நேர்மைக்கான போர்: மணல் கொள்ளை

தண்ணீருக்குப் பிறகு மிக அதிகமாக நுகரப்படும் இயற்கை வளமாக மணல் இருக்கிறது. எண்ணெய் கூட தோண்டத் தோண்டக் கிடைக்கிறது. ஆனால், பூமியில் உள்ள மணல் வளம் திட்டமான அளவிலேயே இருக்கிறது. கட்டிடம் கட்ட இன்றியமையாதப் “நேர்மைக்கான போர்: மணல் கொள்ளை”

லத்தின் அமெரிக்காவின் பாதை

லத்தின் அமெரிக்கா என்றழைக்கப்படும் தென் அமெரிக்கக் கண்டம் கடந்த நூற்றாண்டில் பெரு நேரமும் அமெரிக்கா, யூரொப்பிய நாடுகளின் கைப்பாவையாகச் செயல்பட்ட சர்வாதிகாரிகள், இனவெறியர்கள், கிருஸ்தவத் தீவிர வாதிகள், தவிர மோசமான ராணுவம் ஆகியவற்றிடம் சிக்கித் “லத்தின் அமெரிக்காவின் பாதை”

இயற்கை என்னும் கலை

புகைப்படக் கலைஞர் நீல்ஸ் (Nils-Udo) குளத்தில் வெகு பொறுமையாக போதிய இடைவெளி விட்டு இலைகளைத் தூவுகிறார். அதன் ஓட்டத்தை படம் எடுக்கிறார். வேறு இடத்தில் கிளைகள், பழங்கள், காய்கள் எனக் கொத்து கொத்தாக இருப்பதை “இயற்கை என்னும் கலை”

தற்கால இராமாயணம்

இராமாயணம் எங்கெல்லாம் நடந்ததோ அங்கெல்லாம் வசந்தா யோகநாதன் பயணிக்கிறார். அந்தப் பயணத்தின் வழியாக இந்தியாவின் ஆன்மாவையும் ராமாயணக் கதையையும் ஒருங்கிணைக்கும் காட்சிகளைப் பதிவு செய்து கோர்க்கிறார். எந்தப் புகைப்படத்திற்கும் நடிகர்களோ, செட்டப்புகளோ செய்வதில்லை. தற்கால “தற்கால இராமாயணம்”

பனிச் சிலை விழாக் கொண்டாட்டம்

குளிரும் பனியும் அதிகமான இடங்களில் என்ன செய்யலாம்? பனிச்சறுக்கு விளையாடலாம். சீனாவில் பனிகளால் ஆன சிலைகளைச் செதுக்குகிறார்கள். டிசம்பரில் துவங்கி மூன்று மாதங்களுக்கு எல்லோரையும் வரவேற்கிறார்கள். வண்ணமயமாக விளக்குகளையும் வாணவேடிக்கைகளில் வெடிகளையும் கொளுத்தி வருகையாளர்களைக் “பனிச் சிலை விழாக் கொண்டாட்டம்”

காசியில் பாரதி நினைவாக…. ஒரு கோரிக்கை, ஒரு கடமை.

எனக்கு கடந்த வாரம் மூன்றாவது முறையாக காசி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்கனவே முதல் இரு முறைகளிலும் மகாகவி பாரதி காசியில் வாழ்ந்த இடத்தைப் பார்த்து வந்த எனக்கு இம்முறை பாரதியின் அத்தை குப்பம்மாள் (எ )ருக்மணி அம்மாள் அவர்களின் மகன் திரு .கே வி கிருஷ்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது…

தேடல் முகப்பு

இணையத்தில் தேடுதல் என்றால் கூகுள்.காம் என்னும் வழக்கம் மலையேறி, பொதுவாகத் தேடுதல் என்பதற்கு இன்னொரு பெயர் ‘கூகுள்’ என்னும் காலகட்டத்தில் வாழ்கிறோம். அவர்களின் போட்டியாளர் மைக்ரோசாஃப்ட் வழங்கும் ‘பிங்’. அவர்களின் முகப்புப் பக்கத்தில் ஒவ்வொரு “தேடல் முகப்பு”

மார்கழி கணங்கள்

மார்கழியின் கலைக் கொண்டாட்டங்களை, உலக கலை ரசிகர்களுக்காக ஒரே இடத்தில் தொகுத்து அளிக்கிறது, margazhi.org தளம். இத்தளத்தில் சார்பாக நடத்தபடும் ‘மார்கழி மனநிலைகள்’ புகைப்பட போட்டியின் முதற்கட்ட வெற்றியாளர்களின் படங்களின் தொகுப்பு இதோ.

