ஓரிகமியால் மடிந்த கண்ணாடி பொருட்களை உருவாக்கும் புதிய நுட்பம்

புதுமையான பொருட்களின் கலவையுடன் நிலையான ஒரு 3D பிரிண்டரில் பல்வகை கண்ணாடிப் பொருட்கள் அச்சிட முடியும்.  சிக்கலான சிலிக்கா கண்ணாடி வடிவமைக்க பொதுவாக 1000° C க்கு மேல் சூடாக்க வேண்டும்.  அச்சிடலின் போது இத்தகைய‌ வெப்பமடைவதைத் தவிர்க்க, சூரிச்சில் உள்ள சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் குணால் மசானியா, ஆண்ட்ரே ஸ்டுடார்ட் மற்றும் குழுவினர், ஒரு கண்ணாடி செய்முறையை உருவாக்கினர். அதில் கனிம கண்ணாடி முன்னோடிகளுடன், ஒளி-பதிலளிக்கக்கூடிய கரிம கலவைகள் உள்ளன

பைடனின் ஆட்சிக்காலம்: ஆண்டறிக்கை

நாட்டின் சாலைகள், பாலங்கள், தண்டவாளங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் நீண்ட கால மேம்பாடுகளை “பில்ட் பேக் கட்டமைப்பு” திட்டத்துடன் இணைந்து ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை மில்லியன்(1,500,000) புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி! இதற்காக ஒரு ட்ரில்லியன் டாலர் உள்கட்டமைப்பு மசோதாவையும் சிரமப்பட்டு இரு கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றியதை பைடன் அரசின் சாதனையாக ஜனநாயக கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

நம் வீட்டைத் திரும்பிப் பார்த்தல் – EarthRise

“இந்த சித்திரம் மிகவும் அமைதியானது, அதே சமயத்தில் மூச்சை இழுத்துப்பிடிக்க வைப்பது. ஒரு கொந்தளிப்பான ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்டது. அது ஒரு கிறிஸ்மஸ் ஈவ் நாள், ஆனால் அங்கிருந்து (நிலவில், அத்தனை தொலைவிலிருந்து) வியட்நாமில் ஒரு கோரமான போர் நடந்துகொண்டிருக்கிறது அல்லது ஐரோப்பாவைப் பனிப்போர் பிளவுபடுத்துகிறது என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள். டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அல்லது பாபி கென்னடியின் படுகொலைகளை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
அந்த தொலைவிலிருந்து, மானுடர்கள் கண்களுக்கு புலப்படாதவர்கள், நகரங்கள், நாடுகள் மற்றும் தேசிய எல்லைகளும் கூட. இன, கலாச்சார, அரசியல், ஆன்மீக ரீதிகளாக நம்மைப் பிரிக்கும் எதுவும் இச்சித்திரத்தில் இல்லை. இதில் நாம் காண்பது, ஒரு குழைவான கிரகம் பிரபஞ்சத்தின் தனிமையில் இருப்பதை மட்டுமே.

மனச் சோர்வைக் குணப்படுத்தும் மேஜிக் காளான்கள்

மிதமானது முதல் கடுமையானது வரையான பெரும் மன அழுத்தச் சீர்குலைவுகளுக்குச் சைலோசிபின்னுடன் உளவியல்சார் சிகிச்சை முறைகளையும் இணைத்து சிகிச்சை அளிக்கும்போது, இரண்டு டோஸ் சைலோசிபின் மருந்து, பொதுவான மனச்சோர்வு முறிமருந்தான எஸ்சிடாலொப்ரம் (escitalopram) அளவுக்குச் சம ஆற்றல் உடையதாகத் தோன்றுகிறது என்று இரண்டாம் கட்ட மருத்துவ முயற்சியில் எட்டப்பட்ட முடிவுகள் கூறுகின்றன.

கரிமக் கவர்வு (Carbon Capture) எந்திரங்கள் கண்காட்சி

படிம (fossil) எரிபொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுக்கு 50 பில்லியன் டன் கரிமம் வளிமண்டலத்தில் சேர்கிறது. ஆனால் கரிமக் கவர்வுக் கருவிகளால் பிரித்தெடுக்க முடிவது சொற்பமே, ஈரிலக்க டன்கள் அளவைத் தாண்டாது. இருப்பினும் பசுங்குடில் வாயு உமிழ்வுக் குறைப்பினால் மட்டுமே புவி வெப்பமாதலைத் தடுத்து நிறுத்திவிட முடியாதாகையால் கரிமக் கவர்வும் தொடர வேண்டும் என்கிறார், கண்காட்சியின் நெறியாளர் வார்ட் (Ward).

பரிணாம வளர்ச்சியும் தொல்லெச்சச் சான்றுகளும்

மயசீன் (Miocene) சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுறும் சமயத்தில், அதாவது, 9.3 மில்லியன் மற்றும் 6.5 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் நாம், குறிப்பாகச் சிம்பன்ஸி வகைக் குரங்குகளிடமிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கலாம்.

முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறு நுண் எறும்பு

செங்குத்தாகத் தாவி, தன் எடையைப் போல் இரு மடங்குள்ள இரையை இவை எளிதாகப் பிடிக்கும். இதைவிட வியப்பான செய்தி ஒன்று உண்டு – அவை தங்கள் மூளையை 20% வரை பெருக்கவும் செய்யும், குறைக்கவும் செய்யும்.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே

1970ஆம் ஆண்டிலிருந்து 21 மாதிரி நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளின்படி, ஆக்கிரமிக்கும் இனங்கள் 70% அதிகரித்துள்ளன என்ற கவலைக்குரிய செய்தியை IPBES சொல்கிறது. ஃப்ராங்க் கோர்ஷாம் சொல்கிறார்: “உலக வர்த்தகம் இத்தகைய ஆக்கிரமிக்கும் இனங்களை புதிதாகக் கொண்டு வருகிறது. மாசு மிகுந்த சுற்றுச் சூழலோ, அவைகள் நன்கு செழித்து வளரக் களம் அமைக்கிறது.’ அவர் மேலும் சொல்கிறார்: “செல்லப் பிராணிகளான பூனைகள் செய்யும் அழிப்பும் அதிகம்; பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் இருக்கும் இவை, பறவைகள், ஊர்வன போன்றவற்றிற்குப் பெரும் யமனாக உருவெடுத்துள்ளன.”

