எக்காலத்திற்குமான மீள் நிகழும் இன்பங்கள்: சேட்டன்டாங்கோ புத்தகமும் படமும்

அதன் ஏழு மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் கவர்ந்திழுக்கக்கூடியது. என் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வருடமும் இதைப் பார்த்தாலுங்கூட அது எனக்கு நிறைவையே அளிக்கும்” – என்று சூசன் சாண்டாக் எப்போதோ கூறியது காரணமேயின்றி தோன்றி, அந்த நேர்த்தியான படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

இளந்தலைமுறையினரின் விசுவாசமும் மூத்த தலைமுறையின் லாப வாழ்க்கையும்

வடசென்னை திரைப்படம் ரிலீஸாகி மூன்று வருடம் கழிந்த பின்பு அதனுடைய திரைக்கதையின் சாராம்சத்தை அறிந்துக்கொள்ள முனையும் கட்டுரை இது. வடசென்னை தன்னை இரண்டு விதமாக புனைந்துக்கொண்டுள்ளது. ஒன்று அந்நிலத்தின் கதையாக, இன்னொன்று சாபம் – புனைவின் விதியாக. அந்த நிலம் தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னுள்ளிருந்தே மனிதர்களை தெரிவு செய்து அனுப்புகிறது. நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுபவர்கள் அப்புறப்படுத்துபவர்கள் என்கின்ற இருநிலை மனிதர்களையும் …

வெண்முரசு பிள்ளைத்தமிழ்

”ஞாலப்பெருவிசையே, ஞானப்பெருவெளியே, யோகப்பெருநிலையே இங்கெழுந்தருள்வாயே” என விண்ணிலிருந்து உடலிலியாக எழும் கமலஹாசனின் குரல்; மடியில் முலையுண்ணும் சிசுவின் உடலில் விதிர்க்கும் அசைவை  ஒரு அன்னை மட்டுமே அண்மையில் அறியக்கூடிய அவதானமாக ’விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே’ என சைந்தவியின் குரலில் வரும் சரணம்; ‘சொல்லுரைத்து செயல் காட்டி சென்ற அரசே’ ‘இப்புடவியின் மேல் உன் நோக்கு ஒரு கணமும் அணையாதாகுக – என ஆணையும் விழைவும் வேண்டலுமான உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலிக்கும் சரணத்திற்கு ஸ்ரீராமின் குரல்…

பழைய கள்ளு, புது கலக்கல்

VO என்கிற ‘வாய்ஸ் ஓவ’ரிலேயே கதையின் போக்கைச்சொல்லி விடுகின்ற உத்தி இந்தப் படத்தால் தான் பிரபலம் ஆயிற்று என்றே சொல்லலாம். சமூகக் கதைகளுக்கு அது ஓகே, ஆனால் ஒரு த்ரில்லர் படத்துக்கு வாய்ஸ் ஓவரை வைத்தே பெரும்பாலான கதை சொல்வது ஒரு புது யுக்தி என்றுதான் சொல்லவேண்டும்.

தேகயாத்திரை

Soul – Movie Review வாழ விருப்பமில்லாத ஆன்மாவும் சாக விருப்பமில்லாத உயிரும் சந்தித்துக் கொண்டால்? இறுவாய் குறித்த செவ்விந்தியர்களின் கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாமே இருவரின் உரையாடலாக அமைந்திருக்கும். அவர்கள் இருவருக்கும் நடுவே வாக்குவாதம் நடக்கும். அதன் வழியே இறுவாயின் எழுபவத்தைச் சொல்வார்கள். கீழே வரும் சம்பவம் “தேகயாத்திரை”

இனிய நினைவு

இயற்கையிலேயே மகாபாரதக் கதையின் மீது எனக்கிருந்த ஆர்வமே பர்வ நாவலை மொழிபெயர்த்ததற்கான முதல் காரணம். பைரப்பாவின் கதைப்பின்னல் எப்போதும் உணர்ச்சிகரமானதும் வேகமும் கொண்டது. அதன் மீது எனக்கு எப்போதும் விருப்பமுண்டு. எங்கோ நடைபெற்ற கதையாக அன்று, நம் கண் முன்னால் நடைபெறுகிற ஒரு கதையாக நம்பகத் தன்மையுடன் அவர் படைப்புகளைப் படிக்கலாம்.

அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!

எஸ்பிபியின் மறைவுச் செய்தி கேட்டபின் நாள் முழுதும்  உறைந்திருந்த நான் இரவெல்லாம் விழித்திருந்து இதை எழுதுகிறேன். எது என்னை உந்துகிறது  என்பது தெரியவில்லை. அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, அவர் முறித்த சாதனைகள், பாடிய மொழிகள், பெற்ற விருதுகளின் பட்டியல் போன்றவற்றை பேச வேண்டாம் என்று தோன்றுகிறது. எஸ்பிபி “அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!”

நிறமும் நடிப்பும்

எந்தெந்த நடிகர்கள் முகத்தை வெள்ளையடிக்கும் களிம்புகளைப் பரிந்துரை செய்து கொண்டே, “எல்லா நிறமும் ஒன்றே” என்று முழக்கமும் இடுகிறார்கள் என்னும் பட்டியலை இங்கே காணலாம். “கருப்பு நிறம், வெள்ளை நிறம் எல்லாம் ஓர் உயிர்!” என சொல்பவர்களால் எப்படி முகப்பூச்சுப் பொருட்களை உபயோகிக்கவும் சொல்லமுடிகிறது என்னும் வினாவை எழுப்புகிறது “நிறமும் நடிப்பும்”

Poomani

வெக்கையும் ஈரமும்

ஊருக்குள் இருந்தவரை மனத்தில் நிறைந்திருக்கும் கசப்பு, ஆங்காரம், ஏமாற்றம், பழி,வெற்றி, தோல்வி போன்ற சமூகக் கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்டவை அனைத்தும் கரிசல் காட்டுக்குள் நுழைந்ததும் அழிந்துபோய், உயிர் வாழ்தலுக்கான அடிப்படைப் பிரச்சனைகளான பசியும் எதிரிகளிடமிருந்து உயிர் தப்புதலும் மட்டுமே அன்றாடங்களை நிரப்பி ஆதிமனிதனாக்கிவிடும் நிலையை அப்பட்டமாகச் சொல்லும் கதை.

