1980இல் நடத்தப்பட்ட பட்டறைக்குப் பிறகு இரண்டு முறை தமிழகத்தில் நாடகப் பட்டறைகள் நடத்துவதற்காகப் பாதல் சர்க்கார் வந்தார். ஒன்று லயோலா கல்லூரியிலும், இன்னொன்று மதுரையில் ஐடியாஸ்- ஐக்கப் என்ற கிறித்தவத் தன்னார்வக் குழுக்களின் ஏற்பாட்டிலும் நடந்தது. அந்தப் பட்டறைகளில் பங்கெடுத்தவர்கள் பின்னாளில் நாடகக்காரர்களாக மாறவில்லை. மதுரையில் நடந்த பட்டறையின்போதுதான் நான் நேரடியாக அவரைப் பார்த்தேன். நாடகக்காரர்களை உருவாக்கும் நோக்கமில்லாமல் விழிப்புணர்வுப் பிரசாரகர்களை உருவாக்கும் நோக்கம்கொண்ட அப்பட்டறைகளின் பின்விளைவுகள் பற்றிக் குறிப்புகள் எவையும் இல்லை.
Category: நாடகம்
பிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்
மரபையும் நவீனத்துவத்தையும் இணைக்கும் புள்ளிகளையும் செயல்முறையையும் கண்டறிந்து விளக்கிய பாதல் சர்க்கார் தனது செயல்பாட்டுத் தளங்களிலும் பயிற்சி முறைகளிலும் அதனைச் சோதனைசெய்து காட்டியதோடு, நாடகப்பனுவலாக்கத்திலும் செயல்படுத்திக் காட்டியவர். அதன் ஆகச் சிறந்த பனுவலாக இருப்பது ஏவம் இந்திரஜித்.
பாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது
தோல்வியுறாத மனத்திடத்துடன் தனக்காக அமைத்துக் கொண்ட வாழ்வுப்பாதையில் அசையா நம்பிக்கையுடன் முன்னே செல்லும் ஒரு மனிதரையே எதிர்கொண்டேன். வீட்டிற்குச் செல்லும் வழியை வரைபடமாக அனுப்பிவைத்து, தெர்மோஸ் ஃபிளாஸ்கில் டீயை எனக்காகச் சூடாக வைத்திருந்த கனிவான ஒரு முதியவரையும். லாவோசில் சமீபத்தில் நிகழ்த்திய பட்டறையை நினைவுகூர்ந்து, எவ்வளாவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு துரிதமாக மீண்டும் களத்திலிறங்குவதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அபாரமான நாடகத்துறையாளரையும். நகரவாழ்வைப் பற்றிய சர்காரின் விமர்சனங்களின் கூர்மை காலத்தால் இன்னமும் மழுங்கடிக்கப் படவில்லை.
சாவித்ரி- ஓர் இசை
ராகம் சாவித்ரி, ஓர் அதிசயமான அபூர்வ ராகம்…. அதன் மாயமான ராக அலைகள் இழையிழையாக வேகத்துடனும், உறுதியுடனும் பெருகிப் பிரவகிக்கும்போது, நாம் காண்பது சூரிய பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட இளம்குழந்தை சாவித்ரியை; அவள் யாகத்தீயினின்று வெளிப்படும்போது, உலகின் அனைத்து நற்குணங்களும் பொருந்திய ஒரு முழுமையான சிறு பெண் வடிவத்தை உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம். சாவித்ரியின் சுஸ்வரங்கள் உள்ளத்தை நிறைக்கின்றன. குழந்தை குதூகலமாக வளர்கிறாள்.