கற்றலொன்று பொய்க்கிலாய்

இளைய பாரதத்தை வரவேற்றுப் பாரதி ‘கற்றலொன்று பொய்க்கிலாய்’ எனப் பாடுகிறார். புகழ்பெற்ற, இந்தியாவிலுள்ள அல்லது வெளிநாட்டில் பணி செய்யும் இந்திய அறிவியலாளர்கள், மனித வள மேம்பாட்டுத்துறை வல்லுனர்கள் போன்றவர்களை இன்ஃபோசிஸ் கௌரவித்திருக்கிறது. டிசம்பர் 2, 2020 அன்று  நிகழ்நிலை நிகழ்வின்மூலம் அறுவருக்கும் தங்கப்பதக்கம், விருது மற்றும் பணமுடிப்பு $100,000  “கற்றலொன்று பொய்க்கிலாய்”

தானுந்து பேட்டரி மறுசுழற்சியும் காரீய நஞ்சேற்றமும்

காரீயம் எளிதில் சுவாசம் அல்லது வாய் மூலமாக உடலினுள் சென்று ரத்த ஓட்டத்தில் கலந்து உணவுப் பாதை மற்றும் மூளையில் உபாதைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிந்திருக்கின்றனர். சிறிய அளவு காரீயம்கூட இளம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, IQ, கவனம் ஆகியவற்றின் குறைபாடுகளுக்குக் காரணமாகிவிடும். காரீயம் ஒரு வலிய நரம்பு நச்சு (neurotoxin). சில நேரங்களில் வன்முறையைத் தூண்டிவிடவும்கூடும்.

தீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்

சுமார் பத்து ஆண்டுகள் முன்பு இந்தியாவில் சற்றேறக்குறைய 32,000 பெண்கள் மகப்பேற்றின்போது ஓர் ஆண்டில் இறந்தார்கள். முதன்மை தாய் சேய் நல மருத்துவமனையும் 2018-ல் அரசாங்கம் கொண்டுவந்த 18 மாத மருத்துவச்சிப் பயிற்சியும் இந்த நிலையைச் சற்று மாற்றி இறப்பைக் குறைத்தன. இருந்தும் போக வேண்டியதென்னவோ வெகு தூரம்.

செவ்வாய் கோளில் குடியேறலுக்கான கட்டுமானப் பொருட்கள்

ஒரு மில்லியன் குடியிருப்புகளை உருவாக்கத் தேவையான கட்டுமானப் பொருட்களை புவியில் இருந்து எடுத்துச் செய்வதற்குப் பெருஞ்செலவு செய்யவேண்டியிருக்கும். அது இயலாத காரியம். உள்ளூரில் கிடைக்கும் மண், ஜல்லிகளை கட்டுமானப் பொருட்களாக உபயோகித்துக் கட்டடம் எழுப்பும் தொழில்நுட்பம் அங்கே உருவாக வேண்டும். இதற்காக நாசா முப்பரிமாண அச்சு உறையுள் பரிசுப் போட்டியை (3-D printed Habitat Challenge) அறிவித்திருக்கிறது.

மகரந்தம்

விண்ணில் ஓர் நெடுஞ் சுவர் ‘தாரகையென்ற மணித்திரள் யாவையும் சார்ந்திடப் போ மனமே! சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத் திங்களையுஞ் சமைத்தே…’ – பாரதியார் முப்பரிமாண வரைபடம் ஒன்றின் உதவியுடன், அண்டவியலாளர்கள் மிகச் சமீபத்தில், வானில் அதி அற்புதமான தென் துருவச் சுவர் (South Pole Wall) ஒன்றைக் “மகரந்தம்”

கவசக் கோன்மை

உலகெங்கிலும் அரசுகளும், அறிவியலாளர்களும், நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்களும் பரிந்துரைக்க, மனிதர்கள் கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அணிந்து நடமாடுகிறார்கள். அது மட்டுமே போதுமானதன்று. கடந்த இரு வாரங்களாகக் கவசம் அணிவது மக்களின் விருப்பம் சார்ந்து இருந்ததிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது மக்களின் நடத்தையில் மாறுதலைக் கொண்டு வந்துள்ளது என்பதை “கவசக் கோன்மை”

மகரந்தம்

அண்டக்கதிர்களைக் கண்டறியும் பரிசோதனையில், 2006 மற்றும் 2014-லில், பனியிலிருந்து அதிக சக்தி வாய்ந்த அண்டக்கதிர்களின் தலைகீழ் அருவியைக் கண்டறிந்தார்கள். முதலில் அதைப் பின்னணி ஓசை என்றே நினைத்தாலும், 2016-லில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அது தலைகீழ் அண்டக் கதிர்ப் பொழிவு எனச் சொன்னது. இது ஓர் இணை உலகம் இருக்கலாம் என்ற ஐயத்தினை ஏற்படுத்தியது.

