சொல்லாத கதைகள்

கலா ஷஹானியைப்  போன்று மானிட மதிப்பீடுகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டோருக்கு நாட்டிற்காக, அதன் விடுதலைக்காகப் போராடியதும் தான் வரித்துக் கொண் ட மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதும்  அரசியல் செயல்பாடல்ல; மாறாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து அவர்களின் ஆளுமையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிய ஓர் ஆன்மீகத் தேடல். அவர்கள் சுய லாபத்தையோ அங்கீகாரத்தையோ கருதாமல் தேசத்திற்குத் தொண்டாற்றுவதையு ம் சில மதிப்பீடுகளுக்காக வாழ்வதையுமே இலட்சியமாகக் கொண்டவர்கள்.

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

இந்திய அரசு ‘போஷன் அபியான்’(Poshan Abhiyan) மூலம் குழந்தைகள் நலம், ஊட்டச்சத்து, இளம் தாய்மார்களின் உடல் நலம், அவர்களுக்குத் தேவையான போஷாக்கு போன்றவற்றிற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ‘கிராம நல சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நாட்கள்’ தேசியக் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலை நிற்கும் வளர்ச்சி(Sustainable Development Goals) அதன் குறிக்கோள். சுய உதவிக் குழுக்கள், சமூக நல அமைப்புகள், கிராம முன்னேற்ற அமைப்பு, தாய் சேய் நல கேந்திரங்கள், குடும்ப நலம் மற்றும்  வளர்ச்சி, பஞ்சாயத்து சபைகள், நல்ல குடி நீர், சுகாதாரம் மற்றும் கழிவகற்றும் அமைப்புகள்…

600 மில்லியன் டாலர் செலவு! அதே பழைய முடிவு!!

அரசியலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் கட்சியே நிலைத்த ஆட்சியைத் தர முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணமாக்கியுள்ளது கனடாவில் நடந்த சமீபத்திய தேர்தல். உலகிலேயே பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடும் மக்கள் தொகையில் அதிகமுள்ள நாடுகளில் 38வது இடத்தை வகிக்கும் கனடாவில் 38 million மக்கள் வசிக்கிறார்கள். “600 மில்லியன் டாலர் செலவு! அதே பழைய முடிவு!!”

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

நீங்கள் திடுக்கிடுவீர்கள், திகைப்பீர்கள்; கணினியின் அத்தனைத் தகவல்களையும் மீள் கட்டமைப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல; கேட்பதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தொழில் தேங்காது முன்னே செல்லும். ஆயினும் நீங்கள் மன்றாடிவிட்டு, பிட்காயினாகவோ வேறேதும் கிரிப்டோ கரன்ஸியாகவோ, அனேகமாகப் பெரும்பாலும் ரஷ்யாவைச் சேர்ந்த அந்தக் கொந்தர்களுக்குத் தருவீர்கள். இந்த விவகாரத்தை நீங்கள் காவல் துறையில் கூட பதிவு செய்ய மாட்டீர்கள்- உங்களுக்குத் தெரியும் அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக பல நேரங்களில் ஆகிவிடும்…

தேவை ஒரு தங்கம்

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகள் பன்னாட்டுக் குத்துச்சண்டைக் கூட்டமைப்பில் நடந்த போட்டிகளில் ஆறு முறைகள் தங்கம் வென்ற மேரி கோமின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. அந்தப் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வென்ற நாடுகளின் வரிசையில், ரஷ்யா சீனாவுக்கு அடுத்து இந்தியாவுக்கு மூன்றாம் இடம். ரஷ்யா 60 பதக்கங்களைம், சீனா “தேவை ஒரு தங்கம்”

மதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு

கிட்டத்தட்ட 160 ஆண்டுகளாக இயங்கிவந்த கிருத்துவ திருச்சபைகளின் உறைவிடப் பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் மீது இந்த மதவெறியர்கள் கொடூரமான பாலியல் வன்முறைகளையும்,கொலைகளையும் ஈவிரக்கமில்லாமல் செய்திருக்கின்றனர்.அதிலும் பூர்வகுடி மக்களின் குழந்தைகளை  அவர்களின் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அவர்களுக்கு கல்வி அளிக்கிறோம் என்கிற போர்வையில், அந்தக் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளை, வசதிகளைக் கூட செய்து தராமல், கட்டுப்பாடுகள் விதிப்பதாக பல்வேறு பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கியதால் பல குழந்தைகள் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் கொடூரமாக மரணித்திருக்கின்றனர். 

பாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்

1980இல் நடத்தப்பட்ட பட்டறைக்குப் பிறகு இரண்டு முறை தமிழகத்தில் நாடகப் பட்டறைகள் நடத்துவதற்காகப் பாதல் சர்க்கார் வந்தார். ஒன்று லயோலா கல்லூரியிலும், இன்னொன்று மதுரையில் ஐடியாஸ்- ஐக்கப் என்ற கிறித்தவத் தன்னார்வக் குழுக்களின் ஏற்பாட்டிலும் நடந்தது. அந்தப் பட்டறைகளில் பங்கெடுத்தவர்கள் பின்னாளில் நாடகக்காரர்களாக மாறவில்லை. மதுரையில் நடந்த பட்டறையின்போதுதான் நான் நேரடியாக அவரைப் பார்த்தேன். நாடகக்காரர்களை உருவாக்கும் நோக்கமில்லாமல் விழிப்புணர்வுப் பிரசாரகர்களை உருவாக்கும் நோக்கம்கொண்ட அப்பட்டறைகளின் பின்விளைவுகள் பற்றிக் குறிப்புகள் எவையும் இல்லை.

இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்

உணவு வங்கிகள் பெருகி, அமெரிக்காவுக்கு உணவளிப்பு (Feeding America ) என்ற புது அடையாளம் பெற்று, 200 க்கும் அதிகமான உணவு வங்கிகள் இணைந்த நாடு தழுவிய பிணையமாக வளர்ந்து, உணவு வங்கிகளை சார்ந்துள்ள பொட்டண உணவறைகள் (food pantries), சிற்றுணவகம் (soup kitchens), மற்றும் பிற சமுதாய முகமைகள் வழியாக 46 மில்லியன் மக்களுக்கு உணவளிக்கக் கூடிய லாப நோக்கில்லா பசியாற்று (hunger relief) நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இது வருவாய் நோக்கில் அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களில் இரண்டாமிடம் வகிப்பதாக ஃபோர்ப்ஸ் கம்பெனியின் மதிப்பீடு கூறுகிறது.

குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை

அந்த அமர்வு மூத்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துலகு பற்றியது. முதலில் மிருணால் பாண்டே பேசினார். பலரும் அறிந்த ஹிந்தி எழுத்தாளரான அவர் தாய் சிவாணியைப் பற்றிப் பேசாமல் எந்த நிகழ்வையும் மிருணால் பாண்டே தொடங்க மாட்டார். அன்றும் தன் தாயாரைக் குறிப்பிட்டுவிட்டு, தான் சிறு பெண்ணாக இருக்கும்போதே மாகாஸ்வேதாதேவியின் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் அவர் தாயாரிடம் வந்ததாகவும் அப்போதே அவரைத் தெரியும் என்றும் அவர் தனக்கு மகாஸ்வேதாதேவி மௌஸி (சித்தி) என்றும் கூறிய பிறகு ஹிந்தியின் மூத்த பெண் எழுத்தாளர்கள் பற்றிச் சுவையாகப் பேசினார். அடுத்து நான் பேசும்போது மூத்த எழுத்தாளர்கள் பத்திரிகைகள் நடத்தியது குறித்துப் பேசும்போது, வீட்டு வேலை, சமையல் இவைகள் எல்லாவற்றையும் செய்து இலக்கியத்துக்கும் வாழ்க்கையில் இடம் அளிக்க முயன்றார்கள்…

விருதேற்பு உரை

எழுத்தில் எது உண்மை எது போலி என்று பாகுபடுத்துவது எளிதான காரியம் இல்லை. மேலும், உண்மை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பதுதானா? என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ”உண்மைகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது.

