தமிழ் வருடப் பிறப்பு என்றாலே தாமுவுக்குக் கொண்டாட்டம் தான். அம்மா மாங்காய் போட்டு வெல்லப் பச்சடி செய்வாள். அது அவனுக்கு ரொம்பப் பிடித்தமான ஒன்று. அதில் இனிப்பு புளிப்பு காரம் போன்ற அறுசுவைகளும் இருக்கும். ‘இதே மாதிரி நம்ம வாழ்க்கையிலயும் சந்தோஷம் ஏமாற்றம் ஆச்சர்யம் வருத்தம் எல்லா அனுபவங்களும் கலந்து வரும். அதையதை அப்படியே ஏத்துக்கணும்கறதுக்கு அடையாளமாதான் இதை பண்றோம்’ என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.
Category: குறுநாவல்
1/64, நாராயண முதலி தெரு – 3
சுந்தரவல்லி ஓர் அலங்காரப் பிரியை. சிமிட்டி நிறத்திலான சின்னாளம்பட்டுப் புடவையை மடிசாராக உடுத்திக் கொண்டாள். வசுதா திருமணத்தின் போது செலவோடு செலவாக வாங்கிய ‘கல்யாணி கவரிங்’ சங்கிலி, வளையல்களை அணிந்து கொண்டு, ‘ஆஃப்கான் ஸ்நோ’வையும் ‘குட்டிக்கூரா பவுடரை’யும் பூசிக் கொண்டாள், சிறிய கைக்குட்டையை இடுப்பில் செருகிக் கொண்டு, காதோரம் தலைமுடியை ஸ்டைலாகச் சுருட்டி விட்டுக் கொண்டாள். நான்கு மணிக்கே புறப்படத் தயாராகி விட்டாள்.
தெய்வநல்லூர் கதைகள் – 1
பரணி அவர்கள் பள்ளி என்பதை விளையாட்டு மைதானமென கருதுபவர். விசித்திரமான விளையாட்டுகளை நிதமும் அரங்கேற்றி மகிழ்வார். பின்னாளில் கிளாடியேட்டர் படம் எனக்கு எந்த வியப்பையும் தராமல் போனதற்கு காரணம் தரணி புகழ் பரணி தான். வகுப்பில் இருவரைத் தேர்வு செய்வார். இருவரும் சண்டை போட வேண்டும். விழும் அடிகளை பரணி கணக்கெடுப்பார். யார் அதிக அடிகள் கொடுக்கிறாரோ அவரே வெற்றியாளர். அவருக்கு பரணியால் பச்சைக் காகிதம் சுற்றிய பத்து பைசா ந்யூட்றின் சாக்லேட்டின் பாதி மனமுவந்து அளிக்கப்படும்.
1/64, நாராயண முதலி தெரு – 2
பூக்கடை காவல் நிலையத்தின் அருகில் சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் ஆலயங்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி அமைந்திருக்கும். இரண்டையும் சேர்த்து ‘பட்டணம் கோவில்’ என்று அழைப்பர். அந்தச் சிவன் கோவிலில் பிரம்பராம்பிகை சன்னிதி எதிரே ‘அனுபூதி மண்டபம்’ என்று ஒன்றுண்டு. அங்கு ‘சிவனடியார்கள் பண் இசைக் குழாமின்’ வருடாந்திர விழா சுதந்திர தினத்தன்று நடப்பது வழக்கம். அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு குழுக்கள் பக்திப் பாடல்களை வாத்தியக் கருவிகளோடு இசைப்பர். தருமபுரம் சுவாமிநாதன், பித்துக்குளி முருகதாஸ் போன்ற பிரபலங்களும் அதில் கலந்து கொள்வது வாடிக்கை.
1/64, நாராயண முதலி தெரு
பூக்கடை காவல் நிலையத்தின் அருகில் சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் ஆலயங்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி அமைந்திருக்கும். இரண்டையும் சேர்த்து ‘பட்டணம் கோவில்’ என்று அழைப்பர். அந்தச் சிவன் கோவிலில் பிரம்பராம்பிகை சன்னிதி எதிரே ‘அனுபூதி மண்டபம்’ என்று ஒன்றுண்டு. அங்கு ‘சிவனடியார்கள் பண் இசைக் குழாமின்’ வருடாந்திர விழா சுதந்திர தினத்தன்று நடப்பது வழக்கம். அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு குழுக்கள் பக்திப் பாடல்களை வாத்தியக் கருவிகளோடு இசைப்பர். தருமபுரம் சுவாமிநாதன், பித்துக்குளி முருகதாஸ் போன்ற பிரபலங்களும் அதில் கலந்து கொள்வது வாடிக்கை.
