குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை

அந்த அமர்வு மூத்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துலகு பற்றியது. முதலில் மிருணால் பாண்டே பேசினார். பலரும் அறிந்த ஹிந்தி எழுத்தாளரான அவர் தாய் சிவாணியைப் பற்றிப் பேசாமல் எந்த நிகழ்வையும் மிருணால் பாண்டே தொடங்க மாட்டார். அன்றும் தன் தாயாரைக் குறிப்பிட்டுவிட்டு, தான் சிறு பெண்ணாக இருக்கும்போதே மாகாஸ்வேதாதேவியின் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் அவர் தாயாரிடம் வந்ததாகவும் அப்போதே அவரைத் தெரியும் என்றும் அவர் தனக்கு மகாஸ்வேதாதேவி மௌஸி (சித்தி) என்றும் கூறிய பிறகு ஹிந்தியின் மூத்த பெண் எழுத்தாளர்கள் பற்றிச் சுவையாகப் பேசினார். அடுத்து நான் பேசும்போது மூத்த எழுத்தாளர்கள் பத்திரிகைகள் நடத்தியது குறித்துப் பேசும்போது, வீட்டு வேலை, சமையல் இவைகள் எல்லாவற்றையும் செய்து இலக்கியத்துக்கும் வாழ்க்கையில் இடம் அளிக்க முயன்றார்கள்…

நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன

மாதுளைப்பழங்களை அணில்கள் கடித்த பிறகே நாம் சாப்பிடலாம் என்று அம்மா சொல்வார். நான் நட்சத்திரங்களை மாதுளைப்பழங்கள் என்று நினைத்துத்தான் பறித்துத் தின்றேன். ஆனால் அணில்களோடு பகிரவில்லை.
முதன்முறை தெரியாத்தனமாகத்தான் தின்றேன். அப்போது பதினைந்து வயதிருக்கும். ஒருநாள் தூக்கம் வரவில்லை. மொட்டைமாடிக்குச் சென்றேன். அன்றிரவு அந்த நட்சத்திரம் மாதுளைப்பழத்தைப்போல் வீங்கி இருட்டில் சிவப்பு ஒளி வீச பழுத்துத் தொங்கியது. அணில் வந்துவிடப்போகிறதே என்ற பயத்தில் யோசிக்காமல் அவசரமாக எம்பிப் பறித்துவிட்டேன்

கணிப்புக்குடில்

பூஜ்ஜியத்துக்கு இருக்கிற சிறப்பு யாருக்கும் இல்லை எனும் கர்வம் இருந்தாலும், பல சமயங்களில் தான் ஒரு பூஜ்ஜியம் தானே எனும் மனக்குறையும் அதற்கு உண்டு. பெரியவள் எனும் பொறுப்பைக் கொண்டதால் கணிப்புக்குடிலின் எந்த விதியையும் அது மீறாது. யார் என்ன சொன்னாலும் கேட்கும். செக்கு மாடு எனும் கிண்டலையும் மீறி அவளோடு நட்போடு இருப்பது ரெண்டு மட்டுமே. கணிப்புக்குடிலின் விதிக்கு ஏற்றவாறு ஒன்றோடு சேர்ந்து சுற்றும் என்றாலும் அவளுக்குப் பிடித்தது ரெண்டு தான். ஏனோ எண்களிலிலேயே அழகானது ரெண்டு மட்டுமே எனும் ரகசிய மையல் அதற்கு உண்டு.

ஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை

“என்னோட பழம் கணினியே! என் நல்ல கணினியே! அப்படி இப்படி, இந்த ட்ராகன் என் சிம்மாசனத்தைப் பிடுங்க உத்தேசிக்கிறது, என்னைத் துரத்தப் போகிறது, உதவி செய், பேசு, நான் எப்படி அதைத் தோற்கடிப்பது?”
“ஓ-ஓ,” என்றது கணினி. “முதலாவது நீங்கள் முந்தைய விஷயத்தில் நான் சொன்னதுதான் சரி என்று ஒத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, நீங்கள் என்னை டிஜிடல் பிரதம மந்திரியே என்றுதான் அழைக்க வேண்டும், ஆனால் நீங்கள் என்னை ’மாண்பு மிகு இரும்புகாந்த்’ அவர்களே என்று வேண்டுமானாலும் அழைக்கலாம்! “
“நல்லது, நல்லது. உன்னை நான் பிரதம மந்திரி என்று நியமிக்கிறேன். நீ எது சொன்னாலும் ஏற்கிறேன், என்னைக் காப்பாற்றுவதை முதலில் செய்!”
எந்திரம் விர்ரிட்டது, சிர்ரிட்டது, ஹம்மியது, ஹெம்மியது, பிறகு சொன்னது.

முப்பத்தெட்டு மேதைகள்

ஒருநாள் உடல்நலமில்லாத சமயத்தில் தம்பியை அழைத்து கோவிலுக்குச் சென்று உடல்நலமில்லாத செய்தியைத் தெரிவிக்கும்படியும், சொற்பொழிவைக் கேட்பதற்குத் திரண்டிருந்தவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்கும்பொருட்டு ஒன்றிரண்டு பாடல்களைப் பாடிவிட்டு வரும்படியும் சொல்லி அனுப்பிவைத்தார். தம்பியும் அப்படியே செய்தான். இரண்டு பாடல்களை மனமுருகும் வகையில் பாடினான். பாட்டைப் பதம்பிரித்து, நன்றாகப் புரியும்படி அவன் பாடிய விதம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவர்கள் அவனிடம் அப்பாடல்களுக்குப் பொருள் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்கள். அவனும் பாடல்களின் பொருளை விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.