குளக்கரை:சவுதி நிதி, அரபு விதி, டெட்ராய்ட்டின் அதோகதி

இந்திய அறிவு ஜீவிகளைக் கேளுங்கள், அவர்கள் எல்லாரும் இந்து மதத்தையும், இந்துக்களையும்தான் உடனே ஃபாசிஸ சக்திகள் என்று முத்திரை குத்துவார்கள். அந்த மதத்தின் எதுவும் காட்டுமிராண்டித்தனம். ஆனால் ஐஸிஸ் போன்ற அமைதி மார்க்கத்தினரின் வழி அதி அற்புத முற்போக்கு என்று சொல்வதில் அவர்களுக்குச் சிறிதும் தயக்கமே இராது. ஜவஹர்லால் நேரு பல்கலையின் அதி புத்திசாலி மாணவர் குழுக்களைப் பாருங்கள். எப்படி இந்தியாவை உடைத்து, காஷ்மீரைப் பாகிஸ்தானிடம் கொடுத்து, இந்தியாவுக்குள் சீனாவின் ஆட்சியை (மாவோயிச ஆட்சி) வரவேற்று உலக அமைதிக்கு வழியை நாளையே காணத் துடித்துப் போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள். அதல்லவா தீர்க்க தரிசனம்.

குளக்கரை

பல கருத்துக் கட்டுகளைப் போல மதங்கள் எனப்படுபவையும் கருத்துகளும், மூட நம்பிக்கைகளும் கலந்து கட்டியவை என்று துவங்கும் இந்தக் கட்டுரை எப்படி கதோலிக்க மதம் ஆஃப்ரிக்க மக்கள் நடுவே பரவி இருப்பது அம்மக்களுக்குப் பேராபத்தாக்க் கூடும் என்று எச்சரிக்கையை எழுப்புகிறது. ஆஃப்ரிக்காவில் ஏற்கனவே பல கொடும் வியாதிகள் உலவுகின்றன. சில இயற்கையாகப் பன்னெடுங்காலமாக இருப்பவை- மலேரியா, ஸிக்கில் செல் அனிமியா, எபோலா போன்றவை இவை. ஆனால் நவீன உலகின் அளிப்புகளான எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் நோய்கள் ஆஃப்ரிக்காவில் வருடந்தோறும் பல லட்சம் மக்களைக் கொல்கின்றன. இவற்றுக்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த தடுப்பு சாதனம் மிக எளிய ஒன்று. அது ஆணுறை (பெண்ணுறையும்தான்). கதோலிக்க சர்ச் ஆஃப்ரிக்காவில் இந்த ஆணுறையைப் பயன்படுத்துவது பெரும்பாவம் என்று பிரச்சாரம்

குளக்கரை

கட்டுரையாசிரியர் சுட்டுவதைப் பார்த்தால் அமெரிக்க ராணுவமுமே இன்று ஒரு முச்சந்தியில் நின்று எப்படி முன் செல்வது என்ற தவிப்பில் இருப்பது புலனாகிறது. தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்தும் தொழில் நுட்பத் திறனால்தான் அமெரிக்க ராணுவம் இன்னும் உலகில் முன்னணி ராணுவமாக இருக்கிறது. அதன் வீரர்கள் படிப்படியாக ஆயுதங்களுடைய உதவியாளர்களாக மாறிவருகிறார்கள். இப்படி ஆயுதங்கள் பெரும் எட்டு முன்னே எடுத்து வைக்க அவற்றிற்குத் தேவையாக இருப்பது என்ன, அந்த வகைக் கனிமங்கள் எப்படி பெருமளவு சீனாவின் கைப்பிடியில் உள்ள சுரங்கங்களில்தான் கிட்டும், அப்படிச் சீனாவுக்கு அமெரிக்க ராணுவத் தொழில் நுட்பத்தை அடகு வைப்பது அமெரிக்க ராணுவத்தை செல்லாக் காசாக்கி விடும் என்று புலம்புகிறார் இந்த அமெரிக்க ராணுவத் தொழில் நுட்பத் துறையில் ஆய்வு செய்பவர்.

குளக்கரை

அமெரிக்கா தனது மூளையின் திறனைக்காட்டியிருப்பதல்ல இங்கு செய்தி. ஆனால் ஒரு அரசு சாரா சேவை அமைப்பில் வேலை செய்வதாக நினைத்து பென்டகனின் பணத்தில் வாழ்ந்த உண்மையான சேவை மனப்பான்மை கொண்டவர்களது மனசாட்சிக்கு பதில் என்ன? சேவை அமைப்பில் சேர்ந்து ஈடுபட நினைப்பவர்கள் தாங்கள் வலையின் எவ்விதமானக் கண்ணி எனச் சதா வெம்பிப்போகவேண்டுமா?