பனி இறுகிய காடு
அக்காவு யோசித்த முகத்துடன் இன்னைக்கு “இன்னிக்கு அவரு ஊருக்கு போறாரு” என்றான் மெதுவாக. புரிந்துக் கொண்டவர் போல தலையசைத்து “உள்ள உட்காருங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார். இரவின் சாயல்கள் பெருகிவரும் நேரம், பெரிய உருண்டை பல்பு உயரத்தில் எரிந்தது. அதன் வெளிச்சம் மஞ்சள், இளம்சிவப்பு நிறங்களை வெளிப்படுத்தின. உள்ளே வந்த போது மாறியிருந்தார். கழுத்து மணிகளின் ஓசை மிக மெல்லியதாக வைத்தியின் உள்ளத்தில் ஒலித்தது. அவ்வோசையை பின் தொடர்ந்தால் அவர் கைவேலைகளின் வேகத்தை அறியமுடியும். கண்களை மூடிக் கொண்டான் வைத்தி. முழுமையான இருள் பிரதேசம். அவன் இருப்பது அவனுக்கே தெரியவில்லை
மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 4
மித்ரோ, நின்றபடியே தலை முடியை வகிடு பிரித்து, இருபுறமும் கிளி மற்றும் பறவையைப் போல் இருக்கும் கிளிப்புகளை பொருத்திக் கொண்டு, பின்னலை இழுத்துப் பின்னி குஞ்சலம் வைத்து கட்டிக் கொண்டாள். பிறகு, பெட்டியில் இருந்து வாசனை திரவிய குப்பியை எடுத்து, “உடம்பு சூடாக இருந்தால் சொல்லுங்கள் அண்ணி, உங்களுக்கும் இந்த வாசனை திரவியத்தைப் பூசி விடுகிறேன்” என்றாள்.
பனி இறுகிய காடு
வெறித்த கண்கள், நடுங்கும் கால்கள், தூக்கமின்மை வளர்வதை கண்டு சுவாதி அழைத்து வந்திருந்த டாக்டர் சோதித்துவிட்டு, “பிபி 180க்கு அதிகமா இருக்கு, நரம்புத் தளர்ச்சி அதிகமாயிடுச்சு பாப்போம்” என்பது மட்டும் காதில் விழுந்தது. கண்களைத் திறக்க முடியாத வலி. ஆனால் கண்கள் நிலைத்த ஒரு சொல்போல ஆகிவிட்டிருந்தன. பயந்த முகத்தின் அப்பட்டமான அதிர்வு நிலைத்திருக்கும் கண்கள். கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் அது யாரோ என்று நினைத்திருந்தான். கொஞ்ச “நேரம் தூங்குடா வைத்தி” என்று கூறிக் கொண்டிருந்தான் சுந்தரம். தன் ஒன்று விட்ட சகோதரன் அவன் என்பதை அவன் உள்ளம் அறிந்திருக்கவில்லை. லேசான தடுமாற்றத்துடன் நின்றிருந்த அவன் கதவைப் பிடித்துக் கொண்டு மெல்ல வெளியேறினான்.
உணவு, உடை, உறையுள், … – 2
இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. ‘ஸ்பெல்டா’வின் வளர்ச்சிக்கு நான் வரைந்த திட்டம் பயனில்லாமல் போகுமோ என்கிற அச்சம், ‘எரேஸ்’ துண்டுகளைப் பயன்படுத்துவோரின் கவனக்குறைவால் நேர்ந்த சில விபத்துகளை வைத்து பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல்கள் தொடுத்த வழக்கு, கவலை இல்லாத எதிர்காலத்துக்கு வழி காட்டியதால் வந்த நன்றி உணர்வு, பழைய நினைவுகளின் தாக்கம், இவை அனைத்தும் கலந்து எனக்குக் கொடுத்த மனக்குழப்பம். அதில் இன்னொன்றையும் சேர்த்துவிட்டேன்.
