பாதுகம் என்றாலும், பாதுகை என்றாலும் ஐயம் திரிபற செருப்பேதான். தேவர்களும் தேவகுமாரர்களும் அணிந்தால் பாதரட்சை, பாதுகை, பாதுகம்; சாமான்யரான நாமணிந்தால் செருப்பு என்றும் பொருள் கொண்டால் அது மொழியின் குறைபாடு அல்ல. சொற்களை மேநிலையாக்கும் மானுடப் பண்பு. நிலக்கிழார் அணிந்தால் உத்தரீயம், அங்கவஸ்திரம், நேரியல்; சாமான்யன் போட்டிருந்தால் துண்டு, துவர்த்து என்பதைப்போலவே அதுவும்.
Category: சொற்கள்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
இப்படித்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இலக்கியங்கள் மூலமாகவும் இன்று சான்றுரைக்கின்றன. காழ்ப்பற்ற, வஞ்சமும் சூதுமற்ற, வெளிப்படையான, தமிழ்ப்புலவன் வழி நெடு வரலாற்றை, மரபை, புராணங்களை விதைத்துச் செல்கிறான். அவனது அனுபவமும், ஞானமும், தெளிவும், படைப்பு ஆற்றலும் புரிதலும் வியப்பேற்படுத்துகின்றன.
சித்திரையில் பிறக்கும் புத்தாண்டின் வரிசையில் அறுபதனுள், நந்தன என்பது இருபத்தி ஆறாவது. நந்தனன் என்றால் குமரன் என்று பொருள் தருகிறது சூடாமணி நிகண்டு.
ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக…
நல்ல காலம், கெட்ட காலம் என்று வீடுகளிலும் தெருக்களிலும் செவிமடுக்கின்ற காலமாக இருந்தது. ‘ஆம் காலத்தே அவையவை ஆகும், போம் காலத்தே பொருள் புகழ் போகும்’ என்ற கண்ணதாசனின் கவிதை வரி அறிமுகமாயிற்று வாலிப வயதில். ஆம்காலம் என்றால் ஆகும் காலம், போம் காலம் எனில் போகும் காலம்.
ஆற்றுப்படுத்தல்!
எவ்வாறு முருகப்பெருமானை வணங்குவது என இறையருள் பெற்ற ஒருவன் மற்றொருவனுக்குச் சொன்னான்: ‘இன்னிசை முழங்க வெறியாட்டயர்ந்து, அந்த வெறியாடிய களத்தில் ஆரவாரமாகப்பாடி, வாயில்வைத்துக் கொம்புகளை ஊதி முழக்கி, முருகப்பெருமானின் பிணிமுகம் எனும் யானையை வாழ்த்தி வணங்குவர்.
வயாகரா
வயான் எனில் வயவன் எனும் பறவை, அது காரிப்புள் என்றும் அழைக்கப்படும் என்று இயம்புகிறது பிங்கல நிகண்டு. காரிப்புள் என்றால் king crow என்கிறது பேரகராதி. வயானம் எனும் சொல்லுக்கு, வெறுமனே பறவை என்று மாத்திரம் பொருள் சொல்கிறது சூடாமணி நிகண்டு.
பைய மலரும் பூ…
அது ஒரு வெள்ளி இரவு… அலைபேசியில் தொலையாமல், சமூக ஊடகங்களின் சந்தடியில் சிதறாமல், வானில் நகரும் வெள்ளியை ரசித்திட நேரம் கிட்டிய எண்பதுகளில் எழுந்த ஒரு வெள்ளிக்கிழமை இரவு… அருகிருந்த வீடுகளில் ஓடும் ஒலியும் ஒளியும் கூட நம் வீட்டிற்குள் கேட்கும்படி ஊர் அமைதி கொண்டிருந்த காலத்தில் எழுந்த “பைய மலரும் பூ…”
பிஞ்ஞகன்
இச்சொற்களை எழுதிவரும்போது எமக்கொன்று தெளிவாகிறது. மக்கள் நாவில் சில சந்தர்ப்பங்களில் ந, ஞ மயக்கம் உண்டு என்று. எவ்வாறாயினும் மக்கள் புழங்கும் ஒலிக்குறிப்புகள்தாமே சொல்லாக உருவெடுக்கிறது! எமக்கு அறிமுகமில்லாத சொற்கள் யாவும் வட்டார வழக்கென்றோ, மக்கள் கொச்சை என்றோ வரையறுக்கவோ, ஒதுக்கி நிறுத்தவோ இயலுமா?