வேற்றிடவேர் படியும் கிரணத்தின் நிறப்பிரிகை

அரட்டையாக ஆரம்பித்த பேச்சு இந்திய கவிஞர்களைப்பற்றி சுற்றி வந்து தமிழ்க் கவிஞர்கள்கள், எழுத்தாளர்கள் பற்றிய உரையாடலாக நிலைபெற்றது. தமிழின் முன்னோடியான எழுத்தாளர்கள் அமெரிக்காவைப்போல பெருவாரியான இதழியல், பதிப்பக வெற்றியின் வழி அறியப்படுபவர்கள் அல்ல என்கிற விஷயம் தமிழ் எழுத்தாளர்களை வேறுபடுத்திக் காட்டுவது. பெரும்பாலோர் வாசிக்கும் பரப்பிலக்கியம் இலக்கிய தகுதிகளுக்கு உரிய செவ்விலக்கியம் என்ற வேறுபாடு அமெரிக்காவில் அநேகமாக இல்லை. ஆனால் தமிழில் அதைப்போன்ற இருமை இருப்பதன் காரணம் என்ன என்ற திசையில் உரையாடல் சென்றது. சிறிய வாசகர் வட்டம் காரணமாக பதிப்பகத்துறை பெரும் ஆற்றலுடன் இயங்கும்படியான சூழல் அமையாதது என்பதுடன் தமிழ் எழுத்தாளர்கள் என்றுமே பதிப்பக வெற்றியை ஒரு பொருட்டாக எண்ணி அதை நோக்கி பாய்பவர்கள் அல்ல, கவிஞனாக எழுத்தாளனாக இருப்பதையே ஒரு வாழ்க்கை முறையாக …

சமூக ஊடகங்களும் அநாதைகளாக்கும் ஆர்ப்பாட்டங்களும்

2010ஆம் ஆண்டு. துனிசியாவில் மொகமது பவசிசி என்ற சாலை வியாபாரி கடன் வாங்கிக் கொள்முதல் செய்த பொருட்களுடன், வழக்கமாய் வியாபாரம் செய்யும் இடத்துக்கு வந்தார். காவல்துறைக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் லஞ்சம் கொடுக்க அன்று அவரிடம் பணமிருக்கவில்லை. இதுவே அவரது விதியைத் தீர்மானித்தது. அவரது கைவண்டியில் இருந்த சாமான்கள் காவல் துறையினரால் வீதியில் வீசப்பட்டன, அவரது எடைபார்க்கும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தாக்கப்பட்டார், காறித் துப்பி அவமானப்படுத்தப்பட்டார். அதன் பின் தன் எடை பார்க்கும் கருவியை திரும்பப் பெற அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. அரசு அலுவலர்கள் யாரும் அவரைப் பார்க்கவோ, அவரது புகாருக்கு செவி சாய்க்கவோ தயாராக இல்லை. இதனால் மனமொடிந்த மொகமது அரசு அலுவலகம் முன், சாலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறந்தார். அரபிய வசந்தத்தின் முதல் பொறி அது.

மகரந்தம்

மிஹிர் சென்னைப் போல யோசிப்பவர்கள் ஸ்வீடனிலும் சிலர் உண்டு. ஸ்வீடனில் கொஞ்சம் இடது சாரித்தனமும், கொஞ்சம் ஃபாசிசமும், கொஞ்சம் பழமை வாதமும், கொஞ்சம் அடாவடி/ தத்தாரி நாகரீகம். அங்கு வ்யூவர்டோன்யோ (Övertorneå) என்ற ஒரு சிறு நகரில், பொழுது போகாதவர்கள் நிறைய இருந்திருப்பார்கள் போல இருக்கிறது. ஆனால் சும்மா இருப்பதை விரும்பாத மிஹிர்சென் கோஷ்டி போலவும் இருக்கிறது. அதனால் ஒரு போட்டி வைக்கலாம் என்று யோசித்து அதன்படி, உலக சாம்பியன்ஷிப் விருது வழங்கும் போட்டி ஒன்றை நிறுவி இருக்கிறார்கள். அந்த ஊரில் கோடையில் கொஞ்சம் கொசுக்கள் மண்டுமாம். அந்தக் கொசுக்களை யார் அதிகமான எண்ணிக்கையில் பிடித்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இந்த விருது கிட்டும்.