கூம்பிய கனவுகள்
சொல்வனம் இதழில் பாவண்ணனின் சிறுகதை “கனவு மலர்ந்தது” படித்தேன். வாசித்து முடித்தவுடன் ஒரு சாதாரண சிறுகதையாகத்தான் தெரிகிறது. நாடகம் என்ற கலையின் வீழ்ச்சியைச் சொல்வதாக இருக்கிறது. நாடகம் என்ற வடிவம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது; நகரங்களில் சபாக்களில் இன்னும் கூட நடத்தப்படுகின்றனவே என்று சொல்லலாம். ஆனால்…
புனைதலும் கலைதலும்
தமிழில் எழுதப்பட்டுள்ள சுயசரிதைகளில் மிக முக்கியமான ஒன்று ஔவை.தி.க.சண்முகம் அவர்களின் ‘’எனது நாடக வாழ்க்கை’’. அவர் அதனை நாடக வாழ்க்கை எனக் கூறினாலும் அது அவரது வாழ்க்கையே தான். ஒரு நாடகக் கலைஞராக அவர் தன் வாழ்க்கையைத் தொகுத்து எழுதும் போது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தமிழின் சமூகவியல் ஆவணமாகவும் அந்நூல் மாறுகிறது. மனிதர்களுக்கு உலகியல் நேரடியானதும் மறைமுகமானதுமான எல்லைகளை உருவாக்குகிறது. பலர் அந்த எல்லைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் அமைந்து விடுகின்றனர். சிலர் அந்த எல்லைகளுடன் திருப்தி அடையாமல் அதனைத் தாண்டி பயணிக்கின்றனர். புதிய அனுபவங்களைப் பெறுகின்றனர். புதிய விஷயங்களைக் கண்டடைகின்றனர். அவர்களிடமிருந்து ஒரு புதிய துவக்கம் நிகழ்கிறது. மாற்றத்தை உருவாக்க பணியாற்றியவர்களாகவும் மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும் வரலாற்றில் அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
சோ – ஒரு தன்னிகரற்ற நிகழ்வு
தன் அபத்த நாடகங்களை மீறி உண்மையான நாடகக் கலைகளை எல்லாம் அவர் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தத் தவறியதில்லை. உடையப்பா தேவரின் தெருக்கூத்து பாணி நாடகங்களை பலரிடமும் கொண்டு சேர்த்தவர் சோ. … சோவின் நாடகங்களை கிரேக்க நாட்டின் பண்டைய நாடக ஆசிரியரான அரிஸ்டோ ஃபனோசுடன் ஒப்பிடுகிறார் எழுத்தாளர், விமர்சகர் ஆர் வி சுப்ரமணியன். நாடகத்தை தன் எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாகக் கருதினாரே ஒழிய அவற்றை கலையம்சம் உடைய ஒரு கலையாக அவர் கருதியதில்லை. அது ஒரு வேடிக்கையான உத்தி என்ற விதத்தில் மட்டுமே கையாண்டார். நடிப்பு, மேடை உத்திகள், பெரிய செட்டுகள், படாபடோபமான ஒப்பனைகள் உடைகள் மாயா ஜாலங்கள் என்று எதையும் அவர் பொருட்படுத்தியதில்லை.
பாஸனின் தூதகடோத்கஜம்
கடோத்கஜன் மூலமாக கௌரவர்களுக்கு கிருஶ்ணன் சொல்லி அனுப்பும் செய்தியை கருவாகக் கொண்டதால் நாடகம் தூதகடோத்கஜம் என்னும் பெயருடையதாகிறது. கடோத்கஜன் தூது என்ற நினைவே பாஸனின் கற்பனையில் உதித்ததுதான் மகாபாரத துணைப் பாத்திரம் ஒன்றைத் தன் எண்ணங்களுக்கு ஏற்றபடி வளைத்து நாடகக் கருவிற்கு மூலமாக்கி இருப்பது பாஸனின் நாடக அமைப்புத் திறனுக்கும், படைப்புத் திறனுக்கும் சான்றாகும்
பாஸனின் தூதவாக்யம்
பாண்டவர்களின் தூதனாக கௌரவர்களுக்கு அறிவுரை சொல்லும் தன்மையால் நாடகத்தின் மையக் கரு. .போரைத் தவிர்க்க எந்த நிலைக்கு போகவும் பாண்டவர்கள் தயார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும், கௌரவர்கள்தான் போருக்குக் காரணம் என்பதை அறிவிக்கும் முயற்சியிலும் இந்தத் தூது நிகழ்கிறது. மற்றவர்களுக்கு எதிராளியின் தவறான அணுகு முறையைக் காட்டுவதன் மூலம் நடப்பைப் புரிய வைக்கும் முயற்சியான இது நூறு போர்களை வெல்வதற்கு இணையான அரசியல் சாதுர்யம் கொண்டது. அதுவே இங்கு பாண்டவர்களின் தூதனால் நடைமுறைபடுத்தப் படுகிறது.