குளக்கரை

உத்தரப் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளாக முன்னூறு பொறியாளர்கள் அரசு அலுவலகத்துக்குப் போய் மேஜையைத் தூசி தட்டி வைத்து விட்டு, சும்மா நாற்காலியில் அமர்ந்து விட்டு வீட்டுக்குப் போகிறார்கள். ஒரு மாதம், ஒரு வருடம் இல்லை, பத்து வருடங்கள். சும்மாக் கூட இல்லை, இவர்களின் சங்கம் அரசுக்குப் பத்து வருடங்களாக விண்ணப்பம் கொடுத்து வந்திருக்கிறது. இவர்களுக்கு ஏதாவது வேலை கொடுங்கள் என்று. அரசோ, உயரதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ ஏதாவது காது கொடுத்துக் கேட்டார்களா என்றால்…

குளக்கரை

ஜெர்மனியில் அகதிகளாக வந்திருப்பவர்களில் கணிசமானவர் சிரியர்களோ, மேற்காசியர்களோ இல்லை. பாகிஸ்தானியரும், ஆஃப்கனிஸ்தான் நாட்டவரும்தானாம். அட பாகிஸ்தான் தான் சொர்க்க பூமி, அமைதிப் பூங்கா, சமத்துவ சூரிய ஒளி வீசும் அற்புத நாடாயிற்றே என்று கேட்டீர்களானால் நீங்கள் சூஸான்னாவின் நண்பராகத்தான் இருக்க வேண்டும். இந்தியாவை ஃபாசிஸ்டு நாடு என்றும் பாகிஸ்தான் ஒப்பீட்டில் சொர்க்க பூமி என்றும்தானே சுஸான்னா சொன்னார். அதையும் வெட்கமே இல்லாது பிரசுரித்து மகிழ்ந்தன இந்தியச் செய்தித்தாள்கள். அந்த சுஸான்னா இதைப் படித்தால் என்ன செய்வார் என்று யோசனை வந்தது. வெட்கமெல்லாம் பட மாட்டார், அதையெல்லாம் துடைத்து விட்டுத்தானே கருப்பு சாக்கு இல்லாமல் பெண்கள் வெளியே உலவக் கூடாது என்று சொல்கிற அமைதி மார்க்கத்தின் பயங்கரவாதக் கூடாரமான பாகிஸ்தானை அமைதிப் பூங்கா என்று அவரால் சொல்லி விட முடிந்தது.

குளக்கரை

தாது வருடப் பஞ்ச காலத்தில் உயர்ஜாதி இந்தியர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு உணவளிப்பதைப் பற்றிக் கவலைப்படாது தம் நலனை மட்டும் கவனித்துக் கொண்டதாகவும், இந்துக்களின் அறமற்ற தன்மையை அது சுட்டுவதாகவும் சில தமிழ் நாவலாசிரியர்கள் ‘புரட்சி நோக்கோடு’ புத்தகங்கள் எழுதிப் பிரபலமான போது அது தவறு, இந்தியர்கள் தம் மக்களுக்கு உணவளிக்கச் செய்த பெரு முயற்சிகளைப் பிரிட்டிஷார் முனைந்து தோற்கடித்தனர் என்று சில சான்றுகளுடன் சுட்டிய ஒரு கட்டுரையைச் சொல்வனத்தில் பல மாதங்கள் முன்பு பிரசுரித்திருந்தோம். அந்தக் கட்டுரைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் பிரதமராக இருந்த, சர்ச்சில் வேண்டுமென்றே இந்தியரைப் பட்டினிக்கு ஆளாக்கிக் கொடுமையான இனப் படுகொலைகளைச் செய்திருக்கிறார் என்று நேரடியாகத் தகவல்கள் மூலம் ஆராய்கிறார் ராகேஷ் கிருஷ்ணன்.