சாதலும் புதுவது அன்றே: An Elephant Sitting Still

ஏராளமான அண்மைக் காட்சிகள், Medium Shot-கள். தேவைப்பட்டாலொழிய, சட்டகத்தின் தெளிக்குவி நடுவத்தில் ஏனைய கதாபாத்திரங்கள் காட்டப்படுவதில்லை. பிரதான கதை மாந்தர்களுடனான உரையாடலின் போது கூட துணைக் கதாபாத்திரங்கள் மங்கலான குவியத்திலேயே (Shallow Focus) விலக்கி வைக்கப்படுகிறார்கள். இசைவான தொலைவிலிருந்து கொண்டு இயங்குகிறார்கள். காமெரா நகர்வுகளில் மந்தமான செயலூக்கமின்மை நிறைந்திருந்தாலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கையில் அது முனைப்பு கொள்கிறது. அத்தகைய தருணங்களில் மட்டும் அவர்களது உருத்தோற்றங்கள் தெளிவு பெறுகின்றன.

நச்சுடை நாகங்கள் இடையே ஒரு நங்கை

ஜுனைதா பேகத்தின் குடும்பத்தில் அவருக்கு முன்பும் பின்பும் பல அறிஞர்களும், தமிழ் மொழி வித்தகர்களும் இருந்திருக்கின்றனர். இருக்கிறார்கள். ”என் இளம் வயதிலிருந்தே சாதிசமய வேறுபாடுகள் என் உள்ளத்தில் இடம் பெற்றதில்லை. எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற மனப்பான்மையே என் உள்ளத்தின் ஆணிவேர்” என்று ஒரு முகவுரையில் உறுதியாகக் கூறும் ஜுனைதா பேகத்தின் கட்டுரைகளில் அவர் இஸ்லாமும் பெண்களும் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறார். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சொத்துரிமை, விவாக ரத்து உரிமைகளைப் பற்றிக் கூறுகிறார். பெண்கள் சினிமா பார்க்கலாமா என்ற கேள்வி எழும்போது, அராபிய மன்னர் இப்னுசௌத் கூறியதை அவர் எடுத்துக்காட்டுகிறார். ”குர் ஆனும் ஹதீதுகளும் …

அஞ்சலி: ஆனியெஸ் வர்தா

நேற்று என் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவு என்னைத் துயரிலாழ்த்தியது. ஃபிரெஞ்சு சினிமாவின் முதுபெரும் மேதை ஆனியெஸ் வர்தா மறைந்த செய்தி குறித்த தன் வருத்தத்தை அவர் எழுதியிருந்தார். இந்த மேதையின் திரைப்படங்களில் எனக்குப் பிடித்த படங்கள் குறித்த நினைவுகள் கிளர்ந்தெழுந்தன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் “அஞ்சலி: ஆனியெஸ் வர்தா”

ஆனியெஸ் வர்தா

திரைப்படத் துறைக்கு வெளியிலிருந்து வந்து, ஒரு படத்தைக் கூட அதுவரையில் இயக்காமலே, தன் சொந்தப் பணத்தையும், நண்பர்களின் உதவியை மட்டும் மூலாதாரமாகக் கொண்டு, சராசரி பிரெஞ்சுப் படங்களின் பட்ஜெட்டின் பத்தில் ஒரு பங்கில், முக்கியமான ஒரு படத்தை எடுத்தார் என்பதுதான் Bazin போன்ற விமர்சகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது அவரது Cinecriture அழகியல் கோட்பாடுகளுடன், Cine-Tamaris என்ற அவரது தயாரிப்பு நிறுவனமும் புதுஅலைக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது என்பதே வர்தாவின் சாதனை.

ராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity: புத்தக விமர்சனம்

ராபர்ட் கனிகல் எழுதிய The Man Who Knew Infinity என்ற புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரு வேறு நண்பர்களிடமிருந்து எனக்கு பரிசாய்க் கிடைத்தன. அதுவும் ஒரே டிசம்பர் வாரத்தில் இரு வேறு நாட்களில் இந்தப் புத்தகங்கள் என்னை வந்தடைந்தன (இதோ இதை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதியும்கூட புத்தக காதலர்களுக்கு விசேஷமான நாள்: இன்று சர்வதேச புத்தகப் பரிசு தினம் கொண்டாடப்படுகிறது). ஆங்கில புத்தகத்தைக் கொடுத்த நண்பரும் நானும் ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் புத்தக பரிவர்த்தனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த வழக்கப்படி ஆங்கில பிரதி கிடைத்ததில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. 2015ல் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வையொட்டிய இந்தப் புத்தகம் திரைப்படமாக வடிவெடுத்து வெளிவந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் படம் பார்த்திருந்ததால் கதையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது நினைவில் நன்றாகவே பதிந்திருந்தது. எனவே, “அப்புறம் படிக்கலாம்,” என்று ஆங்கிலப் பிரதியை எடுத்து வைத்திருந்தேன்.

‘திதி’ – கன்னடத் திரைப்படம் குறித்து

கி.ரா – வின் ஒரு கரிசல் நாவலை படித்து முடித்த ஒரு மனம் நிறை உணர்வு ததும்பியது படம் பார்த்து முடித்ததும். இத்தனை இயல்பாய், இத்தனை இயற்கையாய் ஒரு படம் எடுக்க முடியுமா?. படம் நெடுகிலும் கேமரா எங்கிருந்தது?. படத்தில் யாருமே நடிகர்கள் இல்லை. நோடேகொப்புலுவின் மனிதர்களையே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம் ரெட்டி. கதை கூட அங்கு நடந்த உண்மையான சம்பவம்தான். படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து, இறுதிக்காட்சி வரை ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகும், உண்மையும், இயல்பும்…ஒரு துளியும் செயற்கை கலக்காத, துருத்தித் தெரியும் காட்சிகளில்லாத…ஒரு அசல் கிராமம் மற்றும் அதன் மனிதர்கள். படத்தில் பின்னணி இசை என்ற ஒன்று கிடையாது.