குளக்கரை

ஃப்ளோரிடா வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர்கால காய்கறி சாகுபடியில் முதலிடம் பிடித்தது. மார்ச் – 2020 கொரோனா தாக்குதலைத் தொடர்ந்த லாக்-டவுனின் முதல் பலியும் அதுவே. உணவு விடுதிகள், உல்லாசக் கப்பல் பயணம், பள்ளிக்கூட சிற்றுண்டிச்சாலைகள், விமான நிறுவனங்கள், தீம் பார்க்குகள் அனைத்தும் மூடப்பட்டதால் உற்பத்தியாளர்கள், “கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என்ற ராமலிங்க வள்ளலாரின் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

மகரந்தம்

நெடிய பாரம்பரியம் கொண்ட பறை (drum), தாளம் (Cymbal) வகை வாத்தியங்கள் பண்டைய கலாச்சாரங்கள் அனைத்திலும் இருந்தன . அவற்றை உள்வாங்கி, ஒருவரே பறையடித்து தாளமிடும் வகையில் அமெரிக்காவில் உருவானது டிரம் செட் (Drum செட்).

குளக்கரை

கடந்த 40 ஆண்டுகளில் மறுசுழற்சியில் தயாரிக்கப் பட்ட பிளாஸ்டிக்கின் அளவு 10% க்கும் குறைவானது .
….அமெரிக்க நெகிழிக் கழிவுகளை பெருமளவில் இறக்குமதி செய்துகொண்டிருந்த சீனா , தற்போது அதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது . சீனத்தைத் தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தைவான் நாடுகளும் கட்டுப்பாடுகள் விதித்தன. இறக்குமதி அனுமதிகள் புதுப்பிக்கப்படாததால் அமெரிக்க நெகிழிக் கழிவுகள் இந்தியா வரவும் வாய்ப்பில்லை . இதனால் மறுசுழற்சி வேலைகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறின. அங்கே பல மில்லியன் டன் நெகிழிக்கழிவுகளின் மறுசுழற்சிக்குத் தேவையான ஆதார கட்டமைப்புகள் இல்லாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குளக்கரை

‘மண்புழு குடியானவர்களின் நண்பன்’ என்பது பழைய தொடக்கப் பள்ளிகளில் ‘இயற்கைப் பாடமும் தோட்ட வேலையும்’ என்ற பாடப்பிரிவின் பாடப் புத்தகத்தில் நான் படித்த வாசகம். அதை விவசாயியான என் தாத்தாவிடம் காட்டி விளக்கம் கேட்டேன். அவர் ‘‘நாக்குப்பூச்சி தானே ? ஒரு பிரயோசனமும் இல்லை . அது நெல்வயலில் மண்டிப் போனால், வயல் நிறைய நீர் உறிஞ்சும். அதனால் நீர் இறைப்பு சிரமமாகி விடும்’ என்றார்.

குளக்கரை

Experimental Advanced Superconducting Tokamak (EAST) என்ற உலை சி சுவான் மாகாணத்தில் அமைந்துள்ளது. ‘டோனட்’ வடிவிலானது.2017-ல் 50 மில்லியன் டிகிரி வெப்பம்தான் உருவாக்க முடிந்தது;2018-ல் நடந்த பரிசோதனையில் அதில் 100 மில்லியன் டிகிரி செல்ஸியஸிற்கும் மேலாக வெப்பம் கிடைத்தது.செப்புக் கம்பிச் சுருள்கள் செறிவான காந்த மண்டலத்தின் மூலம் அதிக அளவில் ‘எலெக்ட்ரான்’ வெப்பத்தை தக்க வைத்தது இதில் ஒரு முக்கிய திருப்புமுனை.இயற்கைச் சூரியனின் உட்புறத்திலேயே 15 மில்லியன் டிகிரிதான் வெப்பம் உண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குளக்கரை

சோஷலிஸ்ட்ஸ் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட சிலவற்றைப் பாதுகாக்க விழைகிறார்கள்.அரசியலும், பண்பாடும் களேபரமாகக் கலந்த இந்த நிலையில் லெனின் காப்பாற்ற விழைந்த அந்த ஜாரிஸ்ட் ரெயில்வே போல(!),புத்தகங்களும், சினிமாக்களும், புரட்சிக்கு முன் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே காப்பாற்றப்படவேண்டும்.அரசியல் செய்ய வேண்டிய வேலை வருமானத்தை சரிசமமாக்குவது,மாணவர்களின் கடனை நீக்குதல் போன்றவையாகும்.கலாச்சாரம் என்பது அரசியலிலிருந்து பிரிந்துதான் செயல்படவேண்டும்.

Jocelyn Bell Burnell describes how she discovered pulsars

குளக்கரை

கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் இயற்பியல் ஆய்வு மாணவியாக இருந்த ஜாஸலின் பெல் பர்னல் வான்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள் போன்றவற்றை ‘வானொலி தொலைநோக்கி’யின் உதவி கொண்டு கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இடையேயான பொறிச்சிதறல் வரிசைகளைக் கவனித்து வந்தார். அதற்கு அவர் பயன்படுத்தியது ஐந்துகி மீ நீளமுள்ள வரைபட பதிவேடுதான். இன்றைய நாட்களைப் போல் கணிணி பயன்பாட்டிலில்லை. ஐந்து கி.மீ நடந்து நடந்து பதிவிட வேண்டும்.ஒலியின் அதிர்வலைகள் சன்னமானவை; மேலும், ஒரு குறிப்பிட்ட திசையில் 1.337 வினாடிகள் மட்டுமே பதிவிடமுடியும்.

குளக்கரை

ஆபத்து அதிகமானதால் லாபம் அதிகமாவதில்லை. ஆபத்துகளைத் தாண்டி தப்பித்தால் சில சமயம் சிரஞ்சீவித்தனத்துக்கான குளிகை கிட்டுமோ என்னவோ. இந்த எழுத்தாளர் குழந்தை வளர்ப்பைப் பற்றித்தான் எழுதுகிறார். மிகச் சாதாரணமான தலைப்பு. ஆனால் எதிர்த் திக்கில் போய்ப் பார்க்கும் கட்டுரை இது. துவக்கத்திலிருந்தே
எதிர்.

