திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு

கோள்களை வழிபடுவது பழைய மரபாயினும் கோள்கள் ஒன்பதையும் ஒருங்கே பீடமேற்றி, ஒன்றாக வழிபடும் முறைமை பிற்கால சோழர்கள் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் நவக்கிரக சன்னதிகள் பல்வேறு நிலைகளில், வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, வைதீக மற்றும் ஆகம விதிப்படி இரு வடிவங்களில் நவக்கிரகங்களின் வரிசைகள் அமைக்கப்படுகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி முதலான ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாகச் சுற்றுகின்றன…

பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்

எம்பெருமான் நாராயணன் இப்பூவுலகில் வந்துதித்த போதில் அவரின் திருப்பாதங்கள் முதன் முதல் பட்ட இடம் திருவேங்கடம்தான். அத்தகு தெய்வத் தன்மை பொருந்திய திருவேங்கடத்தை ஆழ்வார் பெருமக்கள் பலர் மங்களாசாசனம் செய்து அனுபவித்திருக்கின்றனர். மூவாழ்வார்களில் முதலாம் ஆழ்வாரான பொய்கையாழ்வார் தம் முதல் திருவந்தாதியில் பல இடங்களில் திருவேங்கடத்தைப் போற்றிப் பாடி “பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்”

பருவம் – எஸ்.எல்.பைரப்பா

துரியோதனன் தர்மம் குறித்து ஒரு முக்கியமான கேள்வி எழுப்புகிறான், அதுதான் பாரதப் போரின் மையத்தில் உள்ள கேள்வியாகவும் இருக்கிறது: “பாண்டவர்கள் எப்படி குரு வம்சத்தினராக முடியும்? நியோக முறைப்படி குந்திக்குப் பிறந்த அவர்கள் பாண்டுவுக்குப் பிறந்தவர்களல்ல”. நியோகம் என்பது பிள்ளைப் பேற்றை நோக்கமாய்க் கொண்டு கணவன் அனுமதியுடன் வேற்று மனிதனுடன் உடலுறவு கொண்டு கருத்தரித்தல். பாண்டு ஆண்மையற்றவன் என்பதால் தேவ குலத்தைச் சேர்ந்த வெவ்வேறு ஆண்களுடன் நியோகம் பயிலும்படி பாண்டு குந்தியிடம் கேட்டுக் கொள்கிறான். அந்நாளைய பண்டிதர்கள் நியோக முறைப்படி வம்ச விருத்தி செய்வதை ஏற்றுக் கொண்டிருந்தாலும் துரியோதனன் இப்போது அதைக் கேள்விக்குட்படுத்தி, நிராகரிக்கிறான். இது குந்தியை கள்ள உறவு பூண்ட நிலைக்குச் செலுத்துகிறது.

வெய்யோன் வரை

வெண் முரசு மீது இதுவரை அதன் வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசும் விமரிசனப்பூர்வமான மதிப்பீடுகள் (critical review ) வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. முதல் நூலான முதற் கனல் ஓரளவு இத்தகைய கவனம் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த நூல்கள் இன்னமும் நல்ல விமர்சனங்களை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பதாகவே படுகிறது. இந்திராபார்த்தசாரதி,நாஞ்சில் நாடன், மற்றும் பி.ஏ கிருஷ்ணன் ஆகியோர், முதற் கனல் குறித்து கருத்து கூறியிருக்கிறார்கள். மற்ற புத்தகங்கள் குறித்து ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.

வேதங்கள்

ஒருபுறம், வேதங்கள் புனிதமான ஞான நூல் என்று பெருமைப்படுத்தப்படுகின்றன- மிகப் பெரும் படைப்பூக்க நிலையில் இயற்றப்பட்ட கவிதைகள் என்றும் எண்ணற்ற ரிஷிகளின் வாக்கு என்றும் போற்றப்படுகின்றன. இந்த ரிஷிகள் ஞானத்தால் பிரகாசம் பெற்ற தம் மதியில், அனைத்து தெய்வீக சிருஷ்டிக்கும் ஆதாரம் என்றும், பிரபஞ்ச ரகசியத்தை வெளிப்படுத்துபவை என்றும் போற்றப்படும் மந்திர உருவம் தரித்த வேத நாதங்களை அடைந்து, அவற்றை உலகுக்கு அளித்தவர்கள் என்று போற்றப்படுகின்றனர்.
இதற்கு மாறுபட்ட புரிதலில் வேதங்கள் இன்னும் பண்பாட்டை அடைந்திராத புராதன காலத்தவர்களின் மூடநம்பிக்கைகளும் கற்பனைகளும் மட்டுமே- மிக மேலோட்டமான லாபங்கள், போகங்களில் நாட்டம் கொண்டவை, அறம் சார்ந்த மிகவும் துவக்கநிலைப் புரிதல்களும் சமய வேட்கைகளும் கொண்டவை. இவர்களைப் பொறுத்தவரை, மிகவும் கொண்டாடப்படும் பேரண்ட விவரணைகளும் நுண்மைகளற்ற அரிச்சுவடி நிலைப் பிதற்றல்கள் மட்டுமே.

ஆழி பெரிது – ஒரு மதிப்புரை

நூலின் பேசுபொருள் வேதப்பண்பாடு. வேதப் பண்பாடு எனும்போது என்றோ, எங்கோ என்பதுபோன்ற அர்த்தம் தொனிப்பதால், நமது பண்பாடு எனும் பதத்தைப் பயன்படுத்துகிறேன். நமது பாரதப் பண்பாட்டின், அனைத்து கூறுகளும், விழுமியங்களும் விதைகொண்டு வேர் விட்ட காலம் வேதகாலம். அன்றைய சமுதாயத்தின் பண்பாட்டின் சிகரமுகமாக விளங்குபவை வேதங்கள். வேதங்கள் எனும் இலக்கியத் தரவுகளைக்கொண்டு,அதன் உள்பரிமாணங்கள், பன்மைத்தன்மை ஆகியவற்றை பல்வேறு அறிஞர்களின், ஆய்வுகளின் முடிவுகளைக்கொண்டு, அன்றைய வேத சமுதாயம் எத்தன்மையதாக உள்ள ஒன்று என்ற சித்திரத்தை முதல் அத்தியாயத்தில் அளிக்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.

ஆயிரம் தெய்வங்கள் – கிரேக்க சோகக்கதை ஆடிப்பஸ்

தம் வளர்ப்புப் பெற்றோர்கள்தான் தன் தாய் தந்தையர் என்று நம்பி வளர்ந்து ஆளாகிறான் ஆடிப்பஸ். ஆனால் ஒரு குடும்பத் தகராறில் அவனது பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டு விடுகிறது. ஆடிப்பஸ் தன் பெற்றோரைத் தேடிச் செல்கிறான். கொரிந்த் நாட்டை விட்டு வெளியேறும் ஆடிப்பஸ் ஒரு நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு பல கிராமங்கள் நகரங்கள் தேசங்கள் என்று தன் தேடலைத் தொடர்கிறான். தன் பயணங்களில் டெல்ஃபி என்ற ஊர் வந்து, அங்கு அருள்வாக்கு கேட்கும்போது “விரைவில் நீ உன் தந்தையைக் கொன்று தாயைத் தாரமாக்கிக் கொள்வாய்” என்று பதில் வந்தது.