மகரந்தம்

உங்களுக்கு மட்டுறுத்தனர்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது? வலைவெளியில் நம்முடைய கருத்துகளும் புகைப்படங்களும் மறுமொழிகளும் கண்காணிக்கப்பட்டு தணிக்கைக்கு உள்ளாகின்றன என்று அறியாத வரைக்கும் மட்டுறுத்தலில் நமக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இருக்காது. நமக்கு எதிரான எண்ணங்கள் தங்குதடையின்றி வெளியானாலோ, நம்மை அவதூறு செய்யும் பதிவுகள் ஓரிடத்தில் உலாவினாலோ, அந்த இடத்தில் மட்டுறுத்தலைக் கோருவோம்; முன்வைப்போம். அதே சமயம் நம்முடைய எழுத்துக்களோ, படங்களோ, பின்னூட்டங்களோ வெளியாகாமல் தடை செய்யப்பட்டால், சென்ஸாருக்கு உள்ளானால் சுதந்திரவெளியை முழங்குவோம்; கட்டற்ற இணையவெளியை நாடுவோம்.

குளக்கரை

ஸிலிகான் பள்ளத்தாக்கு உலகத்தின் போக்கை வெகுவாக மாற்றி அமைத்து இருபது, முப்பது ஆண்டுகள் ஆகி விட்டன. உலகம் வெறி கொண்ட சூறாவளி போல எங்கோ தலைதெறிக்க ஓடுகிறது போல ஒரு பிம்பம் நம் மனதில் தோன்றினால் நாம் வயது அதிகமானவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். தலை தெறிக்க ஓடினால்தான் ‘முன்னேற’ முடியும் என்று ஸிலிகானின் பக்தர்கள் பூரணமாக நம்புகிறார்கள். அந்த பக்தர்கள் நடுவே ஒரு புதுக் கூட்டம் எழத் துவங்கி இருக்கிறது. இந்தக் கூட்டம் என்ன வகைத்தது என்று இந்தக் கட்டுரை நுணுகி ஆராய்கிறது. படித்துப் பார்த்து …..ஹ்ம்… ஆமாம், அச்சப்படுங்கள்…

குளக்கரை

பொது இடங்களில் குண்டு வைத்து மக்களைக் கொல்பவர்களை எப்படி அனுதாபத்தோடு அணுக முடியும்? அது சரியா? என்னதான் சொந்த வாழ்வில் பிரச்சினைகள் இருந்தாலும், முகம் தெரியாத, தன் வாழ்வோடு ஒரு சம்பந்தமும் இல்லாத சாதாரண மக்களைக் கொல்பவர்களுக்கு எதற்கு அனுதாபம் காட்டுவது? இத்தகைய கேள்விகளுக்கு அவரவர் அரசியல் சாய்வுகளைப் பொறுத்து விடைகள் எழும் என்பது ஒரு பக்கம் இருக்க, இதில் ஒரு சமுதாயத்தை அழிவிலிருந்தும், பெரும் சீரழிவிலிருந்தும் காக்க ஓர் அரசு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதும் இருக்கிறது.

மகரந்தம்

சென்ஸஸ் ஆஃப் சினிமா ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியானாலும் ஃபிரெஞ்சுப் படங்களைப் பற்றிக் கூட பேசும் பத்திரிகை. அவர்களின் எழுபத்தைந்தாவது இதழை தடபுடலாக வெளியிட்டிருக்கிறார்கள். பாகுபலி எடுத்த ராஜமௌலி போல் ஹாலிவுட் மைக்கேல் பே குறித்த அலசல்களையும் போடுகிறார்கள். கேன்ஸ் திரைப்பட விழா குறித்தும் எழுதுகிறார்கள். புத்தக விமர்சனங்கள், நேர்காணல்கள், கருப்பு-வெள்ளை படங்கள், மாற்று சினிமா என எதையும் விட்டுவைக்காமல் வெளியிட்டு இருக்கிறார்கள்.

குளக்கரை

இந்த இதழில் பல குறிப்புகளை யூரோஸீன் என்கிற வலைத்தளத்திலிருந்து எடுத்திருக்கிறோம். பல யூரோப்பிய நாடுகளின் கருத்து வளம் நிறைந்த பத்திரிகைகளின் கூட்டுச் சேமிப்பாக இந்தத் தளம் இயங்குகிறது. வாடிக்கையாக இந்தியரும், தமிழரும் அனேகமாக இங்கிலிஷ் பேசும் நாடுகளின் பத்திரிகைகளையோ, அல்லது அதிக பட்சமாக ஜெர்மன், ஃப்ரெஞ்சு, சில நேரம் ரஷ்யப் பத்திரிகைகளை மட்டும் பார்த்துப் பழகி இருப்போம்.