மின்னல் சங்கேதம் – 11
மோத்தியின் உடல் மாமரத்துக்குக் கீழே கிடந்தது. நிறைய பேர் வந்து பார்த்தார்கள். தொலைவிலிருந்து பார்த்துவிட்டு நடுங்கியபடி சென்றார்கள். எல்லோரும் ’கடவுள் அருளால நாம பிழைச்சிட்டோம்’ என்று நினைத்தார்கள். அவர்களிருக்கும் நிலைமையின் குரூரத்தைக் காண அவர்கள் கண்களைத் திறந்துவிடுவதற்காகவே மோத்தி உயிர் விட்டது போல ஆகிவிட்டது. அவளுடைய பிணம்தான் அபாயத்தின் முதல் அறிகுறி, நெருங்கிவிரும் இடியோசையின் முதல் முனகல்.
மின்னல் சங்கேதம் – 10
காந்தோமணி மிகவும் அன்பானவள். கங்காசரண் அதனை உடனேயே உணர்ந்து கொண்டான். எங்கிருந்தோ வெல்லமும், வீட்டில் உருவாக்கிய பசு நெய்யும் கொண்டு வந்தாள். கங்காசரண் நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று அவள் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டாள். ஆனால் அவனால் சோற்றை விழுங்க முடியவில்லை. படோல், ஹபுவைக் காட்டிலும், அனங்காதான் அவனை மிகவும் தொந்தரவு செய்தாள். அவள் சாப்பிட்டு எத்தனை நாளானதோ யாருக்கும் தெரியாது.
மின்னல் சங்கேதம் – 9
பட்டினியில் வாடும் பக்கத்து வீட்டுக்காரர்களும், நண்பர்களும் அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். சிலருக்கு சமைத்த சோறு தேவைப்பட்டது, சிலருக்கு அரிசி. ஒரு மணங்கு அரிசியும் பத்தே நாட்களில் காலியாகிவிட்டது. அதையெல்லாம் விட – அனங்காவின் இரண்டு வளையல்கள் – அவளுடைய கடைசி நகைகள் – நிரந்தரமாக அவளை விட்டுப் பிரிந்தன.
மின்னல் சங்கேதம் – 8
கங்காசரண் அதிர்ச்சியில் உறைந்துபோனான். அவன் குடும்பத்துக்கு எப்படி சோறு போடுவான்? அவனுக்கு சொந்தமாக வயல் கிடையாது. சம்பளம் பண்ணிரண்டு ரூபாய். இருபத்து நான்கு ரூபாய்க்கு அரிசி எப்படி வாங்க முடியும்? அனங்கா பட்டினி கிடந்து செத்துப் போவாள்.
மின்னல் சங்கேதம் – 7
கோபிநாத்பூர் போன்ற பெரிய சந்தையில் கூட அரிசி இல்லை. மக்கள் காலி கூடைகளோடு அலைந்து கொண்டிருந்தார்கள். சந்தைகளிலும், கடைகளிலும் புலம்பல்கள் ஒலித்தன. மூட்டை மூட்டையாக நெல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த குண்டுவின் கடையும் இப்போது காலியாகக் கிடந்தது. தெருவெங்கும் பிச்சைக்காரர்கள் நிறைந்திருந்தனர். இத்தனை நாட்களாய் இவர்கள் எங்கே இருந்தார்கள்? யாருக்கும் கேட்கும் தைரியம் இல்லை.
மின்னல் சங்கேதம் – 6
ஒருவேளை குண்டு மஷாயிடம் விலைக்குக் கொஞ்சம் கிடைக்கும் என்று அவரிடம் நபீனை அழைத்துச் சென்றார். அங்கேயும் அதே கதைதான். கடைக்குள் நுழையும்போது இடப்புறம் திரும்பிப் பார்த்தான். அங்கே மூங்கில் திண்ணை மேலே அரிசி மூட்டைகள் கூரை வரை அடுக்கியிருக்கும். இப்போது அங்கே காற்றாடிக்கொண்டிருந்தது.
மின்னல் சங்கேதம் – 5
ராதிகாப்பூர் சந்தையில், நிறைய மக்களின் கண் முன்னாலேயே, பாஞ்சு குண்டுவின் கடை கொள்ளையடிக்கப்பட்டது. இப்படி பட்டப்பகலில் இது போன்றதொரு சம்பவம் இதற்கு முன் இப்பகுதியில் நிகழ்ந்ததில்லை. கங்காசரணும் அப்போது அக்கடையில் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தான். கூரை வேயப்பட்ட அந்தக் கடை பெரியது. ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் நின்றிருந்தது. மக்கள் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்த சம்பவம் நிகழ்ந்தது. கடையைச் சுற்றி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை என்னவென்று புரியாமல் திகைப்போடு கங்காசரண் பார்த்தான். மக்கள் ஓலமிட்டுக்கொண்டு கடைக்கு உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பலர் திருட்டுப் பொருட்கள் நிறைந்த மூட்டைகளையும், கூடைகளையும் எடுத்துக்கொண்டு வயல்வெளிகளைத் தாண்டி ஆற்றங்கரையோரமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.