சீனாவின் அடாவடிகளும் இந்தியாவின் சுணங்கலும் (குளக்கரை)

இந்திய அதிகாரிகள் இந்தியாவின் பெருங்கொள்ளையரைக் கைது செய்ய உதவுமாறு இண்டர்போலை அணுகிய போது இண்டர்போல் அந்த கோரிக்கைகளை அலசிப் பார்த்து அவற்றில் குறை உள்ளது என்றும் தன் அதிகாரிகளால் அந்தக் கோரிக்கைகளை ஏற்கவியலாது என்றும் தெரிவித்ததாகச் சில மாதங்கள் முன்பு செய்திகள் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். சில கொள்ளையர்கள் இந்திய அதிகாரிகள், அரசியலாளர்களின் உதவியால் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இன்று வரை எந்தக் குற்றவாளியையும் இந்தியா திருப்பிக் கொண்டு வந்ததில்லை.
சீனாவின் செயல்களுக்கும் இந்தியாவின் கையறு நிலைக்கும் என்னவொரு வேறுபாடு?

குளக்கரை

கொசுக்கள் குளம், குட்டைகளில் நீரில் முட்டை இடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் லார்வா எனப்படும் இளம் குஞ்சுகள் இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக் முத்துக்களை உணவோடு சேர்த்து உண்கின்றன. இந்தக் கொசுக்களை உண்ணும் பறவைகள், வௌவால்கள் போன்ற இதர உயிரினங்களை உணவுச் சங்கிலியில் மேல்நிலையில் உள்ள பிராணிகள் உண்ணும்போது அவை படிப்படியாக மேலே உயர்ந்து, மனிதரின் உணவுச் சுழற்சிக்குள் வந்து விடுகின்றன.

குளக்கரை

இந்தியாவில் பண வீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது- ஆறு அல்லது எட்டு சதவிகித பணவீக்கம் ஆட்சிகளைக் கவிழ்த்துவிடக் கூடியது என்று நமக்குத் தெரியும். இப்படியொரு நிலையை நினைத்துப் பார்க்க முடியுமா?- வெனிசூயலாவில் பணவீக்கம் 82,700 சதவிகிதம் என்ற நம்ப முடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு கிலோ தக்காளி, கேரட், அரிசி, ஒரு டாய்லட் பேப்பர் ரோல், ஒரு பார் சோப் வாங்க பணக்கத்தைகளை அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது – இங்குள்ள புகைப்படங்களைப் பாருங்கள்

குளக்கரை

உங்கள் நாட்டில் சுயாட்சி நடக்கிறது. தன்னாட்சியுடைய சமுதாயத்தில் இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத ஏதோவொன்றின் மீது பிழை கற்பித்து பழி போடுவோம். அதை மூன்று புத்ததகங்கள் கொண்டும், தற்காலத்தில் அல்காரிதம் நிர்ணயிக்கும் முடிவுகளைக் கொண்டும் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. இயற்கையின் விதி என்றோம்; கடவுள் வகுத்த வழி என்றோம்; வரலாற்றின் சதி என்போம்; ஏதோவொரு காரணத்தைக் கற்பிக்கிறோம். இதே போல் கணினி நிரலியும், தன் முடிவுகளுக்கும் நிர்ணயங்களுக்கும், நம்மால் எழுதப்பட்ட சட்டதிட்டங்களைக் கொண்டு நெறிப்படுத்தி மனிதரின் வாழ்க்கையை திசைதிருப்புகிறது. இந்த மாதிரி வினைச்சரம் அமைத்த நுண்ணறிவுப் பாதை எப்படி இருக்கும்?

குளக்கரை

கிருமிகள் இத்தனை பயங்கரமானவை என்றால், இத்தனை லட்சம் மக்கள் ஏன் உடனே வீழ்ந்து மடிவதில்லை என்பது ஒரு நியாயமான கேள்வியாக இருக்கும். மடியாவிட்டால் என்ன, எத்தனையோ நோய்களோடு வாழ்ந்து குறை ஆயுளோடு இருந்து போகிறார்கள், அதைத் தவிர்க்கலாமே என்று விளம்பர ஆதரவாளர்கள் சொல்லக் கூடும். மேற்படி நிவாரணிகளால்தான் ஆயுள்காலம் நீட்டிக்கப்படுகிறது என்பதை நிரூபிக்க என்னென்ன சான்றுகள் தேவைப்படும் என்று நாமெல்லாம் யோசிப்பது இல்லை. கிருமிகளே இல்லாத, பாக்டீரியாக்களே இல்லாத, வைரஸ்களே இல்லாத கடும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட வசிப்பிடங்கள், நகரங்கள், வேலை செய்யுமிடங்களை நம்மால் உருவாக்க முடியுமா? அது மேலானதாக இருக்குமா? 25 ஆம் நூற்றாண்டிலாவது அப்படி ஒரு வாழ்க்கை நமக்கு சாத்தியமாகுமா?

குளக்கரை

லூசியைப் போல இன்னமும் எலும்புக் கூடாகாமல் பாதுகாக்கப்படும் இன்னொரு உடல் ரஷ்யாவில் உண்டு. அதை வைத்துக் கொண்டு ரஷ்யர் நடத்தும் அரசியல் சூதாட்டங்கள் பல என்றாலும், யூரோப்பியத்துக்குத் தெண்டனிட்டுப் பழகிய பல ஆயிரம் பேர் உலகெங்கும் பற்பல நாடுகளிலும் உண்டு. அவர்கள் இந்த உடலின் முன்னாள் உயிராகவிருந்த ஒரு கொடுங்கோலரின் நாமஜெபம் செய்து கொண்டு இன்னமும் அரசியல் நடத்துகிறார்கள்.இந்த உடலில் சுமார் 65 ஆண்டுகள் முன்பு வரை உயிரோடு உலவிய மனிதரின் பெயர்  ஜோஸஃப் ஸ்டாலின்.