குமாஸ்தா எழுத்தாளர்களுக்கான இலக்கியம்

2016ஆம் ஆண்டு அரபு இலக்கியத்துக்கான நக்விப் மஹ்ஃபூஸ் பதக்கம் எகிப்திய எழுத்தாளர் ஏடல் இஸ்மாட் (Adel Esmat) அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தினரால் வழங்கப்படுவது. ஆங்கில மொழியாக்கம் செய்யப்படாத சமகால அரபு மொழி நாவல்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. ‘யூசுஃப் டாட்ரஸின் கதைகள்’ (Hikayât Yûsuf Tadrus- The Tales of Yusuf Tadrus) என்ற நாவலுக்காக விருது பெற்ற இஸ்மாட்டின் ஏற்புரை

கென்யாவில் பன்னாட்டு மலர் வர்த்தகக் கண்காட்சி- 2016

“நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” – ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது செந்தில் அண்ணா சொன்னபோதுதான் உறைத்தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன்.

'இந்திய அறிதல் முறைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு

வெளியிட்டவர் – ரவிஷங்கர் உரை
பெற்றுக்கொண்டவர் – முனைவர் உத்ரா துரைராஜன் (இயற்பியல் துறை முதல்வர், DGV கல்லூரி) உரை
பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்) உரை
சாந்தினிதேவி ராமசாமி ஏற்புரை
அரவிந்தன் நீலகண்டன் ஏற்புரை

வேற்றுலகக் கொண்டாட்டம்

வருடாவருடம் அர்ஜெண்டினாவில் வேற்றுகிரக வாசிகளுக்கான திருவிழா எடுக்கிறார்கள். கெப்பிலா டெல் மாண்டே என்னும் இடத்தில் கொர்டொபா (Capilla del Monte, Cordoba) என்னும் நகரத்தில் முப்பதாண்டுகள் முன்பு பறக்கும் தட்டு வந்ததைப் பார்த்தவர்கள் தொடங்கி வைத்த வைபவம். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல் கருத்துப் பரிமாற்றமாகவும் ஆன்மிக விழாவாகவும் “வேற்றுலகக் கொண்டாட்டம்”

இந்திய கலை திருவிழா – 2016

டெல்லியில் நிறைய ஓவியக் கண்காட்சிகளும் கலைவிழாக்களும் நடக்கின்றன. வரைபட சந்தைக்கும் ஓவிய விழாவிற்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் என்ன என்று சற்றே வியந்துவிட்டு, ஜனவரி 14 முதல் 17 வரை நடந்த கொண்டாட்டத்தில் பிடித்த படங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார்கள். கீழே ராக்கீ ராய் ஓவியம்.

ஒரே நாளில் 47 பேரை வெட்டிச் சாய்த்த நாட்டிற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பீடம்

ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாய் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். முன்னுமொரு காலத்தில் அமெரிக்காவில் சுட்டுத் தள்ளி மரண தண்டனை கொடுத்தார்கள். இப்போது அமெரிக்காவின் சில மாநிலங்களில் விஷ ஊசி போட்டு கொலை செய்கிறார்கள். சவூதி அரேபியாவில் கூரிய வாளை வைத்து தலையைக் கொய்கிறார்கள். அவ்வாறு ஒரேயொரு நாளில் மட்டும் “ஒரே நாளில் 47 பேரை வெட்டிச் சாய்த்த நாட்டிற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பீடம்”

சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்

கலந்துரையாடல் பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியானந்தன் இவர்களுடன் சொல்வனம் சார்பில் ரவி சங்கரும், நவீன விருட்சம் சார்பில் அழகியசிங்கரும் இடம் : பனுவல் விற்பனை நிலையம் 112 திருவள்ளுவர் சாலை திருவான்மியூர், சென்னை 600 041 தேதி 02.01.2016 (சனிக்கிழமை) நேரம் துவக்கம்: மாலை 5.30 மணி “சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்”