ரௌத்திரம் பழகு
சீலன் உட்கார்ந்து தேவையான தஸ்தாவேஜ்களை இணைத்து அனுப்பினான். சுக்குநூறாக கிடந்த கணிணியின் கருப்புப்பெட்டியைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றினுள் இருந்த டேட்டாவை அனுப்பினான். இப்போதும் பரசுராமன் நம்பமாட்டான். வேறு ஏதாவது காரணம் சொல்லுவான் என நம்பியிருந்தான்.
குதிரை மரம்
திருமணமான புதிதில் பூசினாற் போலிருந்தாள். உப்பிய கன்னங்கள். எடுப்பான பற்கள் பார்க்க லட்சணமாகவே இருந்தாள். சரக்குகளை வாங்கிவரும் மாலை வேளைகளில் சிறிய இடை நெளிய புன்னகையுடன் உள்ளிருந்து ஓடிவந்து கைகளில் வாங்கிக் கொள்வாள்.
லூர்து நாயனார்
பழைய கதைகளைக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கதைகளைப் படிக்க சில “வெப் சைட்”களை அறிமுகம் செய்துவைத்தேன். வாட்ஸ் அப்பில் சில சந்தேகங்களைக் கேட்டார். சொல்லிக்கொடுத்தேன். ‘வீபூதிப் பிள்ளையாருக்கு எதித்தாப்பல இங்க ஒரு கிளிக்கூண்டு இருந்ததே, எடுத்துட்டாங்களா?’ என்றேன். ‘அடேயப்பா, அதாச்சு கொள்ள வருஷம். அம்மன் கைல நின்னாலும் நின்னுச்சு, ஒரு பத்து பதினஞ்சு கிளியைப் பிடிச்சு கூண்டுல போட்டுட்டாய்ங்க, நல்ல வேளையா புது ‘தக்கார்’ எல்லாத்தையும் வெளில விட்டுட்டாரு. . . ‘ என்றார் படியேறிக்கொண்டே. “சார், நீங்க மதுரைல கிளி பாத்துருக்கீங்களா, நான் ஒண்ணே ஒண்ணு கூட பாத்ததில்லை. நான் படிச்சதெல்லாம் பக்கத்தில கிராமங்களிலேதான். அங்க கூட” என்றேன்.
மண்ணாசை
வளரும் பருவத்தின் பல வருடங்கள் கோயமுத்தூரில் என் அம்மாவழிப் பாட்டி-தாத்தா வீட்டில் கழிந்திருந்தது. அம்மாவின் குழந்தைப் பருவம் கோவில்பட்டியில். அதனால் கோவில்பட்டி அவர் நினைவுகளில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. இந்த இரு மண்ணும் ஏதோ ஒருவகையில் எனக்குரியவை என்றொரு உணர்வுப் பிணைப்பு என்னுள் இருந்தது. இருக்கிறது. அதனால்தான் கொங்கு நாட்டைச் சேர்ந்த மண்ணின் நாயகி நாகம்மாள் என்னைப் பாதிக்கிறாளா என்று யோசித்தேன். ஆழ்ந்து யோசித்தபோது அது மட்டுமல்ல காரணம் ….