2014ன் 14 புத்தகங்கள்

சென்ற ஆண்டின் சிறந்த தத்துவம் சார்ந்த புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறார்கள். விவேகமும், படைப்பூக்கமும் கொண்டு அர்த்தமுள்ளதாக வாழ்க்கையை வாழ அழைக்கும் உளவியல் நூல்களை அறிமுகம் செய்கிறார்கள்.

'அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா

திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த “அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கி “'அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா”

பெருமைப்பட பத்து பெண் அறிவியலாளர்கள்

அக்டோபர் 14ம் தேதியை கணினிக்கும் கணினி மொழிக்கும் வித்திட்ட ஆடா லவ்லேஸ் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அந்த தினத்தை முன்னிட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட இந்தியப் பெண் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கான விக்கிப்பிடியா பக்கத்தில் குறிப்புகளை சேர்த்திருக்கிறார்கள். அவற்றில் “பெருமைப்பட பத்து பெண் அறிவியலாளர்கள்”

மேற்கத்திய பெண் ஓவியர்கள்

வார்த்தைகளால் சொல்லி விட முடியுமென்றால், வரைவதற்கான அவசியமே இருக்காதே! – எட்வர்டு ஹாப்பர் [1882-1967] இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண் கலைஞர்கள் என்று தனித்து அறிமுகம் செய்ய வேண்டுமா? தற்கால விஷயங்களை மகளிர் எவ்வாறு “மேற்கத்திய பெண் ஓவியர்கள்”

ஹாங்காங்: வருங்காலத்திற்கான போராட்டம்

2017ல் ஹாங் காங் தேர்தல் வரப்போகிறது. தங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான் வாக்குச்சீட்டில் இடம்பெற வேண்டும் என்று சீனா அறிவித்தது. தங்களுக்கான தலைவர்களை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை கோரும் போராட்டத்தை ஹாங்காங்வாசிகளும் மாணவர்களும் நடத்தி வருகிறார்கள். தொடர்புள்ள “ஹாங்காங்: வருங்காலத்திற்கான போராட்டம்”

ஜெனீவா கார் கண்காட்சி

கீழே பார்க்கக் கிடைப்பது கார் தான். நம்புங்கள். இதை நீங்கள் 3டி அச்சுப்பொறி கொண்டே தயாரிக்கலாம். சின்னச் சின்னப் பொருட்களாக முப்பரிமாணத்தில் அச்சிட்டு, ஒன்று சேர்ப்பது 2014 காலம்; மொத்தமாக முப்பரிமாண அச்செடுத்து வடிவமைப்பது “ஜெனீவா கார் கண்காட்சி”

சாகித்திய அகாதமியுடன் மொழிபெயர்ப்பாளராக பதிந்து கொள்ள

சாகித்திய அகாதமி, தேசிய மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்துகொண்டிருக்கிறது. இந்திய மொழிகளிலிருந்து பிற இந்திய/வேறு மொழிகளுக்கோ இல்லை பிற இந்திய/வேறு மொழிகளிலிருந்து இந்திய மொழிகளுக்கோ மொழிபெயர்ப்பவர்கள், தங்களை சாகித்திய அகாதமியுடன் பதிவு செய்துகொள்ளலாம். “சாகித்திய அகாதமியுடன் மொழிபெயர்ப்பாளராக பதிந்து கொள்ள”

சுதந்திர தினம் – 1947

இவை 1947ல் எடுத்த புகைப்படங்கள். மவுன்ட்பேட்டனும் இராஜாஜியும் இராஜேந்திர பிரசாத்தும் தென்படுகிறார்கள். மாபெரும் மைதானத்தில் தொலைந்த குழந்தைகளை தன்னுடைய சாரட்டில் ஏற்றிக் கொன்டாராம் நேரு. சின்னஞ்சிறுசுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்த பெற்றோர்களும், அவர்களை நேருவின் “சுதந்திர தினம் – 1947”

