பிரேம் திரும்பி வருகையிலேயே அவர் முகம் அரியர்ஸ் அறிவிப்பினைக் கண்ட அரசு ஊழியர் சங்க நிர்வாகியின் முகத்தை ஒத்திருந்தது கண்டு நாங்கள் இனி யோசிக்க வேண்டியதில்லை என்ற ஆசுவாசம் பற்றி பெருமூச்சு விட்டு எங்கள் முகத்தையும் மலர்த்தினோம். சிவாஜிதான் வந்தவுடனே கேட்டார்- “ காயா பழமா ?”. புன்சிரிப்பைச் சிந்திய மறுநொடியே அதற்கான பிராயசித்தமான கடுகடுப்பை முகம் பூசிக் கொண்டு பிரேம் விவரங்ககளை எடுத்துரைத்தார். விவரம் என்னவெனில் வெள்ளி மாலை பள்ளி விட்டதுமே சங்கீதா வீட்டினருடன் கிளம்பி நாகர்கோவில் செல்கிறார், அங்குள்ள ஆச்சி வீட்டில் சனி,ஞாயிறு இருந்து கொண்டாடிவிட்டு திங்கள் அதிகாலை கிளம்பி தெய்வநல்லூர் வந்து சேர்ந்து உடனே பள்ளிக்கு வந்து விடுவதால் திங்கள் அன்று ஒப்படைக்க வேண்டிய வீட்டுப்பாடங்களை எடுத்துச் சென்று எழுத பெரிதும் சிரமப்பட்டிருக்கிறார். ஒரு திங்களன்று வீட்டுப்பாடம் எழுதவில்லை என வீட்டுப்பாட நோட்டை வாங்க வந்த தெண்டிலிடம் சொல்ல தெண்டிலார் காரணம் வினவ தன் நாகர்கோவில் பயணத்தை சொல்லியிருக்கிறார்.
Category: தொடர்கள்
தெய்வநல்லூர் கதைகள் -4
மறுநாள் காலையில் சிவாஜி வீட்டிற்கே வந்து அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிய மு மாரியப்பன் பதட்டத்துடன் சொன்னார் – “ஏல, நம்ம சுனா கானா மருந்தக் குடிச்சிட்டாம்ல. ஜவஹர் டாக்டர் ஆசுபத்திரிக்கு இப்பதாம் தூக்கிட்டு போனாக. வாரியா, போயி பார்ப்போம் “. இவர்கள் சென்று பார்க்கையில் சுனா கானா எனும் சுப்பையா கணேசனின் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. வாழ்க்கையில் பீடி தவிர வேறெதுவும் குடிக்காத, எங்களைக் குடிக்கவிடாத , தனக்குக் கிடைத்த ஒவ்வொரு பண்டத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட, தன் துக்கத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளாத பிரியம் மிக்க நண்பர் சுனா கானா இவ்வாறாக மீண்டும் ஒருமுறை மீள வரமுடியா விதத்தில் எங்களிடமிருந்து சொல்லாமல் விடைபெற்றுக் கொண்டார்.
காசி
காசியில் இறந்து கங்கையில் எரியூட்டப்பட்டால் சொர்கத்திற்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை உள்ளது. “மணிகர்ணிகா படித்துறையில் இறந்தவர்களின் சடலம் வந்து கொண்டே இருக்கும். சதா பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். ஆற்றில் சடலங்கள் மிதக்கும்” என்று முன்பு கதை கதையாகச் சொல்வார்கள். இப்பொழுது அப்படியில்லை. மின்சார எரியூட்டி வந்தபிறகு படித்துறைகள் சுத்தமாகி உள்ளது. ஆனாலும் படிகளில் மரக்கட்டைகள் குவிந்திருந்தன.
வலி மொஹம்மத் வலி
வலி தக்கனி குறித்து எழுத்தாளர் இரா. முருகன் ‘கஜல்’ புத்தகத்தின் முன்னுரையில், //கஜலில் மகாகவியாக விளங்கிய மீர்ஸா காலிப்கூட்த் தன் முக்கியமான இருபது வருடங்களில் உருதுவில் எழுதுவதைத் தவிர்த்து, பாரசீக மொழியிலேயே படைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றும், வட இந்தியாவில் உருது கஜல் செழிக்க தென்னிந்தியக் கவிஞர் வலி தக்கனியின் முயற்சிகளும் காரணம் என்று அறியும்போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன// எனக் குறிப்பிடுகின்றார்.
மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்
புராண இலக்கியவியலர், தேவதத் பட்டநாயக் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் “ ஏன் பல இந்தியர்களுக்கு மேற்கத்திய மீட்பாளர்கள் தேவையாக உள்ளது? அக்கட்டுரை குழப்பமுடையதாகவும் புராண இலக்கியத்தை அதிகமாக வலியுறுத்துவதாகவும் இருந்தது. அது, இராமாயண மஹாபாரத எழுத்தாளருடைய தொழிலுக்கே உரித்தான அபாயம். எப்படியிருந்தாலும், எவருக்கும் தீங்கு செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டதல்ல. எனவே, அக்கேள்வி பதிலை எதிர்பார்த்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே,,மேற்கத்தியர்கள் நிலைப்பாட்டைப் பற்றிய சில உன்னிப்பான கவனிப்புகளையும் பிறகு எனது நிலைப்பாட்டையும் இங்கு தருகிறேன்.
அஜீஸ் பானு தாராப் வஃபா
அஜீஸ் பானுவின் முன்னோர்கள் ஸ்ரீநகரிலிருந்து லக்னோவிற்குக் குடிபெயர்ந்தவர்கள். தங்களுடைய குடும்ப வழமைக்கு மாறாக அஜீஸ் பானுவை மேற்படிப்புக்கு அனுப்பினார்கள். 1929இல் அஜீஸ் பானு லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் பெண்கள் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
நான்கு நாள் மழிக்காத தாடியை தெருக்கோடி நாவிதர் கத்தி வைத்து மழித்து, காசு வேண்டாம் என்றது. சோப் பூசிக் குளிக்காமல் வெறும் நீரில் அரப்புப்பொடி கலந்து தேய்த்துக் கொண்டது. விரித்த கைகள் போல் அகலம் அதிகமான தாமிரப் பாத்திரத்திலிருந்து எடுத்து எடுத்து மேலே பொழிந்து கொண்டு குளித்தது. மேலே துர்நாற்றம் இல்லாமல் சன்னமான பூ வாடை. மறக்க முடியாதது எல்லாம். இந்த சவரமும் குளியலும் பிடித்துப் போனது பரமனுக்கு. சோப்பின் முரமுரப்பும் சுத்தமான மேல் தோல் தரும் புத்துணர்ச்சியும் அரப்புப் பொடி தருவதில்லை தான். சோப்புக்கு எங்கே போக இந்த பழைய பாணி ஊரில்?
ஏ பெண்ணே – அத்தியாயம் இரண்டு
உன்னுடைய தாத்தா, மகனை மௌனமாக இருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு, என்னைப் பார்த்து சிரித்தவாறு, ‘என் மகளை எண்ணி நான் மிகவும் பெருமிதப்படுகிறேன். தொடர்ந்து குதிரை சவாரி செய்திருக்கிறாள். குதிரையை அடக்கத் தெரியும். அதனால்தான் தன் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்றார். உன் தாத்தா பாட்டி இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் உன் அப்பாவோ பயணம் முழுவதும் இறுக்கமாகவே இருந்தார். சாதாரணமாகச்சொன்ன ஒரு விஷயம், எங்கள் இருவருக்கும் இடைவே, கற்பாறையை போல, வெகுநேரம் நின்றிருந்தது. நடுநடுவே, உன் அப்பா, மிகவும் தீவிரமான குரலில் ‘தன்னை பலப்படுத்தி மெருகேற்றிக்கொள்ள இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் குதிரை சவாரி மட்டும் தெரிந்திருந்தால் போதாது’ என்றார். பெண்ணே, ஆணுக்கு எப்போதும் ஆதிக்கம் செய்ய வேண்டும். அவனுடைய இடம் எப்போதும் மேலே, கீழே அல்ல. மறுபிறவி என்ற ஒன்று இருக்குமானால், அடுத்த பிறவியில் நான் ஆணாகப் பிறந்து பார்க்க ஆசைப்படுகிறேன். ஆண், போர் வீரனைப் போல தன் மனைவியையும் குடும்பத்தையும் எப்படி அடக்கி ஆள்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது சிரிப்பதற்கல்ல, மிகவும் ஆழமான விஷயம் பெண்ணே. ஒவ்வொரு பெண்ணும் இதை அறிவாள்.
