கங்கோத்ரி, யமுனோத்ரி பகுதிகளில் இருந்த மலைப்பகுதி போலன்றி ‘பச்சைப்பசே’லென மலைத்தொடர்கள் கண்களுக்கு இதமாக காட்சியளித்தது. இந்தப் பிரதேசத்தை ‘மினி ஸ்விட்ஸர்லாந்து’ என்று அழைக்கிறார்கள். பனிக்காலத்தில் பனிச்சறுக்கு செய்ய பயணியர்கள் அதிகம் வரும் இடம் என்றும் தெரிந்து கொண்டோம். நாங்கள் நின்றிருந்த மலை மீதிருந்து எதிரே ‘நந்தா தேவி’ மலைச்சிகரங்களை வெண்பஞ்சு மேகங்கள் உரசிச் செல்லும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.
Category: பயணம்
சிக்கிம் – பயணக் கவிதைகள்
மேலிருந்து கயிறு
இறக்கியதுபோன்ற பாதை.
மேகங்களிலிருந்து மிதந்து
இறங்கிய வண்டியிலிருந்து,
அடுத்த முடுக்கு வரைதான் தெரிந்தது.
மஹாராஷ்டிராவின் சின்னம்
இந்த அணில் மஹாராஷ்டிர மாநிலத்தின் அடையாளமாக சொல்லப்படும் உயிரினம். சாதாரண அணிலின் முதுகில் இராமர் போட்ட மூன்று கோடுகள் என்றால், இந்த அணில் உடலெங்கும் பழுப்பு, செம்மஞ்சள், அரக்கு, கருப்பு என்று பல்வேறு வண்ணங்கள் கலந்து காணப்படுகின்றன. மலபாரின் ஜாம்பவான் அணில் குறித்த குறிப்பை இங்கே பார்க்கலாம்; படிக்கலாம்.
சாதாரண வருஷத்துத் தூமகேது – பாரதியார்
1986-ல் comet என்னும் இந்த நட்சத்திரம் பூமிக்கு அருகில் வந்தது. அடுத்து 2061ல் எதிர்பார்க்கலாம். ஆனால், வருடத்திற்கு ஓரிரு முறை அதைப் பார்க்கலாம். அவ்வாறு மே மாதத்தில் தெரிந்ததை இடா அக்வாரிட் விண்கல் பொழிவு (Eta Aquarid meteor shower) என அழைக்கிறார்கள். அதன் படங்களை இங்கே பார்க்கலாம். “சாதாரண வருஷத்துத் தூமகேது – பாரதியார்”
மழுவன் மூளை கண்டாய்
செய்தி: Legendary Rock Climber Alex Honnold Gets Put Into an MRI, and the Results Are Surprising
புகைப்படப் போட்டி
நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிகை வருடந்தோறும் தங்கள் வாசகர்களுக்கான புகைப்படப் போட்டியை நடத்துகிறது. 2017க்கான படங்களை இங்கே பார்க்கலாம். கீழே கனடாவின் நுனாவுட் (Nunavut) பகுதியில் பனிக்கரடி:
ஒற்றைமரம் (கொலுக்குமலை பயணம்)
வாகனத்தின் மூலம் (ஜீப்) கொழுக்குமலை செல்ல வேண்டுமாயின் கேரளாவின் சூரியநல்லி வழியாகத்தான் சென்றடைய முடியும். ஏறகனவே சிறு சிறு மலையேற்ற அனுபவமும் எங்களுக்கிருந்தால் போடியிலிருந்து மலைப்பாதை வழி நடந்து செல்ல முடிவாயிற்று. எழத்தாழ 5000 அடி உயரத்தை 20 + கிலோமீட்டரில் நடந்து கடப்பதில் , அசல் சவால் அதன் கடும் ஏற்றமும், சரிவும் கொண்ட பாதைதான். காட்டுமாடு, செந்நாய், முள்ளம்பன்றி பற்றிய பயமும் சுமந்து மலையேற உடல் மட்டுமல்ல கொஞ்சம் மன திடமும் தேவை. திடீரென பிளவுறும் பாதைகளில் சரியான பாதையை தெரிவு செய்வது முக்கியம். உயரம் கடக்க சில மணி நேரங்களிலேயே அவ்வளவு குளிரிலும் கால் துவள, நாவறலத் தொடங்கியது, ஆங்காங்கே பழம் , தண்ணீர் கொண்டு சக்தி மீட்டு எங்கள் நடை தொடர்ந்தது.