குளக்கரை

இன வெறுப்பும் அடிமைத்தனமும் நவீன வாழ்வின் தோன்றல்கள் அல்ல. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதும் சுரண்டுவதும் சமூக யதார்த்தமாகவும், குறிப்பிட்ட இனத்தைத் தழைக்க வைக்கப் போடப்படும் ‘நியாயமான’ சட்டங்களாகவும் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே நிலவி வந்துள்ளன. அமெரிக்காவின் கறுப்பின மக்களின் வரலாறு அப்படிப்பட்ட ஒன்றுதான். குறிப்பாக தெற்குப்பகுதிகளில் அடிமைத்தனத்தை அழித்த பின்னரும் தங்கள் மேலாதிக்கத்தைக் கைகொள்வதற்காக ஒப்பந்தக்கூலிகளாக மிரட்டியும், ஏமாற்றியும், குற்றம்சாட்டியும் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் வரலாறு மிகக்கொடூரமானது.

குளக்கரை

இந்தக் கைதிகளைப் பயன்படுத்தி பல தொழில்கள் நடைபெறுகின்றன, அவற்றிலிருந்து லாபமும் ஈட்டப்படுகிறது. இந்தச் சிறைகளில் அடைப்பட்டுக்கிடப்பவர்கள், பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகவே இருக்கின்றனர். இதுவும் அரசு பாரபட்சமாக ஒரு இனத்தவர்களுக்குக் கொடுமைகள் இழைத்து, அவர்கள் மூலம் லாபம் ஈட்டும் வழிமுறையாக உள்ளது.  இப்படிக் கறுப்பினத்தவர்களுக்கு அநீதி இழைப்பதுபோல் செயல்படும் அரசு, அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் தனிமைப்படுத்தவே விழைகிறது என்று குற்றம் சாட்டுகிறார்.

குளக்கரை

நம் உடலை சற்றே உற்று கவனித்தாலே தெரியும், அது எத்தனையோ ஆச்சரியங்களை இயற்கை என்ற பெயரில் பொதித்து வைத்திருக்கிறது என்று. ஓர் ஆரோக்கியரின் ரத்தத்தில், சோடியத்தின் அளவு ஓர் லிட்டருக்கு 135லிருந்து 145 milliequivalents (mEq/L). இந்த அளவுகளிலிருந்து சற்றே மீறினாலும் உடல் சீர்கேட்டிற்கு கொண்டு செல்லும். அவ்வாறு செல்ல விடாமல் உயிரினங்கள் உடல், தன்னளவிலேயே சம நிலைக்கு கொண்டு வந்துவிடும். இத்தனை கட்டுக்கோப்பாக உயிரனங்களின் உடல் சுயமாக சமநிலை பேணுவதை மருத்துவ துறையில் homeostasis என்ற சொற்றொடரில் குறிக்கப்படுகிறது. தன் தகப்பனார் உடல் நிலை சரியில்லை என அறிந்தவுடன் சித்தார்த் முகர்ஜி அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு விரைவதில் தொடங்குகிறது, இந்தக் கட்டுரை.

குளக்கரை

ஆர் கே நகர் தேர்தல் முடிவுகள் பற்றி பல காட்டமான விமரிசனங்கள் எழுகின்றன. அவற்றில் முக்கியமானது, ஆர் கே நகர் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டார்கள், இதனால் ஜனநாயகம் தோற்றுப் போய் விட்டது என்பது. குறிப்பிட்ட சாதிகளைக் குறி வைத்து, கல்வியிலும் வேலையிலும் அரசு ஒதுக்கீடு பெற்றுத் தருகிறோம், என்று வாக்குறுதி அளித்து சில கட்சிகள் வெற்றி பெற்றபோது தோற்காத ஜனநாயகம் இப்போது தோற்றுப் போய் விட்டதா? அடுத்த நாள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்கள், ஏழ்மையை அறியாதவர்கள், இவர்களால்தான் …

குளக்கரை

செய்தி அமெரிக்க ஆட்சியாளர்களின் அபிமானத்துக்கு உரிய, அந்த ஆட்சியாளர்களின் எஜமானர்கள் என்றே நாம் கருதக் கூடிய ஒரு கூட்டம் பற்றியது.

உலகின் மொத்தச் சொத்துகளில் பாதியை இந்தச் சிறு கூட்டம் தன் கையில் வைத்திருக்கிறது என்று த க்ரெடிட் ஸ்விஸ் வங்கி கணக்கிடுகிறது. உலகத்தில் சுமார் 36 மிலியன் நபர்களே உள்ள இந்த மிலியனேர்கள் உலக மக்கள் தொகையான சுமார் 7600 மிலியன் மக்களில் அரை சதவீதத்துக்கும் கீழான எண்ணிக்கை உள்ளவர்கள். ஆனால் உலகச் சொத்துகளில் 50% இவர்கள் கைவசம் உள்ளது.

குளக்கரை

தமிழ்த் திரைப்படத்தில் வரும் பாலியல் வன்முறைக் காட்சிக்குப் பின், ஒரு பஞ்சாயத்து கூடும். அதில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்ணை அதை நிகழ்த்தியவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்ற (வழக்கமான) விசித்திரமான தீர்ப்புக் கூறப்படும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகண நீதிமன்றம் அளித்துள்ளது. பாலியல் வன்முறை மூலம் பிறந்த ஒரு குழந்தையை அதன் தாயோடு, அந்த வன்முறையை நிகழ்த்தி அவளைக் குழந்தைக்குத் தந்தையாக்கியவனும் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்றும், தனது கட்சிக்காரரை இரண்டாவது முறையாக சட்டம் தண்டித்துள்ளது என்றும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