குளக்கரை

உலகத்தின் பிணி என வருணிக்கப்படும் ஐரோப்பா இன்று வர்த்தகத்தில் நலிவடைந்து வருகிறது. ஒரு பக்கம், கடனை அடைக்கமுடியாது திண்டாடும் கிரேக்க நாடு ஐரோப்பிய யூனியனுக்குள் இருப்பதால் சலுகைகள் எதிர்பார்ப்பதை எதிர்த்து பிரஸல்ஸில் நடக்கும் ஐரோப்பிய சம்மேளனமும், மற்றொரு புறம், பிரான்சு எல்லையைக் கடந்து இங்கிலாந்துக்குள் நுழையப்பார்க்கும் அகதிகள் நடத்தும் துறைமுகப் போராட்டங்கள் என நலிவடைந்துவரும் ஐரோப்பிய நாடுகளின் இன்றைய பெரும் தலைவலிகளாக இவை மாறிவருகின்றன.

மகரந்தம்

ஒரு கோணத்தில் உலக மக்களுக்குப் பெரும் அமைதி கிட்ட வேண்டும் என்று முயலும் அமைதி மார்க்கத்தினரின் படுகொலைப் பட்டாளங்களுக்கும், உலக மக்களுக்கு ஈடில்லாத கருணை கிட்டவேண்டும் என்று முயலும் ஒரு திமிர்வாத ஏகாதிபத்தியத்தின் படைகளுக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியின் விளைவு இதெல்லாம். இரண்டும் உலக மக்களையும் உலக மனித நாகரீகத்தையும் யார் இறுதியாகக் குழி தோண்டிப் புதைப்பது என்ற போட்டியில் இறங்கி இருக்கிறார்கள்.

மகரந்தம்

மலம் கழிக்க உலகின் வளர்ந்த நாடுகளில் பெருவாரியில் மக்கள் பீங்கான் குடுவை ஒன்றின் மீது அமர்ந்து இருந்து கடனை முடிக்கின்றனர். இந்தியரில் பெருவாரியினர் இன்னும் தரை அளவில் குந்தி இருந்துதான் மலம் கழிக்கின்றனர். இந்தியாவிலும் நகரங்களில் மத்திய வர்க்கமும், உயர் நிலை மக்களும் நாற்காலியில் அமர்வதை ஒத்த நிலையில் இருந்து கழிப்பதைச் செய்வதை இப்போது வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர். முதியோர் நிறைந்த குடும்பங்கள் இப்போது அதிகரித்து வருவதால், அவர்களால் முன் காலம் போல குந்தி இருந்து மலம் கழிப்பது முடியாத நிலையில் இப்படி நாற்காலி அமர்வு முறை அவர்களுக்கும் பழகி அதுவே வசதி என்பது போல ஆகி விட்டது. இந்தச் செய்தியில் ப்ராக்டாலஜி என்கிற துறை சார்ந்த மருத்துவர்கள் மனிதக் குடல்வால், ஆசனவாய் ஆகியவற்றின் நலனைப் பராமரிக்க உதவும் மருத்துவர்கள். இவர்களில் சிலர் …

குளக்கரை

இப்பொழுது ஹைத்தி பூகம்ப நிவாரண நிதிக்காக ஐநூறு மில்லியன் (கிட்டத்தட்ட மூவாயிரத்து இருநூறு கோடி ரூபாய்) நன்கொடை பெற்ற செஞ்சிலுவைச் சங்கம், அந்த நாட்டில் வெறும் ஆறே ஆறு வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், கணக்கு காட்டும்போது ஒரு இலட்சத்தி முப்பதாயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்ததாக செஞ்சிலுவைச் சங்கம் சொல்லி இருக்கிறது. அப்படியானால், ஆயிரக்கணக்கான வீடுகளும், மருத்துவமனைகளும், பள்ளிகளும், இன்ன பிற கட்டமைப்புகளும் உருவாக்குவதற்காக சேகரித்த அரை பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்னவாயிற்று? ரெட் கிராஸ் நிறுவனம் பதில் சொல்ல மாட்டேன் என்று மறுத்து இருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கத்தைப் போலவே நிதி திரட்டிய பிற அமைப்புகள் 9,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருப்பதையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மகரந்தம்

