முகப்பு » தொகுப்பு

இந்திய சினிமா பகுதியில் பிற ஆக்கங்கள்

இந்திய சினிமா, கலை, திரைப்படம் »

‘திதி’  – கன்னடத் திரைப்படம் குறித்து

கி.ரா – வின் ஒரு கரிசல் நாவலை படித்து முடித்த ஒரு மனம் நிறை உணர்வு ததும்பியது படம் பார்த்து முடித்ததும். இத்தனை இயல்பாய், இத்தனை இயற்கையாய் ஒரு படம் எடுக்க முடியுமா?. படம் நெடுகிலும் கேமரா எங்கிருந்தது?. படத்தில் யாருமே நடிகர்கள் இல்லை. நோடேகொப்புலுவின் மனிதர்களையே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம் ரெட்டி. கதை கூட அங்கு நடந்த உண்மையான சம்பவம்தான். படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து, இறுதிக்காட்சி வரை ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகும், உண்மையும், இயல்பும்…ஒரு துளியும் செயற்கை கலக்காத, துருத்தித் தெரியும் காட்சிகளில்லாத…ஒரு அசல் கிராமம் மற்றும் அதன் மனிதர்கள். படத்தில் பின்னணி இசை என்ற ஒன்று கிடையாது.

இந்திய சினிமா, திரைக்கதை, திரைப்படம் »

சாய்ராட்- மராத்தி திரைப்படம் பற்றி

மராத்தி மொழி மனதில் பதிய ஆரம்பித்தது. தொலைக்காட்சி சேனல்களின் மராத்தி நாடகங்களும், பென்னின் கார்னிவல் சினிமாவாக புதுப்பிக்கப்பட்ட மோரேஷ்வர் தியேட்டரில் பார்த்த மராத்தி படங்களும் மராத்தியை புரிந்துகொள்ள உதவின. சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி பேச்சுத் தமிழில் இருக்கும் வேறுபாடு போலவே, மராத்தியின் பல்வேறு பேச்சுவழக்குகளின் வித்தியாசம் புரிய ஆரம்பித்தது. உட்கிராமங்களின் பழைய பேச்சு வழக்கிலிருந்து, நகரங்களின் பேச்சு வழக்கு மிகவும் வித்தியாசப்பட்டது. அரசியல் கடைக்கோடி கிராமம் வரை கோலோச்சியது. ஒரே குடும்பத்திற்குள் கலவரத்தை உண்டாக்குமளவுக்கு அரசியல் வேரூன்றியிருந்தது.

இந்திய சினிமா, திரைக்கதை, திரைப்படம் »

சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்

கிளாசிக் பட வரிசையில் “நாயக்”
1966ஆம் ஆண்டு சத்தியஜித் ராய் அவர்களால் வங்க மொழியில் இயக்கப்பட்டு வெளிவந்த கருப்பு வெள்ளை படம். அரிந்தம் முகர்ஜி என்ற மிகப் பிரபலமான வெகுஜன நடிகனின் உள்மனப் போராட்டங்களின் தொகுப்புதான் இந்தப் படம். வங்க மொழியைச் சேர்ந்த உத்தம் குமார் அந்த நடிகர் பாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் என்றே சொல்லலாம்.
சத்தியஜித் ராய்க்கு அறிமுகம் தேவையில்லை என்றாலும் சில நேரங்களில் ஒரு ஆவணப் பதிவாக சம்பிரதாய மொழியில் அவரைப் பற்றிக் குறிப்பது அவசியமாகிறது. உலகத் திரைப்படத் துறையினரால் தலையில் வைத்துக் கொண்டாடப்படும் ராய் அவர்கள் இதுவரை புனைவகை, ஆவண வகை, குறும்படம் என்ற வரிசையில் மொத்தம் முப்பத்தியாறு படங்களை இயக்கியிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் இந்தியா அளித்த ஆகச் சிறந்த கலைஞன். எப்போதும் உன்னதங்கள் எளிமையில்தான் மிளிர்கின்றன என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை உடைய கலைஞன். இவரது …