இறந்த காலம்
ஜனவரியில் வெளிவரவுள்ள ‘ இறந்த காலம்’ நாவலிலிருந்து… ஒர் அத்தியாயம் சைகோன், கொஷன்ஷீன் (இந்தோ சீனா) – ஸ்ரீமுக வருடம் தை மாதம் 21ந்தேதி (1934ம் வருடம், ஜனவரிமாதம் 15 ந்தேதி) சிரஞ்சீவித் தம்பி சதாசிவத்திற்கு, தமக்கை வேதவல்லி எழுதிக்கொண்டது. இவ்விடம் என் கணவரும், பிள்ளைகளும் ஷேமம். “இறந்த காலம்”
எம். எல். – அத்தியாயம் 13
ஊர்க்காவலன் அவன் சொன்னது காதில் விழாதது போல, எதிரே இருந்த பேப்பர்களைப் புரட்டிக் கொண்டே இருந்தார். அந்த ஆபீஸில் அப்படித்தான். சக வேலைக்காரனை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். ஊர்க்காவலன் பீட்டரை மதிக்காததுபோல், ஊர்க்காவலை அறைக்குள் இருக்கிற சூப்பிரண்டு மதிக்க மாட்டான். அவரை அவருக்கும் மேலே உள்ள ஜாயிண்ட் கமிஷனர் மதிக்க மாட்டார். ஜே.சி.யை டி.ஐ.ஜி ஒரு பொருட்டாகவே கருதமாட்டார். இதை எல்லாம் சகித்துக்கொண்டுதான் டிப்பார்ட்மெண்டில் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ஊர்க்காவலனை மீறி நேராகவே போய் சூப்பிரண்டைப் பார்க்கவும் முடியாது.
எம். எல். – அத்தியாயம் 11 & 12
பெரும்பாலான மேலமாசி வீடுகளுக்கு, முன்புற, பின்புற வாசல்களைத் தவிர ஜன்னலே இருக்காது. ஒரு வீட்டுக்கும், அடுத்த வீட்டுக்கும் இடையே இடைவெளியே இருக்காது. நீளமான வீடுகள். பக்கவாட்டில் இடமே விடாமல், நெருக்கமாகக் கட்டப்பட்ட அந்தக் காலத்து வீடுகள். ஜன்னல்கள் இல்லாததால் வீட்டினுள் எப்போதும் இருட்டாகவே இருக்கும். பாலகிருஷ்ணன் ஒவ்வொரு அறைக்குள் நுழையும்போதும் சுவிட்ச்சைப் போட்டு வெளிச்சத்தைப் பரவ விட்டுக் கொண்டே சென்றார். அந்த வீடு கல்கத்தாவிலுள்ள வீடுகளைப் போலவே இருப்பதாகப் பட்டது சாரு மஜும்தாருக்கு.
எம். எல். – அத்தியாயம் 10
“எனக்கு ஆயுதப் புரட்சியிலே எல்லாம் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. தெலுங்கானாவிலே என்ன நடந்தது?… ஆயுதப் புரட்சி அது இதுன்னு நம்ம ஜனங்களை வீணா பிரச்னையிலே மாட்டி விடாதீங்க…”
“ஏன் இப்போ எங்க நக்ஸல்பாரியிலே நடந்திருக்கே…”
“அது ஆயுதப் புரட்சியா?… நான் நக்ஸல்பாரியிலே நடந்ததை ஏத்துக்கலை. நிலச் சீர்திருத்தம் நடந்தா அங்கே பிரச்னை சரியாகிரும். அங்கே நடந்தது விவசாயிகளுக்கும் நிலச் சொந்தக்காரர்களுக்கும் மத்தியிலே நடந்த குத்தகை தகராறு,” என்றார் கோபால் பிள்ளை. சாரு மஜூம்தார் உரக்கச் சிரித்தார்.
“மிஸ்டர் கோபால் பிள்ளை, அதை அவ்வளவு எளிதா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. நீங்க பேசறது உங்க பார்ட்டி லைன். ரொம்ப விவாதிக்க வேண்டிய விஷயம் இது. இந்தியக் கம்யூனிஸ்ட்களாலே ஒண்ணும் சாதிக்க முடியாது. நான் உங்க பார்ட்டியிலே இருந்தவன்தான். யூனியன்லே எல்லாம் ரொம்ப வருஷம் இருந்து அடிபட்டவன். ஒரு கூலி உயர்வுகூட யூனியனாலே வாங்கிக் கொடுக்க முடியல…
எம். எல். – அத்தியாயம் 8
சுதந்திரம் வந்து இத்தனை வருடங்களாகி விட்டன. யாரும் பெரிய முன்னேற்றமடைந்த மாதிரித் தெரியவில்லை. ஜனங்கள் எதையாவது விற்பனை செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். இல்லையென்றால் மாதச் சம்பளத்துக்கு வேலை செய்து காலத்தை ஓட்டுகிறார்கள். யாருக்கும் போதுமான வருமானம்கூட இல்லை. அதனால்தான், ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த கட்சிக்கு, அதை நம்பி ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தார்கள். காங்கிரஸ் போய் தி.மு.க. வந்தும் ஜனங்களுடைய வாழ்க்கையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. சர்க்கார் இலவசமாகப் பள்ளிக்கூடங்களை நடத்துகிறது, ஆஸ்பத்திரிகளை நடத்துகிறது, இவை மட்டும் போதுமா? துணிமணி, வீடு, சாப்பாடு எல்லாம் …