சாய்ராட்- மராத்தி திரைப்படம் பற்றி

மராத்தி மொழி மனதில் பதிய ஆரம்பித்தது. தொலைக்காட்சி சேனல்களின் மராத்தி நாடகங்களும், பென்னின் கார்னிவல் சினிமாவாக புதுப்பிக்கப்பட்ட மோரேஷ்வர் தியேட்டரில் பார்த்த மராத்தி படங்களும் மராத்தியை புரிந்துகொள்ள உதவின. சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி பேச்சுத் தமிழில் இருக்கும் வேறுபாடு போலவே, மராத்தியின் பல்வேறு பேச்சுவழக்குகளின் வித்தியாசம் புரிய ஆரம்பித்தது. உட்கிராமங்களின் பழைய பேச்சு வழக்கிலிருந்து, நகரங்களின் பேச்சு வழக்கு மிகவும் வித்தியாசப்பட்டது. அரசியல் கடைக்கோடி கிராமம் வரை கோலோச்சியது. ஒரே குடும்பத்திற்குள் கலவரத்தை உண்டாக்குமளவுக்கு அரசியல் வேரூன்றியிருந்தது.

சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்

கிளாசிக் பட வரிசையில் “நாயக்” 1966ஆம் ஆண்டு சத்தியஜித் ராய் அவர்களால் வங்க மொழியில் இயக்கப்பட்டு வெளிவந்த கருப்பு வெள்ளை படம். அரிந்தம் முகர்ஜி என்ற மிகப் பிரபலமான வெகுஜன நடிகனின் உள்மனப் போராட்டங்களின் தொகுப்புதான் இந்தப் படம். வங்க மொழியைச் சேர்ந்த உத்தம் குமார் அந்த நடிகர் “சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்”

தமிழக அரசியலும் ரஜினிகாந்தின் முடிவும்

தமிழகத்தில் பிற துறைகளில் மக்களுக்காக உழைத்த, வெற்றி பெற்ற சாதனையாளர்கள் ஏராளமாக உள்ளனர். அப்துல் கலாம், கேன்சர் மருத்துவர் டாக்டர் சாந்தா, ராக்கெட் சயிண்டிஸ்டுகள், பொறியாளர்கள், மக்களிடம் சிந்தனை மாற்றத்தை எற்படுத்த விரும்பிய எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற சிந்தனையாளர்கள், நீர் ஆதாரத்தை இணைக்கத் திட்டமிடும் ஏ.சி.காமராஜ் போன்ற பொறியாளர்கள் இன்னும் பல நூறு திறமையான நிர்வாகிகள் சமூக சேவகர்கள் எவருமே மக்களிடம் ஓரளவுக்கு பிரபலமடைந்திருந்த போதிலும் தேர்தல் என்று வரும் பொழுது அவர்களை எந்நாளும் மதித்துத் தமிழர்கள் ஓட்டுப் போட்டதில்லை. எம்.எஸ்.உதயமூர்த்தி ஒரு சோதனை முயற்சியாக…

நான் கடவுளாக இருந்தால்

ஏழாம் வகுப்பு மாணவனுக்கு கடவுள் ஆகும் சக்தி கிடைத்தால் என்ன யோசிப்பான்? வகுப்பில் கடுப்பேற்றுபவர்களை தண்டிப்பானா? உலகத்தைத் தனக்கேற்றவாறு மாற்ற நினைப்பானா? பால்ய கால சினேகிதியை கவர விரும்புவானா? கீழே குறும்படம்:

கரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்

படத்தின் நாயகன் “கே” ஒரு நகலர் பொம்மையை தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்த பொம்மையின் பெயர் “மகிழ்ச்சி” (Joi). அது “கே” என்ன விரும்புகிறானோ அந்த ஆடையை அணிகிறது. “கே” செத்தால் தானும் உடனே மரிக்க நினைக்கிறது. “கே” என்னும் நகலனை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறது. “கே” என்ன நினைக்கிறானோ, அதை அப்படியே கிளிப்பிள்ளை போல் திரும்பி உறுதி செய்து அவன் முன்மொழிந்த எண்ணங்களை மறுமொழிகிறது. இது அத்தனையையும் சொந்தமாக சிந்தித்து நிதானமாக யோசித்து தன்னுள்ளே விவாதித்த பின் தீர்மானித்தது போல் நம்பகமாக “கே”யின் முடிவுகளை ஆதரித்து அவனை குஷியாக்குகிறது. கடையில் இந்த “மகிழ்ச்சி”யை “காதல்” கொன்றுவிடுகிறது.

குரங்கில் இருந்து பிறந்து…

படத்தின் துவக்கக் காட்சியில் “விவேகம்” அஜீத் போல் சீஸர் அறிமுகம் செய்யப்படுகிறார். போரில் வெற்றியை அடைகிறார். அதன் பின் ஒவ்வொரு விதமான குரங்கும் அவர் வரும் வழிவிட்டு விலகி, வணக்கம் செலுத்தி, மரியாதையையும் தலைவன் என்னும் மதிப்பையும் உணர்த்துகின்றன. அதன்பின் வரும் இரண்டரை மணி நேரமும் சீஸரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. சீஸர் எவ்வாறு தன் குடும்பத்தை இழக்கிறது என்பதில் துவங்கி, மனிதன் போல் கோபம் தலைக்கேறி பழிவாங்கும் வெறி தலைதூக்குவதிற்குச் சென்று, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டு, தப்பிக்க யோசிப்பது வரை எல்லாம் சீஸர். ”அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்; நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்; யான்/எனது அற்ற மெய்ஞ்ஞானமது அருள்வாய் நீ” என சீஸர் குரு கவசம்…

மொழியியல்

சென்ற வருடம் உலகெங்கும் சிறிது பரபரப்பை உண்டாக்கிய அறிவியல் புனைவுப் படமான  ‘அரைவல்’ படத்தில் காண்பிக்கப்பட்ட ஏலியன்களுடன் ஆன உரையாடலுக்கும், நிஜ வாழ்க்கையில் நடக்கும் மொழியியல் ஆராய்ச்சிக்கும் எவ்வளவு நெருக்கம் உள்ளது என்று நாம் யோசித்திருக்கலாம்.

