அவனாம் இவனாம் உவனாம்..

இந்த நிறப்புடவை இந்தப் பெட்டியில் இடம் பெற வேண்டுமென்று ‘மறைந்துள்ள மாறிகள்’  நினைக்கின்றன. (இதைத்தான் இந்தப் பிறவியை இங்கே எடுக்க வேண்டுமென்று வினைப் பயன் தீர்மானிப்பதாக நாம் சொல்லி வருகிறோமோ, என்னமோ?) இது முதல் நிலை மாய எண்ணம் என்றால் அவைகளைப் பிரித்து, தொலைதூரத்தில் வைத்தாலும் அவைகளின் தொடர்புகள் அறுபடுவதில்லை, பிரிக்கப்பட்ட பொருட்கள், தங்களுக்குள்  தொடர்பு கொண்டு ஒரே நிலையை அடைய முடியும்  என்பது மிகப் பெரிய மாயம். இதைத்தான் ஐன்ஸ்டெய்ன் ‘தொலைவில் உள்ள பயமுறுத்தும் ஒன்று’ என்று சொல்லி தனது ஐயத்தைச் சொன்னார்.. அது அப்படியல்ல என்று பின்னர் வந்த குவாண்டம் இயக்கவியல் இயற்பியலாளர்கள் காட்டி வருகின்றனர். 

புத்திசாலித்தனம் ஒரு சேவையாக..

நான் கல்லூரியில் படித்த காலத்தில் கணினித் திரையில் ஆரஞ்சு அல்லது பச்சை கலர் எழுத்துக்கள் மட்டும் தெரியும். பேராசிரியர்கள் உபயோகிக்கும் திரை ஒரு மாதிரி திருச்சி மைகேல் ஐஸ்கிரிம் வண்ணத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். கலர் கம்யூட்டர் ஆர்.இ.சி போன்ற கல்லூரிகளில் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் ( Artificial Intelligence ) மீது ஒரு எனக்கு ஒரு மோகம் இருந்தது.

டேடா மதம்!

என்னுடைய வயது அறுபதைத் தாண்டி விட்டது. என்னுடைய வழக்கமான மாலைப் பொழுது போக்கு, பக்கத்தில் உள்ள பூங்காவிற்குச் செல்லுவது. அங்கு விளையாடும் குழந்தைகளின் சத்தம், பறவைகளின் ஒலி, எதுவும் என்னை அதிகம் பாதிப்பதில்லை. அத்துடன், அங்கு வரும் பெரும்பாலானவர்களுடன் பேசுவதையும் தவிர்ப்பவன். சில மாலைப் பொழுதுகளில், அங்கு ஒரு “டேடா மதம்!”

இந்திய அடுக்கு – நிதிப் புரட்சியின் அடுத்த கட்டம்

பல நூறு ஆண்டுகளாக இங்கிலாந்து உருவாக்கிய உலகத்தர அமைப்புகள் (world class institutions) அந்த நாட்டை உலக அளவில் முக்கியமானதாக்குகிறது. பிரிட்டிஷ் உடல்நல முறைகள், பல்கலைக் கழகங்கள், அவர்களது சக்தி வாய்ந்த கப்பல்துறை, விஞ்ஞான ஆராய்ச்சி கழகங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சுதந்திர இந்தியாவில், பல உலகத் தர அமைப்புகள் உருவாகியது உணமை. ஆனால், பெருவாரியான இந்தியர்களை பயனடைய இவை உதவவில்லை. என் பார்வையில் ‘இந்திய அடுக்கு’ நாம் உருவாக்கிய உலகத்தர அமைப்பு. நம்முடைய அரசியல் நோக்குகளை அதன் மேல் பூசாமல், தொடர்ந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதன் குறைகளை நீக்குவது மிகவும் முக்கியம். ஏனென்றால், இந்த இந்திய அடுக்கு முயற்சி, சாதாரண இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்

சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்

சொக்குப் பொடி போட்டு கணித்திரை சிறைக்குள் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றன; ஒரேவிதமான தகவல்களைக் கொடுத்து பொய்களைக்கூட நிஜமென்று நம்ப வைக்கின்றன; நம்மிடையே பிரிவினையை உருவாக்கி, பிழையான சங்கதிகளின் மூலம் வெறுப்பை உருவாக்குகின்றன; வெறும் இதழியல் செய்தித்தாள் அமைப்பை மட்டும், கபளீகரம் செய்தது என்றில்லாமல், தனிமனிதரின் அந்தரங்கம், சுதந்திரம், குடும்பத்தின் நான்கு சுவருக்குள் நடக்கும் பிக்கல்/பிடுங்கல் போன்றவற்றையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அரசியலில் மூக்கை நுழைத்து சுதந்திர தேசங்களின் அதிபர் தேர்தல்களில் தகிடுதத்தம் நடக்க வைக்கின்றன; எந்நேரமும் கைபேசிகளின் கறுப்புத் திரையினைப் பார்க்க வைத்து வேறெதிலும் கவனம் செலுத்தவிடாமல் திறன்பேசிகளின் தாசானுதாசர் ஆக்கி வைக்கின்றன…