பொன்னின் பெருந்தக்க யாவுள !
பிட்டுக்கு மண் சுமந்த மதுரைச் சொக்கேசன் மீது, அரிமர்த்தன பாண்டியன் வீசிய பொற்பிரம்பும் அறிந்திருக்கலாம். பொற்பிரம்பின் வீச்சையும் வலியையும் அனுபவிக்க எமதாசான் புதுமைப்பித்தனின் ‘ அன்று இரவு’ வாசிக்க வேண்டும். வாசிக்க நேர்ந்தவர் நற்பேற்றாளர். புதுமைப்பித்தனிலும் சாதி தேடிய மார்க்சீய, அம்பேத்காரிய, பெரியாரிய ‘அறிஞர்’ கூட்டம் உண்டு. ‘அரிசிப் புழு தின்னாதவனும் இல்லை, அவுசாரி கையில் உண்ணாதவனும் இல்லை’ என்பது சொல்வடை.
சக்கடா
அக்கடா, துக்கடா, பக்கடா, கச்சடா, சக்கடா என்று டாவில் முடியும் சொற்கள் பற்றிய சிந்தனை. மொழிக்குள் இது போன்ற பல சொற்கள் வந்து புகுந்து, நெடுங்காலம் புழங்கப் பெற்று, இன்று தமிழே போல ஆகி விட்டன.
மெய்ப்பொருள் காண்பது அறிவு
புறப்பொருள் வெண்பா மாலை, ஐயனார் இதனார் இயற்றிய எட்டாம் நூற்றாண்டு இலக்கண நூல், ‘கருந்தடங்கண்ணி கைம்மை கூறின்று’ என்கிறது. பத்தாவது பொதுவியல் படலம், தாபத நிலைத் துறை பாடலின் கொணு, கைம்மை பேசுகிறது. கருமையான பெரிய கண்களை மனைவி, கைம்மை நோன்பினை மேற்கொண்டாள் என்பது தகவல். தாபதம் எனும் சொல்லுக்கு, நோன்பிருத்தல் என்பது பொருள்.
கூகி வா தியோங்கோ -வும், மொழியின் கொடுங்கோலும்
மொழியை, தம் ஆட்சியின் கீழிருந்த நிலப்பகுதி மக்களைப் பிரித்து ஆள்வதற்கு வழி வகுக்கும் சூழ்ச்சிக்கு ஆயுதமாக வளைப்பது யூரோப்பிய அதிகாரச் சக்திகளின் நோக்கமாக இருந்தது; மற்ற யூரோப்பிய சூழ்ச்சிகளில், குழு அடையாளங்களை அரசியலாக்குவது- யூரோப்பிய ‘இன’ நோக்கு அறிவியல் மூலம் இனங்களின் அதிகார அடுக்குகளை உருவாக்குவது- போன்றன காலனிய ஆட்சி முடிந்து பல பத்தாண்டுகள் தாண்டியும் இன்னமும் கடும் வன்முறை நிறைந்த போராட்டங்களில் ஆஃப்ரிக்கர்களையும் இதர மக்களையும் நிறுத்தி இருக்கின்றன.
உத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்!
சில பேராசிரியர்களிடம் கேட்ட போது, அவர்கள் திருவள்ளுவர் தூக்கம் எனும் சொல்லையும் கையாண்டிருக்கிறாரே என்றனர். அவர்கள் சொன்னது உண்மைதான். ‘வினைத் திட்பம்’ அதிகாரத்துக் குறள் பேசுகிறது,
‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்’
என்று. சரிதானே! பிறகென்ன வழக்கு, வியாச்சியம், உச்ச நீதிமன்றத் தலையீடு என்று நீங்கள் கேட்கலாம்! ஆனால் இங்கு தூங்காது என்ற சொல்லுக்கு தாமதிக்காது, கால நீட்டிப்பு செய்யாது, தொங்கிக் கொண்டு கிடக்காமல் எனும் பொருளே தரப்படுகிறது. மனக் கலக்கம் இல்லாமல், தளர்வடையாமல், கால தாமதம் செய்யாமல், வினையாற்றுவதே செம்மையானது என்று பொருள் தருகிறார்கள். …நாஞ்சில் நாட்டுக்காரனும், மலையாளியும் உறக்கம் என்று இன்றும் பயன்படுத்தும் சொல், பிற தமிழ்த் திருநாட்டுப் பகுதிகளில் தூக்கம் என்று பயன்படுத்தப்படுகிறது.