வண்ணம் பெற்ற வரலாறு

சார்லி சாப்ளின், 27 வயதில்! வருடம் : 1916 கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மனிதர்களையும் நிகழ்வுகளையும் சரித்திரத்தின் மாற்றமற்ற சந்துகளில் உறைய வைத்துவிடுகின்றன. அவற்றிற்கு கொஞ்சம் வண்ணம் சேர்க்கும்போது, அவற்றிலிருக்கும் மர்மங்கள் மறைகின்றன. ஆனால், உயிரும் “வண்ணம் பெற்ற வரலாறு”

கொல்லைப்புறத் தோட்டங்கள்

சுபேந்து ஷர்மா பொறியியலாளராக டொயோட்டாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது உங்கள் வீட்டின் பின்புறத்தில் காடுகளை வடிவமைத்து உருவாக்கித் தருகிறார். அதிகம் பராமரிப்பு தேவைப்படாத சுயமாக தழைத்தோங்கும் பச்சைமயமாக உங்களின் கொல்லைப்புறம் எப்படி மாறும் “கொல்லைப்புறத் தோட்டங்கள்”

உலகம் சுற்றும் கால்பந்து

உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என்பதைப் பார்க்க எல்லோரும் பிரேசில் சென்றால், பிரேசில் சென்றோரின் ஒளிப்படங்கள் கால்பந்தை மேலும் சுவாரசியமாக்குகின்றன. மியான்மரில் கால்பந்து விளையாடும் சிறுவர்கள் முதல் பாலஸ்தீனப் பெண்கள் அணி வரை பல்வேறு “உலகம் சுற்றும் கால்பந்து”

மாயா ஏஞ்சலோ: அஞ்சலி

கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மக்களின்  குடிஉரிமைப் போராளி எனப் பன்முகம் கொண்ட மாயா ஏஞ்செலோ தனது 86வது வயதில் மே மாதம் 29, 2014 அன்று காலமானார். தற்கால ஆஃப்ரிக்க அமெரிக்க “மாயா ஏஞ்சலோ: அஞ்சலி”

2014ன் இணையத்துக் குரல்கள்

ப்ளாக் ஹெர் (blogher.com) சார்பாக 2014ன் 110 பதிவர்களை 2014ன் இணையத்துக் குரல்களாகக் கொண்டாடுகிறார்கள். புகைப்படங்களுக்கு மட்டும் ஐந்து பிரிவுகள். உணவுகளையும் கலைப்பொருட்களையும் படம் பிடிப்பவர் ஒரு பிரிவு என்றால் செல்ஃபீ எடுப்பவர்களுக்குக் கூட “2014ன் இணையத்துக் குரல்கள்”

ஆலிஸின் அற்புத உலகம்

லூயிஸ் கரோலினால் எழுதப்பட்ட ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் (Alice in Wonderland) புனையப்பட்ட அற்புத உலகை ஓவியமாக்கி இருக்கிறார்கள். முயல் குழிக்குள் விழுந்து அங்கொரு புதுமையான உலகத்தைக் காணும் ஆலிஸ் சிறுமியின் கதையை மனமயக்கும் “ஆலிஸின் அற்புத உலகம்”

ஆக்னெஸ் மார்டின்: மினிமலிஸம்

சமீபத்தில் இவருக்கான கூகுள் டூடுல் மூலமாகத்தான் பலர் அறிந்திருப்போம். ஆக்னெஸ் மார்டினின் இந்த நேர்காணலில், இவர் ஓவியங்களை உருவாக்குவதைப் பற்றிச் சொல்வதைக் கவிதைகளுடனும் பொருத்தி பார்க்கலாம்.

ஆன்ட்ரி தர்கொஸ்கி: திரைப்பட சுவரொட்டிகள்

தன்னுடைய படங்களில் மட்டுமல்லாமல், புகைப்படங்களையும் போஸ்டர்களையும் கூட ஆன்ட்ரி தர்கொஸ்கி எவ்வாறு கலைநயத்துடன் மிளிர வைக்கிறார் என்பதைத் தொகுத்திருக்கிறார்கள்:

டார்வின் தினம்

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகமெங்கும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது. டார்வினை அறிமுகம் செய்யும் ஒரு புகைப்பட தொகுப்பு இங்கே. அறிவியலை காதலிப்போம். அன்று காதலர் தினமும் கூட.