அஞ்சலி, இந்திய சினிமா, கிரிக்கெட் »

டாம் ஆல்ட்டர் என்றொரு  கலைஞர்

ஹிந்தியின் பல ஜனரஞ்சக வெற்றிப்படங்களோடு, சத்யஜித் ராய், மஹேஷ் பட், ஷ்யாம் பெனகல் போன்ற தரமான இயக்குனர்களின் படைப்புகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர் ஆல்ட்டர். அஸ்ஸாமியா, தெலுங்கு, குமாவூன் மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார் டாம் ஆல்ட்டர்.  300 திரைப்படங்கள், நாடகங்கள் என இந்தியக் கலை உலகில் பலவருடங்களாகப் பிரகாசித்த ஆளுமை. … இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையை 1983-ல் வென்றபின், அமெரிக்கா சென்றது. அதில் டாம் ஆல்ட்டரும் இடம்பெற்றிருந்ததோடு அந்த ஆட்டத்தில் ஆடவும் செய்தார் அவர்! ஆர்வமாக, விஷய ஞானத்துடன் கிரிக்கெட் பத்திகள் எழுதிய அவர், எண்பது, தொண்ணூறுகளில் மதிக்கப்பட்ட கிரிக்கெட் பத்தியாளர் என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அப்போது வந்துகொண்டிருந்த ஸ்போர்ட்ஸ்வீக், டெபொனேர் (Debonair) ஆங்கில இதழ்களிலும், அவுட்லுக்(Outlook) வார இதழிலும் வெளியான இவரது கிரிக்கெட் விமரிசனக்கட்டுரைகள்,  விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

அனுபவம், இசைத்தெரிவு, இந்திய சினிமா »

ரங்கூன் – விஷால் பரத்வாஜின் திரைப் பயணம்

மக்பூல், ஒரு வயதான தாதா, அவனின் இளம் மனைவி, அவளின் காதலன் என மூவரின் கதை. வழக்கமான கதைகளில் வருவது போல, தோற்றம் எழுச்சி, உச்சம் வீழ்ச்சி எனக் கட்டம் கட்டி, கதை சொல்லாமல், நடுவிலிருந்து துவங்கி, முரண்கள் மோதல்கள் வழியே ஒரு காட்டாறு வீழ்ந்து, கரைமீறி உருவாக்கும் அழிவைச் சொல்லும் படம். வழக்கமாக, மூத்திரப் பை தாங்கும் வரை முதல் பாகம், உணர்வெழும் காதை முடிந்ததும் நகைச்சுவை அல்லது பாடல் எனப் பார்த்துப் பழக்கப்பட்ட மனம், இது போன்ற ஒரு திரைக்கதைக்கு மாற சிரமப்பட்டது. படம் பார்த்து முடிந்து அமைதி கவிழ்ந்த சில மணி நேரங்கள் கழிந்த பின் பேச்சில், மகள் மதுரா, படத்தில் கான்ஸ்டபிள்களாக வரும் ஓம்பூரியும், நஸ்ருதீன் ஷாவும், மக்பெத்தில் வரும் சூனியக்காரர்கள் எனக் காட்டித் தந்தாள். அவர்கள் பெயர் – பண்டிட் / புரோகித்.. வெடித்துச் சிரித்தேன். மக்பூலின் ஷேக்ஸ்பியர் அடிப்படை புரியாமல் பார்த்தாலும், அது தன்னளவில் முழுமையான படமாகத்தான் இருக்கும்.