ஜஸ்டின் இஸ் ஜஸ்ட் ரெடி

2015 நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் பிரதமர் வேட்பாளாராக முன்மொழியப்பட்டபோது லிபரல் கட்சிக்கு அரசியல் அரங்கில் மூன்றாவது இடமே இருந்தது. ஹார்ப்பரின் கன்சர்வேட்டிவ் ஆட்சி நடந்த கடந்த பத்தாண்டுகளில், NDP பிரதான எதிர்க்கட்சியாக வளர்ந்து இருந்தது. லிபரல் கட்சி பல ஊழல் புகார்களில் சிக்கி மூன்றாமிடத்தில் தடவிக்கொண்டிருந்தது. மாற்றுக்கட்சிக்காரர்களும் சரி, பொதுமக்களும் லிபரல் கட்சியையோ, ஜஸ்டினையோ பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

விளக்கு விருது – 2014

தமிழில் கவனிக்கப்படும் விமர்சகரும், மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான சி.மோகன், கடந்த நாற்பது ஆண்டுகளாக இலக்கியம், கலை, சிந்தனை ஆகிய தளங்களில் ஊக்கத்துடன் செயல்படுகிறவர். படைப்பு மையப் பார்வையையும், சிறுபத்திரிகை இயக்கத்தின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தும் இவருடைய செயல்பாடு, சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, உரையாடல், நூல் பதிப்பு எனப் பன்முகத் தன்மை கொண்டது. உலக இலக்கியங்களில் “விளக்கு விருது – 2014”

குறைவழுத்த மண்டலம்: ஊதி பெரிதாக்கும் அமெரிக்கன் ஃபுட்பால்

சியாட்டில் quarterback ரஸ்ஸல் வில்சன் பந்தைத் தன் இன்னொரு வீரரை நோக்கித் தூக்கி எறிந்தார். சரியாகத்தான் எறிந்தார். ஆனால் பந்தைப் பிடிக்க முயன்ற சியாட்டில் வீரரின் பின்னால் இருந்து பேட்ரியட்ஸ் வீரர் மால்கம் பட்லர், மின்னல் வேகத்தில் பாய்ந்து எதிராளியின் பந்தைப் பிடித்துவிட்டார். மியாண்டாட் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்ததற்கு ஈடு இது. சியாட்டில் ரசிகர்கள் மொத்தமும் உறைய, பேட்ரியட்ஸ் ரசிகர்கள் நடுவே மால்கம் பட்லர் தெய்வமானார். தொலைக்காட்சியில் வர்ணனையாளர்களால் நம்பவே முடியவில்லை. கைக்கு அருகில் வெற்றி இருந்தபோது எந்த முட்டாள் ரஸ்ஸல் வில்சனுக்குத் தூக்கி எறிய ஆணைக் கொடுத்தது என்பதுதான் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பேச்சு.

இறுதி அஞ்சலி: திரு. ஆ.ப.ஜெ அப்துல் கலாம்

அவரது இல்லத்திலிருந்து பேக்கரும்பு வரை சென்ற ஊர்வலத்தில் ஹிந்துக்கள்,கிருஸ்தவர்கள்,முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் கலந்து கொண்டனர்.அவரது இறுதி ஊர்வலத்தில் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் ஆகிய முழக்கங்கள் ஒலித்தன.இந்திய வரலாற்றில் கலாம் அவர்களுக்கு செலுத்தப்பட்ட இறுதி மரியாதை முக்கியமான மிகச் சிறப்பு வாய்ந்த அத்தியாயமாகும்.அவ்விதத்தில் அவர் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு அளித்த பங்களிப்புகளை விஞ்சியுள்ளது.

நூல் அறிமுகம் மற்றும் நாஞ்சில் நாடன் அவர்களுக்குப் பாராட்டு விழா.

இடம்: சிருஷ்டி மஹால் கங்கா யமுனா திரையரங்கு எதிரில், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் பில்டிங் டாடாபாத் 8வது வீதி கோவை – 641 012. நாள்: 18.07.2015 சனிக்கிழமை காலை 9:30 மணி

கிடாச் சண்டை

சுற்றியிருப்பவர்களின் வெறிகூச்சலயும் வசைச்சொல்லையும் புரிந்துகொண்டவைபோல அவைகள் ஒவ்வொரு முறை மோதும் போதும் போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு மூர்க்கமாக மோதிக்கொண்டன. சில வலிய ஆடுகளின் தாக்குதலை தாங்கமுடியாமல் பத்துக்கும் குறைவான முட்டலில் சில பின்வாங்கி கூட்டத்திற்குள் ஓடிவரத்துவங்கியது. சில சண்டைகள் நீண்டநேரம் நடந்தது. ஆனால் 50 முட்டல்கள் தான் ஒரு போட்டிக்கு அனுமதி

