கண்ணப்ப தம்பிரானுடன் நேர்காணல்

தெருக்கூத்துங்கற கலை எப்போதிருந்து ஆரம்பம் என்கிற விஷயங்களைக் கேட்கிறீங்க. எங்க பாட்டனார் வீராசாமி தம்பிரான், அவருக்கு … வீராசாமி தம்பிரானுக்கு மாந்திரீகங்கள் தெரியும், மாந்திரீகத்திலே, எங்க ஊர் ஏரியை, யார் ஜலத்தின் பேர்ல நடந்து வருவாங்கன்னு போட்டியிட்டாங்க. அதிலே எங்க பாட்டா, ஜலத்தின் மேலே போய்ச் சேர்ந்துட்டாங்க. அப்போ அனத காலத்து ஆட்சியிலே என்ன பரிசு வேணும்னு கேட்டாங்க., எனக்கு 60 கிராம மிராசு வேணும்னு கேட்டார். அதிலே 60 கிராமம் அவருக்கு விட்டாங்க. மிராசு வருஷந்தோறும் வீட்டுக்கு வந்து சேர்ந்துடும். அவரு தோல் பொம்மை விளையாட்டும் செய்தார். கிராமங்கள்லே ஏதானும் விசேஷம் நடந்தா, அவர் போய் விளையாட்டு காமிப்பாரு. இதுக்கு வந்து மக்கள் எல்லாம் சாதம் கட்டிகிட்டு வெளியூர் கிராமத்திலேயிருந்து வந்து பார்ப்பாங்க. அப்படி இருக்கும்போது குழந்தைகள் நாலு பேரும் தலையெடுக்கவும் ‘கம்ஸ ஸம்ஹாரம்’கிற ஒரு கூத்து, அதை பாகவத கீர்த்தனைகளாலே ஏற்படுத்தி நடத்தினாரு. அதை நடத்தி வந்தாரு. அப்புறம் பிள்ளைங்கள்ளாம் வயசுக்கு வந்த உடனே …

தெருக்கூத்து – பகுதி 3

அன்றைய கூத்து நிகழ்ச்சி திரௌபதியின் திருமணத்துடன் நிறைவடையும். மறுநாள் திரௌபதியின் திருமணம் மீண்டும் கொண்டாடப்படும், அதாவது தென்னிந்தியக் கோவிலில் இத்தகைய கோவில் விழாக்களில் நடக்கும் அனைத்து சம்பிரதாயச் சடங்குகளுடனும் அது நடைபெறும். கோவிலின் கர்ப்பக்கிருகத்தில் திரௌபதியின் சிலைக்கருகே அருச்சுனன் சிலையும் வைக்கப்படுகிறது. அனைத்துத் திருமணச் சடங்குகளும், அம்மனின் கழுத்தைச் சுற்றித் தாலி கட்டுவது உட்பட அனுஷ்டிக்கப்படுகின்றன. மறுபடியும் அந்தச் சிலை கிராமத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, கிராமம் முழுவது விழாக்கோலம் கொள்கிறது. பிறகு அம்மன் கோவிலுக்குத் திரும்புகிறாள். இங்கே பண்டைய காலத்து அம்மன் மற்றும் காவல் தெய்வத்தை திரௌபதி அம்மனுடன் இணைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது .காவியம் (பிரசங்கி), நாடகம் (தெருக்கூத்து) மற்றும் சடங்கு (அம்மன்) என்பவற்றின் …

கண்ணப்பத் தம்பிரான்

1960-களின் இடையில், 65-66 அல்லது சற்று முன் பின்னாக இருக்கலாம் – டெல்லியில் ஒருநாள் மாலை ரவீந்திர பவனின் புல்வெளியில், தாற்காலிகமாக எழுப்பப்பட்டிருந்த மேடையில், கண்ணப்பத் தம்பிரானும் நடேசத் தம்பிரானும், பாரதத்திலிருந்து ஒரு காட்சியை, காரமான வாதப் பிரதிவாதங்களும், துவந்த யுத்தமும் நிறைந்த ஒரு காட்சியை, நடித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். வாள் சண்டையும் வீராவேசமான கிரிகைகளும், உரத்த குரலில் சொற்போரும் நிறைந்த அந்தக் காட்சி, ஓர் நிகழ்வுக்கு எத்தனை உக்கிரமும், வீரமும், ஓர் உச்சநிலைக்கு எடுத்துச் சென்று அந்த உச்சத்திலேயே சுமார் 40-45 நிமிடங்கள் வரை சரிவில்லாது அக்காட்சியின் விறுவிறுப்பை நீடிக்க செய்ய முடியும் என்பதற்கான நிதர்ஸன நிரூபணமாக அது இருந்தது. அன்று எனக்கு நடேசத் தம்பிரானும் சரி கண்ணப்பத் தம்பிரானும் சரி, அவர்கள் பேண வந்த தெருக்கூத்து என்ற வகை நாடக வெளிப்பாடும் சரி, எல்லாம் புதியன. முதல் அறிமுகமே அதுதான். அந்த இருவரும் பெரிய கலைஞர்கள், அவர்கள் பேணும் வெளிப்பாடுக் கலை என்பது அந்த மாலை எனக்குள் ஆழப் பதிந்துவிட்டது. எந்தப் புத்தகமுமோ, எந்த அறிஞரின்/ ஆராய்ச்சியாளரின்/ வெள்ளைத்தோல் நிபுணரின்/ கலைஞரின் சிபாரிசுமோ தேவையாக இருக்கவில்லை.