இந்திய சினிமா, சமூகம், மகரந்தம் »

மகரந்தம்

கிளவுட்ஸ் ஆஃப் சில்ஸ் மரியா (Clouds of Sils Maria) என்னும் படமும் ஸ்விட்சர்லாந்தில் படமாகிறது. தில்வாலே துல்ஹானியா லெ ஜாயேங்கே (Dilwale Dulhania Le Jayenge – DDLJ)வும் ஸ்விஸ்ஸில் படமாகிறது. எந்தப் படத்திற்கு பனிச்சறுக்கு மலையின் உச்சியில் ஆளுயுர பிரும்மாண்ட கட் அவுட் வைத்திருக்கிறார்கள்? விடையை மேலே பார்த்திருப்பீர்கள். இருநூறு படங்களுக்கு மேல் இங்கே படமாகியிருக்கின்றன. ஏன்? காஷ்மீர் பிரச்சினை காரணமா அல்லது வெள்ளைத் தோல் கொண்டவர் நமக்கு சிப்பந்தியாக அடிபணிவது காரணமா என்னும் கேள்விகளை இந்தக் கட்டுரை எழுப்புகிறது. உள்ளூர் சிம்லாவில் படப்பிடிப்பை வைத்தால், கால்ஷீட்டை மட்டும் கொடுத்துவிட்டு டிமிக்கி தருபவர்களை மலைப் பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றால், நாயகன் / நாயகி காணாமல் போகும் தொல்லையில்லாமல் …

இந்திய சினிமா, திரைப்படம் »

சினிமாவும் வரலாறும்- சத்யஜித் ராயின் ‘சதுரங்க ஆட்டக்காரர்கள்’

”எளிதில் எல்லோராலும் இகழப்படுபவையில் எனக்கு ரசனையில்லை. அறச்சீற்றம் இருக்கிறது; ஆனால், அந்த தார்மீகக் கோபத்தை அடையும் அடையும் பாதை மாறுபட்டிருக்கிறது. இரண்டு எதிர்மறை சக்திகளை சித்தரிக்கிறேன்: காலனியம் மற்றும் நிலக்கிழாரியம் (ஃபியூடலிஸம்). வாஜித் மற்றும் டல்ஹவுஸி – ஆகிய இருவரையும் கண்டனம் செய்யவேண்டும். இதுதான் எனக்கிருக்கும் சவால். அந்த கண்டனம் வெறுமனே கூக்குரலாக இல்லாமல், சுவாரசியமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கவேண்டும். இரு அணிகளுக்குமே நல்லனவும் உண்டு; அதையும் சுட்ட வேண்டும். இந்தப் படத்தை நேரடியாகப் பார்க்காமல், கொஞ்சம் பூடகமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.”

அஞ்சலி, இந்திய சினிமா, புகைப்படத்தொகுப்பு »

திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த “அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் இந்தப் படம் வெளிவந்தது. (செய்தி – தினமணி | தினமலர்)
1. காதுள்ளவர்கள் கேட்பார்களாக… – இயக்குநர் ருத்ரய்யா
2. அவள் அப்படித்தான் – சில நினைவுகள் – வண்ணநிலவன்
அஞ்சலிக் குறிப்புகள்

ருத்ரய்யா: அவர் ஓர் அத்தியாயம் – செல்லப்பா
ருத்ரய்யா: என்றுமே அவர் அப்படித்தான்! – கே. ராஜேஸ்வர் :: அவள் அப்படித்தான்’, ‘பன்னீர்புஷ்பங்கள்’, ‘கடலோரக் கவிதைகள்’ போன்ற படங்களின் கதாசிரியர்; ‘அமரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர்.
ஆறுமுகம் ருத்ரய்யா | நிறைவேறாத கனவு – சொர்ணவேல்: அமெரிக்காவின் மிஷிகன் …

இந்திய சினிமா, உரையாடல் »

ஆறு பேர் உரையாடுகிறார்கள் – பெற்றோர் எதிர்க்கும் காதல்

தமயந்தி: சினிமாக்கள் மொத்தம் 7 கதைக்கருக்களைச் சுற்றியே எடுக்கப்படுகின்றன என்கிறார்கள். பெற்றோர் எதிர்க்கும் காதல் என்பதுதான் இவற்றில் மிகவுமே அடிச்சுத் துவைக்கப்பட்ட ப்ளாட்டோ? லட்சத்திப் பத்தாவது படமாய் இந்தக் கருவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் கலெக்ஷன் 100 கோடியைத் தாண்டிவிட்டதாமே? அதிலே 100 ரூபாய் என்னுடையது. வேறு யாராவது பார்த்தீர்களா?

