை நம் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொண்டது? கனவுகள், மாய்மாலங்கள், போலி லட்சியங்கள், போலி மதிப்பீடுகள், பழமைக் கிரீடங்கள், தனி இனம் என்ற மார்தட்டல்கள் எல்லாம் தாக்கப்பட்டபோது, தமிழின் பல்வேறு துறையைச் சார்ந்த காவல் நாயகர்கள்…
அம்மாவின் தேன்குழல் – புத்தக முன்னுரை
பண்பாடு என்பது ஒரு வெங்காயம்; பனிப்பாறை என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் முதன்முதலாக பெல்ஜியத்திற்கு 2005-ஆம் ஆண்டு வந்தபோது, என் முன்னே ஒரு பெரிய வெங்காயத்தைக் கண்டேன். பண்பாட்டு வேறுபாடுகளை பல்லடுக்களாகக் கொண்ட ஒரு வெங்காயம். மேற்புற அடுக்காக இருந்தது இவர்களின் வெள்ளைத்தோல். தோலை உரித்து எடுத்தேன். அடுத்த அடுக்கில் மொழி தெரிந்தது. அதையும் உரித்து எடுத்தேன். இப்படி ஒவ்வொரு அடுக்கில் ஒவ்வொரு வேறுபாடு என்று ஒன்றடுத்து ஒன்றாக வந்து கொண்டேயிருந்தது. நான் விடாமல் உரித்துக் கொண்டே சென்றேன். இறுதியில் ஒன்றுமில்லாமல் போனது. பண்பாடு என்பது ஒரு வெங்காயம் என்பது அப்போதுதான் புரிந்தது.
நன்றியறிவிப்புகள் – பீடர் வாட்ஸ்
இது நாள்பட்ட விவகாரம். மூன்று பதிப்பாசிரியர்கள், மூன்று குடும்பத்து சாவுகள், சதையை அரித்துச் சாப்பிடும் வியாதியோடு கிட்டத்தட்ட சாவுக்கு அருகில் வந்த போராட்டம். குற்றவாளிதான் என ஒரு நீதிமன்றத் தீர்ப்பு. ஒரு திருமணம்.
இப்போது இது.
புனைவாற்றல் மிக்க வாழ்வியல் கட்டுரைகள்
`நான்` என்கிற அடையாளத்துடன் அவரது கட்டுரைகள் வெளிவந்தாலும் தன்னைப் பற்றிய பிரதாபங்கள் எவற்றையும் அவர் அதில் விட்டுச் செல்வதில்லை. தன்னைப்பற்றி அவர் எங்கேயும் பெருமிதம் கொள்வதில்லை. அரசியல் நிலைப்பாடு என்று எதையும் அவர் எடுப்பதில்லை. ஆனால் மனித செயல்பாடுகளின் நாகரிகம் குறித்த ஓர் உள்ளார்ந்த அரசியல் நோக்கு அவரது எழுத்துகளில் ஆங்காங்கே வெளிப்பட்டுக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அதிர்வின்றி எதையும் நிதானமாகப் பார்க்கும் அவரது எழுத்துகள் எல்லாத் தரப்பு வாசகர்களையும் கவர்கிறது. இன்றும்கூட ஒரு கட்டுரைத்தொகுப்பிலோ பண்டி
பாலையும், வாழையும் – முகப்புரை
சாமிநாதன் ஒரு ‘புரொவகேடிவ்’ விமர்சகர். ஆரம்பத்தில் சொன்னேனே, இந்தக் கட்டுரைகளில் பாலையின் உஷ்ணம் இருக்கிறது. நம்மைச் சுடவும் செய்கிறது. கசப்பான உண்மைகளை நாம் விழுங்க வேண்டி இருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் இரண்டிலும் மற்ற கலைத்துறைகளிலும் ஆழ்ந்த அக்கறை எடுத்து அவற்றின் போக்கு, நிலை, சாதனை பற்றி சுய விமர்சனம் செய்து, உரிமையுடன் குந்தகமானவற்றை கடுமையாகச் சாடும் சாமிநாதனது பேனா வரிகள். ‘புலிக்கு தன் காடு பிறகாடு வித்யாசம் கிடையாது’ என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் கூர்மையிலே யார் யாருக்கோ, எங்கெங்கெல்லாமோ சுடக்கூடும்.
விழி வழி மொழி, மொழி வழி விழி
திரு.அரவக்கோன் எழுதி சொல்வனத்தில் வெளியாகிய ‘20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்’ என்ற ஓவியத்தொடர் புத்தக வடிவம் பெறுகிறது. சதுரம் பதிப்பகம் வெளியீடாக விரைவில் வெளியாகவிருக்கும் இப்புத்தகத்துக்கு க்ருஷாங்கினி எழுதியிருக்கும் முன்னுரையை இங்கே வழங்குகிறோம். திரு.அரவக்கோன் அவர்களுக்கு சொல்வனத்தின் வாழ்த்துகள்.