குதிரைலாட வளைவு
அலெக்ஸ் வாங் (Alex Wong) என்பவர் புகைப்படக் கலைஞர். நகரும் எதையும் ஆர்வமாக ஒளிப்படமாக்குபவர். காளைகளை அடக்கும் பந்தயம் ஆகட்டும்; வேகமாக கார் ஓட்டும் போட்டி ஆகட்டும். அவர் இருப்பார். தன் கேமிராவில் படங்களாக சுட்டுத் தள்ளுவார். இத்தனையும் அச்சில் வர ஆசைப்படுகிறார். சென்ற வருடத்தில் மட்டும் இரண்டு “குதிரைலாட வளைவு”
ஹம்பி: நிலவைக் காட்டும் விரல்
மானுடம் கண்ட மகத்தான கனவு விஜயநகரம். இன்று நாம் காணும் ஹம்பி என்பது நூற்றாண்டுகளுக்கு முன்னால் அங்கு எவ்விதமான வாழ்வு நடந்திருக்கும் என கற்பனை செய்து பார்ப்பதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே. விஜயநகரம் இன்று கற்பனையால் மட்டுமே கண்டடையக் கூடிய ஒரு பிரதேசம். மாமனிதர்கள் மானுடம் குறித்த மகத்தான கனவுகள் மூலமாகவும் கலைஞர்கள் தங்களின் கலையின் வழியாகவும் மதியாளர்கள் தங்கள் திட்டமிடல் மூலமாகவும் வணிகர்கள் வாய்ப்புகளின் சாத்தியங்களின் வழியாகவும் பொறியாளர்கள் பணி மேலாண்மை மூலமாகவும் வீரர்கள் போர் நுணுக்கங்கள் மூலமாகவும் சாமானியர்கள் பெருவியப்பினூடாகவும் மட்டுமே அந்நகரை கற்பனை மூலம் அடைய முடியும். அப்பிராந்தியம் கற்காலம் தொட்டு அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டிருக்கிறது. இராமாயணம் குறிப்பிடும் கிஷ்கிந்தை விஜயநகரமாக இருந்திருக்கக் கூடும்
க்யூபா – ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்
ஹவானா வியெஹாவின் பிரதான சாலையோரமாக மரங்களின் நிழலில் 2007- ல் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவுச்சிலை ஒன்று இந்திய அரசினால் நிறுவப்பட்டது. அந்த முக்கிய நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இந்திய கலாச்சார உறவுக் கழகத்தினால் (ICCR), இந்தியாவிலிருந்து கூபாவுக்கென பிரத்யேகமாக அனுப்பப்பட்டது அது. எழுத்தாளர்கள், ஓவியர்கள், மற்றும் கலைஞர்களை மதிக்கும் பிரதேசம் லத்தீன் அமெரிக்கா. கூபா அதற்கு விதிவிலக்கல்ல. தாகூர் சிலை திறப்பு விழாவின்போது, பழைய ஹவானாவில் உள்ள ` காஸா த லா ஏஷியா` எனப்படும் `ஏஷியா ஹவுஸ்(ஸ்பானிஷில் Casa de la Asia) பள்ளிக்குழந்தைகளை வைத்து தாகூரின் நாடகம் ஒன்றின் ஒரு அத்தியாயத்தை, எங்களுக்கு நடத்திக் காண்பித்தது. பள்ளிக்குழந்தைகள் உற்சாகமாக அதில் நடித்தது எங்களுக்கு சிலிர்ப்பூட்டிய விஷயம். கூப்ர்களுக்குப் பிடித்த உலக அரசியல் தலைவர்களில் மஹாத்மா காந்தியும் ஒருவர்.
ஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ
சிங்கம் என்னும் பெயருக்குப் பின்னால், கம்பீரமும், பயமும், வேட்டையும் மரணமும் இணைந்திருக்கிறது. ஆனால், உண்மையில் சிங்கம் என்னும் பெரும்பூனையின் வாழ்வு மிகச் சிக்கலானது. அவை தமக்கு எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன. அதற்குள்ளாகவே, ஆண் சிங்கங்களுக்கு தந்தைமை உரிமைகள் பற்றிய தகராறுகளில், குட்டிகள் கொல்லப்படுகின்றன. பாதி சிங்கக் குட்டிகள் இரண்டாண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை. இதையெல்லாம் தாண்டி, தனது எல்லைக்குள் விலங்குகள் சிக்காமல், பசியில் மரிக்கும் சிங்கங்களுமுண்டு. அப்படியானால், சிங்கம் என்னும் விலங்குக்கு ஏன் மனிதருள் இவ்வளவு மதிப்பு? 10000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனுக்கு அடுத்தபடியாக அதிகமாக பூமியில் வாழ்ந்த பாலூட்டி சிங்கம் தான்…
ஸ்விட்சர்லாந்து : ஸ்வர்க்கத்தில் சில வருடங்கள்
ஜெனீவா ஏரியின் நடுவில், ஏரி ரோன் நதியை (Rhone River) சந்திக்கும் இடத்தில் இருக்கிறது ஜெட் தூ (Jet d’Eeu) – தண்ணீரை 200 கி.மீ.வேகத்தில், 140 மீட்டர் உயரத்துக்குப் பீச்சியடிக்கும் பெரிய water jet-மின்ஃபௌண்டெய்ன். வானில் 33000 அடி உயரத்தில் பறக்கையிலும் கீழே தெரியும் இது. ஜெனீவாவின் அதிபிரபலமான சுற்றுலாப்பகுதி. ஏரியின் கரையோரத்தில் பந்துகளை எறிந்து, பந்துகளோடு பந்துகளாக ஓடும் சிறுவர்கள், சிறுமிகள்; கையில் வாக்-மேன், காதில் இயர்ஃபோன், முகத்தில் ஃப்ளேம்-கலர் காகில்ஸ்(goggles) என உல்லாச நடைபயிலும் நங்கைகள்; விதவிதமான மனிதர்கள். `ஏரிக்கரைமேலே போறவளே பெண்மயிலே..!` என்றெல்லாம் மனம் தமிழ் சினிமா பாட்டை எக்கச்சக்கமாக எடுத்துவிடும்!
கென்யா – குறுங்குறிப்புகள்
ஒரு கிராமத்தில் குறைந்தது மூன்று சர்ச்சுகள்); அடுத்து முஸ்லிம்கள் – சிறுபான்மை (பெரும்பாலும் ‘மொம்பாசா’ போன்ற கடற்கறை நகரங்களில்). … பழமைவாதம்தான் – ஒரு சில குறுங்குழுக்களில் மட்டும்தான்; அலோபதி மருந்துகளுக்கும், மருத்துவர்களுக்கும் அலர்ஜியாவது(!), கிறித்தவத்தின் ஒரு குறுங்குழுவான “mukurino”க்கள்; மற்றுமொரு குழுவான் “ஜெகோவா விட்னஸ்” மற்றும் சில “ஏழாம் நாள்” குழுக்கள், வாரத்தின் முதல் நாள் ஞாயிறு என்கின்றன; ஏழாம் நாள் ஓய்வு என்பதால் சனிக்கிழமைகளில் எந்த வேலையும் செய்வதில்லை; அவர்களின் சர்ச்சுகளின் பிரார்த்தனைக் கூட்டங்கள், சனிகளில் தான்.
பல்லவர்களின் பெரிய கோவில்
காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலுக்குச் சென்ற மதுமிதா கோபாலன் தன்னுடைய படங்களையும் அனுபவத்தையும் ஆலய வடிவமைப்பையும் இங்கே பகிர்கிறார்.