குளக்கரை

செஞ்சிலுவைச் சங்கம் நிஜமாகவே அவ்வாறு தன்னலமற்ற சேவையை வழங்குகிறதா என்பதை ஆராய்ந்தபோது ரெட் கிராஸ் வெறுமனே புறத்தோற்றத்தில் மட்டும் அப்படி பாவ்லா செய்வதாக தெரியவந்திருக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு நியு ஆர்லான்ஸ் நகரில் வெறுமனே ஷோகேஸ் பொம்மை போல் ஒரு காரை அங்கும் இங்கும் ஓட்டி, நிவாரணத்தில் ஈடுபட்டது போல் சி.என்.என். டிவியில் பிரச்சாரம் மட்டும் செய்தது பல ஆண்டுகள் முன்பு அம்பலமானது. அதன் பின்னும் ஹைதி பூகம்பம் போன்ற பேரழிவுகள் நடந்த சமயங்களில் பணம் வசூல் செய்வதையும், நன்கொடைகளை புதிய நுட்பங்களைக் கொண்டு குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியதை இந்தக் கட்டுரை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது. 2011ல் ஹய்தி நாட்டில் நடந்த நில நடுக்கத்திற்குப் பின் ஐம்பது கோடிகளை தானமாக சேகரித்துவிட்டு, மொத்த நாட்டிற்கும் ஆறே ஆறு வீடுகளை கட்டிக் கொடுத்தது போல் …

குளக்கரை

பரிணாம வளர்ச்சியைப் பொருத்தவரை, மலர்களின் பரிணாம வளர்ச்சி எப்போது துவங்கியது என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 140 மில்லியனிலிருந்து 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்பட்டாலும், மலர்களின் படிமங்கள் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்படவே இல்லை. டார்வின் கூட மலர்களின் பரிணாம வளர்ச்சியைப் புதிராகவே கருதியிருக்கிறார். திடீரென்று பல்வேறு வடிவங்களில் காணப்பட்ட மலர்களின் வளர்ச்சியை ஒரு மர்மம் என்றே அவர் வர்ணிக்கிறார்.

குளக்கரை

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நாடகத்தில் அதிபர் தமது சட்ட மந்திரி போன்ற பதவிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு நபரை ‘முறைப்படி’ தேர்ந்தெடுக்கக் கூட்டப்பட்ட ஒரு அவையில், பார்வையாளர் ஒருவர் அங்கு இந்த நபரின் ‘நேர்மை, நம்பகத்தன்மை, நியாய உணர்வு’ போன்றன விதந்தோதப்பட்டதைக் கேட்டுத் தன்னை அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார். அப்படிச் சிரித்தது அவையின் ஒழுங்கைக் கெடுக்கச் செய்யப்பட்ட முயற்சி என்று சொல்லி அவரை அவை அதிகாரிகள் கைது செய்து அவர்மீது வழக்குத் தொடர்கிறார்கள். ஆக அமெரிக்காவில் என்னவொரு சட்ட அமைப்பு இருக்கிறது என்றால், அரசு நிகழ்ச்சியில் விசாரணை நடக்கும்போது சிரித்தால் சிறை தண்டனை கிட்டும் வாய்ப்பு அதிகம் என்பதுதான் அது.

குளக்கரை

உலகுக்கு அற போதனை செய்வதில் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் சிறுவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தடையேதும் இல்லையாம். 13, 14 வயதினர் கூடத் திருமணம் செய்து கொள்ளலாம். அதுவும் சில நேரம் 14 வயதுப் பெண்கள் அவர்கள் வயதைப் போல இரட்டை மடங்கு மூத்த ஆண்களைக் கூடத் திருமணம் செய்து கொள்கிறார்களாம். அதோடு முடிந்ததா கதை, ஒரு (வயதால் மூத்த) ஆண், சிறுமியை வன்புணர்வு செய்து அவள் கர்ப்பமானால், அவளை அந்த ஆண் திருமணம் செய்து கொண்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம். இதைப் பற்றிப் பலமான விவாதங்கள் சட்ட சபைகளில் சில மாநிலங்களில் நடந்திருக்கின்றன. கிருஸ்தவம் இந்தியாவில் மேலோங்கி வரும் இந்நாளில் இந்து சமுதாயத்தின் பழக்க வழக்கங்களைக் கடுமையாக விமர்சிக்க அவர்களுக்குப் பிரச்சாரத்துக்கு நிதி உதவியைக் கொட்டும் நாடுகளில் அமெரிக்கா ஒன்று. இப்படி ஒரு மாநிலமான டெக்சாஸில் மட்டும் கடந்த 14 வருடங்களில் 40,000 சிறு பிராயத்தினர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

குளக்கரை

இந்த உடலுறுப்பு தானம் என்பதை நாம் கதை என்று கூட எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எத்தனையோ ஆயிரம் இந்தியர்களின் உடல் உறுப்புகளை அவர்களுக்குத் தெரியாமலே அவர்களிடமிருந்து அகற்றி வெளிநாடுகளிலோ, அல்லது உள்நாட்டிலேயே பெரும் விலைக்கோ விற்கும் குற்றக் கும்பல்கள் இந்தியாவெங்கும் உலவுகின்றன. இவற்றில் பல மருத்துவ மனைகள், கெடுமதியாளராகி இருக்கிற மருத்துவர்கள், உள்ளூர் குற்றக் கும்பல்களிலிருந்து அடியாட்கள், தரகர்கள் என்று ஒரு ஆழ்ந்த குற்ற வலை இந்தியாவில் இருக்கிறது. இஷிகுரோவுக்குத் தான் எழுதியது கற்பனை என்ற நினைப்பு இருக்கலாம். இந்தியருக்கு இது நிதர்சன நடப்பு. 