சினிமா நடிகர் சோ

அவர் நடித்த மேடை நாடகம் ஒன்று சிவாஜிகணேசன் நடிக்க சினிமாவான பொழுது அவர் நாடகத்தில் நடித்த வேடத்தில் நடிப்பதற்காக சினிமாவுக்கு அழைக்கப் பட்டார். தன் வீட்டுக்குத் தெரியாமலும் தயக்கத்துடனுமேயே சினிமாவுக்குள் நுழைந்த சோ கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் புகழ் பெற்ற ஒரு நடிகராகவே தொடர்ந்தார். கணீரென்று தனித்துவமான குரல், சமயோதிடமான நையாண்டி, போகிற போக்கில் செய்யும் கேலிகள் தவிர்த்து அவர் ஒரு நல்ல ஸ்லாப்ஸ்டிக் காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நிலை பெற்றார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நூற்றுக்கணக்கான சினிமாக்களில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். எம் ஜி ஆரின் கட்சியான தி மு க வை அவர் கடுமையாக விமர்சனம் செய்த போதிலும் கூட எம் ஜி ஆரின் பல படங்களில் தொடர்ந்து காமெடி ரோல்களை சோ செய்து வந்தார்.

ஆஸ்கார் விருதுக்கு கருதப்பட வேண்டிய 16 படங்கள்

ஹாலிவுட் படங்களில் கருப்பர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் தருவதில்லை; அப்படியே ஆப்பிரிக்க அமெரிக்கர்களை நாயகர்களாகக் காட்டினாலும், எதிர்மறை கதாபாத்திரங்கள் மட்டுமே தருகிறார்கள் என்பது சென்ற வருட ஆஸ்கார் விருதுகளின் போது முக்கியமான நடைமுறை சிக்கலாக முன்னிறுத்தப்பட்டது. அதன் மூலம் சிறுபான்மையினரையும் பெண்களையும் தற்பால்விரும்பிகளையும் நடுநாயகமாகக் கொண்ட படங்களை எடுப்பதில் எல்லோரும் “ஆஸ்கார் விருதுக்கு கருதப்பட வேண்டிய 16 படங்கள்”

உச்சைசிரவஸும் குரங்கும்

சென்னையின் ஆட்டோ ஒட்டுனர்கள் இருந்தார்கள். ’இந்த இடத்திற்கு வர முடியாது’ என்பார்கள். ‘இங்கே போக வேண்டுமென்றால் டபுள் ரேட்’ என மிரட்டுவார்கள். அவர்களில் சில சந்தேகாஸ்தபமான, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். ஓலா முளைத்தது. செல்பேசியில் அவர்களை பார்க்கலாம். எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியலாம். ஓலா ஓட்டுனர்களுக்கு, நீங்கள் சாவுகிராக்கியா, நல்ல கிராக்கியா என்பதை அறிய முடியும். இது குழப்பவாத குரங்குகளின் செய்கை.

தூஷன் மகவேவ் எனும் மனோவசியக்காரன்

உழைக்கும் வர்க்கம், வர்க்க பேதம், அரசு நிர்வாக அமைப்பின் அதிகாரப் படிநிலை ஆகிய கருத்துருவாக்கங்களின் பின்புலத்தில், பல்கேரிய எல்லைப் பகுதியில் யூகாஸ்லேவியாவில் உள்ள போர் (Bor) என்ற தொலைதூர மலைப்பிரதேசத்தை இந்தத் திரைப்படம் களமாய்க் கொள்கிறது. திரைப்படத்தில் இடம்பெறும் வழிகாட்டியின் குரலில் அரசுபிரசாரத்துக்கே உரிய போற்றுதல்கள் (“தாமிரம், வெள்ளி மற்றும் தங்க உற்பத்தியில் உலக அளவில் முதன்மை நிலை வகிக்கும் மையங்களில் ஒன்று”) அடிப்படை வசதிகளற்ற, சாம்பல் பூச்சு கொண்ட பின்னணியில் படம் பிடிக்கப்பட்டிருகின்றன.

வஞ்சினங்களின் காலம்

வேட்டைச்சமூகம் ஆரம்பகாலத்தில் பசியைத் தணிக்கும் உணவுக்காக வேட்டையாடியது. பிறகு தற்காப்புக்காக வேட்டையாடியது. அதையடுத்து, வேட்டைப்பொருளுக்கு சமூகத்தில் ஒரு விலை உள்ளது என்று தெரிந்துகொண்டதும் வணிகத்துக்காகவும் வேட்டையாடியது. வேட்டையில் சாகசமும் வஞ்சினமும் இருமுனைகள். மனிதன்மீது விலங்கும் விலங்கின்மீது மனிதனும் கொள்ளும் வஞ்சினம் ஒருவகை. மனிதகுலமே ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் வஞ்சினம் வேறொரு வகை. வஞ்சினம் என்பது ஒரு கோணத்தில் அணையாத நெருப்பு.

