நகரத்தில் இப்போதும் இரவு

பழைய தேவாலயக் கட்டடங்களின் சீரழிவுக்குப் புறாக்களின் கழிவுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்த ஊரில் இருக்கும் பாதிரிமார்கள், விலைமதிப்பில்லாத தேவலாயக் கட்டடங்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் புறாக்களை கூண்டோடு அழிப்பதற்கு ஒரு விசித்திரமான உபாயத்தைக் கைக்கொள்கிறார்கள். பாதிரியார்கள் பருந்துகளை வளர்த்து, அவற்றைப் புறாக்களுக்கு எதிராக ஏவிவிடுகிறார்கள். கொலைத் தொழில் ஒன்றையே குறியாகக் கொண்டு வளர்ந்த பருந்துகள், புறாக்களைக் கொன்றொழிப்பதைப் பொலான்யோ, கதையின் போக்கில் மிக நுணுக்கமான வகையில் விவரிக்கிறார்.

'கோக்' அல்லது C17H21NO4 

உடைந்த சோவியத் யூனியலிருந்து பணத்திற்கு பதில் ஆயுதங்ளை போதை மருந்துக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன…..இதில் கிடைக்கும் பணம் எப்படி போதைத் தயாரிப்பாளர்களை சேர்கிறது? வங்கிகள் வழியேதான் அதிகம் பணம் பரிமாறப்படுகிறது. முக்கியமாக கரீபியன் வங்கிகள். அங்கு போலி தனியார் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அவைகள் வழியே பணம் வைப்புத் தொகையாக வைக்கப்படுகிறது. பின் அங்கிருந்து சட்டப்பூர்வமான வழியில் பினாமிகளுக்கு வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு போதைத் தயாரிப்பாளர்கள் கைகளில் சேர்கிறது…..இன்னும் ஒருபடி மேலே சென்றால், 2008-ல் நிகழ்ந்தப் பொருளாதார வீழ்ச்சியில் வங்கிகள் திவாலாகாமல் காத்தவை போதை மருந்து கடத்துபவர்களின் மில்லியன்கள் வங்கிகளில் இருந்ததனால் என அதிர்ச்சி தரும் தகவலை ஐநா போதை மற்றும் குற்றப் பிரிவு அலுவலகம் தெரிவிக்கிறது.

மைகெல் கானலி

கானலியின் நாவல்களில் உள்ள ஒரு சிறப்பம்சம், சட்டச் செயல்முறைகள் (legal process), விசாரணை நடைமுறைகள் பற்றிய விவரிப்புகள். பொதுவாக குற்றப் புனைவுகள் விசாரணை, அதன் இறுதியில் குற்றவாளி கைது என்று முடியும். ஆனால் இவர் நாவல்களில் நாம் அதிகம் அறியாத விசாரணை நடைமுறைகள் பற்றி குறிப்புகள் இருக்கும். உதாரணமாக சம்பவ புத்தகம் (incident book ). இந்த புத்தகம் விசாரணை அதிகாரி வைத்திருப்பது, இதில் குற்றம் முதலில் அவர் கவனத்துக்கு வந்தது முதல், விசாரணையின் ஒவ்வொரு அடியையும் குறித்து வைப்பார். அதே போல் குற்றவாளி கைது செய்யப்பட்ட பின் நடக்கும் விசாரணை பற்றியும் துல்லிய விவரிப்பு இருக்கும்.

அர்னல்டூர் – ஐஸ்லேன்ட் குற்றப் புனைவு எழுத்தாளர்

ஐஸ்லேன்ட் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன? எங்கும் பனி படர்ந்த பிரதேசம், கடுங் குளிர், மக்கள் தொகையும் குறைவாக உள்ளதால் அதன் தனிமையும் வெறுமையுமே நம் நினைவுக்கு வருகின்றன. மற்றபடி அந்நாட்டை பற்றி நமக்கு அதிகம் தெரியாது, அந்த நாட்டு இலக்கியம் குறித்தும் நாம் பெரிய அளவில் அறிவதில்லை. ஆனால் இந்நாட்டிற்கு நீண்ட இலக்கியப் பாரம்பரியம் உண்டு.