குளக்கரை

”என்னுடைய முந்தைய வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில் பல விஷயங்களை சாதிக்க முடிந்தது. இப்பொழுது முந்தைய பிஸினெஸைக் காட்டிலும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி வாழ்வு கொஞ்சம் சுளுவாக இருக்கும் என்று நினைத்தேன். ஏதோவொரு கூண்டில், பட்டுப்பூச்சியின் கூட்டினுள் அடைபட்ட மாதிரி உணர்வு கிடைக்கிறது. எனக்கு காரோட்டப் பிடிக்கும். அது முடியவில்லை. எனக்கு மேற்சென்று சாதிக்கப் பிடிக்கும். அதுவும் இடைஞ்சலாக இருக்கிறது.” என்கிறார் டிரம்ப்

குளக்கரை

டிஜிடல் இந்தியா என்ற கனவை நடைமுறைபடுத்த மோடி அரசு மிக துரிதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணமற்ற வணிகம் என்பது டிஜிடல் இந்தியாவின் ஆதார கூறுகளில் ஒன்று. அது சீராக நடைபெற தொய்வில்லாத இணைய வசதி எப்போதும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக வியாபார நிறுவனங்களுக்கு ஸ்திரமான இணைய சேவையும், தொடர்பும் இரவு பகலாக கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.

அதே சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வரக் கூடிய காலங்களிலும், இடங்களிலும் இதே அரசு இணைய தொடர்புகளை முழுவதுமாக முடக்குவதும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக மக்கள் குறைந்த அவகாசத்தில் தங்களை ஒருங்கிணைப்பதற்கு செல்பேசி இணைய தொடர்புகளை தொடர்ச்சியாக அரசு பல இடங்க்களில் கடந்த 2 வருடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல வாரங்கள் முடக்கியுள்ளது.

குளக்கரை

மேலை நாடுகள் படிப்படியாகத் தம் வாழ்வுத்தரத்தை இழந்து வருகின்றன என்று சொல்ல இடம் உண்டு. மொத்த நாடுமே தரமிழந்ததா என்பது தெளிவில்லை. ஆனால் அவற்றுக்கும் இதர பல நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறைவதால் இப்படித் தெரிகிறதா, உழைக்கும் மக்களும், விவசாயிகளும் அனேகமாகத் தொடர்ந்து சறுக்கு நிலையில் இருக்கிறார்கள். வெள்ளைச் சட்டை உழைப்பாளிகளும் இறங்குமுகம்தான். கல்லூரிகளை விட்டு வெளியே வந்ததும் கிட்டும் வேலைகள் என்னும் ஏணிகளிலோ, படிக்கட்டுகளிலோ தொடர்ந்து ஏறிக் கொண்டு 30 வருட உழைப்புக்குப் பிறகு ஓய்வெடுத்து, முதுமையை நிதானமாக அனுபவிக்கும் ஒரு வாழ்வு என்பதை ’50, ‘60களில் நிச்சயத்தோடும், ’70-’80களில் ஓரளவு உறுதிப்பாட்டோடும் பெறக்கூடிய வாழ்வைப் பெற்றிருந்த மேலை மக்கள், இன்று அத்தகைய உறுதிப்பாடுகள் முதியோருக்கும் இல்லாது, இளைஞருக்கும் இல்லாத வாழ்வையே பெறுகின்றனர். இங்கு கொடுக்கப்படும் செய்திக்கான சுட்டி கனடா நாட்டின் பெரும் நகரான டொராண்டோவைப் பற்றியது…

மகரந்தம்

2016 என்பது உலகம் பூராவுமே கடும் வெப்பம் நிறைந்த வருடமாக இருந்ததாக உலக தட்ப வெப்ப மானிகளைக் கவனிக்கும் அமைப்புகள் சொல்கின்றன. அமெரிக்காவில் பொதுவாக மேற்குக்கரை மாநிலங்களில் சிலவற்றில் நல்ல உஷ்ணம் உள்ள இடங்கள் நிறைய உண்டு. கலிஃபோர்னியா என்னும் மாநிலம் கடந்த சில வருடங்களாக மழை இல்லாது, குளிர் காலத்தில் உயர மலைகளில் பனியும் பொழியாததால் நீர்ப்பஞ்சத்தில் சிக்கி இருந்தது. அதுவும் தென் கலிஃபோர்னியா பகுதிகள் பாலைநிலங்களை விளை நிலங்களாகவும் வசிப்பிடங்களாகவும் ஆக்கிக் கட்டப்பட்ட பகுதிகள். இந்த இடங்களில் வெப்பமும் கூடுதலாக இருந்து, தண்ணீர்ப்பஞ்சமும் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆனால் 2016 இன் இறுதியில் கலிஃபோர்னியாவில் நல்ல மழை. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில அணைகள் உடைப்பேடுத்துப் பெரும் நிலப்பகுதிகள் ஆபத்தில் சிக்கும் என்றெல்லாம் பயப்படும் அளவு மழை பெய்திருந்தது. ஆனால் இந்த நல்ல திருப்பம் அதிகம் நாள் தாக்குப் பிடிக்காது, மறுபடி கோடை வந்து விடும். கடும் வெப்பம் தாக்கும்

குளக்கரை

எப்படி செஞ்சீனாவின் எழுச்சியில் உலகம் தாய்வானை அலட்சியம் செய்வதோடு, அந்தத் தீவுகள் ஒரு நாடாக இருப்பது கூட சாத்தியம் இல்லை என்று கருதவும் துவங்கி இருக்கிறது என்று வருத்தப்படுகிறார். தாய்வானின் மீது பற்பல நாட்டினர் தொடுத்த தாக்குதல்கள், படையெடுப்புகள் எப்படி அந்த வரலாற்றை மறுபடி மறுபடி அழித்து எழுதின என்றும் சுட்டுகிறார். குறுந்தேசியம், பெருந்தேசியம், பன்னாட்டியம், உலக ஏகாதிபத்தியம் ஆகியனவற்றின் இழுபறிப் போர்களில் சிக்கி மடிபவர் சாதாரணர் என்பதையும் அங்கீகரிக்கிறார். இவரது கட்டுரைக்கு ஒரு மாற்றாக வாசகர்கள் எழுதிய பதில்கள் அமைகின்றன. அவற்றில் இருவர் மிகச் சரியாகவே தாய்வானியர் என்று இன்று கருதப்படுவோரே அத்தீவுகளில் நெடுங்காலமாக வசித்து வந்த பழங்குடியினரை அழித்து ஒடுக்கித்தான் ஆட்சி செய்யத் துவங்கினர், அம்மக்களின் விடுவிப்பையும், அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கும் உரிமைகள் கொடுப்பதையும் கருதிப் பேசாத தாய்வானிய வரலாற்று விவரிப்பு முழுமை பெறாதது என்று சுட்டுகிறார்கள்.