ஶ்ரீவித்யா: துயர விழிகளின் தேவதை

இந்த திரைப்படத்தில், மற்றப் படங்களில் சாத்தியமில்லாத பல தனித்துவமான காட்சிகளில் ஶ்ரீவித்யா மிக அழகிய அபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அலுவலகத்தில் வேண்டுமென்றே வேணுவை உற்றுப் பார்த்துவிட்டு… பிறகு வேணு அவரைப் பார்க்கும்போது ஒரு கேலிச்சிரிப்புடன் குனிந்துகொள்ளும் ஶ்ரீவித்யாவின் பார்வை… காபி அருந்த அழைத்துச் செல்லும்போது, வேணுவை பார்த்து உருவாகும் கேலிச்சிரிப்பை கைவிரலால் மூடி அடக்கியபடி பார்க்கும் பார்வை…… என்று படம் முழுவதும் விழிகளின் விழா.

சினிமாவும் வரலாறும்- சத்யஜித் ராயின் 'சதுரங்க ஆட்டக்காரர்கள்'

”எளிதில் எல்லோராலும் இகழப்படுபவையில் எனக்கு ரசனையில்லை. அறச்சீற்றம் இருக்கிறது; ஆனால், அந்த தார்மீகக் கோபத்தை அடையும் அடையும் பாதை மாறுபட்டிருக்கிறது. இரண்டு எதிர்மறை சக்திகளை சித்தரிக்கிறேன்: காலனியம் மற்றும் நிலக்கிழாரியம் (ஃபியூடலிஸம்). வாஜித் மற்றும் டல்ஹவுஸி – ஆகிய இருவரையும் கண்டனம் செய்யவேண்டும். இதுதான் எனக்கிருக்கும் சவால். அந்த கண்டனம் வெறுமனே கூக்குரலாக இல்லாமல், சுவாரசியமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கவேண்டும். இரு அணிகளுக்குமே நல்லனவும் உண்டு; அதையும் சுட்ட வேண்டும். இந்தப் படத்தை நேரடியாகப் பார்க்காமல், கொஞ்சம் பூடகமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.”

உலக சினிமா: அன் ஷியான் ஆண்டலூ-வின் கல்வீச்சுப் பார்வை

அன் ஷியான் பற்றிப் பேசுவதானால் இன்று அழியாப் புகழ்பெற்றுவிட்ட கண்ணைக் கீறும் காட்சியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தக் காட்சி ஒரு பெண்ணின் முகத்தில் துவங்குகிறது. அவளது இடப்புறம் ஓர் ஆடவனின் உருவம் தோள் வரை தெரிகிறது (அந்த உருவம் இப்போது ஒரு டை அணிந்திருக்கிறது). அது தன் இடக்கை பெருவிரலையும் சுட்டு விரலையும் கொண்டு பெண்ணின் கண்களை அகல விரிக்கையில் வலக்கரம் திரையின் கீழ்பாதியில் ஒரு சவரக்கத்தியோடு நுழைகிறது. அந்தக் கத்தி பெண்ணின் கண்ணைக் குறுக்கே கிழிக்க வருகிறது. (இந்தக் காட்சி ஸெர்கி ஐஸன்ஷ்டைனின் (Sergei Eisenstein) Battleship Potemkin படத்தில் துப்பாக்கியின் முனைக்கத்தியால் ஒரு பெண்ணின் கண் சிதைக்கப்படும் நாடகீயத் தருணத்தை நினைவுறுத்துகிறது).

ஹிட்லரின் இறுதி நாட்கள்: திரைப்பட அறிமுகம்

முடிவு நெருங்குவதை உணரும் ஹிட்லர், ஈவா பிரௌனைப் பதிவுத் திருமணம் செய்துகொள்கிறார். ராணுவ அதிகாரி மோங்கேயிடம் ஹிட்லர், ”பெர்லினை இன்னும் எவ்வளவு நேரம் காப்பாற்ற முடியும்?” என்கிறார். ”ரஷ்யப் படையினர் சில நூறு மைல்கள் தூரத்திலேயே உள்ளனர். 20 மணி நேரம்தான் காக்கமுடியும்.” என்கிறார் மோங்கெ. ஹிட்லர் தான் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்கிறார். பிறகு தனது பாதுகாவலர் குன்ஸியை((Gunze) ) அழைக்கும் ஹிட்லர், ~~நாங்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்த பிறகு, எங்கள் உடல்கள் ரஷ்யப்படையிடம் கிடைத்தால், அதை மியூசியத்தில் காட்சிப்பொருளாக வைத்துவிடுவார்கள். எனவே எங்கள் உடல்களை உடனே எரித்துவிடவேண்டும்.” என்று தெரிவிக்கிறார். குன்ஷா (Günsche) 200 லிட்டர் பெட்ரோல் தயார் செய்து வைத்துக்கொள்கிறான்.

அன்னியத்தை அகற்றும் பேராண்மை- பிரெஞ்சு திரைப்படம்: த க்ரேட் மான்

படத்தின் கட்டமைப்பும் உள்ளீடும் ஒன்றையொன்று தாங்கிப் பிடிப்பதோடு ஒன்றை மற்றது விளக்குவதாகவும் அமைந்திருக்கின்றன. பிணைப்பு பளுவாகாமல், ஒன்றிய இயக்கமாகி விடுகிறது. ஒன்று தூக்கலாக அமைந்து கவனத்தைக் கவ்வினால் மற்றது தன் பின் தேங்கிய இருப்பில் ஒன்றாத இயக்கமாகக் காட்சிகள் அமைந்து உறுத்தத் துவங்கும். சில சமயம் சிறந்த இயக்குநர்களிடம் கூட இந்த இணைப்பில் அபசுருதி நுழைந்து நம்மை அன்னியமாக்கும். அண்டோனியானியின் ரெட் டெஸர்ட் படத்தை இன்று பார்த்தால் அதில் கருத்தியலால் நகர்த்தப்படும் காட்சிப்படுத்தலின் செயற்கைத் தன்மை உறுத்தவே செய்கிறது. அன்னியப்படுத்தலைச் சொல்ல வந்த படம் அன்னியமாக்கி வைப்பதால் அந்த ‘அனுபவத்தை’ நமக்குக் கொடுப்பதில்லை. ஒரு வகையில் கலை என்பது ஒரே நேரம் இந்த சாளரத்தன்மையைக் கொண்டதாகவும், அதை மறக்கடித்த ஈடுபாட்டை நம்மிடம் கொடுத்து விடுவதாகவும் இருக்கையில் அது வெற்றி பெறுகிறது. கலையின் நோக்கம் வெற்றி பெறுவதல்ல, மாறாக நம்மை நம்மிடமிருந்து அகற்றி நம்மில் வேறொன்றை நிரப்புவது.