ஹென்னிங் மான்கெல் – பன்முக ஆளுமை கொண்ட முன்னோடி

மான்கெல் வெறும் குற்றப் புனைவு எழுத்தாளர் மட்டுமல்ல, அவரின் ஆளுமை இன்னும் விரிவானது. ஒரு முழுமையான பார்வையைத் தரவேண்டும் என்பதற்காக அவருடைய நாடகப்பணி, பிற எழுத்துக்கள் பற்றி இத்தனை விரிவாகச் சொல்கிறேன். இன்ஸ்பெக்டர் வலாண்டர் தொடரைத் தவிர, தனி நாவல்கள், சிறாருக்கான இரு தொடர் நாவல்கள், நாடகங்கள், திரைக்கதைகள் என பலவற்றில் மான்கெல் ஈடுபட்டுள்ளார்.

குற்றப்புனைவுகளின் எல்லையை விரிவாக்கிய இயன் ரான்கின்

1980களில் மேற்கு ஐரோப்பாவின் மிக மோசமான போதைப்பொருள் பிரச்சினைகளில் ஒன்றாக எடின்பரா இருந்தது. அது ஹெராயின் வர்த்தகத்தின் முக்கியமான அளிபாதையாக இருந்தது. அது தவிர எய்ட்ஸால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்களும் அங்குதான் இருந்தனர். யாரும் அதைப் பற்றிப் பேசுவதாக இல்லை. யாரும் அது குறித்து எதுவும் செய்வதாகவும் இல்லை. பிரச்சினைகள் பார்வைக்கு மறைவாக இருந்ததால் எல்லாரும் எல்லாமும் நன்றாக இருப்பதான பாவனையில் இருந்தனர். சரிதான், இந்த நிஜ உலக சமகால விஷயங்களை யாராவது நாவல்களில் எழுதியாக வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால் அதை அப்போது எவரும் செய்து கொண்டிருக்கவில்லை

கோலின் டெக்ஸ்டர் – ‘இன்ஸ்பெக்டர் மோர்ஸ்’

இன்ஸ்பெக்டர் மோர்ஸ் தொடரில் உள்ள சுவையான நகைமுரண் என்னவென்றால் டெக்ஸ்டரின் பாத்திரப்படைப்பே நாவல்களின் மையக்கருவிலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்பிவிடும். அந்த அளவுக்கு மோர்ஸ் இந்த தொடர் முழுவதும் வியாபித்துள்ளார். மோர்ஸ் எப்படிப்பட்ட ஆசாமி? இதை ஒற்றை வரியில் சொல்ல முடியாது. இன்ஸ்பெக்டர் மோர்ஸ் கதாபாத்திரத்தைப் பெரும்பாலும் தன்னையொத்த விருப்பு வெறுப்புகள், குணநலன்கள் கொண்டவராகவே டெக்ஸ்டர் சித்தரித்திருக்கிறார்.

வால் மக்டர்மிட் – மரபை உடைத்த பெண்குரல்

பொதுவாகச் சமீப காலம் வரை, பெண்களும், பாலியல் சிறுபான்மையினரும் பொதுவெளியிலும், படைப்புத்துறையிலும் எள்ளலாகவே சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக குற்றப்புனைவுகளில் பாலியல் சிறுபான்மையினர் ஒன்று குரூர மனம் கொண்டவர்களாக, குற்றவாளிகளாக இருப்பார்கள் அல்லது குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். ஆனால் மக்டர்மிட்டின் படைப்புகளில் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினர், முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுடைய பாலினம், பாலியல் தெரிவுகள் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கையை அதிகம் பாதிப்பதில்லை.

குற்றப்புனைவு – ஓர் அறிமுகம்

குற்றப்புனைவின் சிறந்த நாவல்கள் இன்று இலக்கியப் புத்தகங்கள் என்ன பேசுகின்றனவோ, அவற்றையே பேசுகின்றன. அறநெறிகளைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. சாதாரண மனிதர்களை அசாதாரணமான சூழலில் நிறுத்தியபின், ‘இச்சூழலில் நீங்கள் இருந்திருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?’ என்று வாசகர்களைக் கேட்கின்றன. ‘இப்படிப்பட்ட குற்றங்கள் நடப்பதை அனுமதிக்கும் உலகில் வசிப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்கின்றன. இலக்கியத்தையும், குற்றப்புனைவையும் நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. சில சிறந்த குற்றப்புனைவுகள் சிறந்த இலக்கியப்படைப்புகளாகவும், சில சிறந்த இலக்கியப்படைப்புகள், சிறந்த குற்றப்புனைவுகளாகவும் இருக்கின்றன.