செந்தில் இப்படி ஒரு கேள்வியை கவுண்டமணியிடம் கேட்டால், “ஏண்டா மாங்கா தலையா, உருப்படியான பழமொழிய இப்படியாடா நாசம் பண்ணுவே?” என்று அவர் திரும்பக்கேட்கலாம். அதற்கு செந்தில், “நான் நாசம் பண்ணலைண்ணே. புதுசா வந்திருக்கிற கம்ப்யூட்டர்தான் இப்படி பழமொழியை பாதியாக்கிருச்சாம்”, என்று பதில் சொல்லலாம். கணினி என்றால் ஓரமாய் உட்கார்ந்துகொண்டு “அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!”
Category: தகவல் அறிவியல்
பொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்
“அனேகமாக எவ்வளவு முறை இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது?” என வினவுங்கள்: டானியல் கானெமான் சொல்லும் கதையைப் பார்ப்போம். தாங்கள் எழுதும் இந்தப் புத்தகத்தை எழுத எத்தனை நாள் ஆகும் என சக நூலாசிரியர்களிடம் வினாத் தொடுக்கிறார் கானெமான். எல்லோரும் பதினெட்டு மாதங்களிலிருந்து இரண்டரை வருடத்திற்குள் புத்தகத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிறார்கள். அதன் பிறகு, இதற்கு முன்பு பல்வேறு நூல்களை எழுதிய ஒருவரிடம், “உங்களின் போன புத்தகங்களை எழுத எவ்வளவு நாள் ஆனது?” எனக் கேட்கிறார்.
– பத்தில் நாலு புத்தகம் முற்றுப் பெறவேயில்லை
ஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு
குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் புரிய வைத்து விடலாம். ஆனால், கணினிகள் அவ்வாறு எளிதில் நம் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது. எந்த விஷயத்தையும் குழந்தைக்குக் கூட புரிகிற மாதிரி விளக்க வேண்டியது திறன்மிக்க, பண்பட்ட மனிதர்களின் மாண்பு. நெருப்பென்றால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கலாம். தொலைக்காட்சித் திரையில் தீ தகதகவென்று எர்ந்தால் தொட்டுப் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் புரிய வைக்கலாம். இந்த வித்தியாசத்தை, கணினிக்கு தானாகவே விளங்கிக் கொள்ளுமாறு எப்படி புரிய வைப்பது? எந்தக் காரணத்தால் கையைச் சுட்டுக் கொள்வது மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக உள்ளது என்பதை பல வகையிலும் ஆராய்ந்து, இறுதி முடிவிற்கான அடிப்படை நியாயத்தை விளக்கச் சொல்லலாம்?
தொழில்நுட்ப மயக்கங்களும் நவீனத்துவத்தின் முடிவும் – மைக்கேல் சகசாஸ்
சார்லஸ் டைலர் கனடாவைச் சேர்ந்த தத்துவவியலாளர். இவரது ‘எ செக்யூலர் ஏஜ்’ என்ற புத்தகம், சமயம் மற்றும் சமயசார்பின்மை பற்றி பேசுகிறது. சமய நம்பிக்கை வலுவிழப்பதால் சமயசார்பின்மை வளர்வதில்லை, மாறாய் தன்னைத் தவிர பிறிதொன்றுக்கு இடமளிக்காத மானுட நேயமே அதன் வளர்ச்சியின் அடிப்படையாய் இருக்கிறது, என்றார் அவர். இக்கருத்து, கட்டுரையில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது…..பல பரிமாணங்களும் நுட்பங்களும் கொண்ட அவரது வாதத்தின் ஒரு சிறு பகுதியை இங்கு பயன்படுத்திக் கொள்ளவே அவர் எழுதிய ‘எ செக்யூலர் ஏஜ்’ நூலைச் சுட்டுகிறேன். வசீகரமிழத்தல் (disenchantment) குறித்த அவரது புரிதல் முக்கியமானது.
நவீனத்துக்கு முற்பட்ட சமூக இயல்புகளில் மாயங்கள் நிறைந்த உலகம் (enchanted world) என்ற பார்வையும் ஒன்று. அதைக் கடந்த பின்னரே, டைலரின் பொருளில் சமயச்சார்பற்ற உலகம் ஒன்று தோன்ற முடியும்.
