தி கார்டியன் கொடுக்கும் இந்தப் படத் தொகுப்பில் இரானிய வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்று நிகழ்த்தல் காட்சிகள் மூலம் ஒரு கலைஞர் சித்திரித்திருப்பதைத் தொகுத்திருக்கிறார்கள். அவர் மிக நுண்மையான கேலியாகப் பல காட்சிகளை அமைத்து அவற்றைப் படமாக எடுத்தவை ஒரு தொகுப்பாகக் கிட்டுகின்றன. அந்தத் தொகுப்பில் சிலவற்றைக் கார்டியன் “இரான் – கடற்கரை முதல் கலகப்போர் வரை”
Category: நகைச்சுவை
27 வயதான அமெரிக்கக் குடும்பம்
ஒரு திரைப்படத்தையோ தொலைக்காட்சி தொடரையோ பார்க்கும்போது வெறும் மேம்போக்கான ரசிகனாக மட்டும் இல்லாமல், அதன் படைப்பு நுணுக்கங்களை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. இது ஏதோ நானும் படமெடுக்கிறேன் என்று எதிர்காலத்தில் நான் கிளம்புவதற்கான முன்னேற்பாடல்ல. ஆக்கத்தின் பின்னால் உள்ள செயல்முறைகளை நன்கு புரிந்துகொள்வது, ஒரு கல்வி ஆய்வு (academic analysis) பின்புலத்துடன் நிகழ்ச்சிகளை நான் ஆழ்ந்து அனுபவிக்க உதவும் என்ற என் எண்ணம்தான் இதற்கு காரணம். என் பொறியாளன் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது இத்தகைய ஞானம் ஏதாவது தேவையற்ற புத்தகங்கள் எழுத உதவுமோ என்னமோ. அந்த நல்ல தொடர்கள் வரிசையில் சேர வேண்டிய ஆனால் மிகவும் வேறுவகையான புனைவு இருபத்தேழு வருடங்களாக அமெரிக்காவின் Fox தொலைக்காட்சி சேனலில் வந்து கொண்டிருக்கும் …
பெரியவர்கள் இது ஏதோ குழந்தைகளுக்கான டாம் & ஜெர்ரி போன்ற கார்ட்டூன் ஷோ என்று அலட்சியமாக ஒதுக்கி விடுவார்கள். 1988-1991களில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் “நான் இது வரை பார்த்ததிலேயே மிகவும் முட்டாள்தனமான ஷோ அது” என்று சொல்லி தனது அறியாமையை உலகுக்கு தெரிவித்தது இந்த அலட்சியத்தின் உச்சம். ஆனால் சிம்சன் தொடரோ அத்தகைய விமர்சனங்களை ஓரங்கட்டிவிட்டு புஷ் தம்பதிகளையே ஒரு எபிசோடில் கலாய்த்துவிட்டு இன்றும் உற்சாகமாய் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
நாக்கு
வள்ளிநாயகம் சொல்வது திருநவேலிக்கும் மட்டும் பொருந்தாதுதான். சுவையான உணவைத் தேடி அலைகிற மனதுடைய மனிதர்கள் எல்லா ஊர்களிலும்தான் இருக்கிறார்கள். வீட்டில் என்னதான் ருசியாகச் சமைத்தாலும் வெளியிடங்களில் சாப்பிட மனம் கிடந்து அலைந்து கொண்டேதான் இருக்கிறது.
“விசேஷ வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சுங்கெ! ஆடிமாசத்துல மூர்த்தம்தான் வைக்க மாட்டானுவொ. ஒரு சடங்கு வீடு வரப்பிடாதாய்யா!”
சென்னையில் நடக்கும் விசேஷ வீடுகளில் போடப்படும் சாப்பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது உள்ள நடைமுறையில் போடப்படும் சாப்பாட்டில் வகைகள் என்னவோ விதவிதமாகத்தான் உள்ளன. கைகளில் பிளாஸ்டிக் க்ளவுஸும், தலைக்கு குளியல் கவரும் போட்டு, சீருடையில் கேட்டரிங் ஊழியர்கள் பரிமாறும் சாப்பாட்டில் சுவை இல்லாமலில்லை. ஆனாலும் திருநவேலி விசேஷ வீடுகளில் கைநனைத்த எந்த ஒரு மனிதனையும் பெருநகர நவீனப் பந்திகள் திருப்திப்படுத்தி விடமுடியாது.
பிரித்தானிய சின்னத்திரையில் குற்றப்புனைவுகள்
இந்த எழுத்தாளர் எங்கு போனாலும் அங்கு ஒரு திருட்டு, கொலை நடந்துவிடும்! இவர் மட்டும் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்…:) மற்றவர்கள் எப்படியோ, நான் இவரை சந்திக்க, இவர் கலந்துகொள்ளும் விழாக்களுக்கு போக மாட்டேன், இவர் விடுமுறைக்கு போகும் ஊர்களுக்கெல்லாம் தலை வைத்துக்கூட படுக்கமாட்டேன்!
விஞ்ஞானிகளும், நகைச்சுவையும்
விஞ்ஞானிகள் பொதுவாக மிகவும் சீரியஸானவர்கள் என்று நாம் நினைக்கிறோம். நம் புத்தகங்களில் கருப்பு வெள்ளையில் அவர்களை சோகமாக தாடியுடன் படம் போட்டு மேலும் இந்த எண்ணத்தை வளர்க்க நம் பாட நூல் வெளியீட்டாளர்கள் தூபம் போடுகிறார்கள். பாடப்புத்தகத்தில் ஏதாவது ஒரு விஞ்ஞானி தன் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடுவதைப் போல எங்காவது யாரவது பார்த்து ‘சொல்வனத்திற்கு’ அனுப்பினால் ஹமாம் க்ருஹப்ரவேசம் வீடு கொடுப்பதாகக் கூட அறிவிக்கலாம். பல விஞ்ஞானிகள் மிகவும் தேர்ந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.