பெருவெளிக் காற்று
யசோதரா, அவளுக்கு என்ன குறை? அழகு இல்லையா? அறிவு இல்லையா? நளின நாசூக்கு இல்லையா… எல்லாமே இருந்தன. எல்லாமே முழுமையாக இருந்தன. அவனை அவள் எத்தனை நேசித்தாள், அதிலும் குறை சொல்ல என்று ஒன்றுமில்லை. அவன் இரவுகளை அவள் அலங்கரித்தாள். அந்த இருளிலும் அவளது அருகாமை, பெண்வாசனை எத்தனை இதம். எல்லாவற்றையும் மூடி மறைத்தது இருள். வாசனையை மூட முடியுமா? யசோதராவின் வாசனையை அந்த இருளிலும் அவன் அறிவான். எந்த இருளிலும் அறிவான். அவள் அருகே இல்லாவிட்டாலும் கூட அறிவான் நன்றாக. செயற்கையை விட இயற்கையை நேசிக்கிறவன் அவன். வணங்குகிறவன் அவன்… தலையணை மேலே விரிந்து பரந்து கிடந்த கூந்தல். அவள் தலை நிறைய சூடியிருந்த மல்லிகை மலர்கள், இருளில் நட்சத்திரங்களாய்க் கண்டன. மலர்களை விலக்கி கூந்தலை முகர்ந்தான் அவன். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டோ? பெண்ணே, மொத்த பெண் அம்சமுமே, ஆணுக்கு மணம் தான்.
எம். எல். – அத்தியாயம் 4 & 5
சீதா பவனத்தில் சுப்பிரமணியப்பிள்ளை குளித்து விட்டுத் திருநீறு பூசிக் கொண்டிருந்தார். அவருடைய மூத்த மகன் செண்பகக் குற்றாலம் காலியாக இருந்த குளியலறைக்குத் துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு போனான். அடுப்பங்கரையைத் தாண்டிப் பின்னால் போனால்தான் குளியலறை. அதற்குப் பின்னால் சென்டரல் டாக்கீஸின் பின்புறச் சுவர் நீளமாக ஓடியது. குற்றாலம் அடுப்பங்கரையைத் தாண்டிப் போகும்போது இட்லி அவிகிற வாசனை வந்தது.
நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல்
புதுச்சேரி லே போர்த் வீதியின் மத்தியில் கிரேக்க நாட்டு அதீனாவின் முழு உருவச்சிலையை நிறுவி அவளது தலை, இடுப்பு மற்றும் கணுக்கால் பகுதியிலிருந்து அழகிய நீரூற்று வருமாறு வடிவமைத்த பிரெஞ்சு குதிரைப்படையின் முன்னாள் தலைவர் அலக்ஸான்றா தெப்போனேவின் முன்னறையில் கடற்காற்று கடுமையாக வீசினாலும் ஆடாது நிற்பதற்கான கனமான இரும்பு நாதங்கிகளையும் அதைவிட கனமான பர்மா தேக்கு மரச் சட்டகத்தையும் ராணுவ மெடல் போலத் தாங்கி கம்பீரமாக வீற்றிருந்தேன். அப்போது ராபர்ட் க்ளைவ் ஆட்டத்தைத் தாங்கமுடியாது வெர்சயி மாளிகையில் புதுச்சேரி மெத்ராஸ் பட்டிணங்களைக் கூறுபோட்டு பத்து ஆண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை. 1820ஆக இருக்கலாம். பிரெஞ்சுக்காரர்கள் சொல்வது தான் சட்டமாக ஆகியிருந்தது. நான் பெருமிதத்தின் உச்சியில் இருந்தேன். காரணமில்லாமல் இல்லை. கவர்னர் மாளிகை, ஆண்டனியட் ராணி கோபுர மாளிகை, துறைமுக சுங்கவரி காரியாலயம், பாகூர் அடைவைத் தாண்டி இருந்த கோடை வாசஸ்தலமாகிய பெத்தி மேசான் மாளிகை என எங்குமே என்னை விட அழகான ஓவியங்கள் கிடையாது. எனக்கெப்படி தெரியும்? என்னைத் தூரத்திலிருந்து பார்பவர்கள் காண்பவர்கள் நானென்னவோ பலாச்சுளை போல தங்கள் பெரிய விழிகளால் விழுங்குவது போலப் பார்க்கும்போது அவர்களது வாய் தன்னிச்சையாக சொல்வதைத்தான் நானும் உங்களிடம் திரும்பச் சொல்கிறேன்.