சாப்பாட்டுக் கடை
திருநவேலியில் தேடித் தேடி சாப்பிட்டது போக, சென்னையில் சாப்பிட்ட சாப்பாட்டுக் கடைகளின் பட்டியல் புதிய கடைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகச் வளர்ந்து கொண்டேதான் வருகிறது. அந்த வகையில் பழையன கழிந்து புதியன பல புகுந்து விட்டன. சாலிகிராமத்திலிருந்த ‘முத்துலட்சுமி பவன்’ ஹோட்டலை கழுகுமலை அண்ணாச்சி மூடி விட்டார். சுடச் சுட இட்லியும், பருப்பு சாம்பாரும், ரகசியமாக எனக்கு மட்டும் (ஊர்ப்பாசம்) கெட்டிச் சட்னியும் கொடுப்பார். அவர் கொடுக்கும் உணவையும், உபசாரத்தையும் மறப்பதற்கில்லை. ‘ஸார்! வாருங்கோ! சும்ம இருக்கேளா?’ என்று …
சவூதி அரேபியாவில் பெண்கள் நிலை – முன்னேற்றமா?
முத்தவாக்கள் ( Mutaween – Religious Police) தான் பெரும்பாலான நேரங்களில், பொது இடங்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மதச் சட்டங்கள் என்ற பெயரில் “பாதுகாவலர் சட்டத்தை” மனதில் கொண்டு பல இன்னல்களையும் தண்டனைகளையும் வழங்கக் காரணமானவர்கள். இவர்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட , மதச் சட்ட முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா எனக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்யும் அதிகாரமும் சில வருடங்கள் முன்வரை அடிக்கும் உரிமையையும் கொண்டிருந்தவர்கள். அவர்களைப் பார்த்தவுடனே எளிதாக அடையாளம் காண இயலும். பெரிய அண்ணனின் சட்டையயும், கடைசித்தம்பியின் பேண்டையும் மாட்டிக்கொண்டால் ஒருவர் எப்படி இருப்பார்? அப்படித்தான் அவர்களின் ஆடையும், ட்ரிம் செய்யப்படாத தாடியும் இருக்கும்.
கலைமகள் நடனம் காண…
அஜி: ஹெர்சாக் ஆவணப் படத்தில் ஒரு சித்திரம் வருகிறது. ஹெர்சாக் முப்பது ஆயிரம் வருடம் கொண்ட குகை ஓவியங்களை குறித்து படம் செய்திருக்கிறார். அதில் ஒரு ஓவியம் குதிரை முகம் கொண்ட நிர்வாணப் பெண். இன்று இவற்றை வைத்துக் கொண்டு மனிதத் தன்னிலை குறித்து ஆராய ஒருவர் நுழைந்தால், இன்று அவருக்கு உலகில் மிச்சமிருக்கும் ஒரே ஒரு புகலிடம் இந்து மதம் மட்டுமே. அந்த எல்லையில் சக்கரைப் பொங்கல் இது எதையும் மாற்றி வைக்குமே தவிர அழிய விடாது. மாறாக பகுத்தறிவும் , இறைவார்த்தையும் ஊடுருவிய இடம் எல்லாம் அழிவு மட்டுமே மிஞ்சுகிறது. நமது வேர்களை இழந்து விட்டால், மீண்டும் நாம் மந்தைகள் ஆவதன்றி வேறு வழி இல்லை.
டிபாசாவிற்கு மீள்வருகை
இளமையில் புழங்கிய இடங்களுக்கு மீண்டும் செல்வதும், இருபது வயதில் உவகையுடன் அனுபவித்துச் செய்தவற்றை நாற்பதில் மீண்டும் செய்ய விழைவதும் அனேகமாக எப்போதுமே தண்டிக்கப்படக்கூடிய ஒரு மூடத்தனமே. ஆனால் இம்மூடத்தனத்தை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது இளமையின் முடிவை அடையாளப்படுத்தும் அந்த போர் வருடங்களுக்குப் பின், வெகு விரைவிலேயே டிபாசாவிற்குச் சென்றிருந்தேன். என்னால் மறக்கவே முடியாத சுதந்திரத்தை அங்கு மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கையில் தான் அங்கு சென்றேன் என்று நினைக்கிறேன்.