ஒரிஜினல் உச்சரிப்பில்…

1994ல் ஆரம்பிக்கப்பட்ட க்ளோப் தியேட்டர், ஷேக்ஸ்பியர் காலத்தில் நடத்தப்பட்டது போலவே நாடகங்கள் நடத்துவதற்காக என்று அமைக்கப்பட்டது. மேடை அமைப்பு, உடைகள், போன்றவை அந்தக்காலத்தைய முறைப்படி செய்யப்பட்டாலும், உச்சரிப்பையும் அந்தக்காலத்திற்கு கொண்டுபோனால் யாருக்கும் பாதி நாடகம் கூட புரியாது என்று பயந்து இருந்தவர்கள், பத்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக ரோமியோ & ஜூலியட் நாடகத்தை ஒரிஜினல் உச்சரிப்பில் அரங்கேற்ற, அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு!

‘சாதாரண மனிதன்’ – நூல் வெளியீடு

சென்ற வாரம் மே முதல் தேதி மணிக்கொடி எழுத்தாளர் காலம்சென்ற திரு சிட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஆங்கில வடிவம் வெளியிடப்பட்டது. திரு நரசய்யா அவர்கள் தமிழில் எழுதிய சாதாரண மனிதன் என்ற நூலை சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

’துருவ நட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழா

மாமேதை பழநி அவர்களின் நினைவு சொல்வனம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தால் பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கு ஒரு நியாயமும் அவசியமும் இந்த இசை தொடர்ந்து வளரும்போதுதான் இருக்கிறது. மிருதங்கமும் புதுக்கோட்டை பாணியும் சபைகளில் மட்டுமின்றி நம் கிராமப்புறங்களிலும் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்- அருங்காட்சியகத்தில் இருக்கும் ஆவணங்களை நாம் தொட முடியாமல் தூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்க்கும் நிலை இந்தப் புத்தகத்துக்கும், இது பேசும் இசைக்கும் வந்து விடக் கூடாது.

டி. எம் கிருஷ்ணா – கேணி சந்திப்பு

விசேஷமாக கவனித்து ரசிக்கக் கூடிய, தஞ்சாவூர் பாணியில் வாசிக்கப்படும் மிருதங்கம், மராட்டியர்களின் ‘மிருதங்’ என்ற பாணியில் இருந்து வந்ததுதான். புதுக்கோட்டை மிருதங்க வாசிப்பு முறை தவிலிலிருந்து வந்திருக்கிறது. இதில் ரசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மொழியாலும், கலாச்சாரத்தாலும் வேறுபட்டிருந்தாலும் இசையால் அனைவரும் சங்கமித்திருக்கிறார்கள் என்பதுதான். ‘Fusion’ என்பதே இன்றுதான் வந்ததுபோல மிகைபடுத்திப் பேசிக்கொள்கிறோம். வரலாறை கூர்ந்து நோக்கினாலே மரபில் கலப்பிசை இருப்பது தெரிகிறது.

மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு

மீனாட்சி, பூரணி, திரிசடை போன்ற பெண் படைப்பாளிகள் தொண்ணூறுளுக்கு முன்பே நவீன கவிதைப் படைப்புகளில் பங்களிப்பு செய்திருந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின் வந்த பெண் படைப்பாளிகளால் தான் பெண்ணிய சிந்தனைகள் வளரத் தொடங்கியது. பெண்ணியம் சார்ந்த கவிதைகள் குறைந்த அளவே வெளிவந்தாலும் பரவலான சலசலப்பிற்கும் கவனத்திற்கும் உள்ளாயின. அவைகள் பெண்ணிய உரிமையைப் பெற்றுத் தரும் அடையாளக் குரலாக ஒலித்தன. ஒலித்த கவிக்குயில்களில் மாலதி மைத்ரி குறிப்பிடத்தக்க முக்கியமான கவிஞர்.