எம்எஸ்வி: விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பங்களிப்பு

எம்எஸ்வி இசை பற்றி பேசுமுன், தமிழ் திரையிசையின் வளர்ச்சியில் விஸ்வநாதன் ராமமூர்த்தி விட்டுச் சென்ற தாக்கம் என்னவென்று பார்ப்போம். தமிழ் திரையிசையை கர்நாடக சங்கீதத்தின் பிடியிலிருந்து விடுவித்து நவீனப்படுத்தியவர்கள் இவர்கள் என்பதை ஏற்கனவே பேசிவிட்டோம். அதையடுத்து இரண்டாவது முக்கியமான விஷயம், 1961-65 வரையான ஐந்து ஆண்டுகளின் இசை என்பதே இவர்களின் இசை என்று சொல்லுமளவு ஆதிக்கம் செலுத்தியவர்கள் இவர்கள் என்பதுதான். இந்தப் பாடல்களில் எது விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் என்று ஊகிக்க முடிகிறதா பாருங்கள்.

எம்எஸ்வி இசையும் காலமும் – 3

இதுதான் “எங்க வீட்டுப் பிள்ளை”யின் ஆண்டு. இதில் வரும், “நான் ஆணையிட்டால்” என்ற எம்ஜிஆர் பாடல், மிகப் பிரபலமானது என்பது மட்டுமல்ல, மிகவும் பகடி செய்யப்பட்ட பாடலும்கூட. அதன் சக்தி வாய்ந்த, தொடர்ந்து ஒலிக்கும் தாளம், டிஎம்எஸ்சின் குரல், எம்ஜிஆரின் வசீகரத் தோற்றம், பாடல்கள்- அனைத்தும் இந்தப் பாடலில் ஒன்று சேர்ந்து எம்ஜிஆரின் பிம்பத்தை நம் மனங்களில் உயர்ந்தி நிறுத்துகின்றன. இடையிசையில் ஸ்பானிஷ் புல்-பைட்டுகளை நினைவுபடுத்தும் கிடார் இசைப்பது இந்தப் பாடலுக்கு கச்சிதமாகப் பொருந்து வருகிறது.

மிதுனம்: பண்பாடு – பன்னாடு – பெற்றோர்

மனதிற்கு நெருக்கமான கதை அமைந்திருப்பது நேர்மையான காரணமாக இருக்கும். என்னுடையப் பெற்றோரை இந்தப் படத்தில் பார்த்து இருப்பதால் பிடித்து இருக்கும். அல்லது எங்களையே, இன்னும் சில பத்தாண்டுகள் கழித்து இப்படி பார்ப்பதால் கூட இருக்கலாம். இந்தியாவில் தன்னந்தனியே விடப்பட்டிருக்கும் அனாதைப் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். அந்த மகன்/ள்கள் ஐவரும், சௌக்கியமாக அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், இன்ன பிற பரதேசங்களிலும் குடிபுகுந்து விட்டார்கள். அப்பாதாஸ் என்னும் தந்தையாக எஸ்.பி.பி. புச்சி லஷ்மி என்னும் தாயாராக லஷ்மி. இந்த இருவரும் சேர்ந்து மிதுனம்.

மேற்கில் சின்னத்திரை

முதலில் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், தலைமைப் படைப்பாளியின் கண்காணிப்பில் மூன்று மாத காலம் தினமும் பத்து மணி நேரம் அவர்கள் வைத்திருக்கும் கதையை விவாதம் செய்வார்கள். முதலில் அந்த தொடருக்கான தொடக்கம் (ஓபனிங்) (இது தொடர் முழுக்க வரும்). பிறகு சென்ற வாரம் என்ன நடந்தது என்பதற்கான டீசர் (இது இரண்டாவது பகுதியில் இருந்து வரும்). பிறகு ஒரு மணி நேரம் ஒரு எபிசொட் என்றால், நான்கு விளம்பர இடை வேளைகள், ஆக நான்கு பாகமாக சீன்கள் பிரிக்கப்படும். ஏனென்றால், விளம்பரம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் மீண்டும் பார்ப்பதற்காக முடிச்சு இந்த நான்கு பாகங்களின் முடிவில் இருக்க வேண்டும்.

எம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2

இந்தப் படத்தில் உள்ள இன்னுமொரு ஹிந்துஸ்தானி பாணி பாடல் இன்றும் இசை ஆர்வலர்களைக் குழப்புகிறது- இரவும் நிலவும், என்ற மகத்தான வெற்றி பெற்ற பாடலைச் சொல்கிறேன். இது என்ன ராகம்? விஷயம் தெரிந்தவர்கள் தொடர்ந்து இது குறித்து விவாதித்து வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் இது திலக் காமோத் ராகம் என்று உறுதியாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் வி.வி. சுப்ரமணியம் உரையாற்றும்போது ஒரு முறை, இதன் ராகம் குறித்து மதுரை கிருஷ்ணனிடம் பேசியதாகச் சொன்னார். இந்தப் பாடல் ஷியாம் கல்யாண் ராகத்தில் அமைந்தது என்று மதுரை கிருஷ்ணன் சொன்னாராம்.