கடந்த நூற்றைம்பது வருடங்களாக அமெரிக்காவின் மேற்குப் புற மாநிலங்களில் ஏராளமான நகரங்கள் கட்டப்பட்டு, பெரும் மக்கள் திரள் அங்கு குடியேறியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் இந்த மக்கள் திரள் சேர்ந்தது. இந்தத் திரள் நகரங்களில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், கலிஃபோர்னியாவைப் போன்ற அரைப் பாலை நிலங்களில் திசை திருப்பிக் கொணரப்பட்ட பெரும் ஆற்று நீரை வைத்து பெருமளவில் விவசாயம் நடந்தது. அமெரிக்காவில் இன்று விற்கப்படும் ஏராளமான காய்கறிகள், பழ வகைகளில் பெரும்பாலானவை கலிஃபோர்னியா அல்லது அது போன்ற மேற்குப் புற மாநிலங்களில் விளைந்தவை. சமீபத்தில் உலகெங்கும் திடீரென்று மாறி வருகிற தட்ப வெப்ப நிலைகளால் …

குளக்கரை

ஏப்ரல் மாத Words Without Borders தமிழுக்கான சிறப்பிதழாக வெளியாகி இருக்கிறது. சங்க காலத்தில் ஐந்திணைகளாக நிலவெளி சார்ந்து பார்க்கும் தமிழ் இலக்கியத்தில், தற்காலத்திற்கேற்ப புலம்பெயர்ந்தவர்களின் அடையாளச் சிதைவு, குடியுரிமையில்லாத் தன்மை, அந்நியப்படுதல், புலம்பெயர் வாழ்வு, சிறைப்பட்ட அயல் வாழ்க்கை ஆகியவற்றை அளிக்க முனைந்திருக்கிறார்கள். குட்டி ரேவதி, திலீப் குமார், சுந்தர ராமசாமி, மாலதி மைத்ரி, இமையம், அசோகமித்திரன், சுகுமாரன், ஷர்மிளா சயீத், க்ருஷாங்கினி, அ. முத்துலிங்கம் …

குளக்கரை

சக மனிதர்களின் வற்புறுத்தலால் உலக மனிதர்களின் புத்தியே மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இது நடக்கிறது. சக மனிதர்கள் இத்தனைக்கும் ஒருவரின் அண்டைப் பக்கமோ, அன்றாட வாழ்வின் பல அம்சங்களிலோ பங்கெடுப்பாரே இல்லை. இது வாழ்வில் பெருகி வரும் ஊடக இடையீட்டால் நேர்வது என்றெல்லாம் பேசுகிறது இந்தக் கட்டுரை. இதை எத்தனை தூரம் நாம் பொருட்படுத்த வேண்டும்? வாசகர்களின் கருத்து இந்தக் கட்டுரை பற்றி என்ன என்று சொல்வனத்துக்கு எழுதித் தெரிவிப்பார்களா?

குளக்கரை

காமிக் புத்தகங்கள் இந்தியாவில் பல காலமாகவே பிரபலமானவை. ஆனால் இந்திய காமிக் புத்தகங்கள் பெரும்பாலும் புராணங்கள், இந்திய வரலாற்றின் நாயகர்கள், சில மர்மக்கதை/ சாகசக்கதைகள் என்ற வகையோடு நின்று விடுகின்றன. சாகச/ மர்மக் கதைகள் எக்கச் சக்கமாக விற்கின்றன என்பதைச் சமீபத்து புத்தகக் கண்காட்சியில் தெரிந்து கொண்டேன். ஒரு கடையில் அவர்கள் கொண்டு வந்த பிரதிகள் எல்லாம் தீர்ந்து அடுத்த கட்டுப் பிரதிகளுக்கு முன்பணம் செலுத்தத் தயாரானவர்கள் கூட இருந்தார்களாம், நண்பர் சொன்னார்.

குளக்கரை

திறந்த சமுதாயம் வேண்டும் என்று வாதிட்ட பாப்பர், இடது சாரிக் கொள்ளி எறும்புகளுக்குக் கடுமையான எதிரி. அவரை இழித்துரைக்காத இடது சாரியினர் அன்று குறைவு. ஆனால் அவருமே ஒரு ஜெர்மன் இடது சாரிதான். உதவாக்கரை லெனினிய இடது சாரிகளுக்கு எதிராகவும், தடாலடி மார்க்சியருக்கு எதிராகவும் நின்ற பாப்பர், அறிவியல் அணுகல் என்பதை உலக அணுகலாக்க முயன்றார். அவருடைய சமகால அடார்னோ பாப்பரின் அறிவியல் அணுகல் என்பது சாத்தியமற்ற சமூகவியல் ஆய்வுகள், அலசல்களில் இந்த அணுகல் ஒருவித அடாவடி சான்றடிப்படை வாதத்துக்குக் கோவில் கட்டுவதாக அமையும் என்றும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளுக்கு எதிரான முயற்சியாக அறிவியலைப் பயன்படுத்த விடாமல் போகும் என்றும் வாதிட்டாராம்.