நேரத்தை வலைவீசுதல்

மீனவர்களின் வாழ்க்கையை குவெர்னிகா இதழுக்காக படம் பிடித்திருக்கிறார் கேண்டஸ். பஞ்சு மிட்டாய் விற்பவனில் ஆரம்பித்து வீட்டில் தொங்கும் லுங்கி வரை நிழற்பட வேட்டை ஆடியிருக்கிறார்.

உலகம் கொண்டாடும் புத்தாண்டு

புத்தாண்டை அமெரிக்காவில் இருந்து அம்ரிட்சர் தங்கக்கோவில் வரை எப்படி வரவேற்றார்கள் என்னும் புகைப்படத் தொகுப்பு:

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைக் குறிப்புகளை அரிய புகைப்படங்களையும் அவரைக் குறித்த ஒலிப்பதிவுகளையும் கொண்டு இங்கே தொகுத்திருக்கிறார்கள்.

2013: புரட்டிப் போடும் 10 புதிய நுட்பங்கள்

தனிமங்களைக் கலைத்துப் போட்டு புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது பழைய வேதியியல் நுட்பம். கணினியைக் கொண்டு பொருத்தமான தனிமங்களை மாற்றி மாற்றிப் போட்டு பொருத்தமான சேர்மங்களைக் கண்டுபிடிக்க வைப்பது தற்கால வேதியியலின் நுட்பம். எளிமையாகப் பொருந்தக் “2013: புரட்டிப் போடும் 10 புதிய நுட்பங்கள்”

பெண்களுக்கு அநியாயமாய் அநியாயம் செய்யும் நாடுகளின் பட்டியல்

பெண்களுக்கெதிராய் செயல்படும் நாடுகள் எவை? இருபாலாருக்கும் கல்வி பயில சம உரிமை கிடைக்கிறதா என்பதில் துவங்கி அரசியலில் எவ்வளவு பேர் ஈடுபடுகிறார்கள் என்பது வரை ஆராய்ந்து இந்தப் பட்டியலை தயாரித்திருக்கிறார்கள். அமெரிக்காவிற்கு 23ஆம் இடம் “பெண்களுக்கு அநியாயமாய் அநியாயம் செய்யும் நாடுகளின் பட்டியல்”

மூவகைப் போட்டி

உங்களுக்கு நீஞ்சத் தெரியுமா? சைக்கிள் விடுவீர்களா? ஓடவும் வருமா? அப்படியானால் நீங்களும் டிரையாத்லான் போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த மாதம் ஹவாய் மாநிலத்தில் நடந்த வருடாந்திர இரும்பு மனிதன் உலகக் கோப்பையில் இருந்து சில “மூவகைப் போட்டி”

ஃபாத்வா மீறுதல்: இந்திய இஸ்லாமியர்களில் புகைப்பட பெண்கள்

”இஸ்லாமில் புகைப்படம் எடுப்பது பாவச்செயலாகும். முஸ்லீம் சட்டப்படி குற்றமாகும். புகைப்படம் எடுப்பதற்கு எதிராக ஹதீதுகளில் எச்சரிக்கை இருக்கின்றது” என தாரூல் உலூம் பத்வா விதித்திருந்தது. இதை மீறி இஸ்லாமியப் பெண்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுக்கொடுப்பதில் “ஃபாத்வா மீறுதல்: இந்திய இஸ்லாமியர்களில் புகைப்பட பெண்கள்”

பெர்லின் நகரின் இந்துக்கோவில்

எண்ணூறாயிரம் யூரோ செலவில் ஜெர்மனியின் தலைநகரில் கட்டப்பட்டிருக்கும் ஹிந்துக் கோவில் குறித்த புகைப்படத் தொகுப்பு: http://www.spiegel.de/fotostrecke/photo-gallery-berlin-s-celebrates-its-first-hindu-temple-fotostrecke-101197.html

ஓவியமாகத் தீட்டப்பெறும் நிலவெளி

கோடு வந்ததும் ஓவியம் வந்ததா? ஓவியம் வரைந்ததால் கோடுகள் உருவானதா (கொடி அசைந்ததும் காற்று வந்ததா மெட்டில் பாடிக் கொள்ளவும்). இவை மிக எளிமையானப் புகைப்படங்கள். தீட்டப்பட்ட ஓவியங்கள் போல் காட்சியளிக்கின்றன. எல்லாமே ஜெருமானிய “ஓவியமாகத் தீட்டப்பெறும் நிலவெளி”