நுண்ணறிவு – நூல் அறிமுகம்
ஹாவ்கின்ஸின் அறிமுகச் சான்றுகள், அவரது அபரிமிதமான ஆக்கத் திறனையும் இயல்பான நுண்ணறிவையும் சுட்டிக்காட்டி நம்மை மலைக்க வைக்கின்றன. அவருடைய இந்த புதிய நூலின் (On Intelligence) மதிப்புரைகள் ஒவ்வொன்றும் “ஹாக்கின்ஸ் ஒரு சிறந்த தொழில் முனைவர்; கணினி நிபுணர்; Palm computing, Handspring என்கிற இரு குழுமங்களின் நிறுவனர்” என்ற உயர்த்தும் குறிப்புகளுடன் தொடங்குகின்றன. இவர் Palm Pilot, Treo ஸ்மார்ட் போன் மற்றும் சில சாதனங்களைக் கண்டுபிடித்தவர், “On Intelligence” என்னும் இந்த நூலில், ஹாக்கின்ஸ், “மூளை எவ்வாறு செயல்படுகிறது, நுண்ணறிவு இயந்திரங்களை எவ்விதம் உருவாக்கிக் கொள்ள முடியும்,” என்பன பற்றிய புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்துகிறார்
ஒரு படத்தைப் பார்த்து அது என்னவென்று எப்படி கணினி கண்டுபிடிக்கிறது?
இது சற்று நம்புவதற்குக் கடினமான விஷயம். ஆனால், சில வாகனங்களை மட்டுமே ஒரு பயிற்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டு புதிய வாகனப் படங்களை உட்கொண்டவுடன் செயற்கை நரம்பணு வலையமைப்பு வாகனம் என்று அடையாளம் காட்டக் கற்றால், மிகவும் எளிதாகிவிடும் அல்லவா? இதைத்தான் சில உயர்கணிமை மூலம் ஜெஃப் ஹிண்டன் மற்றும் யான் லகூன் என்ற இரு விஞ்ஞானிகளும் முன் வைத்தனர். புதிய வாகனங்களைக் கண்டவுடன், தன்னுடைய வலையமைப்பு சார்புத் தன்மையை (bias) மாற்றிக் கொண்டே இருக்கும். இதனால், புதிய விஷயங்களையும் இவ்வகை வலையமைப்புகள் வடிவமைக்கப்பட்ட ஒரு குறுகிய உலகில் கற்கின்றன. இதனாலேயே இந்தத் துறை எந்திரக் கற்றலியல் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் பற்றி வாசகர்கள் தீவிரம் காட்டினால், விவரமாகத் தமிழில் எழுத முடியும். இந்தத் தொடருக்கு இந்த அளவு போதும் என்பது என்னுடைய கணிப்பு.
தகவல் விஞ்ஞானம் – கற்றுக் கொள்ள மற்றும் பயிற்சி வாய்ப்புகள் : பகுதி 3
தரவின் கதைக்கும் டேடா விஞ்ஞானியின் கதைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. உதாரணத்திற்கு, தரவின் கதைப்படி, ஒரு 200 கோடி ரூபாய் முதலீடு செய்து சில வியாபார மாற்றங்கள் நிகழ்த்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த 200 கோடி முதலீடு பயனளிக்குமா என்று நிச்சயம் சொல்ல முடியாது; அப்படியே பயனளித்தாலும், எதிர்பார்த்த லாபத்தையோ, செயல்திறனையோ அளிக்கும் என்பதும் சொல்வதற்கில்லை. டேடா விஞ்ஞானியின் கதையாக இருந்தால், அது, அவரது தோல்வியாக பாவிக்கப்படும்
புதியதோர் வானொலி உலகம்
மோடி அரசில், ஆல் இந்திய ரேடியோ , டி.ஆர்.எம் தொழில்நுட்பத்தை, மாறி வரும் சமுதாயத்தின் தேவையாகக் கண்டு, தீவிரமாக அதனை சோதனை செய்து, செயல்படுத்த முயன்று வருகிறது. 2017ல் , டி.ஆர்.எம் தொழில் நுட்பத்தை ஆல் இந்திய ரேடியோ முழுதுமாக செயல்படுத்தும். தற்போது பழக்கத்தில் இருக்கும் அனலாக் முறை ஒலிபரப்பும் தொடர்ந்து செயல்படும். சென்னை, தில்லி வானொலி நிலையங்கள், டி.ஆர்.எம் சேவைக்கெனவே குறிப்பிட்ட அலைவரிசைகளை வைத்திருக்கின்றன. இவை தவிர 23 வானொலி நிலையங்களில் டி.ஆர்.எம் சேவை, சோதனைக் கட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.