மதுரைக் காஞ்சி
வைகையையே மதுரைக்கு உவமையாக்கி, வற்றாது ஓடும் வைகை போல மதுரையின் நுழைவாயிலில் மக்கள் கூட்டம் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார். ஆற்றின் அகலம் போன்ற விரிந்த தெருக்களும் அதன் கரைகள் போல இருமருங்கிலும் வீடுகளும் இருக்குமாம். ரொம்ப பழைய காலம் என்பதால் சாதாரண மண் குடில் என்று நாம் நினைத்து விடக்கூடாது. “பல்புழை நல் இல்” என்கிறார் அதாவது பல சாளரங்கள் உடைய வேலைப்பாடுகள் உடைய வீடுகளாம் அவை! “வைகை” போல் ஓயாது ஓடும் மக்கள் கூட்டத்திற்கு பசியும் ருசியும் உண்டே…அதற்கெனவே அன்றும் மதுரை முழுவதும் “பண்ணியம் பகர்நர்” நிறைந்து இருந்திருக்கின்றனர். யார் இந்த “பண்ணியம் பகர்நர்”?
தானோட்டிக்கார்கள் – முடிவுரை
எந்திரக் கற்றலியலில், மிகவும் ஆராயப்பட்டுவரும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை (unsupervised learning algorithm) reinforced learning என்பது. இந்த நெறிமுறை, எதையும் சொல்லிக் கொடுக்காமல், ஒரு எந்திரத்தைத் தானாகவே கற்றுக் கொள்ளவைக்கும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை. இந்த நெறிமுறையில் உள்ள முக்கிய அம்சம், அதிக முயற்சிக்கு அதிக பரிசு என்பதாகும். அதிகமாக பொருட்களை விற்கும் விற்பனையாளருக்கு அதிக கமிஷன் கொடுப்பதைப் போன்ற விஷயம் இது. விடியோ விளையாட்டிற்குச் சரிப்பட்டுவரும் இந்த நெறிமுறை தானோட்டிக்காருக்குச் சரிப்பட்டுவருமா? அம்மா கட்டுப்பாடற்ற சிறுவனைப்போல, கார் இயங்கத் தொடங்கிவிடுமா? இதை Mobileye காரர்கள் சோதனை செய்து பார்த்தார்கள்.
சொல்லாழி
வில்லாளிக்கு அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம் இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன். தச்சனோ, கொல்லனோ, குயவனோ, நாவிதனோ, உழவனோ எவராயினும் அது பொருந்தும். அரைகுறையாகக் கருவிகளைச் சுமந்து செல்கிறவன், துல்லியமற்ற, பொருத்தமற்ற கருவிகளைச் சுமந்து செல்கிறவன், திறம்படத் தொழில் “சொல்லாழி”
உங்கள் வாழ்க்கையின் கதை – வருகை
டாரில் பால்ட்வின் மயாமி (மியாமியா) இன மக்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அறிவாற்றலையும் மீண்டும் கண்டுபிடிக்கவும் ஆவணப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார். இவரை போன்ற கலாச்சார பாதுகாவலர் ஒருவரைத்தான் தன் கதாநாயகியாக டெட் சியாங் (Ted Chiang) வைத்துக் கொள்கிறார். பேச்சாளரே இல்லாத மொழியை எவ்வாறு அணுகுவது? அதற்கு நிறைய உந்துதலும் ஊக்கசக்தியும் முனைப்பும் எதையும் முயற்சி செய்து பார்க்கும் மனவுறுதியும் வேண்டும். முன்னவர் நிஜம். அவரின் ஆராய்ச்சி ஏன் முக்கியம் என்பதை எளிமையாக அறிந்துகொள்ள ’Story of Your Life’ கதையும் அந்தக் கதையை திரைப்படமாக்கிய ‘அரைவல்’ (Arrival) சினிமாவும் முக்கியம்.