இந்திய சினிமா, திரைப்படம் »

அமோல் பாலேகரின் பங்கர் வாடி

1939 என்று முதல் காட்சியே சொன்னது. ஒரு இருபது வயது இளைஞன் தன் தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெறுகிறான். மகாராஜா கொடுத்த வேலை இது. பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். என்று தந்தை ஆசீர்வதிக்கிறார். இன்னமும் ராஜ விஸ்வாசம் நிலவும் ஒரு காலம் என்று தெரிகிறது. அடுத்து அந்த இளைஞனை பங்கன் வாடிக்கு தன் வேலையில் சேர நடந்து போய்க்கொண்டிருக்கிறான். அந்த கிராமம் ஒரு வரண்ட பிரதேசத்தில். எங்கும் வரட்சி. கடைசியில் அவன் வந்து சேரும் பங்கன் வாடி கிராம எல்லையில் நம் ஊரில் ஒரு பிள்ளையார் கோயிலோ இல்லை, ஐயனார் சிலையோ இருப்பது போல இந்த கிராம எல்லையில் நிறைய கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது படமெடுத்த நாகங்களின் சிலைகள்.

அஞ்சலி, இசை, இந்திய சினிமா, கட்டுரை »

கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 1

ரஃபி என்கிற புயல் திலீப் குமார், ஷம்மி கபூர் முதலிய சூப்பர் ஹீரோக்களுக்குப் பாடும் குரலாகையில் ராஜ் கபூருக்கு முகேஷும், தேவானந்துக்கு கிஷோரும் என்று பொருந்திப் போய் விட்டது. தலத் முகம்மதும், ஹேமந்த் குமாரும் மங்கிப் போகையில் ராஜ் கபூருக்கும், பால்ரஜ் சஹானிக்கும் பின்னணி பாடிய மன்னா டே அசரீரியாகவும், நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் ஆகி விட்டார். ராஜேஷ் கன்னா என்கிற சூப்பர் ஸ்டாரின் வருகை மேதை கிஷோர் குமாரை முன்னணிக்குக் கொண்டு சென்று பிறரைப் பின்னுக்குத் தள்ளிய போதும் மன்னா டே இருந்தார்.

இந்திய சினிமா, திரைப்படம் »

யட்சி – குறும்பட அறிமுகம்

ஒரு பெரிய பாலைவனத்தில் ரெண்டே ரெண்டு ஒட்டகம் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்ததாம். ஒண்ணு பெரிய ஒட்டகம், இன்னொன்னு அதன் குட்டி ஒட்டகம். திடீரென அங்கு வெப்பம் அதிகமானதால், இரண்டு ஒட்டகமும் சேர்ந்து வேறு இடத்திற்கு இடம்பெயர முடிவெடுக்கின்றன. பெரிய ஒட்டகத்திற்கு காலில் அதிகமான காயங்கள் இருந்ததால் வேகமாக முன்னேறி நடக்க முடியவில்லை. ஆகவே சின்ன ஒட்டகத்திடம் “நீ மட்டும் தனியா போயிடு” –ன்னு சொல்லுச்சாம்.

அஞ்சலி, இந்திய சினிமா »

தாகூரின் பேரன்

சொல்லிவைத்தாற்போல அநேகமாகத் தன்னுடைய எல்லா படங்களுக்குமே தேசிய விருது பெற்றவர் ரிதுபர்ண கோஷ். இந்திராணி ஹல்தார், ரிதுபர்ண சென்குப்தா, கிரண் கேர், சுதிப்தா சக்ரபர்த்தி, ராக்கி என ரிதுபர்ண கோஷின் படங்களில் நடித்த நடிகைகளுக்கும் தேசிய விருது தேடி வந்தது. வங்காள சினிமாவின் பெருமைமிகு கலைஞர் அவர்.