எம். எல். – அத்தியாயம் 2 & 3
ஒரு நாள் வீட்டு தார்சாவில் மாட்டியிருந்த காந்தி படத்துக்கு பக்கத்திலேயே ஒரு தாடிக்காரனுடைய படத்தைக் கொண்டு வந்து கோபால் பிள்ளை மாட்டினார். அவர் வெளியே போயிருந்த நேரம் பார்த்து அந்தத் தாடிக்காரன் போட்டோவைக் கழற்றி மச்சில் கொண்டு போய் மூலையில் போட்டுவிட்டார் ராமசாமிப் பிள்ளை. அவர் மனைவி பிச்சம்மாள், “அந்தப் பெய ஏதோ ஆசையா ஒரு போட்டோ கொண்டு வந்து மாட்டுனா அது ஏன் ஒங்களுக்குக் கண்ணைக் கரிக்கிது?’ என்று சத்தம் போட்டாள்.
“சவத்து மூதி…. நீ என்னத்தக் கண்ட? கண்டவன் படத்தையும் மாட்டி வைக்கதுக்கு இது என்ன நாசுவங் கடையா?”
“நீங்க காந்தியார் படத்த மாட்டி வச்சிருக்க மாதிரி, அவனும் ஆசயா ஒரு படத்த மாட்டினா, அது ஏன் ஒங்களுக்கு பத்திக்கிட்டு வருது?”
ராமசாமிப் பிள்ளையுடைய அபிப்பிராயப்படி ‘பிச்சம்மாளுக்கு விவரம் பத்தாது’, காந்தியும் எவனோ ஒரு வெளிநாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிக்காரனும் ஒன்றாகுமா?
எம். எல். – அத்தியாயம் 1
அத்தியாயம் 1
அவர் பதறிக்கொண்டே இருந்தார். மதுரைக்குச் செல்ல அவசரப்பட்டார். மதுரையில் கோபால் பிள்ளை அண்ணாச்சியைச் சந்தித்ததுமே எல்லாம் கைகூடி விடும் என்று சொல்ல முடியாது. அதன்பின் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. தளம் அமைப்பதென்றால் அது சாமான்யமான காரியமா? அதற்கு முன்னாள் இளைஞர்களைத் திரட்டி ஸ்டடி சர்க்கிள் அமைக்க வேண்டும். ஸ்டடி சர்க்கிளில் எத்தனை பேர் ஸ்திரமாக நிற்பார்கள் என்று சொல்ல முடியாது.
“நான் இன்று மாலையே மதுரைக்குப் புறப்படட்டுமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் மஜூம்தார். தோழர் அப்புவுக்கு கொஞ்சம் எரிச்சலாகக்கூட இருந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சாரு மஜூம்தார் மீது அவருக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. கோபால் பிள்ளை மீது மஜூம்தாருக்கு இருந்த அளவு நம்பிக்கை அப்புவுக்கு இல்லை. கோபால் பிள்ளை கட்சிச் செயல்பாடுகளைவிட்டு விலகி எவ்வளவோ காலமாகி விட்டது. இப்போது அவருக்கு எந்தளவுக்குத் தொண்டர்க்ளுடனும் மக்களுடனும் தொடர்பிருக்கும் என்று சொல்ல முடியாது.
ஆனால், தோழர் மஜூம்தார் அவரைப் பெரிதும் நம்புகிறார். 1953-ல் மதுரை பிளினத்துக்கு அவர் வந்திருந்தபோது, கோபால் பிள்ளைக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டிருக்கலாம். இது 1953 அல்ல, 1968.