பொறியியல் போதனையாளருடன் ஒரு உரையாடல்
சார்ந்திருப்பதிலிருந்து விடுதலை பெற்று சுயமாகச் செயல்பட முனையும்போது துவக்கத்தில் பல குறைபாடுகள் எழும். ஜப்பானியரின் உதாரணம் ஒன்றையோ, தாய்வானியரின் அனுபவங்களையோ, ஏன் சீனர்களின் அனுபவங்களையோ கூட நாம் எடுத்து நோக்கலாம். அந்த நாட்டு உற்பத்தித் துறைகளின் விளை பொருட்கள் முதல் பத்து ஆண்டுகள், ஏன் பதினைந்தாண்டுகள் வரையிலும் கூட மேலைப் பொருட்களோடு ஒப்பிட்டால் கீழ்த்தரமானவையாகவும், மலினமான தொழில் திறன் உள்ளனவாகவும் தெரிய வந்திருந்தன. மேற்கு நாடுகளுக்குத் தொடர்ந்து பொருட்களைக் கொடுக்கத் துவங்கிய போது அவர்கள் மேற்கின் அளவைகளைத் தம் பொருட்கள் ஈடுகொடுத்து நிற்க வேண்டும் என்ற அவதிக்கு உட்பட்ட போது தர மேம்படுதல் அவசியமாயிற்று. ஜப்பானியர் மேற்கின் உற்பத்தித் தொழில் நுட்பங்களைத் தம் சமூகக் குழுவினரின் பழக்க வழக்கங்களோடும், பண்பாட்டுத் தேர்வுகளோடும் பொருத்தி…
கருவிகளின் இணையம் – முடிவுரை
இத்துறையில் வாய்ப்புகள் ஏராளம். சில இளைஞர்களை விஷுவல் பேசிக், ஆரகிள் போன்ற அன்றாட தொழில்நுட்ப விஷயகளிலிருந்து, இத்துறையில் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியிருந்தால் அதுவே இக்கட்டுரைத் தொடரின் மிகப் பெரிய வெற்றி…. இங்குள்ள சுட்டிகள் இத்துறையில் புதிதாக ஆர்வமுள்ளவர்கள் மேல்வாரியாக அறிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், ஆழமாகப் புரிந்து கொள்ளவும் வழி செய்யும் என்று வெளியிட்டுள்ளேன். ஒவ்வொரு விஞ்ஞான/தொழில்நுட்பக் கட்டுரையின் பின்னணியிலும் இத்தகைய ஆராய்ச்சி இருந்தாலும், விரிவாக இங்கு வெளியிடுவதற்குக் காரணம், புதிய இத்துறையில், தமிழ் படிக்கத் தெரிந்த இளைஞர்(ஞி)கள் பிரகாசிக்க வழி வகுக்கலாம் என்ற நம்பிக்கையே.
கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம் – 2
நிக்கோலஸ் கார் என்ற அமெரிக்க எழுத்தாளர் கணிமையின் பயன்பாட்டை மின்சக்தியின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டு எழுதிய புத்தகம் மிகவும் பிரபலம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மின் உற்பத்தியாளர்கள் தாம் உருவாக்கிய மின்சக்தியைத் தனித்தனியே பயனர்களுக்கு விற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் விரைவில் ஒரு பொதுவான மின்தொகுப்பு உருவாகி, மின்சக்தி ஒரு அடிப்படைப் பயன்பாடு ஆனது. மின் அளவிகளின் மூலம் நீங்கள் பயன்படுத்திய சக்தியை அளவிட்டு அதற்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்தும் நிலை உருவானது. அதேபோல், கணிமையும் ஒரு தரநிலைப்படுத்தப்பட்ட அடிப்படைப் பயன்பாடாகி, உங்கள் பயன்பாட்டளவின்படி நீங்கள் கட்டணம் செலுத்தும் நிலை வரும் என்பதே காரின் நிலைப்பாடு. இன்று, மேகக்கணிமை அந்நிலையை நோக்கி வெகுவேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.