குளக்கரை

பறவைகளைக் கொன்று உண்பதற்கான பிராணிகள் என்றோ, அழகு என்று பார்த்துப் படமெடுக்க உதவுவன என்றோ, ரொமாண்டிக் பாடல்கள்/ இரக்கவுணர்வுப் பாடல்கள் என்பனவற்றை எழுத உதவுவன என்றோ மனிதர் பல வகைகளில் அவற்றைப் பார்க்கிறார்கள்… வனவிலங்குகளை அழிப்பதைப் பெரும் சாதனையாகக் கருதிய மூடர்கள் அமெரிக்க அதிபர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மொத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே இப்படிப் பல கண்டங்களில் வன விலங்குகளின் பேரழிவுக்கு வழி செய்த ஆட்சியாகத் திகழ்ந்திருக்கிறது. … விமானங்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல உருப்பெருத்து பிரும்மாண்டமான உலோகக் கூண்டுகளாக மாறி வருகின்றன. இவை மேலெழவும், கீழிறங்கவும் ஏராளமான நிலப்பரப்பு தேவைப்படுவதோடு, அந்த நிலப்பரப்பில் மரங்கள் செடிகொடிகள் ஆகியன அழிக்கப்பட்டு பறவைகளுக்கு இருக்கும் இருப்பிடங்களும், அவை உணவு தேடும் நிலங்களும் இல்லாமல் ஆக்கப்படுகின்றன.

குளக்கரை

ஆறு வருடங்களாக ஆடிய ஆட்டம் முடிவுக்கு வருவது போலொரு தோற்றத்தோடு நாம் 2017இல் அடியெடுத்து வைத்திருக்கிறோம். துருக்கி, சிரியா, ரஷ்யா, இரான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஐஸ்ஐஸ் தீவிரவாதிகளோடு நடத்தும் போர் அதிகாரப்பூர்வமான நிறுத்தத்தில் வந்திருக்கிறது. ஆலப்போ நகர் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்த நிலையில் இன்னும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தீவிரவாதிகள் அந்த இயக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

குளக்கரை

நமது வண்டியை அளவிட்ட வேகத்தைவிட அதிகமாக ஓட்டி மாட்டிக்கொண்டு ஃபைன் கட்டுகிறோம்; வருடாந்திர வரியைத் தாமதமாகக் கட்டுவதால் கூடுதலாகக் கட்டுகிறோம்; தவறுதலாக மகனின் ரயில் கார்டைக்கொண்டு பயணம் செய்து மாட்டிக்கொள்கிறோம்; இணையம் வழியாக நிறைய தடைசெய்யப்பட்ட/புரட்சியாளர்களின் புத்தகங்களை வாங்குகிறோம் – இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை பெற்றாலும், இந்த பலதரப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து உங்களது ‘குற்றப்பட்டியல்’ தயார் செய்யப்பட்டு அதன் மூலம் சமூகத்தில் நீங்கள் எந்தளவு கெட்டவர் எனக் கணக்கிட முடியுமானால் அது எத்தனை …

குளக்கரை

உலக புரட்சி இயக்கம் எனும் கனவை விதைத்து உருவாகிய அமைப்புகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய்கிறது. பெரும் புரட்சிகள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் அழிவுப் பாதைக்குக் கொண்டு சேர்க்கும் என்பதை உணர்ந்தாலும் விட்டில் பூச்சிகளாக புரட்சி இயக்கங்களுக்கு உண்டான மயக்கங்கள் இன்றளவும் சாத்தியம் ஆகின்றன. இதை தோற்ற மயக்கம் எனச் சொல்வதா அல்லது நமது தலைவிதி எனக்கொள்வதா? ஆனாலும், அழிவுக்குச் செல்லும் பாதை எப்படி தேன் தடவிய வார்த்தைகளாலும் மாய்மாலங்களாலும் போடப்பட்டிருக்கிறது என்பதைப் படிக்கும்போது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் சித்திரம் படிகிறது

குளக்கரை

அறுபதுகளிலும், எழுபதுகளிலும் பாஸ்பேட் வளம் மிக்க நிலமாக இருந்த காலங்களில் அத்தீவின் மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். அது காலியான பின் நௌரூ தன் வருமானத்திற்காக வரி ஏய்ப்பதற்கும், ஹவாலா பணம் மோசடி செய்வதற்கும் ஒரு இடமாக தன்னை மாற்றிக் கொண்டது. இப்போது ஆஸ்திரேலியா, அவர்களுக்கு கொடுக்கப்படும் உதவித் தொகைக்காக தன்னுடைய அகதி சிறைச்சாலையை நௌரூவில் கட்டமைத்து அவர்களைக் கொண்டே நடத்துகிறது. அவுஸ்த்ரேலியாவில் தஞ்சம் புகுவதற்காக படகுகளில் வரும் அகதிகளையும், விசா இருந்தும் குற்றங்களுக்காக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட காத்திருப்பவர்களையும் தன் நாட்டு சிறைகளில், தன் சட்டத்தின் மேற்பார்வையில் வைக்காமல் நௌரூவின் சிறைக்குள் அனுப்பி விடுகிறது. அந்த சிறை மதில்களுக்குள் நடக்கும் கொடுமை…