திமிங்கிலம்
உலகம் தழுவிய பேரழிவு எனும் பெரும் சோகத்தில் அவர்களுக்கென சிறு பங்கை ஒதுக்கிவிட்டு அவரவர் பணிகளுக்கு திரும்பியிருந்த போது, ஒருவாரம் கழித்து சிறு மிதவையை பற்றிக்கொண்டு உயிருடன் கரையடைந்தான். அப்போது திமிங்கிலம் என தலைப்பிட்டு பிரபல ப்ராக்ருதிஸ்தான் பத்திரிக்கை அவன் பிழைத்த நம்பவியலாத கதையை செய்தியாக்கியது. அந்தச் செய்தி கட்டுரை இப்படி துவங்கியது “திமிங்கிலம் பிரம்மாண்டமானது, அதனாலேயே தப்பவியலாதது, தின்று கொழித்து வளர்வது எனினும் இன்றியமையாதது”. இந்தக் கனவு அல்லது உருவெளித்தோற்றம் அவனுக்கு நன்கு பரிச்சயம் தான். எத்தனையோ வருடங்களாக மீள மீள உறக்கம் உண்ணும் அதே கனவு. இந்த கனவின் செல்திசையை, அதன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அவன் நன்கறிவான். மரித்துப்போய் கல்லறைகளில் அறிதுயிலில் கிடக்கும் மூதாதைகளின் மட்கும் உடல்களை…
ஈரிதழ் வால்வுகள்
தொலைபேசி அருகிலேயே அப்படியே கிடந்தார் மாதவன். கண்மூடி அயர்ந்து கிடந்தார். நெஞ்சு மாத்திரம் நடுக்கடல் அலை என பொங்கித் தணிகிறது. விளக்கில் முட்டிய பூச்சியாய்த் தவிக்கிறது மூச்சு. உடனே டாக்சி சொல்லி… அவரை எழுப்பி உட்கார்த்தினார். இட்லிக் கொப்பரையைத் திறந்தாப்போல அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார், தெளிவித்தார் அண்ணா. “என்னாச்சி மாது?” சுரணை மெல்ல மீள்கிறது. மாதவன் என்னவோ சொல்ல வந்தார். முடியல்ல… என்று சொல்ல வந்தார்.
நண்டுச் சுவடுகள்
சதுப்புக் குட்டைகளில் நண்டுகள் குடித்தனம் இருக்க, அவற்றைத் தின்ன கொக்குகளின் கிரீச்சலான சண்டைகள்.
“இந்த கொக்குகள் கடலுக்கு நன்றி சொல்லுமா?”
“புரியல.”
“சதுப்புக் குட்டைகளை இந்தக் கடல் உருவாக்கிருக்கு. அப்படி உருவான அதில நண்டுக உருவாகி, இந்த கொக்குகளுக்கு சாப்பாடாக மாறுது. இந்த சதுப்பு குட்டைகளால்தானே கொக்குகளுக்கு சாப்பாடு கெடைக்குது.”
[குறுநாவல்] ஒற்றாடல் – பகுதி 1
நான் தஞ்சாவூரில் இருந்து கிளம்பி ஒரு மாதமாகிறது. என்னுடைய அண்ணன்மார்களும், மாமன்மார்களும் அராபியக் குதிரைகளில் ஏறி போர்க்களத்தில் வீரசாகசங்கள் பல புரியும் நேரத்தில், மாட்டு வண்டியிலும், ஓடத்திலும், சில சமயம் நடந்தும் காட்டூர் வந்து சேர்ந்திருந்தோம். குதிரை வாங்கக் காசில்லை என்பது வழுதியின் விளக்கம். ஆனால் சென்றவிடமெல்லாம் பரத்தையர் சமூகத்திற்கு அபரிமிதமாகவே அவனுடைய பங்களிப்பு இருந்தது.
[குறுநாவல்]ஒற்றாடல் – பகுதி 2
வயலூருக்கு அடுத்து உள்ள சிறு படைவீட்டை அவன் வென்றான் என்று சொன்னார்கள். எனக்குப் பெரும் சந்தேகம் கிளம்பியது. பல நாட்களுக்குப் பின்னால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தப் படை வீட்டைப் போய்ப் பார்த்தேன். அதன் பிளந்த சுவர்களுயும், உள்ளே இருந்த இடிபாடுகளும் உண்மையை உடனே எனக்கு உணர்த்தின. சுக்ரேசுவரன் நரசிம்மாஸ்திரத்தை போர்க்களத்தில் பயன்படுத்தத் தொடங்கி விட்டான் என்று எனக்குப் புரிந்தது. இந்த ஆயுதத்தின் முன்னால் யாரும் நிற்க முடியாது என்பது எனக்குத் தெரியும். சொல்ல முடியாத துக்கம் என்னை ஆட்கொண்டது.