அமெரிக்க வாழ் இந்தியர்களைப் பற்றிய முதல் நெட்ஃபிளிக்ஸ் தொடர் அமெரிக்கத் தலைமுறையினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தி ஆஃபீஸ்” என்ற அமெரிக்க நாடகத்தில் நடித்துப் பிரபலமான இந்திய வம்சாவளி மிண்டி கேலிங் தன்னுடைய சிறு வயது அனுபவங்களை “Never Have I Ever” தொடராக இயக்கியிருக்கிறார்.
Category: சின்னத்திரை
யார் பாதிக்கப்பட்டவர்கள்?
சிறையிலிருந்து/சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளி வந்தவனை சமூகத்தில் அனுமதிக்கலாமா? அவன் திருந்திவிட்டான் என்பது என்ன நிச்சயம் என்ற ஆரம்பக்கேள்விகளிலிருந்து அவனது இந்த நிலைக்கு, இளம் வயதில், கொடூரனாக, கொலைகாரனாக மாறியதற்கு யார் முதற் காரணம் என்ற அடிப்படை கேள்விகளுக்கான முகாந்திரங்களும் இருக்கின்றன.
கடைசி அத்தியாயத்தின் ஆரம்பத்தில், க்ரேய்க், எடி ஜே டர்னர் அல்ல என்று அன்னாவின் நம்பகமான நபர் தெரிவித்தவுடன் அவள் அதிர்ந்து போகிறாள்.
கோரத்தில் மகிழ்ச்சி கொள்பவர் கோர முடிவை அடைவர்
வெஸ்ட் வோர்ல்ட் (தமிழில் மேற்குலகம் என மொழிபெயர்க்கலாம்) என்பது மாயலோகம். அங்கே நீங்கள் அந்தக் கால அமெரிக்காவைப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய அமெரிக்கா எப்படி இருந்திருக்கும்? அங்கே தினசரி துப்பாக்கிச் சூடு நடக்கும். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். … ரோபாட்டுகளின் ஆட்சி எப்படி இருக்கும், கோயத் எழுதிய ஃபௌஸ்ட் நாடகத்திற்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஃபிலிப் கே டிக் எழுதிய புதினங்களில் வரும் தடுமாற்றங்கள் எவ்வாறு வெஸ்ட்வோர்ல்ட்-இல் காட்சியாக்கம் ஆகிறது, நச்சுநிரற்கொல்லிகளைத் தாண்டியும் கணினியில் எவ்வாறு மென்பொருள்கள் இரண்டகநிலைக்கு வந்துசேர்கின்றன, ஜூலியன் ஜேன்ஸ் எழுதிய இருண்மை மூளையும் கடவுளின் குரலும் எப்படி உணர்த்தப்படுகின்றன…
போரும் அமைதியும்
புகழ் பெற்ற கதாபாத்திரங்களை தற்காலத்திற்கேற்ப மறு ஆக்கம் செய்வது ஒரு சுவாரசியமான விஷயம். உதாரணத்திற்கு கிங்காங் – 1933லிருந்து இதுவரை ஏழு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 2017 மற்றும் 2020 களில் இன்னும் இரு திரைப்படங்கள் வெளிவர இருப்பதாக விக்கி சொல்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் – சமீபத்தில் பிபிஸியில் வெளிவந்த “போரும் அமைதியும்”
27 வயதான அமெரிக்கக் குடும்பம்
ஒரு திரைப்படத்தையோ தொலைக்காட்சி தொடரையோ பார்க்கும்போது வெறும் மேம்போக்கான ரசிகனாக மட்டும் இல்லாமல், அதன் படைப்பு நுணுக்கங்களை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. இது ஏதோ நானும் படமெடுக்கிறேன் என்று எதிர்காலத்தில் நான் கிளம்புவதற்கான முன்னேற்பாடல்ல. ஆக்கத்தின் பின்னால் உள்ள செயல்முறைகளை நன்கு புரிந்துகொள்வது, ஒரு கல்வி ஆய்வு (academic analysis) பின்புலத்துடன் நிகழ்ச்சிகளை நான் ஆழ்ந்து அனுபவிக்க உதவும் என்ற என் எண்ணம்தான் இதற்கு காரணம். என் பொறியாளன் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது இத்தகைய ஞானம் ஏதாவது தேவையற்ற புத்தகங்கள் எழுத உதவுமோ என்னமோ. அந்த நல்ல தொடர்கள் வரிசையில் சேர வேண்டிய ஆனால் மிகவும் வேறுவகையான புனைவு இருபத்தேழு வருடங்களாக அமெரிக்காவின் Fox தொலைக்காட்சி சேனலில் வந்து கொண்டிருக்கும் …
பெரியவர்கள் இது ஏதோ குழந்தைகளுக்கான டாம் & ஜெர்ரி போன்ற கார்ட்டூன் ஷோ என்று அலட்சியமாக ஒதுக்கி விடுவார்கள். 1988-1991களில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் “நான் இது வரை பார்த்ததிலேயே மிகவும் முட்டாள்தனமான ஷோ அது” என்று சொல்லி தனது அறியாமையை உலகுக்கு தெரிவித்தது இந்த அலட்சியத்தின் உச்சம். ஆனால் சிம்சன் தொடரோ அத்தகைய விமர்சனங்களை ஓரங்கட்டிவிட்டு புஷ் தம்பதிகளையே ஒரு எபிசோடில் கலாய்த்துவிட்டு இன்றும் உற்சாகமாய் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
பாப்லோ எஸ்கோபார்: போதை மருந்து வியாபாரியின் கதை
சிறிது நாட்களுக்கு முன்னால் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான Netflix தயாரித்த Narcos என்றொரு பிரபலமான தொடரை பார்த்துக் கொண்டிருந்தேன். சமீப காலத்தில் அமெரிக்கர்களிடையே மிகப் பிரபலமடைந்திருக்கும் தொடரான இது கொலம்பிய போதை மருந்து கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபாரின் (Pablo Escobar) சுயசரிதை. பத்து எபிசோட் வரைக்கும் இதுவரை வந்திருக்கிறது. இனிமேலும் எபிசோட்கள் தொடர்ந்து வருமென்று நினைக்கிறேன். சாதாரணமாக தொலைக்காட்சித் தொடராக அல்லது சினிமாவாக எடுக்கப்பட்ட/எடுக்கப்படும் சுயசரிதைகள் சம்பந்தா சம்பந்தமில்லாம நாடகத்தனமாக இருக்கும் அல்லது சகிக்கவே முடியாதபடிக்கு சம்பந்தப்பட்டவரை கேவலப்படுத்தியிருப்பார்கள் அல்லது உச்சாணிக் கொம்பில் செயற்கையாக தூக்கி வைத்துக் கொண்டடியிருப்பார்கள். சில விதிவிலக்குகள் இருக்கவே செய்யும். அந்தவகையில் பாப்லோ எஸ்கோபாரைப் பற்றிய இந்த தொடரும் ஒரு விதிவிலக்குதான்.