தெருக்கூத்து – பகுதி 2

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் கதகளியும் யக்ஷகானாவும் அவற்றின் தெய்யம் மற்றும் பூதம் கலைகளின் தொடக்கங்களை விட்டு விலகி தம்மை செவ்வியல் நாடகக்கலைகளாய் நாகரிகப்படுத்திக்கொண்டன. இந்த பயணத்தில் அவை கடந்தது பாதி தூரம் தான் . இன்னமும் அவற்றில் நாட்டார் கலை அம்சங்கள் சில ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். .அவை தம் முந்தைய நாட்டார் வடிவங்களின் ஆவியுலகு சார்ந்த விஷயங்களின் தொப்புள் கொடியை துண்டித்துக்கொண்டவிட்டன.. ஆனால் தெருக்கூத்து அப்படிச் செய்யவில்லை. அது அவற்றைத் தக்க வைத்துக் கொண்டு தன் பரப்பை விஸ்தரித்து அதன்மேல் கட்டுமானத்தை எழுப்பியது இந்த விரிவாக்கமே தெருக்கூத்தின் சிறப்பு அம்சம், இதுவே மற்ற கலை வடிவங்களிலிருந்து அதை வேறுபடுத்துவதோடு அதை ஒரு தனி உலகமாய், தனித்துவம் வாய்ந்ததாய் ஆக்குகிறது.

தெருக்கூத்து – பகுதி 1

தொடக்கத்திலேயே சொல்லவேண்டியது, தெருக்கூத்து ஒன்றும் பழமையின் எஞ்சியுள்ள சின்னமாய் நாட்டார்கலை ஆர்வலர்கள் கருணையுடன் புத்துயிரளிக்கவேண்டிய ஒன்று அல்ல. அதன் பார்வையாளர்கள் ஒரு சிறு கூட்டமேயான கிராமத்து மக்களாகவே இருப்பினும், இக்கலைவடிவம் தமிழகத்தின் இதர மக்களால் ஏளனத்துடன் பார்க்கப்படினும், அது ஒரு வீரியமும் வாழ்வும் உடைய கொண்டாட்டமான வெளிப்பாடு. ஓர் இனத்து மக்களின் வரலாற்றுக்கு முற்பட்ட, வேட்டைக்கார, உணவு சேகரிப்பு பழங்குடி நாட்களிலிருந்து, அவ்வினத்தின் பரிணாமத்தின் ஒவ்வொரு படிநிலையினுள்ளும் ஒன்றினுள் ஒன்றாய் புகுந்து ஊடுருவி, தன் அடர்ந்த பரப்பினுள் உபகண்டத்தின் பிற பகுதிகளினின்று காற்றுவாக்கில் வந்த பாதிப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கும் ஒரு ஆவணம், ஒரு பல்படிவச் சுவடி (palimpsest)

சென்னையில் வாலி வதம் – தோற்பாவைக் கூத்து

Kalari Heritage and charitable Trust சார்பில் மணல்வீடு இதழின் ஆசிரியரும் நண்பருமான ஹரிகிருஷ்ணன் .6.1.2013 அன்று எலியட் பீச் அருகில் சந்திரலேகா ஸ்பேசஸ் என்ற இடத்தில் அம்மாபேட்டை கணேசன் குழுவினரின் வாலிவதம் தோற்பாவைகூத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.[…]கூத்தின் முதல் சுவாரசியம் கட்டியக்காரன்தான். கட்டியக்காரன் நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பை பெற்றுத் தருவான். ஊர்பிரமுகர்கள் பற்றி, சுற்று வட்டாரத்து சம்பவங்கள் குறித்து நிறைய நகைச்சுவையுடன் பேசத் துவங்கி மெல்ல கூத்திற்கு வருவான். கூத்து துவங்கும்.

கணியான் கூத்து

“வாரானே சுடைலைக் கண்ணு, சுடலைக் கண்ணு….நாங்குநேரி தான் கடந்து, தான் கடந்து” “பக்கத்திலே முண்டனுமாம் முண்டனுமாம்” என்று உடையும் குரலில் கம்மலுடன் மத்திம காலத்தில் அப்பாடல் ஒலிக்கும். அதற்கு ஒத்திசைந்து வாசிக்கப்படும் மகுடம் (கையால் வாசிக்கப்படும் தப்பு). பாடலைப் பாடும் அண்ணாவி அதே வரிகளைத் துரித காலத்தில் பாடும் போது, சர்வலகுவாக மிருதங்கம் வாசிப்பதைப் போல் சொற்களை விளாசித் தள்ளுவார்கள் மகுடம் வாசிப்பவர்கள்.ஏதோ ஒன்று நம்மைப் போட்டு உலுக்கியது போன்ற உணர்வுடன், ஒலி வரும் பாதையை நோக்கி செல்வதற்கு ஆசை எழும்.