தானோட்டிக் கார்கள் – சட்டங்களும் ஒழுங்குமுறைகளும்

ஒழுங்குமுறையிலிருந்து எதுவும் ஒரு சட்டமாக மாறுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு வாகன நிகழ்வு. உயிர் சம்பந்தப்பட்டிருப்பதால், தீர முழுவதும் விசாரித்து முடிவுக்கு வரும் வரை, பல மாநில, தேசிய சட்ட அமைப்புகளில் ஆமை வேகத்தில் நகர்ந்து சட்டமாக மலர்வதற்குள் பல்லாண்டுகள் ஆகி விடுகின்றன. இதே அமைப்புகள் மிக வேகமாக வளர்ந்து வரும் தானோட்டிக் கார்களை எப்படிச் சீரமைக்கப் போகின்றன? தானோட்டிக் கார்களுக்குச் சாலையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லையா? எப்படி கூகிள், டெஸ்லா மற்றும் பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய கார்களைப் பொதுச் சாலைகளில் சோதனை செய்கிறார்கள்?

குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் கம்ப்யூட்டருக்கு சொல்லித் தருவது எப்படி?

காரில் பயணம் செய்யும் பொழுது, இளையராஜாவின் பாடல்களில் அவருக்கு ஒரே குழப்பம். எந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடுகிறார், எந்தப் பாடலை யேசுதாஸ் பாடுகிறார் என்று எவ்வளவு முறை தெளிவுபடுத்தினாலும், அவருக்குச் சரிவரப் பிடிபடவேயில்லை. பத்து நாட்களுக்குப் பின் இந்தியா சென்று விட்டார். அவருக்குப் பழைய இந்திப் பாடல்கள் மிகவும் பிடிக்கும், மன்னாடே, ஹேமந்த் குமார் பாடல்களை யூடியூபில் கேட்ட வண்ணம் இருப்பார். எனக்கு, எந்தப் பாடல் மன்னாடே பாடியது, எது ஹேமந்த் பாடியது என்று அந்தப் பத்து நாட்களும் குழப்பம். இருவருக்கும் இசை மீது ஈர்ப்பு இருந்தும், ஒருவருக்குச் சட்டென்றுத் தெரிந்த குரல்கள், இன்னொருவருக்குப் பிடிபடவில்லை. ஏன்? எனக்கு, கேட்கும் மொழி இந்தி என்றும், அவருக்கு நான் இசைக்கும் பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் என்றும் தெரியும். ஆனாலும், இருவருக்கும் மொழி, இந்தச் செயலுக்கு உதவவில்லை…. அவரது மூளையும், என்னுடைய மூளையும் வெவ்வேறு முறையில் செயல்படுகிறது. இதை வேறு விதமாகவும் சொல்லலாம். அவருடைய மூளையும், என்னுடைய மூளையும், வெவ்வேறு முறைகளில், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

தகவல் விஞ்ஞானம் – ஒரு அறிமுகம் – தொழில் தேவைகள் – பகுதி 2

தரவு விஞ்ஞானத்தில் அடித்தளம் ஆராய்ச்சிக்கேற்ற தரவு. அதென்ன ஆராய்ச்சிக்கேற்ற தரவு? அதாவது முன் வைக்கும் புனைக் கொள்கையை நிரூபிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரவு தேவை. நம்முடைய LED சர விளக்குகள் உதாரணத்தில், பல மாத/வருட, பல மையங்களின் வியாபார தரவு தேவை – ஆனால், LED சர விளக்குகள் சார்ந்த தரவாக மட்டுமே இருக்க வேண்டும். தீப்பெட்டி வியாபாரத் தரவில் நமக்கு பயனேதும் இல்லை. தரவுதளங்களில் எல்லா பொருட்களின் விற்பனை தரவும் இருக்கும். அதிலிருந்து நமக்கு வேண்டிய LED சர விளக்குகள் தரவை மட்டும் திரட்ட வேண்டும்.