கடவுளும் காணா அதிசயம்
இசேவின் கதைகள், யமாதோவின் கதைகள், கொக்கின்ஷு ஆகிய நூல்கள் இவர் கிழக்கு ஜப்பானுக்கு இரண்டு உதவியாளர்களுடன் இடம்பெயர்ந்ததைக் குறிப்பிட்டுள்ளன. ஆனால் இரண்டு காரணங்களுக்காக இவ்விடப்பெயர்வு சந்தேகத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. தலைநகர் கியோத்தோவிலிருந்து கிழக்கு நோக்கி இன்றைய தோக்கியோ வரை பயணப்பட்டதில் வழியிலுள்ள முக்கியமான இடங்களில் ஒவ்வொரு பாடலைப் புனைந்தார் என இசேவின் கதைகள் குறிப்பிடுகிறது. ஆனால் பாடல்களின் எண்ணிக்கையும் முக்கியமான இடங்களின் எண்ணிக்கையும் பொருந்தவில்லை. இது முதல் காரணம். மேலும், அரச குடும்பத்தில் பிறந்து உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வெறும் இரண்டே இரண்டு உதவியாளர்களை மட்டுமே அழைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் பயணம் செய்வார் என்பதும் பொருத்தமாக இல்லை.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
ஜிந்த் கௌராகிய நான் இந்திய விடுதலையில் எங்கள் பங்கினைப் பற்றிச் சொல்ல வேண்டிய நேரமிது. கண்ணீராலும். செந்நீராலும் வளர்த்த விடுதலையின் விலையை அனைவரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் அறிய வேண்டும். ஜாலியன் வாலாபாக்கின் சுவர்களில் இன்றும் கூட குண்டுகள் துளைத்த ஓட்டைகளை நீங்கள் பார்க்கலாம். இந்த இடமே தனித்த “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?”
வாக்குமூலம் – அத்தியாயம் 3
ஊர் என்றால் வீடுகளும், கட்டிடங்களுமா ஊரு? இல்லை தெருக்களும், ரோடுகளும் ஊரா? இவங்க என்னென்னவோ புஸ்தகங்களைப் படிச்சுப் போட்டு என்னென்னவோ பேசுறாங்க. அவுகளுக்கும் பொஸ்தகம், சினிமா, நாடகம், கதை இதுதான் உலகம்னு ஆயிப் போச்சு. “வேணும்னா நீயும் சினிமாவுக்குப் போயிட்டு வா”ங்கிறாங்க. டி.வி.யில் போடாத படமா? டி.வி.யில் போடாத நாடகமா? ஒண்ணும் மனசுல ஒட்ட மாட்டேங்குது.
மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
மருது முசாபரை அனுப்பி வைத்து விட்டு, தில்லியில் பகவதிக்கு ஃபோன் செய்ய, அதிகாலைக்கும் முந்திய புலரிப் பொழுதான மூன்றரை மணி தில்லியில். அவளும் அவள் அம்மா வசந்தியும் ராத்திரி சாப்பிடக் கூடப் பிடிக்காமல் காப்பி மட்டும் யாரோ போட்டுத்தரக் குடித்து தில்லியின் அதிகார வம்சத்தை அசைத்து உதவி கேட்டபடி இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. வீடே நண்பர்களும் அண்டை வீட்டுக்காரர்களும் வந்து வந்து போய்க்கொண்டிருக்க சந்தடி மிகுந்து இருந்ததாக பகவதி சொன்னாள்.
நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
எந்த இடத்தில் எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருள் என்று எளிதாகப் புரிந்துகொள்ளத்தான் கான்ஜி எனப்படும் சித்திரவடிவச் சீன எழுத்துருக்கள் உதவுகின்றன. சாதாரணமாக まつ என எழுதப்படும் இந்த மட்சு எனும் சொல்லை 待つ என எழுதினால் காத்திருத்தல் என்றும் 松 என எழுதினால் ஊசியிலை மரம் எனவும் பார்த்தவுடனே எளிதாகப் பொருள்கொள்ளலாம்.
புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19
ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த சில கட்டுரைகளை வாசித்தால், உங்களது இந்தக் குழப்பம் முற்றிலும் குறையும். அதற்கு முன்னர், சில விஷயங்களை இந்த உலகப் பிரச்சினையில் நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
சீமாப் அக்பராபாதி
புத்தரைக் குறிப்பிடும்போது ‘இந்தியத் திருநாட்டின் முதல் ஒளி’ (சர்-ஜமீன்-ஏ-ஹிந்த் கா இர்ஃபானி-ஏ-அவ்வல் ஹை து) என்கிறார். இந்தியாவில் உன் ‘நினைவுகள் இன்னும் புதிதாக உள்ளன / சீனம் ஜப்பான் திபெத் வரை உன் குரல் எட்டியுள்ளது’ என்பது அந்தக் கவிதையில் இருக்கும் இன்னொரு அடி. தன்னுடைய ஹோலி கவிதையில் சீமாப் விடுதலை வேட்கையையும் இணைத்து எழுதியுள்ளார். ‘என் மடியில் முன்னேற்றம் தன் வண்ணங்களை நிறைக்கட்டும் / என்னுடைய ஹோலியின் வருகையைப் போல் விடுதலையும் வரட்டும்’ (இர்த்திகா கே ரங்க் சே லப்ரீஸ் ஜோலி ஹோ மேரி / இங்குலாப் ஐசா கோயி ஆயே தோ ஹோலி ஹோ மேரி).
புவிக்கோளின் கனிமவளம்
இந்த மூன்றாவது கோளில் (புவி ) என்ன அதிசயம்? அதன் உடன் பிறப்புகளின் வளர்ச்சிப் பாதையை விட்டு விலகி வியத்தகு முறையில் பிரிந்து செல்வது ஏன் ? தண்ணீர் தான் காரணம் என்பது உங்கள் இனிய அழகிய அனுமானம்.
நீரில்லாத கோள்களில் உருவாக முடியாத பல்வேறு புதிய கனிமங்கள் இக்கோளில் உருவாக முடிகிறது. …இங்குள்ள அபரிமிதமான கால்சியம் கார்போனேட் (கால்சைட் என்னும் கனிமம் ) பெரும்பாலும் கோளில் வாழ்ந்த உயிரினங்கள் உருவாக்கியது எனத் தோன்றுகிறது. நீங்கள் எப்போதாகிலும் உயிரினப் பயன்பாடு இல்லாத கால்சைட் உருவாதலைக் கண்டிருக்கலாம். …இவ்வளவு கால்சைட் பாறைகள் உருவாகத் தேவையான உயிரினங்களை சாத்தியமாக்கியது இங்குள்ள பெருங்கடல்களே என்று நீங்கள் அனுமானிக்கிறீர்கள்.