எம்எஸ்வி – 1 இசையும் காலமும்

ஒரு ராகத்தின் ஸ்வரூபத்தில் நிற்பதும், அந்த ராகத்தைத் தெளிவாக நிறுவுவதும்தான் செவ்வியல் இசையின் முக்கியமான தேவை. அந்த ராகத்தின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தவும் சாகித்யகர்த்தா முயற்சிப்பார். திரையில் தோன்றும் காட்சி பார்வையாளர் மனதில் எழுப்பக்கூடிய உணர்ச்சிதான் திரையிசைக்கு மையம், அதன்பின்தான் ராக வியாபகம் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்தான் ராக இலக்கணத்தில் இல்லாத சுவரங்களை திரை இசையமைப்பாளர் சேர்த்துக்கொள்ள முடிகிறது. இது தவிர ஒரு ராகத்தின் அத்தனை இயல்புகளையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை திரையிசையமைப்பாளருக்கு இல்லை. காட்சிக்குத் தேவைப்பட்ட உணர்வை வெளிப்படுத்தினால் போதும். விளங்கிக் கொள்ள, ஐம்பதுகளில் வெளியான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களைப் பார்த்தால் இவற்றுக்கு இடையிலான வேறுபாடு புலப்படும்.

இன்னும் கொஞ்சம் (நிறைய) எம்.எஸ்.வி – கேட்டவரெல்லாம் பாடலாம்

பாலக்காட்டுக்கு அருகே எலப்புள்ளி எனும் கிராமத்தில் பிறந்த எம்.எஸ்.வி. தனது 25வது வயதில் 1953ல் ‘ஜெனோவா’ என்கிற படத்துக்கு முதன் முதலாக இசை அமைத்தார். பாடல்களைக் கேட்ட கதாநாயகன் எம்.ஜி.ஆர்., ஆபீஸ் பையனாக இருந்து இசை அமைப்பாளர் ஆன எம்.எஸ்.வி.யை வாழ்த்தி மேலும் பல சந்தர்ப்பங்களை அளிப்பதாக உறுதி கூறினார். 1955ல் திரையிசையைக் கேட்க ஆரம்பித்த எனக்கு சி. ஆர். சுப்பராமன், எஸ். வி. வெங்கடராமன், ஜி. ராமநாதன், எஸ். எம். சுப்பையா நாயுடு, தட்சிணாமூர்த்தி, ஆர். சுதர்ஸனம், ஆர். ராஜேஸ்வர் ராவ், ஆதி நாராயணராவ், சலபதி ராவ், கே. வி. மஹாதேவன் மற்றும் பலரின் இசையில் இசைத் தேடல் தொடர்ந்தது.

புறமறி அகம்: இன்ஸைட் அவுட் – ஹாலிவுட் படம்

மஹாபாரதத்தில் போர்தான் மையத்தில் இருக்கிறது என்றாலும் அதற்குப் பீடிகை பலமாக இருக்கும். அந்தம் அத்தனை ருசியாக இராது. ஆனால் செம்புராணம் என்பதால், துவக்கம், இடைச் செடுக்கு, முடிச்சவிழ்ந்ததும் சோகம், புதுத் துவக்கத்திற்கான சுட்டல் என்று அமைப்பு. கரு என்றால் யுத்தமா கரு? கதையில் process என்பது பேரியக்கத்தை கொடுக்கிறது, கொணர்கிறது, முடிவுக்கும் வழி சொல்கிறது. ஆனால் விதையும் வேறு, கனியும் வேறு, கனிக்குள் இருக்கும் வித்தும் வேறு. இழுபறியான போராட்டங்கள் வாழ்வே போன்ற சித்திரிப்பு. தீமைக்கும் ஒரு தர்க்கம் உண்டு; அது அ-தர்க்கம் அல்ல; ஆனால் விடாப்பிடிவாதத்தின் ஒரு கோணல், திருகல், திருகலை நேர் என்றே நினைக்க வைக்கும் பிரமை

மௌனத் திரைப்படயியலின் வீழ்ச்சியின்பின் மாற்றுப் படங்களின் பிரக்ஞையின்மை

பெர்க்மென், ஃபெலினி, ப்ரெஸ்ஸன், தார்க்கோவ்ஸ்கி முதல் இன்று வரையிலான அந்த பட்டியலிலுள்ள பெயர்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கலைப் படங்கள் உருவான பிறகு சினிமா யதார்த்த வெளியை நம்பி இறங்கிய நேரத்தில் ஆங்காங்கு ஆவணப்பட திட்டங்களும் தோன்றி செயல்பட ஆரம்பித்தன. இதுதான் ஆவணப் படம் என்று தனித்து நிற்கும் அளவுக்கு அதன் பங்குகள் குறை சொல்ல முடியாதவை. அவை யதார்த்த சூழலை மட்டுமே சார்ந்தவை. அதன் பயன்பாடுகள் கருத்துச் செறிவை வெளிப்படுத்துபவையாகவும், அதிகம் சமூக தளத்துக்குள் அறியப்படாதவையாகவுமாக இருந்து வரும்.

ஓகே கண்மணி: உரையாடல்

ஒ.கே. கண்மணி இரண்டாம் ரகம். ஐஃபோன் பிரியர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி விஷயங்கள்தான் படம் முழுக்க உலா வரும். ஐஃபோனில் எல்லாமே வழுக்கிக் கொண்டு போகுமாறு அமைத்திருப்பார்கள். உயர்தர appகளை மூன்றாவது தரப்பைக் கொண்டு வழங்குவார்கள். ஒ… காதல் கண்மணியில் அந்த விஷயங்கள் எல்லாம் செமையாக உருவாக்க ஏ.ஆர் ரெஹ்மான், பி.சி. ஸ்ரீராம் போன்ற மூன்றாவது தரப்பு கட்டமைக்கிறது. காதுக்கினிய இசை, கண்ணுக்கினிய ஒளிப்பதிவு, சிந்திக்கவேத் தேவைப்படாத இடைமுகம் போல் ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பு – எல்லாம் எளிமைவிரும்பிகளுக்கு, இந்தக்கால ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு சொர்க்கம்.