தேநீர் மகாத்மியமும் ஜப்பானியர்களும்
காலையில் எழுந்ததும் பில்டர் காபியுடன் செய்தித்தாளில் தலையை மூழ்கி வெளிவந்தால்தான் நம்மவர்களுக்கு அன்றைய பொழுது ஒழுங்காக ஆரம்பித்தது என்று ஆகும். இந்த இரண்டில் எது ஒன்று சரியாக இல்லையென்றாலும் பிரளயமே வந்தாற்போல் இருக்கும். நம் ஊர் பக்கம் இப்படியென்றால் வட இந்தியாவில் காபி இடத்தை தேநீர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். சிங்கப்பூரில் இருந்தபோது ஒரு முறை ஜப்பானில் தேநீர் போடும் முறைகள், தேநீர் ரகங்கள், மற்றும் அதற்கு உபயோகிக்கப்படும் உபகரணங்கள் என்று ஒரு கண்காட்சியைப் பார்க்கப் போயிருந்தேன். அந்த சமயத்தில்தான் சென்னையில் பரவலாக டீ மட்டுமே குடிக்கும் வட இந்திய தகவல் தொழில் நுட்ப இளைஞர்களும் அதிகமானார்கள்.
ஸ்பிதிக்கு ஒரு பயணம் – 1
எங்களைக் கீழே இறங்கி வரச் சொல்கிறான். சுற்றிலும் யாருமில்லாத தனிமையில் நான் அவனருகே போய் நிற்கிறேன். “பொய் சொல்லக்கூடாது. உண்மையை மட்டும்தான் சொல்ல வேண்டும். பார்க்க முடியவில்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கள். பார்த்தால் மட்டும்தான் பார்த்தேன் என்று சொல்ல வேண்டும்,” என்கிறான். எனக்குக் குழப்பமாக இருக்கிறது. வெகுதொலைவில் தெரியும் பனி போர்த்த சிகரங்களைக் காட்டி. “நடுவில் உள்ள மலையைப் பார்த்தீர்களா? அதன் உச்சியைப் பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். என்ன தெரிகிறது?” நான் உற்றுப் பார்க்கிறேன், எதுவும் பிடிபடுவதாயில்லை. “வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை,” என்கிறேன். “நடுவில் உள்ள மலையின் உச்சியை கவனமாகப் பாருங்கள்,” என்று மீண்டும் வலியுறுத்துகிறான் அமித். இப்போது மறுபடியும் அந்த மலையைப் பார்க்கிறேன், இப்போதுதான் ஒரு வித்தியாசமான காட்சி தென்படுகிறது…
பாண்டிச்சேரியும் பவழ மல்லியும்
வேப்ப மரம் பூப்பதை வைத்து அது சித்திரை மாதமென்றும், அது கோடை காலமென்றும் சொல்கிறோம். அதே போல திரிபுராவில் உள்ள கிராம மக்கள் குறிப்பாக விவசாயம் செய்பவர்கள் ஒரு பருவத்தில் அதிக மழை வருமா, ஓரளவிற்கு மழை வருமா, அல்லது பருவ மழை பொய்த்துவிடுமா என்பதை பவழ மல்லி பூக்கும் விதத்தை வைத்தே சொல்லிவிடுகின்றனர். இதை உறுதி செய்ய ஆராய்ச்சியாளர்கள் 2002லிருந்து 2007 வரை 270 பழவ மல்லி மரங்களின் பூக்கும் விதத்தை அவதானித்து அதை ஆவணப்படுத்தினர்.
வன்னி மரத்தைப் பார்க்கப் பயணம்
தல மரங்கள் எனும் concept எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மரங்களை அதுவும் நம் மண்ணுக்குச் சொந்தமான மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் காரணிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஆமோதித்து அரவணைத்துக் கொள்வது இயற்கைப் பாதுகாவலர்களின் கடமை என்பது எனது எண்ணம்.