பருவம் – சகாப்தத்தின் குரல்கள்
மகாபாரதம் என்ற இதிகாசத்தின் பாதிப்பு இல்லாத இந்திய எழுத்தாளர் இல்லை. இன்றும் கதை கூறும் முறையில் மாகாபாரதமும், இராமாயணமும் முக்கியப் பங்கை வகிக்கின்றன என்றாலும் மகாபாரதம் இலக்கியங்களில் அதிகமாக இடம் பெறும் ஒன்று. தமிழில் பாரதியார் துவங்கி ஜெயமோகன் வரையில் அதை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பருவம் என்பதை பல “பருவம் – சகாப்தத்தின் குரல்கள்”
பரோபகாரம் – தன்னார்வுலா
பிறருக்கு உதவுவது என்றால், பணத்தை நன்கொடையாகக் கொடுப்பது மட்டும்தான் என்பதில்லை. சிரமதானம் என்று சொல்லப்படும் உழைப்பை நன்கொடையாகக் கொடுக்கும் வழக்கு, நாலு பேருக்கு இலவசமாகச் சாப்பாடு போடுவது, கிட்னி / ரத்தம் / கண் தானம், அறிவுரை / புத்திமதி போன்றவை வழியாகப் பிறருக்கு வாழ்வில் முன்னேறச் சரியான “பரோபகாரம் – தன்னார்வுலா”
சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்
1970 –க்கு முந்தைய காலத்தில், இந்தியாவில் அதிக கார்கள் கிடையாது. இன்றைய இரு சக்கர ஊர்திகளின் எண்ணிக்கை, அன்றைய மக்கள் தொகையைவிட அதிகம். இரு சக்கர வாகனம் என்றால் பஜாஜ் ஸ்கூட்டர்கள் மட்டுமே உண்டு. பஜாஜ் ஸ்கூட்டர்கள் பால்காரர்களால், காலைப் பொழுதில், தாங்கள் கறந்த பாலை நகருக்குக் கொண்டு “சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்”
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – இறுதி பாகம்
என் தந்தை யானை போன்ற நினைவாற்றல் கொண்ட சான்றோர். என் அன்னை அன்பும் இலக்கிய நுகர்வும் கொண்டவர். இது போன்ற பெற்றோர் சங்கீதத்தில் தோய்ந்த உறவினரும். இவற்றிலிருந்து கிளைத்தெடுத்த நான் இவற்றில் எவைகளை ஸ்வீகரித்தேன் என்பது விளங்காத விஷயம் தான். தவிர என் தந்தையை முந்தைய தலைமுறை எவ்வெவற்றைக் கொண்டிருந்தார்கள் என்று அனுமானிக்கிற நிலையில் நான் (அவர்களையெல்லாம் பிரத்யட்சமாய்ப் பார்க்காததால்) இல்லை. இப்படியிருக்கும் போது ஆதித்யா யாரிடமிருந்து எவ்வெவற்றை ஸ்வீகரித்தான்…
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை
என் மகன் ஆதித்யா பாடிய கல்யாணி நினைவுக்கு வருகிறது. அப்போது அவனுக்குப் பத்து வயதிருக்கலாம். “தல்லி நின்னு நேர” என்கிற கல்யாணி ராகப் பாட்டை அநாயாசமாகப் பாடினான். அப்போதுதான் அப்பாடலை முதன் முதலில் கேட்கிறேன். அவன் அந்தப் பாட்டை யார் பாடிக் கேட்டான் எப்போது கற்றுக் கொண்டான் என்பதெல்லாம் எனக்குப் புரியாத புதிர்தான் இன்று வரை. அந்தக் கச்சேரியில் அவன் பாடிய பாடல்களை அதற்கு முன் நான் கேட்டதில்லை. அப்போதெல்லாம் ‘அவன் பாடும்போது அந்தப் பாட்டு உண்மையிலேயே வாக்கேயக்காரர்களால் பாடல் பெற்றதா அல்லது இவன் இட்டுக் கட்டிப் பாடுகிறானா’ என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு. இவனுடைய பாடல் தொகுப்பைச் சொல்ல வேண்டுமென்றால் இவன் எப்படி இவற்றைக் கற்றுக் கொண்டான் என்று சொல்ல வேண்டும். அதற்கு முன் இவன் வளர்ந்த விதத்தைச் சொல்ல வேண்டும். அதற்கு இவன் பிறந்த சூழ்நிலையைச் சொல்ல வேண்டும்.
மீட்டர் போட்ட ஆட்டோக் கணிமை
அமேசானின் தரவுமையத்தில் ஏதேனும் பெரிய பிரச்னை வந்து அவர்களின் அனைத்துத் துணுக்குகளும் படுத்துவிட்டால்? இது நடப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றாலும் ஒருசில முறை இது நடந்திருக்கிறதுதான். அப்போது உங்கள் நிறுவனத்தில் எத்தனை அசகாய சூரர்கள் இருந்தாலும் அவர்களால் ஆணிகள் ஏதும் பிடுங்க இயலாது. அமேசான் இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வரையில் நீங்கள் தலைசொறிந்து கிடக்கவேண்டியதுதான். அவ்வாறு நடக்கும்போது அவர்கள் எவ்வளவு நேரம் உங்கள் துணுக்கு செயல்படவில்லையோ…