தகவல் விஞ்ஞானம் – ஒரு அறிமுகம்

மனித சமூகம் தோன்றியது முதல் 1990 –வரை உருவாக்கிய டேடாவைக் காட்டிலும், இரு மடங்கு 1990-களில் மட்டுமே மனித நடவடிக்கைகள் உருவாக்கியது. அதாவது பத்தாண்டுகளில், இரு மடங்கான டேடா, இன்று 5 ஆண்டுகளில் இரு மடங்கு என்று மாறி, கூடிய விரைவில் இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காகும் வாய்ப்புள்ளது. வழக்கமான, கணினித் துறைப் பாட்டுத்தானே இது, இதிலென்ன புதுசு என்று தோன்றலாம். திடீரென்று உருவாகிய டேடா சுனாமியை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் கேள்வி. இந்தப் பிரச்னையைக் கையாள்வதில் நிபுணர்கள் டேடா விஞ்ஞானிகள். உடனே பத்து நாள் தாடியுடன், சோதனைக் குழாயில் நீல நிற திரவத்துடன் இவர்கள் நடமாடுபவர்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். நம்மைப் போல, வழக்கமாக தினமும் சவரம் செய்து கொண்டு, ஜீன்ஸ் அணிந்த ஆசாமிகள் இவர்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால், இவர்களின் பங்களிப்பு , மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது. அதாவது, ஏராளமான டேடாவிலிருந்து, ஒரு வியாபாரத்திற்கோ, அல்லது விஞ்ஞான ஆராய்ச்சிக்கோ பயனுள்ள விஷயத்தைக் கண்டெடுப்பது.

செயற்கை நுண்ணறிவு: 3

குரங்கை விட மனித இனத்தின் அறிவு உயர்ந்து இருப்பதில் முக்கியமானது என்ன்வென்றால், நம்மால் வேகமாக சிந்திக்க இயலும் என்பதல்ல, நம்மால் தரமாக சிந்திக்க இயலும் என்பது தான். குரங்குகளின் சிந்தனை வேகப்படுத்துவதன் மூலம் மட்டும் அது மனிதனாகப் பரிமாண வளர்ச்சி அடைய முடியாது. அதன் சிந்தனையில் தரத்தில் பாய்ச்சல் நிகழ வேன்டும். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், குரங்குகள், மனிதர்களையும் கட்டிடங்களையும் வேறுபடுத்திப் பார்க்க இயன்றாலும், மனிதர்கள் தான் கட்டிடங்களைக் கட்டினார்கள் என்று புரிந்து கொள்ள இயலாது. ஏன், அந்த வகையில் கற்பனை செய்யக் கூட இயலாது. இது தான் சிந்தனைத் தரத்தின் வேறுபாடு.

செயற்கை நுண்ணறிவு (AI)

நாம் செயற்கை நுண்ணறிவு என்பதை சரியாகத் தான் அணுகிக் கொண்டிருக்கிறோமா என்று அடிப்படைகளையே அசைத்துப் பார்க்கின்ற எதிர்த் தரப்புக் கருதுகோள் உள்ளது. மனிதனின் மூளை ஒரு கணினியைப் போன்றது என்று எங்காவது யாராவது சொல்லக் கேட்டிருப்பீர்கள். இது உண்மையான கூற்றுத்தானா என்பதே ஒரு சாரார் எழுப்பும் கேள்வி. கணினியானது, அறிந்து கொள்ளும் அனைத்தையும் தகவல்களாக (“பைட்டுகளாக”) மாற்றிச் சேமித்து, தேவைப்படும் போது அணுகி வெளிக்கொணர்கிறது. ஆனால், நமது மூளை, இப்படித் தகவல்களைச் சேமித்து வைப்பதில்லை, அது அறிந்து கொள்ளும் செய்திகளுக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கிறது என்பது மாற்றுத் தரப்பு. நாம் கேட்ட ஒரு கதையை நாம் வேறொருவரிடம் மீளச் சொல்லும் போது ஒவ்வொரு முறையும் சிற்சில தகவல்கள் மாறூவது, இன்னும் இது போன்ற சில சோதனைகளைக் கொண்டு இப்படிக் கருதுகிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு: எந்திரன் 2.0

செயற்கை அதி நுண்ண‌றிவு (Artifical Super Intelligence). நாமறிந்த எல்லாத் துறைகளிலும், இருப்பதிலேயே சிறந்த மனித மூளைகளை மிஞ்சும் அறிவு கொண்ட நிலை இது. அறிவியல் சார்ந்த துறைகள் மட்டுமின்றி, கலை, சமூக நடத்தை, நிர்வாகம், என்று எல்லாமே இதில் அடக்கம். பாடங்களில் சோபிப்பது மட்டுமில்லாமல், விளையாட்டிலும் இன்னும் பல எக்ஸ்ட்ரா கரிகுலர் நடவடிக்கைகளிலும் பட்டையைக் கிளப்பும் மாணவர்கள் இருப்பார்களல்லவா, அவர்கள் தான் இது. செயற்கைப் பொது நுண்ண‌றிவு நிலையையே இன்னும் எட்டவில்லை என்பதால் செயற்கை அதி நுண்ண‌றிவு நிலை அதற்கடுத்து எதிர்காலத்தில் இருக்கிறது.