ஸியாட்டிலில் சில நாட்கள்
ஸியாட்டில் இருக்கும் வாஷிங்டன் மாநிலம் 4000 வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்கள் வாழ்ந்த இடம். அதனால் இன்னும் பல ஊர்களின் பெயர்கள். ஸமாமிஷ், இஸ்ஸாகுவா, ஏனும் க்ளா, ஸ்னோக்வால்மீ, புய்யால்லுப், ட்யூலலிப் என்பதுபோல் அவர்களின் மொழியிலேயே இருக்கும். ஸ்னோக்வால்மீ என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் ஒரு ஹோட்டலுக்குள். போனால் நம்ம தமிழ் மாமாவும் மாமியும் அவியல், தோசை, தயிர்சாதம் என்று மெனு கொடுக்கிறார்கள்.
நீலப்பனியைத் தேடி – 1
பக்கத்து வீடு ஐம்பது மைல்கள் என்பதைப் போல அருகில் மலைகளைத் தவிர எதுவும் இல்லை. அரைவிழிப்பு நிலையில் சத்தம் வந்த திசையைக் கண்டுபிடிக்கச் சிறிது நேரம் ஆனது. தூரத்தில் தெரிந்த மலையிலிருந்து கார் அளவிலான பனிப்பாளங்கள் உடைந்து விழுந்தபடி இருந்தன. நாங்கள் சென்றிருந்த பருவம் அப்படி. எங்குத் திரும்பினாலும் மண் நிறத்திலான மலைகள் பனிப்போர்வையை உதறியபடி இருந்தன.
சிதறால் குன்றம் – சிதறாத காலம்
சிதறால் மலை உச்சிக்கு செல்ல, கீழே இருந்து ஒரு கிலோ மீட்டர் நடை தான். ஆனால் புறவெளியை பார்த்தபடி ஏற ஏற மனவெளியில் ஏற்படும் மாற்றங்கள் அளவீடுகளின் பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டவை. தொடுவானைத் தூக்கிப் பிடித்தபடி தூரத்தில் தெரியும் மலை முகடுகளில் கண் வைத்தால், விசாலத்தின் உணர்வு மனது முழுவதும் ஊடுருவ, முதலில் நாம் அணிந்திருக்கும் நிகழ்காலத்தின் சட்டையை உரித்துப் போட்டு முன்னே நழுவுகிறது நமக்குள் இருக்கும் கால நாகம்.
கனவுகள் மீதூரும் பாதை
நாடகம் நடந்துகொண்டிருக்க என் மனம் மீண்டும் மீண்டும் அரங்கின் வடிவை வியந்தபடி இருந்தது. சுற்றிலும் பிரம்மாண்ட சுவர்கள் கிடையாது, தடுப்புகளும், விளம்பர பட்டிகளும், ஒலிப்பெருக்கிகளும் இல்லை. மலை உச்சியிலிருந்து கடலைப் பார்ப்பது போல நாங்கள் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம். மலையைச் சற்றே கவிழ்த்தால் போதும் நாங்கள் உருண்டு கடலில் கலந்துவிடுவோம். அப்படி வழித்தெடுக்கப்பட்ட இடத்தில் அரைவட்ட வடிவில் ஒரு அரங்கை அமைக்க ரொவீனாவுக்கு எப்படி எண்ணம் வந்தது?
அனுபவமாவது எது?
கீழே மண்டிக்கிடக்கும் லட்சக்கணக்கான மரங்களின் கோடிக்கணக்கான கிளைகளில் முளைத்து உதிர்ந்தபடி இருக்கும் எண்ணிக்கையில் அடங்காத இலைகளில் ஏதோ ஒரு இலையின் நரம்புகளில் ஒரு பக்கவாட்டு நுண் இழையின் நுனி மட்டும்தான் நான் என்று எண்ணிக் கொண்டதும் ஒரு விடுதலை உணர்வு. இங்கு நடக்கும் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. நான் ஒன்றுமே இல்லை -ஆனால் நான் இல்லாமல் இந்தக் காடு முழுமை பெறாது.