சின்னதாய், த்ரில்லிங்காய், ஒரு புன்னகைப் புரட்சி – தமிழ் சினிமா

பேசாத படங்கள், பேசும் என்கிற அடைமொழியோடு பாடும் படங்கள், பேசு பேசென்று பேசிய படங்கள், புராணிகப் படங்கள், சரித்திரப் படங்கள், கத்திச் சண்டை, கத்தாமல் சண்டை போட்ட படங்கள், சமூகப் படங்கள், குடும்பப் படங்கள், காதல் படங்கள், மர்மப்படங்கள், நகைச்சுவைப் படங்கள், பிரசாரப் படங்கள் என்று வகைப் படுத்தியோ, கால கட்டங்களை வைத்தோ பார்த்தாலும் எல்லாம் கலந்த கலவையாக யதார்த்தம் என்கிற பெயரில் யதார்த்தத்துடன் சம்பந்தப் படாத படங்களே அநேகம்.

உத்தம வில்லனும், கமலஹாசனும்

படத்தில் எடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ரிஸ்கே படத்தின் மிகப் பெரிய பலமாய் அமைந்து விட்டது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் வரும் க்ளோஸ் அப் காட்சிகள். இதில் நடிக்க அடாத தைரியம் வேண்டும்; தன்னம்பிக்கை வேண்டும். அது கமலிடம் இருக்கிறது. அவரிடம் மட்டும்தான் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம். ஒன்று ஓவர் ஆக்டிங் அல்லது செயற்கையான சப்ட்யூட் ஆக்டிங். மெல்லிய கயிறின் மேல் ஆயிரம் அடிகளுக்கு மேலான உயரத்தில் இரண்டு மலைச் சிகரங்களை இணைத்து கீழே வலை கூட கட்டாமல் மிக வெற்றிகரமாக நடந்திருப்பதற்காக.. ..

துப்புத் தெரியாத காட்டில் மேற்கு- ஜான் லெ காரீயின் அந்தகார உலகு

உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக 2008ல் எழுதிய நாவல் எ மோஸ்ட் வான்ட்டட் மேன். அது சென்ற ஆண்டு ஆன்ட்டொன் கொர்பெய்ன் என்ற டச்சு இயக்குனரால் சினிமாவாக எடுக்கப் பட்டது. எ மோஸ்ட் வாண்ட்டட் மேன் ஜெர்மனியில் ஜிஹாதிகளின் தலைநகரமான ஹாம்பர்க் நகரில் நடக்கிறது. ஜெர்மனியிலும் பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே அகதிகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தாக்கப் பட்ட பொழுது அதற்கான திட்டங்கள் போட்ட இடமும் அதற்கான நபர்கள் படித்த இடமும் இதே நகரம் தான். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் கிட்டத்தட்ட ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி உற்பத்தி நகரமாகவே மாறி விட்டிருக்கிறது.

நேரத்தில் – In Time: காலமும் காரல் மார்க்சும்

எல்லோரும் என்றென்றும் வாழ முடியாது. பல்லாயிரக் கோடிப் பேர்களை எங்கே வைத்துக் கொள்வோம்? எதற்காக தடைக்கற்கள் போட்டு ஏழெட்டு அடுக்கு தாண்டி இருக்கும் தூரத்து ஊர்களை உண்டாக்கி அங்கே தங்கி இருக்கோம்? அனுதினமும் சேரியில் வாடகையும் அத்தியாவசியப் பொருளும் விலை உயர்ந்து கொண்டே போகிறதே… ஏன்? யாருமே பட்டினியலோ பற்றாக்குறையினாலோ சாக வேண்டாம். என்னிடம் இருக்கும் இத்தனை ஆண்டுக்காலம் என்னும் அரியபொருள், உன்னிடம் இருந்தால், நீ என்ன செய்வாய்?

தற்காலத்திற்கும் டிம்பக்டூவிற்கும் இடையே

கர்ட் வானகட் கதைகளை அடிப்படையாகக் கொண்டு Between Time and Timbuktu: A Space Fantasy திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். கவிதை பாடும் விண்வெளி வீரரை வானவெளிக்கு அனுப்புகிறார்கள். அவர் உலகெங்கும் தன்னை பிரதியெடுக்கிறார். படத்தை இங்கு பார்க்கலாம்:

அமைதிக்கான நோபல் பரிசு

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும் அரச வன்முறைக்கு எதிராக வன்முறையற்ற வகையில் பாடுபட்டதற்காகவும் 1964 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மார்ட்டின் லூதர் கிங்குக்கு வழங்கப்பட்டது. அந்தப் பேச்சு இங்கே: ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களுக்கு அமெரிக்காவில் வாக்குரிமைகள் இருந்தும், அவர்களால் வாக்களிக்க முடியாத நிலை அமெரிக்காவில் நிலவியது. அந்த இழிநிலையை “அமைதிக்கான நோபல் பரிசு”

ஏ ஆர் ரெஹ்மானின் 'மில்லியன் டாலர் புஜம்'

தமிழ்ப்பாடல் இடம் பெற்ற படம் என்பதை விட; இந்தியர்களின் சாதனை குறித்த படம் என்பதை விட; கஷ்டப்பட்டு முன்னேறிய திறமைசாலிகளின் படம் என்பதை விட – இந்தப் படத்தை ஏ ஆர் ரஹ்மானின் இசையில் வித்தியாசப்பட்டு நிற்கும் படம் என்றும் பார்க்கலாம். திரைப்பட இசை என்பது சத்தமாக ஒலிக்க வேண்டும் என்பது அந்தக் காலம். அதன் பின் அடக்கி வாசித்து, திரையில் நடக்கும் விஷயங்களை காட்சிப்படுத்துவதை தூக்கலாகக் காண்பிப்பது சமீபத்திய காலம். வருங்காலத்தில் திரை இசை எப்படி இருக்கும்? ’மில்லியன் டாலர் ஆர்ம்’ திரையிசை போல் இருக்கும்.