2013 நேஷனல் ஜியாகிரபி பயணியர் புகைப்பட போட்டி

இருபத்தைந்தாவது ஆண்டுகளாக நடக்கும் பயணப்புகைப்படங்களுக்கான நேஷனல் ஜியாகிரபியின் போட்டி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 15,500 ஒளிப்படங்கள் பங்குபெற்றன. பிரேசில், கென்யா, இந்தியா என உலகமெங்கும் சுற்றிய படக்கருவிகளின் சஞ்சாரத்தின் இறுதியில் எந்தப் படம் “2013 நேஷனல் ஜியாகிரபி பயணியர் புகைப்பட போட்டி”

மஞ்சள் நதியின் மணல் குளியல்

இது ஃபோட்டோஷாப் அல்ல. முப்பது மில்லியன் டன் வண்டலை தன்னோடு அழைத்து வரும் சீனாவின் மஞ்சள் நதியில் படிவங்களால் நிறைய சிக்கல்கள் குடியேற்றங்களுக்கு நேர்கிறது. அதனால் சில ஆண்டுகளுக்கொரு முறை அவற்றை கடும் வேகத்தில் “மஞ்சள் நதியின் மணல் குளியல்”

சூப்பர் பௌர்ணமி

2013 ம் ஆண்டில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்த தேதி ஜூன் 22. 23ம் தேதிதான் பௌர்ணமி என்றாலும் 22 அன்றுதான் சந்திரன் அத்தனை பெரிதாய் முழு நிலவாய் காணப்பட்டது. இனி இத்தகைய “சூப்பர் பௌர்ணமி”

வெடிக்கும் நொடி

அதி வேக புகைப்படக்கலையில் பல்வேறு பரீக்ஷார்த்தங்கள் செய்துவரும் ஜான் ஸ்மித், இங்கு பலவேறு பொருட்கள் திணிக்கப்பட்ட ‘பல்பு’களை தன் காமிரா முன் வெடிக்க வைத்து, சரியாக அவை வெடிக்கும் நொடிகளைப் பதிவு செய்திருக்கிறார்!

பசித்த பூமி

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த புகைப்பட வல்லுனர் பீடெர் மென்ஸெல், ‘Hungry Planet’ எனும் புத்தகத்துக்காக 24 நாடுகளுக்கு சென்று எடுத்த புகைப்படங்கள் இவை. சுடானில், நான்கு தலைமுறைகள் சாப்பிட 79 பவுண்டுகள் செலவு செய்யும் அபூபக்கர் “பசித்த பூமி”

மாசுபடாத நீர்நிலைகள்

உலகின் அதிகரிக்கும் மக்கள் தொகையாலும் விரிவடைந்து கொண்டே போகும் விவசாய நிலங்களாலும், நாம் இழந்து வருவது நமது சுத்தமான நன்னீர் நிலைகளை ஆகும். அழிந்து வரும் நீர் நிலைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க, மைக்கேல் “மாசுபடாத நீர்நிலைகள்”

பிஹு

அஸ்ஸாமிய புது வருடத்தையும் வசந்தத்தையும் வரவேற்கும் ரொங்காலி பிஹு கொண்டாட்டங்கள். பெங்கால், ஒரிசா, கேரளா, நேபால், பஞ்சாப், மணிப்பூர், தமிழ்நாடு என்று வெவ்வேறு மாநிலங்களில் இந்த புது வருட பிறப்பு வெவ்வேறு பெயர்களில் கொண்டாட “பிஹு”

காலம், தேசம், புகைப்படம்

தினம் ஒரு புகைப்படமென்ற கணக்கில் உலகின் பல நாடுகளின் சுவரஸியமான தருணங்கள் இந்த பக்கத்தில் கிடைக்கின்றன. காலம், தேசம் கடந்த மக்களின் வாழ்க்கை இதில் பதிவாகியுள்ளது.

அகச்சிவப்பு ஒளிப்படங்கள்

David Keochkerian என்பவர் எடுத்திருக்கும் அசாத்தியமான வண்ணச்சேர்க்கையை வெளிப்படுத்திய அகச்சிவப்பு ஒளிப்படங்களின் தொகுப்பை ஸ்லேட் இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.