ஒரிஜினல் உச்சரிப்பில்…
1994ல் ஆரம்பிக்கப்பட்ட க்ளோப் தியேட்டர், ஷேக்ஸ்பியர் காலத்தில் நடத்தப்பட்டது போலவே நாடகங்கள் நடத்துவதற்காக என்று அமைக்கப்பட்டது. மேடை அமைப்பு, உடைகள், போன்றவை அந்தக்காலத்தைய முறைப்படி செய்யப்பட்டாலும், உச்சரிப்பையும் அந்தக்காலத்திற்கு கொண்டுபோனால் யாருக்கும் பாதி நாடகம் கூட புரியாது என்று பயந்து இருந்தவர்கள், பத்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக ரோமியோ & ஜூலியட் நாடகத்தை ஒரிஜினல் உச்சரிப்பில் அரங்கேற்ற, அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு!
பாஸனின் பிரதிமா நாடகம்
தந்தையின் ஆத்ம சாந்திக்கும், திதிக்கும் மிகச் சிறந்தது பொன்மான் தோல் எனச் சந்நியாசி சொன்ன செய்திதான் அவன் மானைத் தொடர்ந்து போகக் காரணமானது என்று நாடக ஆசிரியனின் அணுகுமுறை அமைகிறது.இதுவும் பாத்திரப் படைப்பின் உன்னதம்தான். மானைப் பிடித்துத் தரும்படி சீதை வேண்ட அதை நிறைவேற்றும் வகையில் இராமன் மானைப் பின் தொடர்ந்தான் என்ற சாதாரண வாழ்வுப் பின்னணியில் மனைவி ஆசை, அதை நிறைவேற்ற கணவன் துடிப்பு போன்ற செயல்கள் இங்கில்லை .இராமனின் பாத்திர உயர்வு இப்படித்தான் பாஸனிடமிருந்து வெளிப்படுகிறது.
பாஸனின் மத்யம வ்யாயோகம்
கடோத்: என்ன? நீயும் மத்யமனா?
பீமன்: உம். நான் பாகுபாடு இல்லாதவன். ஏழை,பணக்காரன் என வேறுபடுத்திப் பார்க்காதவன். மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவன். இன்னும் சொல்லப் போனால் சகோதர வரிசையில் நான் நடுவில் இருப்பவன். [வட மொழியில் மத்யமன் என்பதற்கு பாகுபாடற்றவன் என்ற பொருளுமுண்டு.]
பாஸனின் 'கர்ணபாரம்'
கர்ணபாரம் என்ற தலைப்பிற்கு இன்னொரு விளக்கமும் தரப் படுகிறது. நீண்ட காலமாக கவச குண்டல சுமையைத் தாங்கியிருந்த கர்ணன் சரியான நேரத்தில் அதிலிருந்து விடுபட்டதால் ’பாரம்’ என்ற தலைப்பு பொருத்தமாகிறது என்ற கருத்தும் உண்டு.
பாசாவின் உறுபங்கம் – ஒரு பார்வை
வட மொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப் பட்டு அறிமுகம் செய்யப் பட்டன.பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாது. மாளவிகாகினிமித்திரத்தில் “பாசா ,கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா“ என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் உத்திகளைப் பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
முட்டாள்களின் அறைகள்
புலம்புவதும், பிதற்றுவதும், அழுவதும், உளறுவதும், சத்தமாகச் சிரிப்பதும், குழந்தைத்தனமாக இருப்பதும் என இவற்றையெல்லாம் சில சமயங்களில் அறிவாளிகள் செய்ய தயங்குவார்கள். அது அவர்களின் பிம்பத்தின் மீது எச்சில் உமிழ்ந்துவிடும் எனப் பயந்து சாகிறார்கள். என் தலைமுறையில் மறுக்கப்பட்ட எத்துணையோ புலம்பல்களும், அழுக்குரல்களும், பிதற்றல்களும், சுயத்தை இழந்த சிரிப்பொலிகளும் பாதாளத்தின் ஆழத்தில் யாரும் கண்டறிய முடியாத இருளில் ஒளித்து வைக்கப்பட்டிருகின்றன.